துபாயும் வாக்குச் சாவடியும்....

                                                                 
நான் துபாய்க்கு போன புதிதில் பல இடங்களுக்கு வேலை தேடிப்போனோம். தேடுன உடனே மேனேஜர் பதவியா கொடுப்பாய்ங்க. ஒன்னும் உருப்படியா சிக்கல.. வந்து ரெண்டு மாசமாச்சுனு.. புலம்பல்தான் ஜாஸ்தி.. மூணுமாசத்துல விசிட்டும் முடிஞ்சிரும்.. விசிட்ட ரினீவ் பண்ணனும்.. இப்படிய கவலைகள் மட்டுமே நிறைஞ்ச நேரம் அது. அப்படியான சமயத்துல ஒரு மாசம் மட்டும் ஒரு வேலை இருக்குன்னு பேப்பர்ல விளம்பரத்த பார்த்தவுடனே நானும் சக வேலைதேடிகளும்? அங்கே சென்றோம். அந்த கம்பெனி கார்கோ கம்பெனி. சொன்னபடியே இவ்வளவு சம்பளம், இதான் வேலை என்றார்கள்.அதன்படியே கொடுத்தார்கள்.{கவனிக்க நாங்க எல்லோரும் DEGREE,DIPLOMA படித்தவர்கள்..}வேலையும் நல்லபடியாகவே போனது.. எனக்கு பார்கோட் ஸ்டிக்கரை ஒவ்வொரு பேக்கிங்கிலும் ஒட்ற வேலை...  நான் லஞ்ச் ப்ரேக்கில் (1 ஹவர்) சீக்கிரமா சாப்பிட்டுவிட்டு அந்த பகுதியில் அமைந்திருக்கும் அனைத்து கம்பெனிகளுக்கும் என்னுடைய பயோடேட்டாவை(சி.வி) கொண்டுப்போய் கொடுத்துவிட்டு வருவேன். அப்படி கொடுத்த கம்பெனிகளில் ஒரு அட்வர்டைசிங் கம்பெனியில் இருந்த ஒருவர்(ம) ("ம- இவர்களில்லாத தேசமே கிடையாது")   என்னுடைய சி.வியை பார்த்துவிட்டு நாளைக்கு வந்து என்னைப் பாரு என்றார். அவர் சொன்னபடி அடுத்த நாளும் போனேன். இப்ப எம்.டி.  இல்ல வெளியிலே போய்ட்டாரு இப்ப முடியாது நாளைக்கு கண்டிப்பா வந்துருன்னாரு.. என்னடா இப்படி அலைய விடுறாங்களேன்னு சலிச்சுக்கிட்டே அடுத்த நாளும்(எதையும் தாங்கிற இதயம்) போனேன். அப்பவும் எதையாவது காரணத்த சொல்லிக்கிட்டே இருந்தான்(ர்). எனக்கு கண்டிப்பா தெரிஞ்சிப்போச்சி இவன் நம்மள அலையவிட்டு வேடிக்கைப் பார்க்கிறான் இவனுக்கு பாடம் கற்பிக்கனும்னு.. அந்த சமயம் மறுபடியும் என் சி.வி.யை பார்த்துக்கிட்டே கேள்வி கேட்டான்... இங்கே ஒன்னு சொல்லிக்கிறேன் என் சி.வி.யில தெரிந்த மொழிகளில் ஆங்கிலமும், தமிழும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.. இதையெல்லாம் விட்டுப்புட்டு அவன் கேட்ட கேள்வி இதான்..

"உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"


அன்னைக்கு அடிச்ச வேப்பிலைதான்,
தமிழன்டா யார்னு புரிய வெச்சுட்டேன்...


            இன்றைய கேள்வி-பதில்:

                                            
நாம் ஒட்டுப்போடுற இடத்துக்கு ஏன் "வாக்குச் சாவடின்னு" பெயர் வந்தது?


பணத்தை வாங்கிட்டு ஒன்னுக்கும் பிரயோஜமில்லாதவனுக்கு "வாக்கைப்போட்டு அதை சாவடிக்கிறோம்'ல அதனால வந்திருக்கும்...


Post Comment

46 வம்புகள்:

இராகவன் நைஜிரியா said...

// "உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது" //

அது. மறத்தமிழனய்யா நீர்.

Chitra said...

"உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"

.......ha,ha, ha,ha,ha.....
சான்சே இல்லை.

தாஜூதீன் said...

// "உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது" //

நேர்முகத் தேர்வு எடுத்தவர் தமிழில் கேள்வி கேட்டாரா?

அப்படி இருந்திருந்தால் அது அதிரடி காமெடி.

சிரிப்பு வரும் ஆனா வராது. தம்பி நீங்கள் ஒரு அதிரை முத்து.

தாஜூதீன் said...

//நாம் ஒட்டுப்போடுற இடத்துக்கு ஏன் "வாக்குச் சாவடின்னு" பெயர் வந்தது?//


பொய் "வாக்கு"கள் கொடுத்தவனை "சாவடி"ப்பதற்காக கூட இருக்கலாம் என்பது என் கருத்து.

க.பாலாசி said...

//"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"//

சரியான நெத்தியடிங்க இர்சாத்....

ஓ... ‘சாவடி’ங்கறதுக்கு இதுதான் அர்த்தமா!!!.... சரிதானுங்க...

மனோ சாமிநாதன் said...

இர்ஷாத்!

நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்களென்று புரிகிறது! அதனால் இது சரியான நெத்தியடி பதில்தான்!

நாடோடி said...

வேப்பிலை ந‌ல்லா தான் அடிச்சிருக்கீங்க‌...

அக்பர் said...

சரியான அடிதான்.

அப்பப்ப நம்மகிட்ட வந்து மாட்டத்தான் செய்றாங்க.

படிச்சவுடன் சிரிப்பு வந்துடுச்சு.

malar said...

எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது" //

படிச்சு சிரிப்பு தாங்கல்ல....

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல ரசிக்கும்படியா எழுதிருக்கீங்க இர்ஷாத்.

// "உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது" //

அதான் கரெக்ட்.. நெத்தியடி.. நல்ல பகிர்வு.

ஹேமா said...

உணர்வுள்ள தமிழர் ஐயா நீங்கள்.

நல்ல பகிர்வு இர்ஷாத்.

செ.சரவணக்குமார் said...

நல்ல பகிர்வு நண்பா.

அது ஒரு கனாக் காலம் said...

//உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"//
ஆஹா இது.."மிருதங்கம்" வாசிக்க தெரியறத விட நல்லா இருக்கே !!!!!!

RAJ said...

இந்த மாதிரி ஒரு ஆப்பு நான் கேள்விபட்டதே இல்ல.. தல அசத்திட்டீங்க.....

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள அஹமது இர்ஷாத் அவர்களுக்கு!

உங்களுக்கு அன்புடன் நான் அளித்திருக்கும் விருதை கீழ்க்கண்ட இணைப்பில் வந்து பெற்றுக்கொள்ளவும்.

http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post_28.html#comments

அன்புடன் மனோ சாமிநாதன்

ஹரீகா said...

**// "அரபி தெரியுமா?" "வாக்குச் சாவடின்னு" ஏன் பெயர் வந்தது? //**

--- இரண்டுமே நினைத்து நினைத்து பார்த்து சிரிக்க, சிந்திக்க வைக்கும் சிரிப்பு சார். ஆமா இசைப்புயல் விடுகதைக்கு பதிலே சொல்லலியே ஏன்? தெரியாததால் தானே கேட்கிறேன், சொல்லுங்க சார்...

அஹமது இர்ஷாத் said...

இராகவன் நைஜிரியா said..
//அது. மறத்தமிழனய்யா நீர்// வாங்க ராகவன் சார் ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம பக்கத்துக்கும் வந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி..

சித்ரா சொன்னது
//......ஹ,ஹ, ஹ,ஹ,ஹ.....
சான்சே இல்லை//
ரொம்ப நன்றிங்க உங்கள் வருகைக்கு. ஆமா எதுக்கு சான்சே இல்லை...

தாஜீதின் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி..
தமிழில் கேட்கப்போய்தான் நான் அவ்வாறு பதிலளித்தேன்..

க.பாலாசி said...
//சரியான நெத்தியடிங்க இர்சாத்....
ஓ... ‘சாவடி’ங்கறதுக்கு இதுதான் அர்த்தமா!!!.... சரிதானுங்க..//
நண்பர் பாலாசி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..


நாடோடி Said...
வேப்பிலை ந‌ல்லா தான் அடிச்சிருக்கீங்க‌..//
நாம யாருன்னு காமிச்சுட்டோம்'ல
ரொம்ப நன்றி வருகைக்கும்,தொடர் ஆதரவுக்கும் ஸ்டீபன்.

அக்பர் said...
சரியான அடிதான்.//
ரைட்டு நண்பா... வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அக்பர்..

மலர் said...
படிச்சு சிரிப்பு தாங்கல்ல....//
ரொம்ப நன்றிங்க மலர் வருகைக்கும், கருத்துக்கும்..

Starjan ( ஸ்டார்ஜன் )
நல்ல ரசிக்கும்படியா எழுதிருக்கீங்க இர்ஷாத்.//
ரொம்ப நன்றிங்க ஸ்டார்ஜன் வருகைக்கும்,கருத்துக்கும்..

ஹேமா ...
உணர்வுள்ள தமிழர் ஐயா நீங்கள்//
மிக்க நன்றி சகோதரி ஹேமா வருகைக்கும்,கருத்துக்கும்..

செ.சரவணக்குமார் ...
நல்ல பகிர்வு நண்பா//
ரொம்ப நன்றி நண்பரே வருகைகும்,கருத்துக்கும்...

அது ஒரு கனாக் காலம் said...
ஆஹா இது.."மிருதங்கம்" வாசிக்க தெரியறத விட நல்லா இருக்கே !!!!!///
அப்படியா. முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

ராஜ் said..
இந்த மாதிரி ஒரு ஆப்பு நான் கேள்விபட்டதே இல்ல.. தல அசத்திட்டீங்க..//
ரொம்ப நன்றி ராஜ் வருகைக்கும் கருத்துக்கும்....

மனோ சாமிநாதன்
உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி அக்கா...நீங்கள் அளிக்கும் விருதுக்கு மிக்க மகிழ்ச்சி&நன்றி...

ஹரீகா..
//இரண்டுமே நினைத்து நினைத்து பார்த்து சிரிக்க, சிந்திக்க வைக்கும் சிரிப்பு சார். ஆமா இசைப்புயல் விடுகதைக்கு பதிலே சொல்லலியே ஏன்? தெரியாததால் தானே கேட்கிறேன், சொல்லுங்க சார்///
வாங்க ஹரீகா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... இசைப்புயலைப் பற்றி இப்படி சொன்னது எழுத்தாளர் சுஜாதா.....

அபுஅஃப்ஸர் said...

Good Post

thenammailakshmanan said...

இளரத்தம்ல தம்பி..துணிச்சல் அதிகம். கை கொடுங்க. பாராட்டுறேன்

ஹுஸைனம்மா said...

அப்புறம் வேலை எங்க கிடைச்சுது?? அவர் தந்திருக்க மாட்டாரே!!

(அவன் என்று எழுதாமல், அவர் என்று குறிப்பிடுவது அவர் வயதுக்கு அவசியம் என்பது என் கருத்து.)

வாக்குச் சாவடி - இதுவும் நல்லா இருக்கு.

Anonymous said...

"உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"


hahhaaha..சரியான அடி தான் இனிமேல் அடுத்தவரிடம் கேட்கும் போது இது அவருக்கு நினைவு வரும்.....

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நல்லா அடிச்சீங்க வேப்பிலை..!

:)

Madumitha said...

பின்னிட்டிங்க சகாவே.

அமைதிச்சாரல் said...

அடிச்ச வேப்பிலைக்கு ஏதாவது எஃபெக்ட் இருக்கா :-)))

அஹமது இர்ஷாத் said...

//அபுஅஃப்ஸர்// உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

//thenammailakshmanan said...
இளரத்தம்ல தம்பி..துணிச்சல் அதிகம். கை கொடுங்க. பாராட்டுறேன்//
ரொம்ப நன்றிங்க உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்..

// ஹுஸைனம்மா said..
அப்புறம் வேலை எங்க கிடைச்சுது?? அவர் தந்திருக்க மாட்டாரே!!
(அவன் என்று எழுதாமல், அவர் என்று குறிப்பிடுவது அவர் வயதுக்கு அவசியம் என்பது என் கருத்து.)///

அப்புறம் வேலை வேறு இடத்தில் கிடைத்தது.. "அவர்" என்பதாக ஏற்றுக்கொள்கிறேன்.உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

தமிழரசி உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

//【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

நல்லா அடிச்சீங்க வேப்பிலை..!//

ரைட்டு தல.. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

//Madumitha said...
பின்னிட்டிங்க சகாவே.//

ரொம்ப நன்றி மதுமிதா வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

//அமைதிச்சாரல் said...
அடிச்ச வேப்பிலைக்கு ஏதாவது எஃபெக்ட் இருக்கா :-)))//

ஒரு எஃபக்ட்டும் இல்லீங்க...
வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

ஸ்ரீராம். said...

அரபி....சாவடி....
ரசித்தேன்.

அஹமது இர்ஷாத் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

T20 World Cup Live said...

எதிர்த்தாப்ல வந்தா தெரியும்,பேசத் தெரியாது.. சிரிச்சி வயிறு புண்ணாப்போச்சு...
அதேபோல் வாக்குச்சாவடி' அருமைங்க... அசத்திட்டீங்க போங்க....

அஹமது இர்ஷாத் said...

Thank You for First Visit T20...

அப்பாவி தங்கமணி said...

//"உனக்கு அரபி தெரியுமா?"
"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"//

சான்சேஎ இல்ல போங்க... அதுக்கு மேல எவனாச்சும் கேள்வி கேப்பான். Ikea படம் தாங்க highlight சிரிச்சு சிரிச்சு முடியல. வாக்கு சாவடி அதுக்கும் மேல.... சூப்பர்

அஹமது இர்ஷாத் said...

வருகைக்கும்,கருத்துக்கும் ரொம்ப நன்றி தங்கமணி அவர்களே....

கமல் said...

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதனை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. இறுதியில் தாங்கள் சொன்ன நகைச்சுவை சோகத்தையும் சந்தோசமாக்கி விட்டுச் சென்றுள்ளது. நன்றி நண்பா.

அஹமது இர்ஷாத் said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கமல்...

பட்டாபட்டி.. said...

IKEA படம் கலக்கல்..

அஹமது இர்ஷாத் said...

வாங்க பட்டாப்பட்டி முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி...

மசக்கவுண்டன் said...

படம் சூப்பருங்க, ஆனா உங்க "அரபி"
ஜோக்க என்னால ரசிக்க முடியலீங்க. (எனக்கு வயசாயிட்டதுனாலயோ என்னமோ) தமிழ் ஆளுங்க எங்க போனாலும் இந்த வாய்க்கொளுப்புதான் அவங்களை மேல வர உடாமெ தடுக்குதுன்னு நான் நெனைக்கறேனுங்க, தப்பா இருந்தா மன்னிச்சுருங்கோ.
அய்யருங்களையும் கேரளாக்காரர்களையும் பாருங்க. அவங்க எங்க போனாலும் எப்படி பொளக்கிறாங்க?

அன்புடன் மலிக்கா said...

//அய்யருங்களையும் கேரளாக்காரர்களையும் பாருங்க. அவங்க எங்க போனாலும் எப்படி பொளக்கிறாங்க?//

இதுவும் நிஜமே!

இர்ஷாத் வேப்பிலை பலமா அடிச்சதுபோல் தெரியுது..

அஹமது இர்ஷாத் said...

// மசக்கவுண்டன் said...
அய்யருங்களையும் கேரளாக்காரர்களையும் பாருங்க. அவங்க எங்க போனாலும் எப்படி பொளக்கிறாங்க?///

அய்யா மசக்கவுண்டன் அவர்களே கேரளாக்காரர்களும்,மற்றவர்களும் தமிழனை எந்த மாதிரி நினைக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு, மனிதனாகவே மதிக்க மாட்டார்கள்.. இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது அந்த ஆள்(ம) சொன்னார் என்பதற்காக நான் மூன்று தடவை நான் அலைந்திருக்கேன்.முன்னூறு தடவையும் அலைய ரெடி.ஆனால் நம்முடைய அலைச்சலும்,ஏமாற்றமும் அவர்களுக்கு "பொழுதுபோக்கு" என்பதை பகிரங்கமாக சொல்லலாம்.. நம்மை குட்ட குட்ட குனிந்துக் கொண்டே இருந்தால் உச்சந்தலையில் ஏறி அடிப்பார்கள். சில சமயமும் நாமும் நிமிரனும்.. அப்படி நிமிர்ந்ததன் வெளிப்பாடுதான் இது.. இன்னொன்று கேரளாக்காரர்கள் வேலைகள் கிடைக்கவேண்டும்,பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக "எதுவும்" செய்வார்கள் வளைகுடாவில்... (எதுவும் என்பது என்னவென்று புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

அஹமது இர்ஷாத் said...

அன்புடன் மலிக்கா said..
//அய்யருங்களையும் கேரளாக்காரர்களையும் பாருங்க. அவங்க எங்க போனாலும் எப்படி பொளக்கிறாங்க?//

//இதுவும் நிஜமே!//

மசக்கவுண்டன் அவர்களுக்கு சொன்ன பதில் உங்களுக்கும் சேர்த்து சொன்னது மல்லிக்கா...உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

RAJ said...

///இன்னொன்று கேரளாக்காரர்கள் வேலைகள் கிடைக்கவேண்டும்,பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக "எதுவும்" செய்வார்கள் வளைகுடாவில்... ///

கண்டிப்பாக உண்மை.... நச் பதிலுங்கோ...

அஹமது இர்ஷாத் said...

RAJ said...
///இன்னொன்று கேரளாக்காரர்கள் வேலைகள் கிடைக்கவேண்டும்,பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக "எதுவும்" செய்வார்கள் வளைகுடாவில்... ///

கண்டிப்பாக உண்மை.... நச் பதிலுங்கோ...///ஆமா ராஜ், உங்களின் உறவினர் யாராவது வளைகுடாவில் இருந்தால் கேட்டுப் பாருங்கள்....

asiya omar said...

நிறைய மோதிர விரலால் குட்டு வாங்கியாச்சு போல,சூப்பர் தம்பி.

asiya omar said...

நிறைய மோதிர விரலால் குட்டு வாங்கியாச்சு போல,சூப்பர் தம்பி.

அஹமது இர்ஷாத் said...

வருகைக்கும்,வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி ஆசியா அவர்களே...

தமிழ்மலர் said...

// "உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத் தெரியாது"//

வயிறு குலுங்க குடும்பமே சிரிச்சிட்டோம் போங்க....

Jabar said...

// "உனக்கு அரபி தெரியுமா?"

"எதிர்த்தாப்ல வந்தா தெரியும், பேசத்
தெரியாது" //

well said, irshad......

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates