மூக்குத்தியும் ம‌ழையும்...

Thanks to Art : ilayaraja 

 ...

மூக்குப் பொட்டு
குத்திக் கொள்ள‌வா
என்று கேட்டாள்
அம்மாக்காரி
வேண்டாமென்றேன்
ஏதும் சொல்லாம‌ல்
வில‌கிய‌ அவ‌ள்
என்மீது வைத்துள்ள‌
அன்பென‌ நினைத்து
பெருமை கொண்ட‌
சுவ‌டு ஆற‌வில்லை
த‌ன் ம‌க‌ளின்
அழுகையை கூட‌
பொருட்ப‌டுத்தாம‌ல்
ம‌க‌ளின் மூக்கில்
பொட்டைகுத்தி
என்மீதுள்ள‌
த‌ன் கோப‌த்தை
த‌ணித்து கொண்டாள்..


........



 
வெள்ளிக்கிழ‌மை 12 ம‌ணி வாக்கில் வெள‌க்காரியிட‌ம் பேர‌ம்பேசி மூணு கீத்து மாங்காயை பொடி வைத்து திண்ப‌தில் இருக்கும் சொக‌ம் ம்ம்ம்.. ம‌ஞ்ச‌ளும் அல்லாம‌ல் அத‌ற்கு இடைப்ப‌ட்ட‌ க‌ல‌ரில் இருக்கும் மாங்காயில் ஒவ்வொரு கீத்தாக‌ ந‌றுக்கி அதை ப‌டுக்க‌ப்போட்டு சின்ன‌ சின்ன‌தாக‌ கொத்தி அத‌ன் மேல் அரிசி,உப்பு,மிள‌காய்தூள் க‌ல‌ந்த‌ பொடியை தூவிய‌தும் அதை போட்டிபோட்டு வாங்கும் ந‌ண்ப‌ர்க‌ள் அதை ருசிப்ப‌திலும் போட்டி போடும் வித‌ம்..சொக‌ம்..

லூலூ ஹைப‌ரில் ஃப்ரிட்ஜ‌ரில் இருந்து மாம்ப‌ழ‌த்தை எடுத்து ருசிக்கும்போது வ‌ர‌வில்லை அந்த‌ ருசி....:(


.......................................................

AADHAR CARD

இந்திய‌ அர‌சாங்க‌ம் ம‌க்க‌ளுக்கு ஃபோட்டோவுட‌ன் கூடிய‌ அடையாள‌ அட்டை த‌ர‌ப்போறாங்க..அதுக்கான‌ விண்ண‌ப்ப‌ம் இது, பூர்த்தி செய்து அனுப்ப‌வேண்டும். Buzz'ல் ப‌கிர்ந்த‌ விஜிக்கு ந‌ன்றி..

 ......................................

ட்விட்ட‌ரில் ஃபேஸ்புக்கில் கிறுக்கிய‌து..

பேருந்தில்இவ்ளோஎட‌ம் காலியாக‌ இருந்தும் க‌டைசிபெஞ்சில் வ‌ந்து என்ன‌ருகில்உட்காரும் ப‌ச்சை ச‌ட்டைகார‌ரை எதைக்கொண்டு அடிப்ப‌து # புல‌ம்ப‌ல்'ஸ்

ஹ‌சாரேவுக்கு ஆத‌ர‌வாக‌ திரைஉல‌கின‌ர் போர‌ட்ட‌ம் # பேசாம‌ சிவாஜி தி பாஸ்'ஸை ரெண்டு த‌ட‌வை பார்த்துட்டு க‌ம்'னு கிட‌க்காம‌ ங்கொய்ய‌ல‌ இதுவேற‌..

இனி.. 'த‌ங்க‌ம்' அப்ப‌டின்னு கேள்விப்ப‌ட‌மட்டுத்தான் முடியும் போல‌ :(

வ‌ண‌க்க‌ம் நான் விஜ‌ய‌காந்த் பேசுறேன் நீங்க‌ கேட்டுக்கிட்டு இருக்கிற‌து ஹ‌லோ எஃப் எம்..ஆங்..# எத‌ம‌ற‌ந்தாலும் ஆங்'னு சொல்ற‌தை ம‌ற‌க்க‌மாட்டாருப்போல‌..

மொபைலில் லவுட் ஸ்பீக்க‌ரை ஆன் செஞ்சு ஜ‌ன்ன‌லில் வைக்க‌ச்சொல்லி அந்த‌ ம‌ழைச்சார‌லை ர‌சித்தேன் இன்று # ஊரில் ம‌ழையாம்..

ராக்கி என்கிற‌ வ‌ட‌க்கு விஷ‌ய‌த்தை ப‌த்தி பேசுற‌தில் நாம் த‌மிழ‌ர்க‌ள், ஆனாலும் இந்தி ஒழிக‌ ஒழிக‌தான் # முர‌ண்.

பாட்டை முழுசா அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு கேட்க‌விட்டுத்தான் மொபைலை அட்ட‌ன் செய்கிறார்க‌ள் # ரிங்டோன்..

ஒரு க‌ருத்தை சொன்னால் உட‌னே கைத‌ட்டி, ந‌ல்லா யோசிச்சுக்கிட்டு இருந்த‌வ‌னையும் யோசிக்க‌வைக்க‌ முடியாம‌ல் செய்வ‌து த‌மிழ‌ர் ப‌ண்பாடு..

வெங்காய‌ விலைக்கு ச‌வுண்ட் வுடும்போது கோல்டு விலையேற்ற‌த்துக்கு ஏன் எல்லோருமே ஒன்னுக்கு ரெண்டு பிளாஸ்திரி'ய‌ வாயில‌ ஒட்டிடுறாங்க‌...

ல‌ஞ்ச‌ம் என்றாலே என‌க்கு முத‌ல்'ல‌ நினைவுக்கு வ‌ர்ற‌து ரேஷ‌ன் கார்டு.. # என‌க்கு ம‌ட்டுந்தானா இப்ப‌டி..

புது ம‌னைவி துணிகாய‌ப்போடும்போது ரொமான்ஸ் வ‌ர்ற‌மாதிரி காட்ற‌ சீனை ஆர‌ம்பிச்சு வெச்ச‌ டைர‌க்ட‌ர் கிடைச்சா ச‌ங்குதான் # நோ ரொமான்ஸ் ஒன்லி விய‌ர்வைதான் :( 

விள‌ம்ப‌ர‌த்துக்கும் காத‌லுக்கும் என்ன‌ வித்தியாச‌ம்..

விள‌ம்ப‌ர‌த்துல‌ இனிப்பான‌ செய்திய‌ பெருசா போட்டு க‌ண்டிஷ‌ன் அப்ளை'ங்கிற‌ ஆப்பை சின்ன‌தா போட்ருப்பானுங்க‌..


காத‌லில் க‌ண்டிஷ‌ன் அப்ளை வ‌ண்டி வ‌ண்டியாய் வ‌ந்து இனிப்புங்கிற‌ மேட்ட‌ர் ஒளிஞ்சிருக்கும்..



ச‌மீப‌த்தில் குமுத‌த்தில் வ‌ந்த‌ ஒரு ஜோக்..வ‌யிற்றை புண்ணாக்கிவிட்ட‌து.. :))

'என்ன‌ங்க‌  பின்னாடி இருக்கிற‌வ‌ன் என் காலை சுர‌ண்டுறான்'

'நீ திரும்பி உன் மூஞ்சீ'ய‌ காட்டு,ஏன்டா இப்ப‌டி செஞ்சோம்'னு சாக‌ட்டும், த‌றுத‌லை..'

................................................................

  ஏர்டெல் சூப்ப‌ர் ஸிங்க‌ர் விறுவிறுப்பான‌ க‌ட்ட‌த்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிற‌து.. க‌டைசி வைல்ட் கார்ட் ர‌வுண்ட்டில் 'ஸ்ரீநிவாஸ்' பாடிய‌ ஆரோமேலே பாட‌ல் ந‌ன்றாக‌ இருந்த‌து..ஓப்ப‌ன் ஸ்டேஜில் இப்ப‌டியொரு பெர்ஃபாமென்ஸ் ரிய‌லி சூப்ப‌ர்..



ம‌ழை..இறைவ‌ன் த‌ந்த‌ கொடை.. அந்த‌ ம‌ழையில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ வீடியோவை பாருங்க‌ள்.. ம‌ன‌தைக் கொள்ளைக் கொள்ளும் என்ப‌து நிச்ச‌ய‌ம்..ரொம்ப‌வும் ர‌சிச்ச‌ வீடியோ இது..



 
Cartoon Mania.. :))






வாணி ஜெய‌ராமின் வ‌சீக‌ர‌ குர‌லில் நீங்க‌ளும் ம‌ய‌ங்குங்க‌ள் இந்த‌ பாட்டைக் கேட்டு...




Post Comment

12 வம்புகள்:

ஜெய்லானி said...

இருங்க படிச்சிட்டு வரேன் :-)

அப்துல்மாலிக் said...

தனித்தனியா படிக்கும்போது வர்ர ஆவல் மொத்தமா படிக்கும்போது இல்லே

ஸாதிகா said...

//ச‌மீப‌த்தில் குமுத‌த்தில் வ‌ந்த‌ ஒரு ஜோக்..வ‌யிற்றை புண்ணாக்கிவிட்ட‌து.. :))

'என்ன‌ங்க‌ பின்னாடி இருக்கிற‌வ‌ன் என் காலை சுர‌ண்டுறான்'

'நீ திரும்பி உன் மூஞ்சீ'ய‌ காட்டு,ஏன்டா இப்ப‌டி செஞ்சோம்'னு சாக‌ட்டும், த‌றுத‌லை..//

அப்படி என்ன புண்ணாகும் படி ஜோக் என்று கீழே ஜோக்கை படித்து விட்டு சிரித்ததில் எனக்கு புண்ணானாதோ இல்லையோ புரை ஏறி விட்டது இர்ஷாத்.

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...
மற்றவை அனைத்தும் நல்லாயிருக்கு.

Philosophy Prabhakaran said...

ட்வீட்ஸ் அருமை...

குறிப்பா:
ஹ‌சாரேவுக்கு ஆத‌ர‌வாக‌ திரைஉல‌கின‌ர் போர‌ட்ட‌ம் # பேசாம‌ சிவாஜி தி பாஸ்'ஸை ரெண்டு த‌ட‌வை பார்த்துட்டு க‌ம்'னு கிட‌க்காம‌ ங்கொய்ய‌ல‌ இதுவேற‌..

r.v.saravanan said...

அனைத்தும் அருமை

குறையொன்றுமில்லை. said...

எல்லாமே நல்லா இருக்கு.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அனைத்தும் நல்லாயிருக்கு.

நட்புடன் ஜமால் said...

அப்துல்மாலிக் said...
தனித்தனியா படிக்கும்போது வர்ர ஆவல் மொத்தமா படிக்கும்போது இல்லே

Yes ...

ஸ்ரீராம். said...

பதிவுல எக்கச்சக்கமா போட்டுத் தாக்கிட்டீங்க இர்ஷாத்...ரசித்த பதிவு.

Thenammai Lakshmanan said...

எல்லாமே சூப்பர். இர்ஷாத் ஆனா அந்த மாங்காதான் ரொம்ப ஜொள்ளு விட வச்சுது. ஏன்னா மாங்கா சீசன் இங்கேயும் முடிஞ்சிருச்சே.. ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க..:)

Ahamed irshad said...

ந‌ன்றி ம‌க்க‌ள்'ஸ் உங்க‌ளின் சிற‌ப்பான‌ க‌மெண்ட்ஸ்க‌ளுக்கு :)

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates