இந்த வருடத்திற்க்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் திரு.நாஞ்சில் நாடனுக்கு கிடைத்திருக்கிறது மகிழ்ச்சி :) வருடா வருடம் விருது விஷயங்களில் குறிப்பாக கலை,இலக்கியம் சார்ந்த விருதுகளில் சொதப்புவார்கள் இந்த விருது அவருக்கு கிடைக்கவேண்டிய விருதுதான்..நா.நாடனின் எழுத்துக்கள் நிறைய வாசித்திருக்காவிட்டாலும் அவருடைய மண்வாசனை ததும்பும் எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும். இனி நிறைய படிக்கனும்.. சாருவைப் போன்ற கவர்ச்சி? எழுத்தாளர்கள் மத்தியில் விளம்பரமில்லாதவர்களை இனம்கண்டு கொள்ள கொஞ்சம் சிரமப்படவேண்டியதாகத்தானி ருக்கிறது..நண்பர் செல்வேந்திரன் 'கொண்டாட்டமான தருணம்' என்கிறார்...உண்மைதான்..
_______________________________________________________________________
அடுத்த நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை வியாழன் நைட்டு நல்லா தூங்கலாம் என்ற எண்ணத்தை மூட்டை கட்ட வேண்டியதாப்போச்சு..காரணம் மூட்டையேதான் என்ன 'ஙே'ன்னு முழிக்கிறீங்களா வளைகுடாவுல மூட்டைப்பூச்சிக்கு 'ஷார்ட் பார்ம்'தான் மூட்டை.. இந்தியாவுலதான் கொசு' என்று வந்தால் இங்கே மூ.பூச்சி ஆக தமிழன் கடி/அடி படாத இடமே இல்லை போலிருக்கு..எப்படித்தான் வந்துச்சோ தெரியவில்லை இதுக்கு கொசுக்கடியே பெட்டர் என்னா கடி. நல்லவேளை ஓ பாஸிட்டிவ் போன்ற அரிதான ரத்தவகை 'ஹியூமன் பீயிங்ஸ்' யாரும் நம்ம ரூமில் இல்லை..இதுல என்ன ஒரு சமாச்சாரம்'னா மூ.பூச்சியை நீங்கள் நசுக்கினால் அதிலிருந்து வெளியாகும் ரத்தத்திலும் ஃபார்ம் ஆகும் தன்மை கொண்டதாம் என்ற செய்தி கேட்டதும் கிர்ர்ர்டித்தது அப்படியே எடுத்து தண்ணியேலே போட்டால் சொறப நிமிடங்களில் எதிரி தொலஞ்சான். ஒன்னு நாலாகி, நாலு எட்டாகி எண்ண முடியாத அளவுக்கு 'ப்ரான்ச்? ஓப்பன் பன்னி எங்களையெல்லாம் கடிச்சிட்டு இருந்ததற்கு முடிவு கட்டியாச்சு..ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா...
_______________________________________________________________
சூப்பர் சிங்கரில் SP ஷைலஜாவின் 'டாமினேட்டிங்' உணர்வு புல்லரிக்குது.. எவ்ளோ திறமையா பாடினாலும் ஏதாவது ஒரு கசப்பை/காரத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் இவருக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமானாலும் அத்தனை வருஷமும் இவருக்கு கணவராக இருக்கும் அந்த பெயர்/முகமறியா தியாகிக்கு? ராயல் சல்யூட்(எப்படித்தான் சமாளிக்கிறாய்ங்களோ) பெயர்'ல எஸ்.பி'ன்னு வந்ததால அந்த உணர்வு வந்ததா..நடுவர்களில் மூன்று பேரையும் டாமினேட் செய்யும் இவரின் போக்கு பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை என்பதே நிதர்சனம்.அதேபோல் சூ.சிங்கர் ஜீனியரில் இருந்த கலகலப்பு,சுவராஸ்யமான விஷயங்கள் இதில் மிஸ்ஸிங். எனக்கு ரொம்ப பிடித்த அல்காவும்,ரோஷனும் சேர்ந்து பாடிய 'தொட தொட மலர்ந்ததென்ன பூவே' அருமையாக பாடியிருப்பார்கள்... நீங்களும் கேளுங்க மக்கள்'ஸ்...
__________________________________________________________________________
படங்களில் 'Bubble' வைத்து கமெண்ட எழுத இந்த தளம் உதவுகிறது..தமிழ் ஃபான்ட்டும் வேலை செய்வது இதில் சிறப்பம்சம்..
சூப்பர் சிங்கரில் SP ஷைலஜாவின் 'டாமினேட்டிங்' உணர்வு புல்லரிக்குது.. எவ்ளோ திறமையா பாடினாலும் ஏதாவது ஒரு கசப்பை/காரத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தும் இவருக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமானாலும் அத்தனை வருஷமும் இவருக்கு கணவராக இருக்கும் அந்த பெயர்/முகமறியா தியாகிக்கு? ராயல் சல்யூட்(எப்படித்தான் சமாளிக்கிறாய்ங்களோ) பெயர்'ல எஸ்.பி'ன்னு வந்ததால அந்த உணர்வு வந்ததா..நடுவர்களில் மூன்று பேரையும் டாமினேட் செய்யும் இவரின் போக்கு பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை என்பதே நிதர்சனம்.அதேபோல் சூ.சிங்கர் ஜீனியரில் இருந்த கலகலப்பு,சுவராஸ்யமான விஷயங்கள் இதில் மிஸ்ஸிங். எனக்கு ரொம்ப பிடித்த அல்காவும்,ரோஷனும் சேர்ந்து பாடிய 'தொட தொட மலர்ந்ததென்ன பூவே' அருமையாக பாடியிருப்பார்கள்... நீங்களும் கேளுங்க மக்கள்'ஸ்...
__________________________________________________________________________
படங்களில் 'Bubble' வைத்து கமெண்ட எழுத இந்த தளம் உதவுகிறது..தமிழ் ஃபான்ட்டும் வேலை செய்வது இதில் சிறப்பம்சம்..
_______________________________________________________________
போலி டாக்டர்
போலி மார்க் ஷிட்
போலி சாமியார்
போலி மருந்து
போலி டாக்டர்
போலி மார்க் ஷிட்
போலி சாமியார்
போலி மருந்து
போலி போலீஸ்
இந்த ஜனநாயக நாட்டில் திருடன்' மட்டும்தான் உண்மையா? இருக்கிறான்..
--விசு'வின் மக்கள் மன்றத்தில் கேட்டது..
________________________________________________________________
32 வம்புகள்:
எழுத்தாளர் நாஞ்சில் நாடான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மூட்டை பூச்சி, பேச்சிலர் ரூமில் அதிகமா ஏன் வருதுன்னு தெரியல.
மனோ அக்கா அதுக்கு ஒரு டிப்ஸ் கொடுத்து இருந்தாங்க வேனுமுன்னா முயற்சி செய்து பாருஙக்ள்.
பாடலும் அருமை
நாஞ்சில் தலைவருக்கு என் வாழ்த்துக்களும்
//உண்மைத் திருடன்//
:))
ஆனானப்பட்ட அமெரிக்காவே இந்த மூட்டைப் பூச்சியால அலறிகிட்டிருக்கு!! இங்கேயும், மூட்டைப் பூச்சி்யாலே பேச்சிலர்கள் வந்துட்டுப் போனா, அலம்பி விடாத குறைதான் பல குடும்பத்தினர் வீடுகளில்!! ஒண்ணு வந்தாலே, படையும் வந்துடுமே - மலையாளியா இருக்குமோ? :-))))
எஸ்.பி.பி.யின் பணிவு பற்றி சில நாட்கள் முன்தான் படித்தேன். அவரின் சகோதரியா இப்படி? ‘சலங்கை ஒலி’யில் அகங்காரமாக நடித்தது நிஜம்தானோ?
நாஞ்சில் நாடானின் சமூக அக்கறை கொண்ட எழுத்துகளை நானும் வாசித்துள்ளேன். அருமையான எழுத்தாளர். ( இந்த இடத்தில் சாருவை ஏன் ஒப்பிடுகிறீர்கள். இரண்டுமே வெவ்வேறு சுவை. சைவம் அசைவம் மாதிரி)
இங்கேயும் அதே தொல்லைதான் பாஸ். இன்னொரு விசயம் இதெல்லாம் நம்ம ஊரிலிருந்து இங்கே நாம இம்போர்ட் செய்ததுதான். நம் ரூமில் மூட்டை இல்லைன்னாலும் நண்பர்கள் ரூமில் இருந்தால் அழையா விருந்தாளியாக நம்மீது ஒட்டிக்கொள்ளும். அப்புறம் நீங்க சொன்ன மாதிரி ரூமெங்கும் கிளைகள்தான் :)
போலி மேட்டர் நச்!
பல விசயங்களின் தொகுப்பு அருமை இர்ஷாத்.
தொகுப்பு நல்லாருக்கு..
தொகுப்பு அமர்களம்.புது டெம்ப்ளேட் அருமை என்றாலும் உங்கள் பிளாக்கை ஓப்பன் செய்ததுமே வரும் அழகான பொன்னிக்குருவி(indian pitta)படத்தை இனி காண முடியாது எனும் பொழுது சின்ன ஏமாற்றமாக உள்ளது.
நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்..
நண்பரே மூட்டை பூச்சி பிரச்சனை இல்லாத நாடே இல்லை என்று நினைக்கிறேன்...
நல்ல தொகுப்ஸ், சித்ரா விமரிசனம் தவிர:)
கலவையான தொகுப்பில் ஓவ்வொன்றும் ஒரு சுவை!
மொத்தத்தில் வெகு சுவை!
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்
good package... keep it up...
thambiiiiiiiiiiiiiii,very super keep it up
எஸ் பி ஷைலஜா நிகழ்ச்சி பார்க்கும்போது நான் கூட அபபடி நினைத்தேன்.
கலக்குறே தம்பி !
ஒரு மூட்டை(கடி) மருந்து பதம் !
நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்.
கடைசி மேட்டர் சூப்பர்
பல செய்திகளின் தொகுப்பு நன்றாக இருக்கிறது!
நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்
தொகுப்பு நன்றாக இருக்கிறது!
சிறப்பான தொகுப்பு...எனக்கு என்னவோ இந்த சீசன் சு.சிங்கர் மனசுக்குள் ஒட்டவே இல்லை...கடைசியில் தந்த அல்கா ரோஷன்..பாடல் விருந்து...நன்றி...இர்ஷா...
மூட்டையை பற்றி ஒரு ஆர்டிகல் எழுதும் அளவுக்கு விபரம் போட்டுள்ளீர்கள்
மூட்டையை நசுக்கும் போது வரும் வாடை உவ்வே
அருமையா விளக்கி சொன்னமைக்கு மிக்க நன்றி
நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்.
மூட்டைபூச்சியா:{{{{{{{{{{{{{{{{{
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய தொடர் விகடனில் தொடர்ந்து படித்தவள் என்ற முறையில் இது ஒரு இனிய செய்தி
.. வாழ்த்துக்கள் அவருக்கு... பகிர்ந்தமைக்கு நன்றி...
Mixer post Super..
SPB சைலஜா கணவர் சுபலேக சுதாகர்... இப்போது தென்றல் சீரியலில் தகப்பனாக நடிப்பவர்.
பெஸ்ட் கன்ட்ரோலில் நல்ல மருந்துகள் மூட்டைப்பூச்சிக்கு இருக்கிறது. சைனஸ் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. மூட்டைப்பூச்சி உள்ள தலையனை/மேட்ரஸ் எல்லாம் குப்பைக்கு அனுப்பிவிடுவது நல்லது. பட்ஜட் / சென்டிமென்ட் எல்லாம் எழுதி பின்னூட்டம் இட வேண்டாம், உங்கள் பின்னூட்டங்களை மூட்டைப்பூச்சி படிப்பதில்லை.
சிறந்த மருந்து.....ரூமை காலி செய்துவிட்டு வேறு ஒரு ரூம் பார்ப்பது [ மூட்டை பூச்சி இல்லாத ரூம்] ....தற்போது இருப்பது வாடகை தானே. சொந்த வீடாக இருந்தால் கவலைப்படலாம்.
பாஸ் உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கேன். பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
ஜலீலாக்கா : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Balaji saravana : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹுஸைனம்மா : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(ஒண்ணு வந்தாலே, படையும் வந்துடுமே - மலையாளியா இருக்குமோ? :-))))//
*இருக்கும் :))))))))*
அக்பர் : வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(சாருவை ஒப்பிட்டது சரியில்லைதான் நண்பரே)
அமைதிச்சாரல்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸாதிகா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(அந்த டெம்ப்ளேட்டில் FONT' ஒழுங்கா வேலை செய்யவில்லை அதான் மாத்தவேண்டியதாப்போச்சு :()
வெறும்பய: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பாலா சார்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
NIZAMUDEEN: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
kanavugal: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
shahul: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸ்ரீராம்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அபுஇபுறாஹிம்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமினா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மனோ சாமிநாதன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சரவணன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சீமான்கனி: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Shahulhameed: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அரசன்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்புடன் மலிக்கா: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அப்பாவி தங்கமணி: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Kanmani: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ZAKIR HUSSAIN: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(அவர்தான் ஷைலஜாவின் கணவரா! மூ.பூச்சியை ஒழிச்சாச்சு. சிறந்த மருந்து ரூமை காலி செய்வது// ஒரு வழி செஞ்சாச்சு ரூமை.
அப்துல் காதர்: வருகைக்கும் விருதுக்கும் நன்றி.
Post a Comment