அப்படியே உட்கார்ந்துவிட்டேன்..இதை டைப்பும்போது மனசு அழுகின்றது..அலுவலக முடிந்து டயர்டா லிஃப்ட்டில் வரும்போது,ஒன்றாக சாப்பிட்டு இருக்கிறேன் அவனோடு கிட்டத்தட்ட நான் இந்த ப்ளாட்டிற்க்கு வந்தது ஏழு மாதத்திற்க்கு முன்னாடிதான்..ஆரம்பத்திலே இர்ஷாத்'ன்னு ரொம்ப பழகின மாதிரி அதட்டி கூப்பிட்டவன் அவன் இன்னைக்கு இல்லை..சிம்பிளா பெரிய 'டாட்டா' காட்டிட்டு போய்ட்டான்..சொந்தம் இல்லை அவன் இருந்தாலும் சின்ன கண்ணீர் துளிகள் அவனுக்காக எட்டிப் பார்க்கிறது..சில நேரத்தில் ஏற்படும் இழப்புகளுக்கு வலி சொல்ல இயலாது..ரொம்பவும் வருத்தப்பட்ட நிகழ்வு இது சமீபத்தில்.
---------------------------
எப்பொழுதுமே பக்கத்துல இருக்கிற 'க்ரீன் கார்டன்' ஹோட்டலுக்குத்தான் சாப்பிட போவேன்..அதற்க்கு பக்கத்திலேயே இன்னொரு மானா ஹோட்டலும் உண்டு..ஆனால் க்ரீன்'தான் ரொம்ப பிடிச்ச சாப்பாடுகள் இருப்பதாக எனக்கு தோன்றியது..இன்றல்ல நேற்றல்ல ஒரு வருஷமா ஒரே ஹோட்டல்..இடையில் ஒரு மாசம் வெக்கேஷன் போனாலும் எங்கே சார் ஆளையே காணோம்'னு சொல்லுவார் சப்ளையர் மூர்த்தி..கிட்டத்தட்ட தோஸ்த்'ஆகவே மாறிவிட்டார்..ஒருவாரம் முன்பு மேற்கண்ட் இரண்டு ஹோட்டலைத் தவிர்த்து நான் தங்கியிருக்கும் அறைக்கு பின்புறத்தில் ஒரு அஞ்சு அல்லது ஆறு நிமிஷ நடையில் 'டாக்ஸி' ஹோட்டல் இருப்பது தெரியவந்தது..அதையும் பக்கத்து ரூம்'க்கார ஹைதரபாத்தி'தான் சொன்னான்..சரி ஒரு வித்தியாசத்துக்கு இங்கேயும் போய்த்தான் பார்ப்போமோ என்றபடி கடந்த வாரத்தில் ஒரு டின்னரை பரோட்டா ப்ளஸ் சிக்கன் ஃப்ரை'யோடு சாப்பிட்டேன்..சொன்னால் நம்பமாட்டீர்கள் அமிர்தம்..சூப்பர்..அடடா இவ்ளோ நாளா இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிட்டோமே என்றபடி நினைத்துக் கொண்டேன்..இனி மூர்த்தியை அதான் க்ரீன் கார்டனை மறந்து டாக்ஸி ஹோட்டலுக்கு கடந்த ஒரு வாரம் தொட்டு போய்க்கொண்டிருக்கிறேன்..என்னமோ ரொம்ப பிடித்துப் போய்விட்டது அந்த சிக்கன் ஃப்ரை வித் பரோட்டா காம்பினேஷன்..கடந்த அஞ்சு நாட்களாய் தொடர்ந்து சாப்பிட்ட என்னை இன்னிக்கு போனதும்,
'சார் உங்களுக்கு சிக்கன் ஃப்ரை பரோட்டா'?
'ஆமா'ங்கிற மாதிரி தலையாட்டினேன்..
'அதான் தெரியுமே டெய்லி அதானே சாப்பிடுறீங்க' என்று அவன் சொன்னதில் ஒரு 'குட்டு' ஒன்னு இருந்தது தெரிந்தது..
இதை ஏன் நான் சொல்றேன்'னா கடந்த வருடத்தில் நான் என் ப்ளாக்கில் ஒரு பக்க கதையை எழுதினேன்..'சுண்ணாம்பும் வெண்ணையும்' என்பது தலைப்பு..தினகரன் வசந்தத்தில் 'கவனிப்பு' என்ற பெயரிலும் வெளிவந்தது..