Thanks to Google For Pic.
'அம்மா நாம போற வழியில என் கொலுச கொடுத்துட்டு வேற மாத்திரலாமா'
'அதுக்கெல்லாம் நேரம் கிடைக்குமான்னு யோசிச்சுப்பாரு பேங்க்ல எவ்வளவு கூட்டமோ அதெல்லாம் முடியாது இன்னொரு நாளைக்குப் பார்த்துக்கலாம்'
'ஏம்மா புலம்புற அதெல்லாம் சீக்கிரம் பேங்க் வேலையை முடிச்சிட்டு கொலுசு கடைக்கு போயிறலாம்'
'அதெல்லாம் வேண்டாம் சொன்னாக் கேளு உனக்காக நாளைக்கு வேணாப் போய்க்கலாம்'
'அப்ப கண்டிப்பா நீ நாளைக்கு வரனும்மா'
'சரி சரி நீ கெளம்புற வேலையைப் பாரு உன் அப்பா இன்னிக்கே எடுக்க சொல்லியிருக்காரு'
'இதோ ரெண்டு நிமிஷத்துலேயே வந்துடுறேன்' ரெண்டு நிமிஷம் ஐந்து நிமிஷமானது.
வெளிநாட்டிலிருக்கிற அப்பா செல்வராஜ் அனுப்பிய பணத்தை எடுக்க சுந்தரியும், வெண்ணிலாவும் கிளம்பினார்கள்.
'அம்மா ஆட்டோ பிடிக்கலாம்மா எனக்கு ரொம்ப தூரம் நடக்க முடியாது'
'சரி புலம்பாதே அந்த பஸ் ஸ்டாப்புல போய் ஆட்டோவ பிடிக்கலாம் வா'
கொஞ்ச தூரத்திலிருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்து அதை அடைந்தார்கள்.
ஆட்டோக்காரரிடம் பேரம் பேசவும்,ஆட்டோ பேங்கை அடையவும் இருபது நிமிடங்கள் கழன்டு ஓடியிருந்தன.
சொல்லி வைத்ததற்கேற்ப பேங்கில் மாநாடு போல் இருந்தது கூட்டம்.
ஆட்டோவிற்கு பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே போன அதே நேரம்.....
வெண்ணிலா கொலுசைப் போட்டுக் கொண்டு வந்த துணிப்பையும்,
சுந்தரி செக், பாங்க் பாஸ்புக் போட்டு வைத்திருந்த அதே மாதிரியான
துணிப்பையும் இடம்மாறி செக் உள்ள பை அலமாரிக்கு பக்கத்திலுள்ள ஆணியில்
ரொம்ப 'பத்திரமாய்' தொங்கிக் கொண்டிருந்தது...
4 வம்புகள்:
நல்லா இருக்கு... மீள்பதிவுன்னு போட்டிருக்கீங்க... நான் இப்போதான் முதல்முறையா படிக்கிறேன்...
ஏற்கெனவே படித்த நினைவு இருக்கிறது!
அதான் நானும் நினைச்சேன்.
nantraaga irunthathu
Post a Comment