---
அன்றொரு காலையில் ஒரு மானா ஹோட்டலில் உப்புமா சாப்பிடபோய் புடுங்கின பேதியில் ஒன்றரை மணி நேரம் டாய்லெட்டில் மாநாடு போடவேண்டியதாகிப்போச்சு..ரெண்டு மூணு கிலோ உடம்பிலிருந்து பறந்தமாதிரி ஒரு ஃபீலிங்..அன்னிக்கு பூராவும் நோயாளி மாதிரிதான் இருந்தேன் இங்க என்ன ஊர் மாதிரியா தடுக்கி விழுந்தால் ஒரு மெடிக்கல் ஷாப் இருக்க,சாதாரண தலைவலின்னாலே நூறு ரியால் மொய் எழுதிவிடுவார்கள்..நல்லவேளை கம்பெனி மெடிக்கல் கார்டு தந்திருந்தார்கள்..ஆனால் நான் ஹாஸ்பிட்டல் போகவில்லை,சொன்னால் அந்தளவிற்க்கெல்லாம் ஆகலை..சமாளிச்சு ஆபிஸ் போயிட்டேன்..டீ கூட குடிக்க யோசிச்சேன்..என்ன பன்றது வயிற்றுக்கு ஏதாவது அனுப்பியாகுனுமேன்னு ஒரு டீ யும் ரெண்டு பிஸ்கெட் மட்டுமே சாப்பிட்டிருந்தேன் அந்த பகல் நேர லஞ்சிற்க்கு..சாயங்காலம் ஆறு மணிக்கெல்லாம் கடும் பசி..உண்மையை சொன்னால் சரியான பசி..வயிற்றில் ராட்டினம் சுற்றியது..எதிரில் மட்டுமில்லை எங்கே சுத்தினாலும் மானா ஹோட்டல்தான் சரி கழுத கெட்டா குட்டிச்சுவரு இவனுங்கள விட்டா வேற வழியில்லை..மனசுக்குள்ள மைக்குப் போட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி பரோட்டா,கோழி குழம்பு??, ஆம்லேட் ஆர்டர் செஞ்சாச்சு..என் எதிரில் உட்கார்ந்திருந்தவர் ஜாமின்'ல வந்த மாதிரி இருக்க நான் அவரை ஏறிட மனமின்றி என் புறங்கையை பார்த்துக்கொண்டிருந்தேன்..என்னுடைய அதிர்ஷ்டமா இல்ல அவருடைய துரதிஷ்டமான்னு தெரியலை நாங்க ரெண்டு பேரும் ஒன்னாத்தான் ஆர்டர் செஞ்சோம் எனக்கு முதல்ல வெச்சுட்டார் மிஸ்டர் சர்வர்..முதலில் பரோட்டாவும் கோழி குழம்பும் வர நான் சாப்பிட ஆரம்பிக்கலாம் என எண்ணி பரோட்டாவைப் பிக்கிற மாதிரி அவரைப் பார்த்தேன் கடுமையான கோபம் போல தெரிந்தது, மூச்சு வேற இன்ஸ்டால்மென்ட்ல விட்டுக் கொண்டிருந்தார் மனுஷன்..எப்படி எனக்கு சாப்பிடவரும்.. அவரிடம் பேச்சு கொடுக்கலாம் என்பதற்க்குள் பின்னாடி சர்வர் நான் கேட்ட ஆம்லேட்டோடு வந்துக்கொண்டிருக்க, சர்வருக்கு இன்னிக்கு கெரகம் சரியில்லை என எண்ணிக்கொண்டேன்..மாஸ்டருக்கு சம்பள பாக்கி போல, ஆம்லேட்டில் மிளகாய் பச்சையிலிருந்து சிகப்புக்கு மாறி 'அலாரம்' அடித்தது..
'வாட் ஹேப்பன்'
'தோடா மினிட் சார்'
அடி விழுகும்'ன்னு எதிர்பார்த்தேன்..ப்ச் இல்ல,நாம நினைக்கிறது என்னிக்கு நடந்திருக்கு..
நான் பேச்சு கொடுக்கவில்லை..அடி திசை மாத்தி வந்துட்டா..அவ்..
-------------------------------------------------------
கிரிக்கெட்டர் அசாருதீனின் மகன் பைக் விபத்தில் காயம்பட்டு இறந்திருக்கிறார்..தனது மகனுக்காக ஜப்பானிலிருந்து Suzuki GSX R 1000 பைக்கை 5.58 லட்சம் + 88% வரியோடு இறக்குமதி செய்து கொடுத்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டு இருந்தது..அதுவும் பைக் 999CC திறன் உடையதாம்..அதெல்லாம் ஓட்டக்கூடிய ஊரா இது என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க பைக் போக தடைவிதிக்கப்பட்ட சாலையில் அதிவேக பயணம் செய்திருக்கிறார் என்பதும் வெளியாகியிருக்கிறது..தகப்பன் மகனுக்கு ஆற்றும் உதவி.. :(
------------------------------------------------------
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு மொக்கையான தலைப்பு.. ஃபேர் Vs டஸ்க் அதாவது சிவப்பா இருக்கும் பெண்கள் அழகா, மாநிறமா இருக்கும் பெண்கள் அழகா..அதிலும் சிவப்பா இருக்கும் லேடீஸ்கள் உதிர்த்த திருவாய் மொழிகள் உவ்வே ரகம்..அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் கொஞ்சம் ஓவராகவே தெரிந்தது..நிற வேறுபாடுகளுக்குள் இப்படிப்பட்ட வன்மம் இருக்கிறது அதுவும் தமிழகத்தில் இப்படி இருக்கிறது என்பது வேதனைக்குரியது.மாநிறமும் சளைக்காமல் சிகப்புகளை நோஸ்கட் செய்துக்கொண்டிருந்தார்கள்..இதெல்லாம் இப்ப இந்தச் சமூகத்துக்கு தேவையா. நீ.நானா நிகழ்ச்சியை ஒரு புறம் பாராட்டினாலும் மறுபுறம் கல்லடிப் பட்டுக்கொண்டேதானிருக்கிறது..சில சமயம் சென்சிட்டிவான விஷயங்களை ஆராயும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லாத மாதிரிதான் தெரிகிறது..டிஆர்பி ரேட்டிங் வந்தால் போதும் என்ற வர்த்தக ரீதியான கவலை மட்டும் அவர்களுக்கு..இன்னொன்று இந்த மாதிரி நிகழ்ச்சிகளின் பேசுபவர்கள் சொல்வதுதான் ஒட்டுமொத்த மக்களின் கருத்தாக/மனநிலையாக எடுத்துக்கொள்வது சுத்த பேத்தல்+அபத்தம்..அதை ரொம்ப பேர் செய்துக் கொண்டிருக்கிறார்கள்..
------------------------------------------------------
மணி எக்சேஞ்சிலிலுள்ள கவுண்ட்டரில் இருந்த நேபாளிகூட தமிழில்? பேசிக்கொண்டிருந்தார் அவர்..வளைகுடா சின்ன அடிமை(பெரிய அடிமை ரகம் வேற) லேபர் உடையில் இருந்தார்..அவன் திருப்பி இந்தியில் சொல்ல இவர் மீண்டும் மீண்டும் தமிழிலியே பேச அந்த நேரம் நான் அங்கு என்ட்ராவுறேன்..இவ்வளவுக்கும் பக்கத்தில் ஒரு மலையாளி உட்கார்ந்திருக்கிறார்(ன்) அவரு(னு)க்குத்தான் மெட்ராஸி,தமிழ்நாட்டுக்காரன் என்றாலே ஒரு வித எளக்காரம் அவர்(ன்) எப்படி உதவி செய்வார்(ன்)..நான் போய் அவரிடம்,
'என்னங்க பிரச்சனை'?
'இல்ல அண்ணே பணம் அனுப்பனும் ரண்டு மாசமா இங்கதான் வர்றேன்' என்றதும்,
எனக்கு பேயறைந்தது போலிருந்தது, ஏனென்றால் அது வெஸ்ட்ர்ன் யூனியனில் மட்டுமே அனுப்ப வேண்டிய எக்சேஞ் அது.. சராசரியாக ஒரு ட்ரான்செக்சனுக்கு இருபத்து அஞ்சு ரியால் மொய் எழுதிவிடுவார்கள்..நான் அர்ஜென்ட்டா அனுப்ப மட்டும் அங்கு வருவேன்..ரூமிற்க்கு பக்கமாகவும் உள்ளதாலும்,
'ஏங்க உங்களுக்கென்ன பைத்தியமா ஏன் இங்க வந்து பணம் அனுப்புறீங்க?'
'இல்லேண்ணே எங்க ரூம்க்காரய்ங்க சொல்லித்தான் எனக்கு வேற ஏதும்
தெரியாதுங்க'
'ப்ச்... எத்தன மாசமா இதுல அனுப்புறீங்க?'
'நாலு மாசமா அனுப்புறேன்னே'
அடப்பாவிகளா... அவரின் சம்பளம் வெளியில் சொல்லமுடியாத அளவிற்க்கு மிகச் சொற்பம்..அதிலும் வெஸ்ட்ர்னில் அனுப்பும்போது முழுமையாக இருபத்து அஞ்சு ரியாலை சர்வீஸ் சார்ஜாக எடுத்துவிடுவார்கள் என்பது அந்தோ பரிதாபமாக பட்டது எனக்கு அன்னிக்கு அவரைப் பார்க்கும்போது..
'நேபாளிட்ட போய் தமிழ்ல பேசுறீங்க அவனுக்கு எப்படி புரியும்ங்க' என்று கோபமாகவே கேட்டேன்,
'இல்லீங்க இல்லீங்க'
'சரி எந்த ஊரு?'
' கமுதிக்கு பக்கம்ணே'
சரி விடுங்க.. இனிமே இங்க வராதீங்க.. என்னே.. உங்க வீட்'ல யாருக்காவது பேங்க் அக்கவுண்ட் இருக்கா?'
'இல்லண்ணே'
'சரி யார் இருக்கா வீட்ல'?
'என் பொண்டாட்டி இருப்பா'
'சரி அவங்ககிட்ட சொல்லி உடனே ஒரு பேங்க அக்கவுண்ட் ஆரம்பிக்க சொல்லுங்க.. ஆரம்பிச்சதும் ஒரு நம்பர் பேங்க்லேர்ந்து கொடுப்பாங்க அதை வாங்கி வெச்சுக்கோங்க'
அடுத்த மாசம் பணம் அனுப்ப வேறொரு எக்சேன்ஞ'ஐ நான் காமிக்கிறேன் அங்கே போங்க,அங்க போய் நம்பரை காமிச்சு பணம் அனுப்புங்க 12 ரியால் இல்லாட்டி 15 ரியால்தான் வரும் என்றதும் ரொம்ப நன்றிண்ணே என்றபடி சொன்ன அந்த மனிதரைப் பார்த்தபோது என்னை அறியாமலேயே நான் கலங்கிவிட்டேன்..
உடல் உழைப்பை மட்டுமே நம்பி இந்த கொடூர வெயிலில் வேலை செய்யவரும் இவரைப் போன்றவர்கள் பாவம்..இதுக்கு இங்க வரவே தேவையில்லை..
------------------------------------------------------
நான் எழுதிய கதையை வெளியிட்ட அதீதம் இதழுக்கு நன்றி.
------------------------------------------------------
சமீபத்தில் எங்க ஊரில் எடுக்கப்பட்ட அழகான அதுவும் ரொம்பவும் அரிதான புகைப்படம்..அனுப்பிய சகோ.சாகுல் அவர்களுக்கு நன்றி..
---------------------------------------------------
சூப்பர் சிங்கரில் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது..ஃபைனலுக்கு இன்னும் ஒரு படிதான் என்ற நிலையில் ஃப்ரீ ஃபைனல்'ஸ் என்றொரு ரவுண்ட்டில் போட்டியாளர்கள் தங்கள் திறமையை ரொம்ப அற்புதமாக செய்துவிட்டனர்..அதிலும் ஸ்பெஷலா சொல்லனும்னா சத்யப்ரகாஷ் 'ஜீனியர் டைட்டில் வின்னர் அல்கா அஜித்தும்'சேர்ந்து பாடிய 'உதயா உதயா' என்ற பாடல் அற்புதம்..வாவ் வாவ்..என்னாமா பாட்டு படிக்குது அந்தப் பொண்ணு..கூட சத்யப்ரகாஷீம் அசத்திட்டார்..இந்த ஒரு பாட்டுக்கே சத்யப்ரகாஷ்க்கு எக்கச்சக்க ஓட்டு விழுந்திருக்கனும்..நான் அனுபவிச்ச அற்புதமான ஃபீலை நீங்களும் கட்டாயம் கேளுங்க.
சூப்பர் சிங்கரில் 'அன்ப்லக்டு மெலோடி' ரவுண்ட்டில் சத்யப்ரகாஷ் படிச்ச 'ஆருயிரே ஆருயிரே' பாடலை கேட்டேன் அசந்தேவிட்டேன்...சூப்பர் சூப்பர்..என்ன வாய்ஸ்யா..ப்ச்
14 வம்புகள்:
me first
ஒரு மானா ஹோட்டலில் உப்புமா சாப்பிடபோய் புடுங்கின பேதியில் ஒன்றரை மணி நேரம் டாய்லெட்டில் மாநாடு போடவேண்டியதாகிப்போச்சு..
haa....haa....
தமிழ்மணம் புட்டுக்கிச்சா..யாராவது இணைத்துவிடுங்கள்..
நன்றி சரவணன்
//அடி விழுகும்'ன்னு எதிர்பார்த்தேன்..ப்ச் இல்ல,நாம நினைக்கிறது என்னிக்கு நடந்திருக்கு..
நான் பேச்சு கொடுக்கவில்லை..அடி திசை மாத்தி வந்துட்டா..அவ்..//
ஹா..ஹா..ஹா.. ரொம்ப சிரிக்கவச்சிட்டீங்க இர்ஷாத்.
சுவராசியமான அனுபவத்தொகுப்பு. அந்த கமுதிக்காரரை நினைத்தால் வருத்தப்படாமல் இருக்கமுடியவில்லை. பாவம், இன்னும் எத்தனை பேர் இப்படி இருக்கிறார்களோ?
வானவில் ஜாலம் காட்டியது. :-)
படம் ரெண்டும் ரொம்ப அழகு. பதிவும் நல்லா இருக்கு.
சுவராசியமான அனுபவத் தொகுப்பு.
முழுமையாக ஒரு வானவில். அருமையான காட்சி.
மணி எக்ஸ்சேஞ்ச் கதை - பாவம் ;(
அந்த இரண்டு பாடல்களும் எனக்கும் பிடித்திருந்தன. மீண்டும் கேட்டு, பார்த்து ரசிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ;)
999 cc ஐ ஊருல பாஸ் செய்யுறாங்களா..? இங்கே இருக்கும் போலீஸ் பைக்கே அத்தனைதான் :-)))
நல்ல தொகுப்பு :-))
நான் எடுத்த போட்டோவை போட்டதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்
மிக சுவராஸ்யமான பதிவு!! நான் நலம்,நீங்க எப்படி இருக்கீங்க??
சாய் சரண் ஜெயிச்சுட்டாராம். நேற்று லைவ் ப்ரோக்ராம்ல தெரிந்தது. பதிவிலுள்ள மற்ற செய்திகள் சுவை.
பேதி பற்றி எழுதி இருந்தீர்கள். இது மாதிரி சமயங்களில் தண்ணீர் நிறையக் குடிக்கலாம். தண்ணீரில் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம். டீ டிகாக்ஷனில் எலுமிச்சைச் சாறு பிழிந்து சாப்பிடலாம்.
சூப்பர் வாய்ஸ் இந்த சத்யாவுக்கு...சிறந்த பாடகராக வரும் வாய்ப்பு அதிகம்
Thanx Irshad for sharing this wonderful video.
Post a Comment