>>>>>>>>>>>>தலைநகரம் 1
எப்பாடு பட்டாலும் ஒரு பாடு பட்டு ஒரு/பல வழியாக டெல்லியை மிகுந்த பெருமூச்சோடு ஜி.டி.எக்ஸ்ப்ரஸ் அடைந்தது.எங்களை வரவேற்க வந்தவரை நாங்க தேடி கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று, டெல்லி குளிருக்கு போட்ட மஃப்ளரை குளிர் இல்லாத சமயங்களிலும் போடுவார் போல ஏதோ ஒரு கலரில் சட்டையும் போட்டிருந்தார் கையெல்லாம் குலுக்கிவிட்டு ஆட்டோவில் போய்க்கொண்டிருக்கும்போதே எல்லாம் கரெக்டா எடுத்துட்டு வந்துட்டீங்களான்னு ரொம்ப மொட்டையா கேக்கவும்,
'எல்லாம்'னா' யாரு முந்துவா எம்.பி.ஏவேதான்..
'பாஸ்போர்ட்,சர்டிபிகேட் அதெல்லாம்ப்பா'
'அதெல்லாம் கரெக்டா எடுத்துட்டு வந்தாச்சு ஆமா ரெண்டு நாள்'ல வேல முடிஞ்சிரும்'ல' நான் கேட்கவும்,
'உங்க அதிர்ஷ்டம் ஒரு நாளையிலும் முடியலாம்,துரதிர்ஷ்டமான மூணு நாள் கூட ஆகலாம்'
அதிர்ஷ்டத்துக்கும் நமக்கும் தமிழ்நாடு டூ டெல்லியை விட தூரமாச்சே'ன்னு வயித்துல கிலி'யை உண்டுபண்ணவும்,
'கொஞ்சம் சீக்கிரம் வேலையை முடிச்சு கொடுத்திருங்களேன்'
அதுக்கு தலைமுறை தலைமுறையாய் தமிழர்கள் சொல்லும்
'என் கைல என்னப்பா இருக்கு'
அதோடு பேச்சுகளுக்கு ஷட் டவுன் பன்னிட்டு டெல்லியை வேடிக்கை பார்த்து கொண்டு வந்த ஒரு மணி நேரத்திற்க்குள் அவர் தங்கும் இடம் வந்தது..
இறங்கியதும் சுற்றி நோட்டமிட்டேன் வட நாட்டு சாயல் அனைத்தையும் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருந்தது அந்த ஏரியா.. தூர்தஷனில் எப்பவோ ஏதோச்சயாய் பார்த்த மனிதர்கள் இப்ப நேரில்..
மாடி போர்ஷனில் வழிகாட்டி குடியிருந்தார்.பேச்சுலராய் இவர் இருக்க,கீழ் போர்ஷனில் ஒரு பேமிலி குடியிருந்தது..இங்கே அப்படி நடக்குமா பேச்சுலர்'ஸை அந்த ஏரியாவிலேயே இருக்கவிடமாட்டார்கள்.
மூன்று பேருக்கு ஏத்த ரூம்தான் அது மூன்று பேரும் ஒல்லியாக இருந்ததால் தெரியவில்லை கொஞ்சம் 'FAT' ஆன ஆள் இருந்தால் சிரமம்தான். பாத்ரூம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை அதனால் குளியல் என்ற சமாச்சாரத்தை 'பாஸ் செய்துவிட்டு தூங்க போய்ட்டேன் எங்கே போறது தூங்கிட்டேன்..
அந்த நாள் ரெஸ்ட் என்பதால் பயணகளைப்பில் தூங்கியிருந்தோம் வழிகாட்டி மட்டும் எழுந்து பக்கத்தில் மார்க்கெட்டுக்கு போய் காய்கறி இன்னம்பிற ஐயிட்டங்களை வாங்கிட்டு வந்தார் எனக்கு கொஞ்ச நேரத்தில் விழிப்பு வந்துவிட்டது.
நல்லா தூங்குனிங்களான்னார்'
'ம்' என்றேன்..
'நீங்க தூக்கத்திலேயே பேசுறீங்க,உங்க கூட வந்தவரும் பகல் ரயில்ல சாப்பிட்டது முதற்கொண்டு தூக்கத்திலேயே ஒரு பயணம் போயிட்டாரு'என்றார்..
எனக்கு புது இடங்களில் தூக்கத்தில் புலம்பல் வரும் என்று அவர் சொல்லித்தான் அன்றைக்கு தெரிந்தது..சகவனை எழுப்பிவிட்டு சாப்பிட்டோம் கீழிருந்து ஒரு சிறுவன் வந்து 'ஹிந்திலே ஏதோ சொல்லிட்டு போனான் வழிகாட்டியிடம்.. ஊரு,பேரு,குடும்பம் எல்லாத்தையும் பரஸ்பரம் கேட்டுக்கொண்டோம்..கேரம்போர்டு இருந்தது மிக வசதியாப்போனது அன்றைய பொழுது..
அடுத்த நாள் காலையிலேயே ரெடியாகி சான்றிதழ்,பாஸ்போர்ட் சகிதமாக கிளம்பினோம் அடுத்த நாற்பது நிமிடங்களில் போய் சேர்ந்த இடம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டிடத்தில் இடதுபுறத்தில் இருந்த 'அட்டஸ்டேஷன்' பணி நடைபெறும் வளாகம் அங்கே சென்றதும் அதிர்ச்சி... அது என்ன்.ன்ன்ன்னா
க்யூ நின்றது அது க்யூ'வா இல்ல மினி ஜி.டி. எக்ஸ்ப்ரஸ்ஸா எவ்வளவு பெருசு... யய்யாடி..
'இவங்களெல்லாம் நேத்து நைட்டே வந்திருக்கனும்'என்றார் வழிகாட்டி.
'ஙே..'
பாரத மாதாவே ஆச்சிரியப்படும் அளவுக்கு வகைதொகையாக இந்தியாவின் அனைத்து மொழியினரும் உலாவிய இடம் அனேகமாக எனக்கு தெரிந்தது இதுவாகத்தானிருக்கும்..லைனில் நின்றுக்கொண்டிருந்தோம்.வழிகா ட்டி அலுவலகத்திற்க்குள் சென்றுவிட்டார்.அங்கேயே ஒருவர் டீ விற்பனை செய்துக்கொண்டிருந்தார்..
நேரம் ஆக ஆக க்யூ'வில் முன்னேற்றம் இருந்தது..
இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்..
1) சான்றிதழ் போலி' என்று தெரிந்தால் அப்படியே தோளில் கையைப் போட்டு கூட்டிப்போய் விடுவார்கள்..டெல்லி 'களி' எப்படின்னு? தெரியவில்லை..
2) 12:30 மணிக்கு அட்டஸ்டேஷ' அலுவலக கவுண்ட்டர்கள் மூடிவிடுவார்கள்..திரும்பவும் 2:30 மணிக்கு திறப்பார்கள் 12:25'க்கு கவுண்ட்டர் கிட்ட நிற்பவருக்கு மோட்சம்தான்..
3) முதலில் மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலகத்தில் சான்றிதழ் 'அட்டஸ்ட்'(ஒரிஜினல்தானா) செய்யப்பட்டு,அதுக்கப்புறம் 'வெளியுறவு அமைச்சகத்தில் சான்றிதழை சமர்பிக்க அங்கு மூணு மணி நேரமோ,அல்லது ஐந்து மணி நேரமோ வெயிட் பண்ண அவர்கள் பங்குக்கு சான்றிதழின் முதுகில் ஒரு முத்திரையை குத்துவார்கள். கடைசியாக துபாய் தூதரகத்தில் இந்திய ரூபாய் 500 ஐ செலுத்திவிட அவர்கள் நாட்டின் தபால்தலையை சான்றிதழின் முதுகில் ஒன்னுக்கு இரண்டாக ஒட்டிவிடுவார்கள்..அத்தோடு முடிந்தது வேலை..அடுத்து ரயில் ஏற வேண்டியதுதான் பாக்கி..
யார் செஞ்ச நன்மையோ எங்களுக்கு சான்றிதழ் அட்டஸ்ட் செய்யும் வேலை எந்தவொரு தொல்லையும் இல்லாமல் இனிதே முடிந்தது..வழிகாட்டிக்கு டாட்டா காட்டிவிட்டு திரும்பவும் ஜி.டி எக்ஸ்பரஸ்ஸிலேயே சென்னை வந்து சேர்ந்தோம்.நம்ம எம்.பி.ஏவும் நானும் நல்ல நண்பர்கள் ஆனோம் அப்போது,ஆனால் அவன் நம்பரோ முகவரியோ எதுவுமே அச்சமயத்தில் வாங்கவில்லை..அவன் இந்த ப்ளாக்கை படிக்கிறான்னா என்பதுகூட எனக்கு தெரியவில்லை அப்படி படித்தான் என்றால் என் ஃப்ரோபைலில் கொடுக்கப்பட்டிருக்கும் இ மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.(நண்பேன்..டா)
அதிமுக்கியமான டிஸ்கி: 'டெல்லி எருமை டெல்லி எருமை'ன்னு சொல்றாய்ங்களே எப்படியாவது பார்த்திரலாம் என்றால் 'எருமை படம் போட்ட போஸ்டர் கூட பார்க்கலை' என்பதுதான் கடும் சோகம்... இனிமே யாராவது எருமையை டெல்லி எருமைன்னு சொல்லி வித்தீங்க...
27 வம்புகள்:
டெல்லி நல்ல டெல்லி...
டெல்லி எருமை டெல்லி எருமை'ன்னு சொல்றாய்ங்களே எப்படியாவது பார்த்திரலாம் என்றால் 'எருமை படம் போட்ட போஸ்டர் கூட பார்க்கலை' என்பதுதான் கடும் சோகம்...
...Better luck next time... :-))
//டெல்லி எருமை டெல்லி எருமை'ன்னு சொல்றாய்ங்களே எப்படியாவது பார்த்திரலாம் என்றால் 'எருமை படம் போட்ட போஸ்டர் கூட பார்க்கலை' என்பதுதான் கடும் சோகம்... இனிமே யாராவது எருமையை டெல்லி எருமைன்னு//
இனியாவது தப்பிக்கட்டும்
அருமையான பயனுள்ள பதிவு,
ஹி ஹி டெல்லி எருமை பார்க்கலையா?
//
1) சான்றிதழ் போலி' என்று தெரிந்தால் அப்படியே தோளில் கையைப் போட்டு கூட்டிப்போய் விடுவார்கள்..டெல்லி 'களி' எப்படின்னு? தெரியவில்லை.//
நல்ல வேளை தப்பிச்சீங்க........
என்னங்க இர்ஷாத் இவ்வளவு தூரம் டெல்லி போய்ட்டு வந்து எங்களுக்கு டெல்லி எருமையை காட்டாமலே ஏமாற்றி விட்டீர்களே?
பார்ட் டூ முன்னதை விட சூப்பரா இருக்கு இர்ஷாத்.
வித்தா என்ன பண்ணுவீங்க
வித்தா என்ன பண்ணுவீங்க
சசி :)))))))))))))))
அருமையான பதிவு..
நான் தான் 150 வது போல்லோவேர்
தகவல் உலகம்
இங்கயும் கொஞ்சம் வந்துட்டு போன்கோ
டெம்ப்ளேட் அருமையாக உள்ளது... ப்ளாக்கர் டேம்ப்லேட்டா அல்லது மூன்றாம் தரப்பு டேம்ப்லேட்டா...
படிக்க சுவாரசியமாக உள்ளது
உங்கள் டில்லி அனுபவம்
மீண்டும் நண்பன் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்
திரும்ப வந்த ரெயில் அனுபவத்தை சுருக்கமாக முடித்து விட்டர்கள்.
டில்லி அனுபவம் சுவாரசியமாக உள்ளது
முதல் பாகத்தைவிட சுவராஸ்யம் குறைவு இர்ஷாத் இருந்தாலும் நல்லாயிருக்கு.
ச்சே... இவ்ளோ தூரம் வந்த உங்களுக்கு டெல்லி எருமை தரிசனம் கொடுக்காமலேயே போய்விட்டதே :-)))
பாரத்பாரதி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Chitra@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Jaleela Kamal @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ஆமினா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
ஸாதிகா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
அரபுத்தமிழன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
சசிகுமார் @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
டிலீப்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
prabhakaran@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
Meena @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸ்ரீராம்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
r.v.saravanan@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Kanmani@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(அப்படியா :( )
அமைதிச்சாரல்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
மிக அருமை.. அஹமத்..
பாஸ் உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கேன். பெற்றுக் கொள்ளுங்கள்.நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
வணக்கம் இர்ஷாத்.நாங்கள் சென்ற
ஆண்டு துபாய் சென்றுவந்தோம்.
மதுரையில்தான்விசாவாங்கினோம்.
நாங்கள் இருவரும் வயதானவர்கள்
என்பதால் உடனே எங்களைக் கவனித்துவிசாஅனுப்பிவிடுவதாகக்கூறி
அனுப்பிவிட்டார்கள்.ஓய்வுபெற்ற இராணுவஊழியர்மூலம்முயற்சித்தோம்அவர்பெயர்மறந்துபோய்விட்டது.
எங்களுக்குபதினைந்து நாட்களில் பதிவு அஞ்சல்மூலம்கிடைத்துவிட்டது.
உள்ளூர்காவல்நிலையத்திலிருந்துவந்து
உறுதிப்படுத்தியபின் சென்றுவந்தோம்.
‘துபாய்’ கவிதையில் எங்கள் பயண
அனுபவங்களைப் படித்துப் பாருங்கள்
நல்லது.
வணக்கம் இர்ஷாத்.நாங்கள் சென்ற
ஆண்டு துபாய் சென்றுவந்தோம்.
மதுரையில்தான்விசாவாங்கினோம்.
நாங்கள் இருவரும் வயதானவர்கள்
என்பதால் உடனே எங்களைக் கவனித்துவிசாஅனுப்பிவிடுவதாகக்கூறி
அனுப்பிவிட்டார்கள்.ஓய்வுபெற்ற இராணுவஊழியர்மூலம்முயற்சித்தோம்அவர்பெயர்மறந்துபோய்விட்டது.
எங்களுக்குபதினைந்து நாட்களில் பதிவு அஞ்சல்மூலம்கிடைத்துவிட்டது.
உள்ளூர்காவல்நிலையத்திலிருந்துவந்து
உறுதிப்படுத்தியபின் சென்றுவந்தோம்.
‘துபாய்’ கவிதையில் எங்கள் பயண
அனுபவங்களைப் படித்துப் பாருங்கள்
நல்லது.
வணக்கம் இர்ஷாத்.நாங்கள் சென்ற
ஆண்டு துபாய் சென்றுவந்தோம்.
மதுரையில்தான்விசாவாங்கினோம்.
நாங்கள் இருவரும் வயதானவர்கள்
என்பதால் உடனே எங்களைக் கவனித்துவிசாஅனுப்பிவிடுவதாகக்கூறி
அனுப்பிவிட்டார்கள்.ஓய்வுபெற்ற இராணுவஊழியர்மூலம்முயற்சித்தோம்அவர்பெயர்மறந்துபோய்விட்டது.
எங்களுக்குபதினைந்து நாட்களில் பதிவு அஞ்சல்மூலம்கிடைத்துவிட்டது.
உள்ளூர்காவல்நிலையத்திலிருந்துவந்து
உறுதிப்படுத்தியபின் சென்றுவந்தோம்.
‘துபாய்’ கவிதையில் எங்கள் பயண
அனுபவங்களைப் படித்துப் பாருங்கள்
நல்லது.
Post a Comment