Showing posts with label பதிவர்வட்டம். Show all posts
Showing posts with label பதிவர்வட்டம். Show all posts

த‌மிழ்ம‌ண‌மும் ச‌ல்யூட்டும்...

முட்க‌ளோடு இருப்ப‌தால்
ரோஜாவே உன‌க்கு
கொடுப்ப‌தில்லை
முட்க‌ளைவிட‌
கூர்மையுள்ள‌
க‌ண்க‌ளைக்
கொண்டு
கொத்தினால்
என்ன‌ செய்வேன்
நான்..
த‌ள்ளாத‌ வ‌ய‌திலும்
த‌ள்ளு வ‌ண்டி
த‌ள்ளும் முதிய‌வ‌ரை
காண்கையில் அச‌ந்து
நின்ற‌ கால்க‌ள்
ஒச‌ந்து நின்ற‌ன‌..
_______________________________________________________
இதான் டைம்ங்கிற‌தா..

அந்த‌ அதிகாரி க‌ட‌மையில் க‌ண்டிப்புமிக்க‌வ‌ர் நேர‌ம் த‌வ‌றாமை,ஒழுக்க‌ம் எல்லாவ‌ற்றையும் த‌ன‌க்குகீழுள்ள‌ ஜீனிய‌ர்க‌ளிட‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ப்ப‌டியாக‌வே அவ‌ர்மேல் ப‌ய‌த்தை உண்டு ப‌ண்ணியிருந்தார்..தான் வ‌ரும்போது ச‌ல்யூட் அடிக்க‌வில்லை என்று ஒரு ஜீனிய‌ரை பெண்டு நிமித்தியிருந்த‌து எல்லோருக்கும் அவ‌ர் மேலிலுள்ள‌ ப‌ய‌த்தைக் கூட்டியிருந்த‌து. அன்றொருநாள் இர‌ண்டு கிலோ மீட்ட‌ர் தொலைவிலுள்ள‌ க‌ட்டிட‌த்தில் நான்காவ‌து மாடியில் க‌டுமையாக‌ தீவிப‌த்து ஏற்ப‌ட்டு கிட்ட‌த்த‌ட்ட‌ அந்த‌ நான்காவ‌து த‌ள‌மே வெள்ளைக்கு ஆப்போஸிட் க‌ல‌ரை அப்பியிருந்த‌து.. தீ அணைப்பு வீர‌ர்க‌ளுக்கு உத‌வியாக‌ ந‌ம்ம‌ ஜீனிய‌ர்க‌ளில் ஐந்து பேர் உத‌விக்கொண்டு இருந்த‌ன‌ர் தீ அணைப்பு வீர‌ர்க‌ள் த‌ண்ணிரை பீச்சி அடித்துக்கொண்டிருக்கையில் ம‌ற்றொரு வீர‌ர் இந்த‌ ஜீனிய‌ர்க‌ள் கைக‌ளில் க‌ன‌த்த‌ வ‌லைக‌ளைக் கொடுத்து அந்த‌ த‌ள‌த்திலிருந்து குதிப்ப‌வ‌ர்க‌ளைக் க‌வ‌ன‌மாக‌ தாங்க‌ வேண்டும் என்று அறிவுறித்தி ஒரு வ‌லையை அவ்ர்க‌ளிட‌ம் கொடுத்து மைக்கில் எல்லோரையும் குதிக்க‌ சொல்லிக்கொண்டிருந்தார் ஒவ்வொருவ‌ராக‌ குதித்துக்கொண்டிருந்த‌ன‌ர் மூணாவ‌து குதிக்க‌ வ‌ந்த‌வ‌ர் அதே க‌ண்டிப்புமிக்க‌ அதிகாரி ப‌ச‌ங்க‌ளுக்கு அவ‌ரை காப்பாற்ற‌வேண்டும் என்ப‌தை விட‌ அவ‌ருக்கு ச‌ல்யூட் அடிக்க‌வே மூளை உத்திர‌விட்ட‌தும் ஐந்து பேரும் ஒரே ச‌ம‌ய‌த்தில் ச‌ல்யூட் அடிக்க‌ பாவ‌ம் அதிகாரி குப்புற‌ப‌டுத்த‌ மேனிக்கு உயிர் பிரிந்திருந்த‌து. அவ‌ர‌து உட‌லை அர‌சு ம‌ரியாதையுட‌ன் வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டுவிட்டு ச‌ல்யூட்' ஓங்கி அ(டி)ட‌க்க‌ப்ப‌ட்ட‌து...
_________________________________________________

