தாலுக்கா டூ த‌லைந‌க‌ர‌ம்..

துபாய் போவ‌த‌ற்காக‌ சான்றித‌ழ்க‌ளை 'அட்ட‌ஸ்டேஷ‌ன்' செய்வ‌த‌ற்காக‌ டெல்லிக்கு போக‌னும் ந‌ம்ம‌ ஊரிலேயே அத‌ற்கான‌ ஏற்பாடுக‌ளை செய்துத‌ர‌ ஆள் இருந்த‌து டெல்லி செல்வ‌த‌ற்கு ரெயிலில் டிக்கெட் ஏற்பாடு செஞ்ச‌து முத‌ல் அங்கே இர‌ண்டு நாள் த‌ங்குவ‌து வ‌ரை எல்லாத்துக்கும் சேர்த்து ஆறாயிர‌ம் கொடுக்க‌ப்ப‌ட‌வேண்டியிருந்த‌து. ஊரிலிருந்து சென்னைக்கு அப்புற‌ம் அங்கிருந்து டெல்லிக்கு என‌ அச்சிட‌ப்ப‌ட்ட‌ டிக்கெட் கொடுத்தார்க‌ள்.ப‌க்க‌த்து ஊரைச் சேர்ந்த‌வ‌ருக்கும் 'அட்ட‌ஸ்டேஷ‌ன்' செய்ய‌ வேண்டியிருப்ப‌தாக‌ சொல்லி அவ‌ருக்கு என்னோடு சேர்த்து டிக்கெட் போட்டிருந்தார்க‌ள் ஆக‌ ச‌க‌ ந‌ண்ப‌ன் ஆகிவிட்டார். என்னுடைய‌ வ‌ய‌தையொத்த‌வ‌ர் என்ப‌து தெரிஞ்சு திருவாரூர் தாண்டிய‌துமே அவ‌ர்' அவ‌னாக‌ மாறிய‌து... பேச்சுவாக்கில் தான் ப‌டித்த‌து எம்.பி.ஏ என்றான் இவ‌னுக்கெல்லாம் ப‌ட்ட‌ம் கொடுத்தாய்ங்க‌ளா இல்ல‌ 'எங்காவ‌து? வாங்கினானா'ன்னு போற‌ வ‌ழியில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் இவ‌ன் ப‌டிச்ச‌ எம்.பி.ஏ ப‌ல்லிளித்த‌து.. 

விழுப்புர‌ம் வ‌ந்த‌து டீ,டீ, காபி, காபி என‌ ர‌யில்வே ஸ்டேஷ‌னையே 'ஆத்திக் கொண்டிருந்தார்க‌ள்.
நான் பூரி வாங்கி சாப்பிட ச‌க‌வ‌னும் அதே.. திடுமென்று ஒரு கும்ப‌ல் முண்டிய‌டித்துக்கொண்டு ஏறிய‌து.. அன்ரிச‌ர்வ்டு கும்ப‌ல் எப்ப‌டி ரிச‌ர்வ்டு பெட்டியில் ஏறினார்க‌ள் என்று என‌க்கு தோன்றும் முன்பே ச‌க‌வ‌ன் கேட்டேவிட்டான்..

'ஏங்க‌ இது ரிச‌ர்வ்டு பெட்டி'

'தெரியும் அதுக்கென்னாங்கிற‌ மூடிட்டு ஒக்காரு'

வ‌ந்த‌ ப‌திலில் ச‌ர்வ‌மும் அட‌ங்கிய‌து ந‌ம்ம‌வ‌னுக்கு.. 

'இன்னும் கொஞ்ச‌ நேர‌த்துல‌ சென்னை வ‌ந்துரும் நீ ஏண்டா வாய‌ கொடுக்கிறே' என்றேன்.


'இல்ல‌ப்பா ந‌ம‌க்கு வ‌ச‌தியா இருக்குமேன்னுதான்' முன்னாடி இருந்த‌ வேக‌ம் ப‌திலில் இல்லை..

தாம்ப‌ர‌ம் வ‌ந்த‌தும் ச‌ர‌வ‌ணா ஸ்டோர் விள‌ம்ப‌ர‌ம் முத‌ல் போர்ட்ட‌ரிட‌ம் வாக்குவாத‌த்தில் ஈடுப‌ட்டிருந்த‌வ‌ர் வ‌ரை காண‌ நேர்ந்தது.. விழுப்புர‌த்தில் த‌டால‌டியாக‌ ஏறிய‌ கும்ப‌ல் ரொம்ப‌ பொறுமையாக‌ இற‌ங்கிய‌து.. ந‌ம்ம‌வ‌ன் தூக்க‌த்திலிருந்தான் நான் காலைக்க‌ட‌னில் முதலாதுவ‌தை முடித்துவிட்டு ஜ‌ன்ன‌ல் வ‌ழி உட்கார்ந்திருந்தேன்..எங்க‌ பெட்டியில் இருந்த‌வ‌ர்க‌ளில் பாதிப்பேர் இற‌ங்கிவிட்டிருந்தார்க‌ள். லேசான‌ உசுப்ப‌லோடு வ‌ண்டி கிள‌ம்பிய‌து மாம்ப‌ல‌ம்,எக்மோர் வ‌ந்த‌டைய‌ முக்கால் ம‌ணி நேர‌ம் பிடித்த‌து..எங்க‌ளுக்கு அன்னைக்கு ஈவ்னிங் 4 ம‌ணிக்குத்தான் டெல்லிக்கு வ‌ண்டி இப்போ ம‌ணி காலை எட்ட‌ரை.. எக்மோரிலிருந்து மின்சார‌ ர‌யிலில் சென்ட்ர‌லை அடைந்தோம்..

வெளிமாநில‌ம் என்று பார்த்தால் பெங்க‌ளூர்'க்கு சென்றிருக்கிறேன் அதுவும் பேருந்து வ‌ழியாக‌ அத‌ற்கு அடுத்து இந்த‌ப் ப‌ய‌ண‌ம் சென்ட்ர‌லை வெளியே பார்த்த‌தும் என‌க்கு ஒன்றும் தோன்ற‌வில்லை உள்ளே சென்ற‌தும்தான் உண‌ர்வுக‌ள் வித்தியாச‌ப்ப‌ட்ட‌து.. எல்லா மாநில‌ ம‌க்க‌ளும் இல்லாவிட்டாலும் ஒன்றிர‌ன்டு பேர்  உடையில்,மொழியில் வித்தியாச‌முள்ள‌வ‌ர்க‌ளை பார்க்க‌ நேர்ந்த‌து... அதை நான் வெளிக்காட்ட‌வில்லை..ப‌ய‌ணிக‌ள் வெயிட் ப‌ன்னும் இட‌த்தில் நானும் ச‌க‌வ‌னும் உட்கார்ந்திருந்தோம்.. நான் சுஜாதா புக்'ஸ் ரெண்டும் அந்த‌ வார குமுத‌ம்,ஜீ.வி,ஆ.வி. க‌ல்கி என‌ எல்லாத்தையும் வாங்கிக்கொண்டேன்... வ‌யித்துப‌சியை விட‌ வாசிப்பு ப‌சி கொஞ்ச‌ம‌ல்ல‌ ரொம்ப‌வே அதிக‌ம் என‌க்கு..மூணு நாள் ப‌ய‌ண‌மாச்சே புக்'ஸ் இல்லாம‌லா ...நெவ‌ர்...

மூன்ற‌ரை ம‌ணிக்கு ஜி.டி(க்ராண்ட் டிர‌ங்க்) எக்ஸ்ப்ர‌ஸ் சென்னை டூ டெல்லி போர்டு மாட்டிக் கொண்ட‌ மிக‌ நீள‌மான‌ ர‌யிலில் எங்க‌ளுக்கு ஒதுக்க‌ப்ப‌ட்ட‌ பெட்டியில் ஏறினோம்.. குட்டையான‌ T.T. நான் அவ‌ரை கொஞ்ச‌ம் டிசைனா பார்த்து தொலைச்சேனோ என்ன‌வோ 'வார‌ங்க‌லில்(A.P) வ‌ந்த‌து வினை.. எங்க‌ள‌து டிக்கெட்டை ப‌ரிசோதித்த‌ அவ‌ர் ந‌ம்ம‌ எம்.பி.ஏக்கு ப‌க்க‌த்து பெட்டியில் இட‌ம் ஒதுக்க‌ப்ப‌ட்ட‌தாக‌வும் என‌க்கு இங்கேயே ஒதுக்க‌ப்ப‌ட்ட‌தாக‌வும் சொல்லி ப‌ன்னெடுங்கால‌த்துக்கு தொட‌ர‌போகும் எங்க‌ள் ந‌ட்பை பிரிக்க‌முய‌ல‌, இது என்ன‌ புது க‌ர‌டி'ன்னு நினைக்கையில் எம்.பி.ஏ கெஞ்ச‌ ஆர‌ம்பித்துவிட்டான், நாம‌ளும் கெத்த‌? மெயின்டெயின் ப‌ண்ண‌ முடியுமா.. நானும் அவ‌ரிட‌ம் சொன்னேன் ம்ஹீஹீம் கெஞ்சினேன்.. க‌டைசி ஒப்ப‌ந்த‌ப்ப‌டி என் ஜீன்ஸில் இருந்த‌ ஒரு நூறும்,ஒரு ஐம்ப‌தும் T.T யின் க‌ருப்புக் கோட்டுக்குள் போன‌தும்தான் ஒரே பெட்டியில் இருக்க‌ச்சொல்லி டிக்கெட்டில் என்ன‌மோ கிறுக்கினார்..

அதே வார‌ங்க‌ல் ஸ்டேஷ‌னில் இட்லியோடு ச‌ட்னியையும் வாங்கி சாப்பிட்டோம் இட்லி ப‌ஞ்சுபோலில்லாம‌ல் சுமாராய் இருந்தாலும் ச‌ட்னியில் இருந்த‌ கார‌ம் நாக்கில் துளையை போடாத‌ குறை க‌ண்ணு,மூக்கு எல்லாத்திலேயும் த‌ண்ணி? வ‌ந்த‌து, ங்கொய்யால‌ இந்த‌ கார‌மும் ப‌த்தாதுன்னு ப‌க்க‌த்திலிருந்த‌ பெருசு பொடியையும் தொட்டு சாப்பிட்ட‌து எங்க‌ளுக்கு கிர்ர்ர்ர்ர்டித்த‌து..

இர‌ண்டாவ‌து நாள் எந்த‌ க‌ல‌க‌மும் இல்லாம‌ல் மென்மையாக‌வே போன‌துதான் என்ன‌வோ மூன்றாவ‌து நாளின் தொட‌க‌த்தில் நாக்பூரைத் தாண்டிய‌தும் அப்ப‌ர் பெர்த்தில் ப‌டுத்திருந்த‌ என் காலில் யாரோ த‌ட்டுவ‌து போல் இருந்த‌து யார்ரா அது'ன்னு எழுந்து பார்த்தா அந்த‌ ஊர் திருந‌ங்கைக‌ள், க‌ட்டாய‌மாக‌? ப‌த்து ரூபாய் கொடுத்திட‌னுமாம் க‌த்தி'யெல்லாம் வைத்திருக்கிறார்க‌ள் எதுக்கு வ‌ம்பு'ன்னு ப‌த்து ரூபாயை கொடுத்தேன் ந‌ம்ம‌ ஊர்'ல‌ ரேஷ‌ன் கார்டு வ‌ரை வ‌ந்தாச்சு அங்கே இன்ன‌மும் பிச்சை அதுவும் க‌த்தியோடு?...என்ன‌ங்க‌டா இது..

                                                                                                             ----த‌ட‌க் த‌ட‌க்..(Stay Tuned)

Post Comment

36 வம்புகள்:

சசிகுமார் said...

Super post friend

சென்னை பித்தன் said...

பயணம் மிக சுவாரஸ்யமாக இருக்கிறது.தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்!

ஸ்ரீராம். said...

பயணக் கட்டுரை சுவாரஸ்யம். தொடருங்கள்...

vasu balaji said...

/அர‌வாணிக‌ள்/

திரு நங்கைகள்.

/ந‌ம்ம‌ ஊர்'ல‌ ரேஷ‌ன் கார்டு வ‌ரை வ‌ந்தாச்சு அங்கே இன்ன‌மும் பிச்சை /

நம்மாளுவளுக்குதான் அது பிச்சை. அங்க அது அவங்களுக்கு செய்யிற மரியாதை. கேக்காமலே கொடுப்பாங்க.:(

Ahamed irshad said...

/அர‌வாணிக‌ள்/

திரு நங்கைகள்//

பாலா சார் மாத்தியாச்சு..

நான் முன்ன‌மே போட‌ நினைச்சேன் நீங்க‌ சொல்லிட்டீங்க‌..!?

அரபுத்தமிழன் said...

ஆகாஷ்வாணியை நோக்கிய பயணத்தில் அரவாணியா.
சகவன் எம் பி ஏ படித்தது சரிதான். உங்க ஜீன்ஸிலிருந்து
150ஐ உருவிட்டாரே :)

Chitra said...

சுவாரசியமான பகிர்வு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெகு சுவராசியம்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

waiting for next part...

Sketch Sahul said...

ஊர்ல UAE EXCHANE ல கொடுத்தாலே 15 நாள்ல ATTESTATION பண்ணி கொடுதிடுவாங்களே..

Ahamed irshad said...

ஊர்ல UAE EXCHANE ல கொடுத்தாலே 15 நாள்ல ATTESTATION பண்ணி கொடுதிடுவாங்களே..//


சாகுல் இது ந‌ட‌ந்த‌து 2002 ல் அப்ப‌ நீங்க‌ சொல்ற‌ வ‌ச‌தியெல்லாம் இல்ல‌..

Yasir said...

சுவராஸ்யமான பயணம் அதை எழுதிய முறை அழகு...சூப்பர் இர்ஷாத் ..காத்திருக்கிறோன்....த‌ட‌க் த‌ட‌க் தொடர்வதற்க்காக

ஸாதிகா said...

என்னங்க சகோ ஜில் லென்ற ஜூசை ஒரே மடக்கில் குடித்தாற்போல பட பட என்று சொல்லீப்போட்டீங்க? அடுத்தாக்குலே டெல்லி பயணத்தை சூடான இஞ்சி சாய் குடிச்ச மாதிரி சொல்லிப்போடுங்க.(பதிவு சுவாரஸ்யம்)

NADESAN said...

சுவையான பதிவு நல்ல பயண அனுபவம்
ஆமா CERTIFICATE ATTEST முடிந்ததா

அன்புடன்
நெல்லை பெ. நடேசன்

ஆமினா said...

கேட்க கேட்க சுவாரசியம் அதிகமாவே கூடுது...

எங்களுக்கு கிட்டதட்ட இதே அனுபவம் தான். அரவாணிகள் வந்தார்கள். விரட்டியதும் போய்விட்டார்கள். ஆனால் உடன் பயணித்த சக ஆண் பயணிகளை தட்டி எழுப்பி அதிகாரமாக கேட்டதும் நல்ல வேளை நம்மள எதுவும் திட்டாம போயிட்டாங்கன்னு பெருமூச்சு விட்டேன் :)

sabeer.abushahruk said...

ம்ம்ம்...அப்புறம்? (செம இன்டெரெஸ்டிங்கா இருக்கு தம்பி)

Kanmani said...

சுவ‌ராஸ்ய‌மான‌ பதிவு இர்ஷாத் எழுத்து'ல‌ க‌ட்டிப் போட்டுடிங்க‌ சூப்ப‌ர்.

ராஜவம்சம் said...

அழகா எழுதியிறுக்கீங்க

திருநங்கைகளை மீண்டும் சந்தித்தால் அன்போடு நலம் விசாரித்து பாருங்கள் நெகிழ்ந்து விடுவார்கள்.

அப்பரம் அடுத்தப்பதிவ உடனே போடுங்க காத்துக்கிட்டு இருக்கே.

சுசி said...

தடக்.. தடக்..

ஆனாலும் வெயிட்டிங்..

ஹேமா said...

உங்களோடு பயணிக்கிற சுவாரஸ்யம் எழுதில் இர்ஷாத் !

Thenammai Lakshmanan said...

நாங்க டெல்லியில் மூணரை வருஷம் இருந்தோம்.. ஆனா இப்படி சுவாரசியமா எழுத தோணலையே.. அஹமத்..))

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

எல்லாமே அழ்ழ்ழ்ழககா சொன்னாலும் அந்தப் கலர்ப் பட்டம் ரொம்பவே பிடிச்சிருக்கு !

cheena (சீனா) said...

அன்பின் அஹமது இர்ஷாத்,

அருமையான பயணக் கட்டுரை. எம் பீ ஏ படித்த சகவரோடு. தொடர்வது எப்போது - காத்திருக்கிறோம். ரேஷன் கார்டு - பிச்சை - நல்ல ஒப்பு நோக்கல் - ஜீன்ஸிலிருந்து கறுப்புக் கோட்டுக்குள் பரிமாற்றம். நன்று நன்று. 2002ல் நடந்த பயணம் 2010ல் எழுத்து வடிவத்தில். நினைவாற்றல் போற்றத் தக்கது. இறுதியாக "படம் சூப்பர்" - நல்வாழ்த்துகள் அஹமது இர்ஷாத் - நட்புடன் சீனா

Shameed said...

//அங்கே இன்ன‌மும் பிச்சை அதுவும் க‌த்தியோடு?...என்ன‌ங்க‌டா இது..//


அங்கே பரவா இல்லை கத்தியை காட்டி பிச்சை தான் கேட்கிறார்கள்

இங்கு கத்தியை காட்டி இருப்பதை எல்லாம் புடிங்கி கொண்டு போய்விடுகின்றான்.

r.v.saravanan said...

பயணம் மிக சுவாரஸ்யம்.

இர்ஷாத்

Asiya Omar said...

நல்லாயிருக்கு,தொடருங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எக்ஸ்பிரஸ் போலவே செம வேகத்தோடு ரொம்ப இன்ரஸ்டா இருக்கு இர்ஷாத்.

Ahamed irshad said...

சசிகுமார்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

சென்னை பித்தன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

ஸ்ரீராம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

வானம்பாடிகள் @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


அரபுத்தமிழன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


Chitra@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

பன்னிக்குட்டி ராம்சாமி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


வெறும்பய @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


சாகுல்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

Yasir@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


ஸாதிகா @வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


நடேசன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

ஆமினா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


sabeer@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..


Kanmani@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

ராஜவம்சம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

சுசி@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

ஹேமா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

தேனம்மை லெக்ஷ்மணன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி(நீங்க‌ளும் எழுதுங்க‌ தேன‌க்கா..)

அபுஇபுறாஹிம்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

சீனாஐயா@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

Shahulhameed@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

r.v.saravanan@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

asiya omar@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

Ahamed irshad said...

ஸ்டார்ஜன்@வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates