பேதம்
ஒருவேளை
பருக்கைக்கு
இருகையேந்தும்
ஏழ்மையை
பார்த்துக்கொண்டே
தானிருக்கிறது
இயற்கை..
_______________
உயிரி
பசியில் அங்குமிங்கும்
அல்லாடிய நிலையில்
பெய்த மழையில்
சேர்ந்த தண்ணிரை
தின்றது பூனை.
**தின்ற = குடித்த
________________
அலைகழிப்பு
கருப்புக்கோட்டை
மாட்டிக்கொண்டு
வாதாடுபவர்களுக்கு
பெரும்பாலும்
தெரிவதில்லை
ஏழ்மையின்
வறுமைகோட்டை..
_______________
சாதல்
அன்று காதலில் தோற்று
மனதை வைத்தோம்
பூட்டி
இன்று வானில்
சிறகடித்து நிலவுக்கே
போட்டி.
_______________
P.G
தேவையானவற்றை
வாங்க
தேவையில்லாததை
தாங்க வேண்டியிருக்கிறது.
________________
காமம்
நான் அலை
நீ கரை உன்னை
அடிக்கடி தொட்டு
கொண்டிருப்பேன்
என்றேன் சில
நேரங்களில் சுனாமியாய்
மாறிவிடுகிறாய் என்றாள்
உண்மைதான்.
_________________
ஆண்
அவளின் ஒரு
கண் சிமிட்டலில்
ஆயிரம்முறை
துடித்தது மனசு.
________________
23 வம்புகள்:
எப்புடிங்க இதெல்லாம்...!!
.சிந்திக்க வைக்கின்றன கவிதைகள்.
குறிப்பாக 'அலைகழிப்பு' மிக நன்று!
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும்
நல்லாண்டாய் திகழ்ந்திட இறைவனிடம்
இறைஞ்சுகிறேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
சூப்பரா இருக்குது
எப்படி இப்படிஎல்லாம்
சிந்திகிறீங்க
எல்லாமே நல்லா இருக்குங்க.
//எப்புடிங்க இதெல்லாம்...!!//
அதேதான்...
புத்தாண்டு வாழ்த்துகள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
அருமை அதில் உள்ளது அனைத்தும் உண்மை >சுடும்<
குட்டிக்குட்டி தத்துவமாய் அனைத்தும் அருமை அதிலும் அந்த சாதலும் பிஜியும் அருமை...
:)
Nice post
அருமை..
நண்பரே ..நலமா ..எனக்காக www.ayurvedamaruthuvam.forumta.net இந்த தளத்தில் எழுத முடியுமா ?
எல்லாமே நல்லா இருக்கு irshaad
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
உங்களின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் 'உமர்தம்பி'க்கு அங்கீகாரம் கிடைக்குமா? தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள்
அன்பின் அஹமது இர்ஷாத்
அருமையான குறுங்கவிதைகள் - இயல்பான சொற்கள் - எளிதில் புரியும் கருத்து
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தேவையானவற்றை
வாங்க
தேவையில்லாததை
தாங்க வேண்டியிருக்கிறது//////
உண்மை...
வாவ்...மீண்டும் பொன்னிக்குருவியைப்பார்க்க மனசெல்லாம பட்டாம்பூச்சியாக சிறகடிக்கின்றது.மிக்க நன்றி சகோ.
//ஒருவேளை
பருக்கைக்கு
இருகையேந்தும்
ஏழ்மையை
பார்த்துக்கொண்டே
தானிருக்கிறது
இயற்கை..//அட
//பசியில் அங்குமிங்கும்
அல்லாடிய நிலையில்
பெய்த மழையில்
சேர்ந்த தண்ணிரை
தின்றது பூனை.
// அடடா
//கருப்புக்கோட்டை
மாட்டிக்கொண்டு
வாதாடுபவர்களுக்கு
பெரும்பாலும்
தெரிவதில்லை
ஏழ்மையின்
வறுமைகோட்டை..//அடடடடா
//அன்று காதலில் தோற்று
மனதை வைத்தோம்
பூட்டி
இன்று வானில்
சிறகடித்து நிலவுக்கே
போட்டி//அடேங்ப்பா
//
அவளின் ஒரு
கண் சிமிட்டலில்
ஆயிரம்முறை
துடித்தது மனசு//அட்றா சக்கை
_______________
@அப்துல் காதர் நன்றி.
@NIZAMUDEEN நன்றி.
@Shameed நன்றி.
@சுசி நன்றி.
@நேசமித்ரன் நன்றி.
@கே.ஆர்.பி.செந்தில் நன்றி.
@வானம்பாடிகள் நன்றி.
@சிநேகிதன் அக்பர் நன்றி.
@ ராஜவம்சம் நன்றி.
@ தமிழரசி நன்றி.
@ Balaji saravana நன்றி.
@ சசிகுமார் நன்றி.
@ ஸ்ரீராம் நன்றி.
@ curesure4u நன்றி.
@Tamilulagam நன்றி.
@.saravanan நன்றி.
@ரஹீம் கஸாலி நன்றி.
@cheena (சீனா) நன்றி.
@ ஜெ.ஜெ நன்றி.
@ ஸாதிகா நன்றி.
nice
எப்படிங்க இதெல்லாம், சின்ன சின்னதா சொல்லி சிந்திக்க வச்சுடீங்க
Post a Comment