பொதுவாக‌ போட்டிக‌ளில் ப‌ங்கேற்ப‌து கிடையாது.. போன‌ முறை த‌மிழ்ம‌ண‌ விருதுக‌ளில் நான் க‌ல‌ந்து கொள்ள‌வில்லை..இந்த‌ முறை க‌ல‌ந்து கொள்ள‌லாம் என்ற‌ ஒரு எண்ண‌ம்.ஆக‌வே ம‌க்க‌ள்'ஸ் உங்க‌ள் பொன்னான‌ வாக்குக‌ளை நான் ப‌ரிந்துரைத்துள்ள‌ ப‌திவுக‌ளை ப‌டித்துவிட்டு உங்க‌ளுக்கு பிடிச்சிருந்தா ஓட்டுப் போடுங்க‌ள்.

த‌மிழ்க்க‌ணிமை,த‌மிழ் விக்கிப்பீடியா,த‌மிழ் இணைய‌ம் தொட‌ர்பான‌ க‌ட்டுரைக‌ள் பிரிவில்..


ப‌டைப்பில‌க்கிய‌ம்(க‌தை,க‌விதை போன்ற‌வை)பிரிவில்..


ப‌ய‌ண‌ அனுப‌வ‌ங்க‌ள், ஊர்/வாழ்வு நினைவோடைக‌ள் பிரிவில்..

_____________________________________________________

சாட்டைய‌டி ஷார்ட் பிலிம்...... ம‌த்த‌வ‌ங்க‌ள‌ விட‌ பெத்த‌வ‌ங்க‌தான் முக்கிய‌ம்..க‌ண்டிப்பா பாருங்க‌ ம‌க்க‌ள்'ஸ்..

________________________________________________
My inbox

Spelling of rajnikant is "Rajnikant" because there is nothing like Rajni Can't
________________________________________________

Post Comment

வ‌லைச்ச‌ர‌மும் கொம்பும்..



வேலை செய்கின்ற‌ இட‌ம் மாறிவிட்ட‌து.அத‌னால் புது இட‌த்தில் ப‌திவு போடுவ‌து என்ப‌து க‌ழுதைக்கு கொம்பு முளைக்கிற‌ விஷ‌ய‌ம்(எவ்ளோ நாளைக்குத்தான் குதிரையே சொல்ற‌து!)


வலைச்ச‌ர‌த்தில் ந‌வ‌ம்ப‌ர் 15 முத‌ல் ஒரு வார‌த்திற்கு ப‌ங்கேற்ப‌தால் என் ப‌திவுக‌ள் இங்கேயும் வ‌ருமா என்று தெரிய‌வில்லை..வ‌லைச்ச‌ர‌த்தில் முன்ன‌மே ப‌ங்கேற்க‌ வேண்டிய‌து நேர‌மின்மைக் கார‌ண‌மாக‌ இப்பொழுது ப‌ங்கேற்க‌ வாய்த்துள்ளது.அத‌ற்கு சீனா அவ‌ர்க‌ளுக்கு ந‌ன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..நாளை வெளியாகும் வ‌லைச்ச‌ர‌ முத‌ல்நாளை யாராவ‌து த‌மிழ்ம‌ண‌த்திலும் இன்ட்லியிலும் இணைத்துவிடுங்க‌ள்..அந்த‌ நேர‌த்தில் ஆணி புடுங்கிக் கொண்டு இருப்பேன் என‌ எண்ணுகிறேன்...


Post Comment

த‌லைப்பு யாராவ‌து வைங்க‌..

ச‌மீப‌த்தில் எங்க‌ளூரைச் சார்ந்த‌ ஒருவ‌ர் த‌ன் தாய்க்கு ம‌ருந்து வாங்க‌ அதிராம்ப‌ட்டின‌த்திலிருந்து ப‌ட்டுக்கோட்டைக்கு(12கிமீ) சென்றுவிட்டு வ‌ரும் வ‌ழியில் மினிலாரி(மிக‌ச்ச‌ரியாக‌ தெரிய‌வில்லை)மோதி த‌லையில் அடிப்பட்டு மூளை சித‌றிய‌தாக‌ வ‌ந்த‌ செய்தி கேட்டு நான் ரொம்ப‌வே வ‌ருத்த‌முற்றேன் இத்த‌னைக்கும் அவ‌ரின் ம‌னைவிக்கு ஒன்ப‌து மாத‌ங்க‌ள்...வார்த்தைக‌ள் வ‌ர‌வில்லை... டிராபிக் ராம‌சாமி'ன்னு ஒருத்த‌ர் அவ‌ர்தான் எல்லோரும் த‌லைக்க‌வ‌ச‌ம்(ஹெல்மெட்) அணிய‌வேண்டும் என‌ பொதுந‌ல‌ வ‌ழ‌க்கு தொட‌ர்ந்து அந்த‌ வ‌ழ‌க்கிலும் வெற்றிப் பெற்று அர‌சுக்கு கோர்ட் உத்த‌ர‌விட்ட‌து அத‌ன்ப‌டியே ந‌டைமுறைப்ப‌டுத்தினார்க‌ள் எவ்வ‌ள‌வு நாளைக்கு...? இதைப் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் ஹெல்மெட் அணியுங்க‌ள் என்ப‌தே என் வேண்டுகோள்.. 
########################################

த‌மிழ‌னின் வெற்றிக்கு உத‌வுவோம் அப்ப‌டின்னு சொல்லி ச‌மீப‌த்தில் வ‌லையூல‌கில் ம‌துரையை சேர்ந்த‌ நாராய‌ண‌ன் கிருஷ்ண‌ன் என்ப‌வ‌ரைப் ப‌ற்றிய‌ செய்திக‌ள் த‌மிழ‌னின் க‌ட் அவுட்,பாலாபிஷேக‌ம் க‌லாச்ச‌ர‌த்துக்கு ம‌த்தியில் ந‌ம் வ‌யிற்றில் பால் வார்க்கின்ற‌ன‌. எத்த‌னைபேருக்கு வ‌ரும் இந்த‌ சேவை ம‌ன‌ப்பான்மை என‌க்கு,உங்க‌ளுக்கு,வ‌ருமா ம்ஹீஹிம் வ‌ராது. எதுவுமே த‌ன்னைப் ப‌ற்றி விள‌ம்ப‌ர‌ம் ப‌டுத்தாத‌ ம‌னித‌ருக்கு வ‌ந்த‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளை பார்த்தால் மூக்கின் மேல் விர‌ல் வைக்க‌லாம் வைக்க‌னும்.எல்லோரும் அவ‌ருக்கு ஓட்டுப் போடுங்க‌ போடுங்க‌ சொன்ன‌த‌ற்கு அப்புற‌மே ந‌ம்ம‌ ம‌க்க‌ள் ஓட்டுப்போடுகிறார்க‌ள் முத‌ல் த‌ட‌வையாக‌ ட‌ப்பு வாங்காம‌ல்! ஓட்டுப் போட‌ற‌தோடு நில்லாமல் கிருஷ்ண‌னுக்கு தேவையான‌ உத‌விக‌ளை தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள்,அர‌சாங்க‌ம், ஏன் நாமே ஓவ்வொரு வ‌லைப்ப‌திவுக‌ளிலேயும் நிதி திர‌ட்டி அவ‌ரிட‌ம் அளிக்க‌லாமே..? அவ‌ருக்கு ஓட்டுப் போட‌ இந்த‌ லிங்கில் போய் ஓட்ட‌ளிக்க‌வும்.
#################################
இந்த‌ அக்க‌ப்போருக்கிடையில் எந்திர‌ன் த‌ன்னுடைய‌துதான் என்று ஷ‌ங்க‌ர் மீது வ‌ழ‌க்கு தொட‌ர்ந்திருக்கிறார் எழுத்தாள‌ர் ஆரூர் தமிழ்நாடன்.. இந்த‌ செய்தி ரொம்ப‌ முக்கிய‌ம் அதைத்தான் எல்லோரும் பேசுவார்க‌ள் அத‌னால்தான் நானும் இங்கே சொல்கிறேன் ஏன்னா நான் த‌மிழேண்...(டா)
#################################
வ‌லைச்ச‌ர‌ம் சீனா அவ‌ர்க‌ள் ப‌ணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்க‌ள் அவ‌ருக்கு வாழ்த்துக்க‌ள்..
#################################
ரெயில் டிக்கெட்டை கூடுத‌ல் விலைக்கு விற்ற‌ ரெ.ஊழிய‌ர்க‌ள் 2 பேர் கைது(செய்தி)
டிக்கெட்டுன்னாலே கூடுத‌லாத்தான் விற்பாய்ங்க‌ளோ..

சமூகத்துக்கு ஆன்மிகவாதிகளால் நடக்கும் பணிகளுக்கு தி.மு.க.அரசு துணை நிற்கும் -ஸ்டாலின்
ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஆஆஆ....

இந்திரா மீது கல் எறிந்தவர்கள் பதில் கூறும் காலம்- இளங்கோவன்

உங்கள்ட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்   அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
#################################

Post Comment

வலையூலகில் நான்..

தொ.பதிவுகள் நான் எழுத விரும்புவதில்லை.ஆனாலும் நண்பர் சேட்டைக்காரன் நீங்கள் எழுதுவீர்கள் என்று உரிமையோடு மெயில் அனுப்பியதால் இந்த பதிவு.ஆக மொத்த தமிழ் வலையூலகமே எழுதி முடித்த தொ.பதிவு கடைசியாக என்னையும் வந்து சேர்ந்தே விட்டது..

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
 அஹமது இர்ஷாத்.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
வாக்காளர் அடையாள அட்டையில அஹமது இர்நாத்'ன்னு இருக்கு(யார் பேர்தான் ஒழுங்கா இருக்கு) ரேஷன் கார்டில் பிரச்சினையில்ல பதிவுலக நண்பர்கள் 'இர்ஷா'ன்னு கூப்பிடுறாங்க, எல்லாத்தையும் மீறி உண்மையை சொன்னா உண்மையான பெயர் அஹமது இர்ஷாத்'தே தான்.

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.....
காலடி என்பதைவிட 'கையடி'(டைப் பண்றோம்'ல) என்பதுதான் சரியா இருக்கும். ஏற்கனவே ஒரு ப்ளாக் இருந்து சில காரணங்களுக்காக அதை இழுத்து மூடினத்துக்கு அப்புறம் அலைவரிசை உருவானது. இன்பம் துன்பம் சகலவற்றையும் மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்ள வலைப்பதிவு மட்டுமே சாத்தியம் அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சியே..

 4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
திரட்டிகளில் இணைத்தேன்.ஆண் பதிவரோ பெண் பதிவரோ யாருமே என் பதிவுகளை படிச்சிட்டு முகம் சுழித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன், இருப்பேன்.அம்மாதிரியான இடுகைகள் நம் பதிவுகளில் இல்லாதவரை ஆட்டோமேட்டிக்காக நாமும் பிரபலம்தான்..

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
இதுவரை இல்லை இனி வருமா என்றால் கொஞ்சம் இருங்க ரூபாய் காயினை பூவா தலையா போட்டு சொல்லிவிடுகிறேன். தலை விழ்ந்தால் வராது, பூ விழுந்தால் வரும்.. ஆனா எப்பவுமே எனக்கு 'தல' தானே பிடிக்கும்ங்கிறது உங்களுக்கு தெரியுமா?

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

நிச்சியமாக பொழுதுபோக்கிற்குதான்..

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஒன்றுதான்.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

சில பேர் மீது கோபம் வந்ததுண்டு.மத சம்பந்தமாக ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் நோக்கில் எழுதுவது சுத்தமா பிடிக்காது.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
ஞாபக மறதி நமக்கு ஜாஸ்திங்க.. இருந்தாலும் யோசிச்சி சொன்னா அது 'திவ்யாஹ்ரி மற்றும் அஷீதா இவங்க இரண்டு பேரும் முதல் மற்றும் இரண்டாவது கமெண்ட் எழுதியவர்கள் அதாவது உசுப்பேத்தியவர்கள்.(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி)

10) கடைசியாக...........விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
நம் தமிழ் வலையூலகை அனைத்து ஊடகங்களும் உன்னிப்பாக கவனிக்கத் தொடங்கிவிட்டன. சர்ச்சையான விஷயங்களை எழுதுவதைவிட ஆக்கப்பூர்வமான சமூக சிந்தனைக் கொண்ட பதிவுகளை நாம் எழுத வேண்டும் என்பதே விருப்பமாய் கூறிக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.மற்றபடி என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது.

Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates