உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா?தமிழ் இணைய உலகில் நன்கறியப்பட்ட தமிழ் கணிமைக் கொடையாளர் அதிரை உமர்தம்பி அவர்கள் மறைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஓரிருவரிகொண்ட மென்பொருள் நிரழிகளை இலட்சக்கணக்காண ரூபாய்க்கு விலைபேசி விற்கப்பட்ட காலகட்டத்தில் சல்லிக் காசு இலாப நோக்கின்றி, தமிழ்கூறும் நல்லுலகு தடையின்றி தமிழில் தட்டச்ச உதவும் பல மென்பொருள் நிரழிகளை உருவாக்கி பொதுப்பயன்பாட்டுக்கு வைத்தவர் திரு.உமர் தம்பி அவர்கள்.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

கணினித் தமிழ் தளங்களான சங்கமம், தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி திரட்டியான தமிழ்மணம், எழில்நிலா மற்றும் அதிரை.காமிலும் பல்சுவை கட்டுரைகளையும் எழுதியுள்ளார். எழுதப்பழகுவோம் HTML, யுனிகோடும் இயங்கு எழுத்துருவும், யுனிகோடும் தமிழ் இணையமும், யுனிகோடின் பன்முகங்கள்-RSS ஓடை-ஒரு அறிமுகம்,தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு மற்றும் பல கணினித் தமிழ் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

நான்காம் இணையத் தமிழுக்காகச்செய்த தமிழ்ச்சேவை மகத்தானது. இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

மறைந்த உமர்தம்பி அவர்களின் தன்னலமற்ற தமிழ்தொண்டைப் போற்றும் வகையில் கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ்கணிமைக்கு பங்காற்றியவர்களுக்கு 'யூனிகோட் உமர்தம்பி' பெயரால் விருது வழங்கி கவுரவிப்பதே காலத்தினால் செய்த நன்றியாகும் என்பது தமிழ் கணிமை பயனர்களின் அவா!

தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?

உமர்தம்பி அவர்களை நினைவுகூறும் தமிழிணைய தளங்கள்,குழுமங்கள் மற்றும் தனிநபர் வலைப்பூக்களின் தொகுப்பை கீழ்கண்ட சுட்டிகளில் வாசிக்கலாம்.

இணைய தளங்கள்:
www.ta.wikipedia.org/wiki/உமர்_தம்பி
http://www.tamilmanam.net/m_thiratti_author.php?value=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D&pageno=17
http://www.pudhucherry.com/pages/umar.html
http://www.satyamargam.com/index2.php?option=com_content&task=emailform&id=166&itemid=300131
www.geotamil.com/pathivukal/notice_unicode_umar.html
http://www.islamkalvi.com/portal/?p=77
http://ezilnila.com/archives/803
http://ezilnila.com/2009/07/umarthambi/
http://tamilnirubar.org/?p=9958
http://www.nouralislam.org/tamil/islamkalvi/web/unicode_dynamic_website.htm
http://www.pudhucherry.com/
http://umarthambi.sulekha.com/blog/post/2006/07/.htm
http://www.tmpolitics.net/reader/
http://www.desikan.com/blogcms/?item=theene-eot
குழுமங்கள்
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4845&mode=threaded&pid=71005
http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=1213.0
http://groups.yahoo.com/group/tamil_araichchi/message/4633
http://tech.groups.yahoo.com/group/e-Uthavi/message/579
http://groups.google.com/group/anbudan/browse_thread/thread/93c7eeb38bede818/814be493e9c363f6?hl=en&ie=UTF-8&q=csd_one
http://groups.google.com/group/Thamizmanam/browse_thread/thread/a510f4d1e236527c/deffa100a949050e#deffa100a949050e
வலைப்பூக்கள்:
http://valai.blogspirit.com/archive/2006/07/14/கணித்தமிழர்-உமர்தம்பி.html
http://muthukumaran1980.blogspot.com/2006/07/blog-post_24.html
http://akaravalai.blogspot.com/2006/07/blog-post.html
http://kasiblogs.blogspot.com/2006/07/blog-post.html

நிரழிகள்/மென்பொருள் தரவிறக்கம்
http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www.geocities.com/csd_one/UWriterSetup.zip
http://www.geocities.com/csd_one/fonts/TheneeUni.zip

ஓரளவு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக தகவலறிந்தவர்கள் தயவு செய்து கருத்துக்களை பின்னூட்டமிடவும். மேலே குறிப்பிடத் தவறிய சுட்டிகளையும் பின்னூட்டத்தில் தந்துதவினால் உமர்தம்பி அவர்கள் குறித்த தேடல்களுக்கு உதவியாக இருக்கும்.டிஸ்கி : இந்த இடுகைக்கு தமிழிஷில் ஒட்டளித்தும்,தமிழ்மணத்தில் பரிந்துரைக்கும் படியும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... 

Post Comment

38 வம்புகள்:

nidurali said...

அருமையான கட்டுரை ,
தொடருங்கள்....

Anonymous said...

Good post

நாடோடி said...

உம‌ர்த‌ம்பி அவ‌ர்க‌ள‌ ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் அருமை... ந‌ண்ப‌ரே...

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.
//

நிச்சயம். உமர்தம்பி மாதிரியான பலர் கவுரவிக்கப்பட வேண்டியவர்களே..

காலம் கடந்த பிறகாவது.. அரசு அவரை கவுரவிக்கட்டும்.

காமராஜ் said...

வணக்கம் இர்ஷாத். இந்த தகவலும் கோரிக்கையும்
புல்லரிக்கிறது.ஆனாம் தமிழ் மணத்தில் ரெண்டு ஓட்டுத்தான்
விழுந்திருக்கிறது.அவ்வளவுதான் நம் மக்களின் ஆர்வம்.
கவுஜைகளுக்கு மட்டும்தான் ஆஹா ஓஹோ.
உங்கள் முயற்சி வெற்றி பெறவேணும்.வாழ்த்துக்கள்.

Chitra said...

Best wishes! Nice write-up!

தாஜீதீன் said...

சகோதரர் இர்ஷாத், மிக்க நன்றி.. இந்த முயற்சியை தொடர்ந்து செய்வோம்.

அபுஅஃப்ஸர் said...

நல்ல முயற்சி, உலக பெருமக்க ஒன்று கூடும் இடத்தில் இந்த தகவல் பரிமாறப்படுவதில் பெருமையே,

நிச்ச்யம இது மாதிரி விருது வழங்கப்பட வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் அரசின் பார்வைக்கு எடுத்துச்செல்வார்களா?

ஹேமா said...

நல்லதொரு முயற்சி இர்ஷாத்.வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

நிச்சயம் கவுரவிக்கப்படவேண்டும்.
அதற்கான முயற்ச்சியில் தாங்களும் ஒருபங்காக கட்டுரையின்மூலம் மிக்க மகிழ்ச்சி இர்ஷாத்

அஹமது இர்ஷாத் said...

nidurali,

seasonsali,

நாடோடி,

♠ யெஸ்.பாலபாரதி ♠ ,

காமராஜ்,

Chitra,

தாஜீதீன்,

அபுஅஃப்ஸர் ,

ஹேமா,

அன்புடன் மலிக்கா,

உங்கள் அனைவர் வருகைக்கும், திரு. உம்ர்தம்பி அவர்களை தமிழக அரசு செம்மொழி மாநாட்டில் கவுரவிக்கப்படவேண்டும் என்ற ஆதரவும் உங்களுக்கு இருப்பதற்கு எனது உளம்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.. அண்ணன் காமராஜ் சொன்னதுபோல்
//தமிழ் மணத்தில் ரெண்டு ஓட்டுத்தான்
விழுந்திருக்கிறது.அவ்வளவுதான் நம் மக்களின் ஆர்வம்.
கவுஜைகளுக்கு மட்டும்தான் ஆஹா ஓஹோ// என் ஆதங்கத்தையும் நீங்க சொல்லிவிட்டீர்கள் அண்ணே..ரொம்ப நன்றி...
அதே போல் இக்கட்டுரை என் சொந்த ஆக்கம் அல்ல, அதிரைக்காரன் என்ற எங்கள் ஊர்க்காரர் எழுதியதை அவர் அனுமதியுடன் இங்கே பதிவு செய்தேன் என்பதை இங்கே கூற கடமைப்பட்டுள்ளேன்..

கவிதன் said...

கவன ஈர்ப்புதீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள்..... அவசியம் கிடைக்கும். நல்ல பதிவு... வாழ்த்துக்கள் அஹமத் இர்ஷாத்.

அஹமது இர்ஷாத் said...

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கபிலன்...

Mrs.Menagasathia said...

Good post!!

தாஜூதீன் said...

எங்கள் உமர்தம்பி மாமா அவர்களுக்காக அதரவு குரல் கொடுக்கும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கு எங்கள் நன்றி, சிறிய வேண்டுகோள் பின்னோட்டமிட்ட அனைத்து சகோதரர்களும் இந்த கட்டுரையை தங்கள் வலைப்பூக்களில் மீள்பதிவு செய்தால் இன்னும் சிலருக்கு சென்றடையும். இதை ஒரு campaign யை தமிழார்வமிக்க அனைவரும் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஸ்ரீராம். said...

உங்கள் இந்தப் பதிவு யூத்புல் விகடன் குட் ப்ளாக்ஸ் பகுதியுள் வந்துள்ளதை கவனித்தீர்களா?
http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp

asiya omar said...

நல்ல பதிவு.பாராட்டுக்கள்.

அஹமது இர்ஷாத் said...

முதல் வருகைக்கும், யூத்ஃபுல் விகடனில் வந்ததை பற்றி சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்....

ஆசியா உமர் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி

தகடூர் கோபி(Gopi) said...

//தமிழக முதல்வரும், உலகதமிழ் செம்மொழி மாநாட்டுக் குழுவினரும் உரிய நேரத்தில் இதைச் செய்வார்களா?//

உமர் தம்பி அவர்களின் தமிழ் கணிமை பங்களிப்புகள் மகத்தானது. அவருக்கு உரிய அரசு அங்கீகரம் கிடைக்க வேண்டும்.

ஷாஃபி said...

இளமை விகடன் மூலம் உலகறியச் செய்ததற்கு வாழ்த்துக்கள்.
அசலை விட நகல் ஆக்கம் சிறந்த வலைப்பூவாய் தேர்வாயிருப்பது ஆச்சரியமளிக்கிறது! அதுவும், விகடன் வலைதள முகப்புப் பக்கத்தில் 'துரோகம்' கவிதையும் ஒரே வாரத்தில்!
என்ன வித்தை செய்தீர்கள் தம்பி?
ஒரு வேண்டுகோள்: இந்த ஆக்கத்தை விகடன் வலைதள முகப்புப் பக்கத்தில் பரிந்துரைப்பதின் மூலம் அதிக கவன ஈர்ப்பை பெறுவது சாத்தியம். விகடன் குழும இதழ்களில் செய்தியாய்க் கூட வந்து ஆள்வோர் காதுக்கெட்டும்; முயற்சி செய்யவும்.
தம்பி ஜமாலுத்தீனின் வலைப்பூவில் இந்த ஆக்கம் வந்ததிலிருந்து தினமும் ஒருமுறையாவது சென்று (சிலநாட்களில் பலமுறை) வேறு யாராவது இது குறித்து கருத்திட்டிருக்கிறார்களா என பார்த்து அயர்ச்சியே மிஞ்சியது. இப்போது சற்று நம்பிக்கையளிக்கிறது.

வாழ்த்துக்களுடன்,
--
மு.இ.முஹம்மத் ஷாஃபி

அஹமது இர்ஷாத் said...

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஷாஃபி அண்ணா(காக்கா), உங்கள் வேண்டுகோளுக்கிணங்க நான் பரிந்துரைத்து விட்டேன். விகடன் தளத்தில் முகப்பு பக்கத்தில் இந்த இடுகை வந்தால் மகிழ்ச்சியடைபவர்களில் நானும் ஒருவன்...

அஹமது இர்ஷாத் said...

தகடூர் கோபி(Gopi).. முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

Mrs.Menagasathia வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

Jaleela said...

நிச்சயம் கவுரவிக்கபடனும். நல்ல பகிர்வு,சரியான இடத்தில் பகிர்ந்து கொண்டீர்கள். யுத் ஃபுல் விகடனில் வந்தது ரொம்ப சந்தோஷம்.

அஹமது இர்ஷாத் said...

ரொம்ப நன்றி ஜலீலா அக்கா உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்....

The Crown of Islam said...

தம்பி இர்ஷாத்,யூத்ஃபுல் விகடனில் முதல் பக்கத்தில் வெளிவந்த செய்தி மிகவும் சந்தோசபடவைக்கிறது. வாழ்த்துக்கள்..

விகடன் தளத்தில் முகப்பு பக்கத்தில் இந்த இடுகை வந்தால் காண்டிப்பாக பல தமிழ் ஆர்வளர்களை சென்றடையும். பெறுத்திருந்து பார்ப்போம்.

தாஜூதீன் said...

தம்பி இர்ஷாத்,யூத்ஃபுல் விகடனில் முதல் பக்கத்தில் வெளிவந்த செய்தி மிகவும் சந்தோசபடவைக்கிறது. வாழ்த்துக்கள்..

விகடன் தளத்தில் முகப்பு பக்கத்தில் இந்த இடுகை வந்தால் காண்டிப்பாக பல தமிழ் ஆர்வளர்களை சென்றடையும். பெறுத்திருந்து பார்ப்போம்.

அக்பர் said...

மிக நல்ல பகிர்வு இர்ஷாத்.

கண்டிப்பாக அரசு ஆவன செய்ய வேண்டும்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

mohi said...

அதிரையின் புகழை அகிலத்திற்கு உணர்த்தும் உமது குழுக்-
களுக்கு எமது வாழ்த்துக்கள். மேலும் இம்முயற்சியில்
ஈடுபட்டு இருக்கும் சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
அது, உமர் காக்கா பற்றி எழுதி இருக்கும் மற்ற இணைய
தொடர்புகளை அதிரையின் தகவல் சார்ந்த web server-களில்
நகல் எடுத்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால் காலமாற்றத்தினாலும், புது புது நிகழ்சிகளின்
வரவுகளாலும் வலைப்பூக்களிலும் மற்ற இணையத்திலும்
மாற்றங்கள் வரும் அப்பொழுது உமர்காக்கா தொடர்புடைய
செய்திகள் அழிக்கவோ, நீக்கவோ படலாம். இதனால் நமது
எதிர்கால சந்ததியினருக்கு இத்தகவலை சேர்க்க இயலாமல்
போகலாம். நகல் எடுப்பதன் மூலம் " THE PAGE CANNOT BE
FOUND" தொல்லையிலிருந்து விடுபடலாம்.

முயற்சி திருவினையாக்கும்.
வாழ்த்துக்களுடன்.

malar said...

நல்ல பதிவு...

உங்கள் பதிவின் மூலம் அவறை பற்றி தெரிந்துக்கொண்டேன்....

malar said...

நல்ல பதிவு...

உங்கள் பதிவின் மூலம் அவறை பற்றி தெரிந்துக்கொண்டேன்....

அக்பர் said...

யூத்ஃபுல் விகடனில் உங்கள் கவிதை வெளிவந்ததற்கு வாழ்த்துகள்.

அஹமது இர்ஷாத் said...

அக்பர்,

mohi,

மலர்

உங்கள் அனைவர் வருகைக்கும் வாழ்த்தும் மிக்க நன்றி. நண்பா அகபர் உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

செக்கடிமோடு said...

ஒரு நல்ல ஜென்டில் உன் கட்டுரைகும் தேனி எலுதுரு அமைத்த உமர் தம்பி அவர்ஹலுக்கும் உண்டு,அம்மஹனார் தன்னனை விலம்பரபடுததாத பொது நல வாதி,

ஜெய்லானி said...

நிச்சயம் கவுரவிக்கப்படவேண்டும்.

'ஒருவனின்' அடிமை said...

உரிய அங்கீகாரம்,இன்ஷா அல்லாஹ்,உமர்தம்பி காக்காவுக்கு கிடைக்கும்.

அஹமது இர்ஷாத் said...

ஜெய்லானி,

செக்கடிமோடு,

ஒருவனின் அடிமை..

உங்கள் அனைவரின் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.

RAJ said...

கண்டிப்பாக அங்கிகாரம் கிடைக்கும்..

அஹமது இர்ஷாத் said...

ரொம்ப நன்றி ராஜ் வருகைக்கும் கருத்துக்கும்..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates