பதறாத காரியம்..

(பட உதவி: கூகிள்)

'அம்மா நாம போற வழியில என் கொலுச கொடுத்துட்டு வேற மாத்திரலாமா'

'அதுக்கெல்லாம் நேரம் கிடைக்குமான்னு யோசிச்சுப்பாரு பேங்க்ல எவ்வளவு கூட்டமோ அதெல்லாம் முடியாது இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்'

'ஏம்மா புலம்புற அதெல்லாம் சீக்கிரம் பேங்க் வேலையை முடிச்சிட்டு கொலுசு கடைக்கு போயிறலாம்'

'அதெல்லாம் வேண்டாம் சொன்னாக் கேளு உனக்காக நாளைக்கு வேணாப் போய்க்கலாம்'

 'அப்ப கண்டிப்பா நீ நாளைக்கு வரனும்மா'

 ' சரி சரி நீ கெளம்புற வேலையைப் பாரு உன் அப்பா இன்னிக்கே எடுக்க சொல்லியிருக்காரு'

 'இதோ ரெண்டு நிமிஷத்துலேயே வந்துடுறேன்' ரெண்டு நிமிஷம் ஐந்து நிமிஷமானது.

 வெளிநாட்டிலிருக்கிற அப்பா செல்வராஜ் அனுப்பிய பணத்தை எடுக்க சுந்தரியும்,    வெண்ணிலாவும் கிளம்பினார்கள்.

 'அம்மா ஆட்டோ பிடிக்கலாம்மா எனக்கு ரொம்ப தூரம் நடக்க முடியாது'

  'சரி புலம்பாதே அந்த பஸ் ஸ்டாப்புல போய் ஆட்டோவ பிடிக்கலாம் வா'

 கொஞ்ச தூரத்திலிருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்து அதை அடைந்தார்கள்.

ஆட்டோக்காரரிடம் பேரம் பேசவும்,ஆட்டோ பேங்கை அடையவும் இருபது நிமிடங்கள் கழன்டு ஓடியிருந்தன.

சொல்லி வைத்ததற்கேற்ப பேங்கில் மாநாடு போல் இருந்தது கூட்டம்.

ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே போன அதே நேரம்.....

வெண்ணிலா கொலுசைப் போட்டுக் கொண்டு வந்த ஆயிஷா டெக்ஸ்டைல் துணிப்பையும்,

சுந்தரி செக், பாங்க் பாஸ்புக் போட்டு வைத்திருந்த அதே மாதிரியான ஆயிஷா டெக்ஸ்டைல் 

துணிப்பையும் இடம்மாறி செக் உள்ள பை அலமாரிக்கு பக்கத்திலுள்ள ஆணியில் 

ரொம்ப 'பத்திரமாய்' தொங்கிக் கொண்டிருந்தது...

Post Comment

40 வம்புகள்:

Kanmani said...

சரியான ட்விஸ்ட் இர்ஷாத்...அசத்திட்டேள் போங்கோ..

senthil velayuthan said...

ithu perumpalum pala peruku avsarathil nakara kariyam . enakum ithu mathiri pala thadava nadanthiruku..

r.v.saravanan said...

அருமை இர்ஷாத் நல்லாருக்கு

Mythees said...

Super Twist ...

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா... good one

Anonymous said...

பத்து வரியில் சிரிக்க வச்சிட்டீங்க செம டிவிஸ்ட்...

சாந்தி மாரியப்பன் said...

நல்ல திருப்பம் :-))

பத்மா said...

NICE NICE

Thamira said...

ரொம்ப சிறிய கதையாக இருக்கிறதே. டிபிகல் நடையாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தது.

vasu balaji said...

நல்லாருக்கு இர்ஷாத்:)

ஹேமா said...

சுருங்கச் சொன்னாலும் அருமையாக இருக்கிறது இர்ஷாத்.

Anonymous said...

நைஸ் :)

ஸ்ரீராம். said...

பாவம்...

நாடோடி said...

திரும்ப‌வும் போக‌னுமா?. :)

சைவகொத்துப்பரோட்டா said...

பாவம், அந்த பைகளை உரிய இடங்களுக்கு மாற்றி விடுங்களேன் :))

சசிகுமார் said...

ஆகா எதிர்பார்க்காத முடிவு நண்பா. ரூம் போட்டு யோசிப்பிங்களோ

VELU.G said...

//Blogger சைவகொத்துப்பரோட்டா said...

பாவம், அந்த பைகளை உரிய இடங்களுக்கு மாற்றி விடுங்களேன் :))
//

ஆமாங்க மாத்திடுங்க


கதை அருமை

எல் கே said...

niceee

ஜெயந்தி said...

முடிவு சூப்பர்.

Mc karthy said...

சூப்பர்..சூப்பர்.. பெரிய சிறுகதை எழுத்தாளராக வரக்கூடிய எல்லாத்தகுதியும் உங்கள்ட்ட இருக்கு இர்ஷாத்..ஃபென்டாஸ்டிக் டிவிஸ்ட்..

Vijayashankar said...

Nice!

எம் அப்துல் காதர் said...

சூப்பர் போஸ்ட்!!

தாராபுரத்தான் said...

யாருக்கும் பொறுமை இல்லைங்க தம்பி...அவசரகார உலகம்..

vinu said...

excuse me can you give me "dictionary"

Asiya Omar said...

அட தலைப்பு சூப்பர்.வீண் அலைச்சல்.பாவம் இர்ஷாத்.

Ahamed irshad said...

வாங்க கண்மணி வருகைக்கும் கருத்துக்கு நன்றி..

வாங்க செந்தில் வருகைக்கும் கருத்துக்கு நன்றி..

வாங்க சரவணன் வருகைக்கும் கருத்துக்கு நன்றி..

Ahamed irshad said...

வாங்க மைதீஸ் வருகைக்கும் கருத்துக்கு நன்றி..


வாங்க சித்ரா வருகைக்கும் கருத்துக்கு நன்றி..


வாங்க தமிழரசி வருகைக்கும் கருத்துக்கு நன்றி..

Ahamed irshad said...

வாங்க அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்கு நன்றி..


வாங்க பத்மா வருகைக்கும் கருத்துக்கு நன்றி..


வாங்க ஆதிமூலகிருஷ்ணன் வருகைக்கும் கருத்துக்கு நன்றி..

Ahamed irshad said...

வாங்க பாலா சார் வருகைக்கும் கருத்துக்கு நன்றி..


வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கு நன்றி..


வாங்க பாலாஜி வருகைக்கும் கருத்துக்கு நன்றி..

Ahamed irshad said...

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கு நன்றி..(அப்படியா ஸ்ரீ)


வாங்க ஸ்டீபன் வருகைக்கும் கருத்துக்கு நன்றி..(போகாம)


வாங்க சைவகொத்துப்பரோட்.. வருகைக்கும் கருத்துக்கு நன்றி.(அச்சே ரொம்ப நல்லவருங்க நீங்க.)

Ahamed irshad said...

வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

வாங்க வேலு வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

வாங்க LK வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

Ahamed irshad said...

வாங்க ஜெயந்தி வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

வாங்க Mc karthy வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

வாங்க மேனகா வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

Ahamed irshad said...

வாங்க Vijayashankar வருகைக்கும் கருத்துக்கு நன்றி(நலமா)

வாங்க அப்துல் காதர் வருகைக்கும் கருத்துக்கு நன்றி

வாங்க அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கு நன்றி

Ahamed irshad said...

வாங்க தாராபுரத்தான் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.(பொறுமை எருமையைவிட பெரியதுன்னு எதிலோ படித்த ஞாபகம்)

வாங்க வினு வருகைக்கும் கருத்துக்கு நன்றி.(எதுக்குப்பா டிக்ஸனரி,சொன்னா நல்லாயிருக்கும்)

வாங்க ஆசியா உமர் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.(.. அப்படிங்களா)

அப்துல்மாலிக் said...

இதுக்குதான் ஒரே மாதிரி பை வெச்சிருக்ககூடாதுங்குறது, ஒரே கடயிலே சாமான் வாங்குனா ஒரேபைதானே கொடுப்பாங்க இதெ யோசிக்கலியே

எப்புடி இருந்தாலும் நல்ல ட்விஸ்ட் கடசியிலே குட் குட்

Ahamed irshad said...

ஒரே கடையிலே ரெண்டு தடவை சாமான்கள் வாங்கின ஒரே மாதிரியான பைகள் அமையிறது இயல்புதான் மாலிக்..(விடாக்கண்டன்=கொடாக்கண்டன்) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Thenammai Lakshmanan said...

இப்படித்தான் பல சமயம் செய்துடுறோம் .. அஹமத்..

இது ஏதோ அனுபவம்போலத் தெரியுது..:))

ஸாதிகா said...

நறுகென சிரிக்க வைத்துவிட்டீர்கள்.

அதிரை என்.ஷஃபாத் said...

Sooper... Nice reading

www.aaraamnilam.blogspot.com

இமா க்றிஸ் said...

ஆஹா! ;) குட்டு இல்ல. ஷொட்டுதான். ;)
பாராட்டுக்கள் இர்ஷாத்.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates