வ‌ர‌மா சாப‌மா...



மார்க‌ழி குளிரில் போர்வையை இழுத்து போர்த்தி தூங்குவ‌து எவ்வ‌ள‌வு சுக‌ம் அம்மாவும் அப்பாவும் தூர‌த்து உற‌வின‌ர் க‌ல்யாண‌த்திற்கு கொஞ்ச‌மில்ல‌ ரொம்ப‌வே தூர‌ம் ர‌யிலில் போயிருக்கிறார்க‌ள், ப‌த்து ம‌ணிக்கு இன்ட‌ர்வியூ இன்னிக்கு அப்பாயின்மென்ட் லெட்ட‌ரோடுதான் வ‌ருவ‌து என்ற‌ க‌ற்ப‌னை ஓடிக்கொண்டிருக்க‌ போர்வையை வில‌க்கி அப்பாவின் அலார‌த்தைப் பார்த்தான் சுந்த‌ர் ஹீம் இன்னும் முழுசாய் மூணு ம‌ணி நேர‌மிருக்கிற‌து இன்னும் அரைம‌ணி நேர‌ம் தூங்கிட்டு இன்னிக்காவ‌து கொஞ்ச‌ம் சீக்கிர‌ம் போவோம் என‌ அவ‌னுக்குள்ளே சொல்லிக்கொண்டான்.குளித்துவிட்டு ப‌வுட‌ர்,சென்ட் டையை க‌ழுத்தில் இறுக்கும் வ‌ரை சுத்த‌மாய் முக்கால் ம‌ணி நேர‌ம் ப‌ற‌ந்திருந்த‌து.. வ‌ழ‌க்க‌மாய் நான்குக்கு மேல் போகும் இட்லி இன்று ரெண்டோடு உள்ளே போக‌ ம‌றுத்த‌து இன்ட‌ர்வியூ கிலியோ என்ன‌வோ.. செல்போனை எடுத்தால் இர‌க்க‌மே இல்லாம‌ல் சார்ஜ் போயிருந்த‌து..


வெளியே வ‌ந்தால் ப‌னியின் தாக்க‌ம் ம‌றைந்து வெயில் ந‌ல்லாவே அடித்த‌து.
இதோ நீங்க‌ள் கேட்ட‌ பாட‌ல் ரேடியோ மிர்ச்சி 98.3 இட்ஸ் ஹாட் ' ரேடியோ ஜாக்கியின் குர‌ல் உள்ளே போய் ஹ‌ரிஹ‌ர‌னின் குர‌ல் பாட்டாய் வெளி வ‌ந்த‌து டீக்க‌டை ரேடியோவில்.

ச‌ரி அம்மாவுக்கு போன் ப‌ண்ணி சொல்லிட்டு போவோம் என்ற‌ப‌டி ஒரு ரூபாய் காயின் போட்டு ரிங் போன‌து ஆறாவ‌து ரிங்கில் லைனில் அம்மா

'என்ன‌டா இன்ட‌ர்வியூ ந‌ல்ல‌ப‌டியா முடிஞ்ச‌தா..?'

'ஏம்மா இப்ப‌தான் போறேன்'

'இன்ட‌ர்வியூ எத்த‌னை ம‌ணிக்கு'?

'ப‌த்து ம‌ணிக்கு'

'ஹீம் ப‌த்து ம‌ணி இன்ட‌ர்வியூக்கு ப‌த்த‌ரை ம‌ணிக்கு கிள‌ம்புற‌ ஒரே ம‌க‌ன் நீதாம்ப்பா நீதான் வாட்ச் க‌ட்ட‌மாட்டே யார்க்கிட்டேயாவ‌து டைம் கேக்க‌வேண்டாமா?'

'அப்பாவோட‌ அலார‌த்தை வெச்சுதான் கிள‌ம்பினேன்'

'ஏண்டா உங்க‌ப்பா எப்ப‌வுமே ரெண்டு ம‌ணி நேர‌ம் முன்னாடியே செட் ப‌ண்ணி வைக்கிற‌து உன‌க்கு தெரியாது'?

'ச‌ரி போனை வை நான் ஆட்டோ பிடிச்சு போறேன்'

ம‌ன‌தில் ப‌ட‌ப‌ட‌ப்பு தொற்றிக்கொள்ள‌ எதிரில் வ‌ந்த‌ ஆட்டோவை பிடித்து,


'அண்ணே சீக்கிர‌ம் இந்த‌ இட‌த்துக்கு போக‌னும்'

'200 ரூபா ஆகும்ப்பா'

'ஓகே போங்க‌ சீக்கிர‌ம்'


அய்ய‌ய்யோ இந்த‌ இன்ட‌ர்வியூ மிஸ் ஆக‌க்கூடாது த‌ட‌த‌ட‌க்கும் நிமிட‌ங்க‌ள் ம‌ன‌சையும் சேர்த்து த‌ட்டிய‌து.. வாழ்வின் மோசமான‌ நிமிட‌ங்க‌ள் அவை.

கிரிக்கெட்டில் ச‌ச்சின் ந‌க‌த்தை க‌டிப்ப‌து போல் இவ‌னும் அதே ஸ்டைலில் க‌டித்தான்..

மிக‌ச்ச‌ரியாக‌ அவ‌ன் சொன்ன‌ இட‌த்தை அந்த‌ ஆட்டோ அடைய‌ ஒன்றரை ம‌ணி நேர‌ம் க‌ழிந்திருந்த‌து ஆட்டோக்கார‌ரிட‌ம் ப‌ண‌த்தை கையில் ப‌ண‌த்தை திணித்துவிட்டு வேக‌மாக‌ ஓடினான். அவ‌ன் தேடிய‌ க‌ம்பெனி ஆறாவ‌து தள‌த்தில் இருப்ப‌தாக‌ சொன்ன‌து அங்கேயுள்ள‌ போர்டு..

லிஃப்டை கிழே அழைக்க‌ ப‌ட்ட‌னை அழுத்தினான்..

இந்த‌ நேர‌த்திலா லிப்ட் மேலே போக‌னும், உல‌க‌த்திலுள்ள‌ அத்த‌னை கெட்ட‌ வார்த்தையிலும் லிஃப்டை திட்ட‌ தோன்றியது

நிமிட‌ங்க‌ள் யுக‌மாக‌ மாற‌ லிஃப்ட் வ‌ந்தது..


ஆறாவ‌து ந‌ம்ப‌ரை அழுத்தினான்..

அவ‌ன் சொன்ன‌ப‌டி கேட்ட‌து லிஃப்ட்..
 ஆறாவ‌து த‌ள‌ம் வ‌ந்த‌தும் வேக‌மாக‌ ஓடி அந்த‌க் க‌ம்பெனியை அடைந்தால்
அங்கே வாட்ச்மேன் ம‌ட்டும் உட்கார்ந்திருந்தார்..


இன்ட‌ர்வீயூ எல்லாம் முடிஞ்சிருச்சிப் போல‌ என்று எண்ணிய‌ப‌டி வாட்ச்மேனை நெருங்கி..

'என்ன‌ப்பா இன்ட்ர்வியூக்கு வ‌ந்தியா மேனேஜ‌ருக்கு ஓன‌ர்க்கிட்டேயிருந்து அவ‌ச‌ர‌மா ஐத‌ராப‌த்துக்கு வ‌ர‌ச் சொல்லி போன் வ‌ந்த‌துனால‌ இன்ட‌ர்வியூவ‌ அடுத்த‌ வார‌த்துக்கு த‌ள்ளிவெச்சுட்டாங்க‌'

உட‌ம்பிலுள்ள‌ அத்த‌னை ஹார்மோன்க‌ளும் துள்ளிக்குதிக்க‌ அந்த‌ வாட்ச்மேனோடு நியூசிலாந்தில் டூயிட் பாட‌னும்போலிருந்த‌து சுந்த‌ருக்கு....

Post Comment

30 வம்புகள்:

சைவகொத்துப்பரோட்டா said...

சரி...சரி...நியூசிலாந்தில் இருந்து சீக்கிரம் வந்துருங்க, இல்லைன்னா இன்டர்வியு மிஸ் பண்ணிடப்போறீங்க.

Sketch Sahul said...

2மணி நேரம் முன்னாடி Alarm வச்சா முன்னாடியே போயிருக்கணுமே

அரபுத்தமிழன் said...

ஹார்மோன் துள்ளுனா, அத அடக்கிட்டு 'நீ யார் மேன்'னு நல்லா விசாரிங்க தம்பீ. மலையாளியா இருக்கப் போகுது. போட்டியாளர்களைக் குறைக்க இப்படி ஒரு ஏற்பாடு இருந்தா என்னா செய்வீங்க. ?

சசிகுமார் said...

அருமை

Ahamed irshad said...

2மணி நேரம் முன்னாடி Alarm வச்சா முன்னாடியே போயிருக்கணுமே//

எதிர்பார்த்த‌ கேள்வி.. இப்ப‌ உதார‌ண‌மா இப்பொழுது ம‌ணி ப‌த்து என‌ வைத்துக் கொண்டால் இர‌ண்டு ம‌ணி நேர‌ம் நாம் குறைத்து வைத்தால் அலார‌ம் எட்டு ம‌ணியைத்தான் காட்டும்..ஆனால் அந்த‌ Actual டைம் ப‌த்து ம‌ணியே..

Anonymous said...

விறுவிறுப்பான போன புள்ளையை வெறுப்பேத்திட்டாங்கய்யா...சரி சரி அடுத்த இண்டர்வியூ எப்பங்க அலாரம் வைக்கனும்...

எஸ்.கே said...

சூப்பர் ஸ்டோரி

அன்பரசன் said...

சூப்பர்

Chitra said...

நல்லா எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்!

Anisha Yunus said...

சூப்பருங்ணா!!

:)

ஜெயந்த் கிருஷ்ணா said...

super..

R.பூபாலன் said...

எங்க கம்பெனில எத்தனை பேர் வந்தாலும் கட்டாயம் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் கொடுத்துடுரான்கப்பா இப்பலாம்.

Unknown said...

nice.........

சாந்தி மாரியப்பன் said...

அடுத்த தடவை அலாரத்தை சரியா வெச்சுக்கோங்க :-))

இமா க்றிஸ் said...

சுப்பர் இர்ஷாத். ;)))

//வாட்ச்மேனோடு நியூசிலாந்தில் டூயிட் பாட‌னும்போலிருந்த‌து சுந்த‌ருக்கு....// ம். ஒரு டவுட். அவங்க வாட்ச்வுமனா!! இல்ல... அலாரம்வுமனா!! பரவால்ல, ஷூட்டிங் ஸ்பாட் ரெடி பண்ணிரட்டா! நீங்களும் கூட வரீங்களா?

Kanmani said...

arumaiyana kathai irshath words good..

r.v.saravanan said...

good irshaad

வார்த்தை said...

:)

Mc karthy said...

சூப்ப‌ராயிருக்கு இர்ஷாத் க‌டைசி வ‌ரி அனுப‌விச்சு ப‌டிக்கிற‌மாதிரி எழுதிருக்கீங்க‌.

கவிநா... said...

//2மணி நேரம் முன்னாடி Alarm வச்சா முன்னாடியே போயிருக்கணுமே//

இதே கேள்வி என் மனசிலும் வந்தது. தெளிந்துவிட்டேன்.
அருமை... நல்ல வேகமான விறுவிறுப்பான கதை.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி சைவ‌.கொ.ப‌ரோட்டா.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி சாகுல்.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி அரபுத்தமிழன்.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி சசிகுமார் .

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி தமிழரசி(அலார‌மே வேண்டாங்க‌)

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி எஸ்.கே.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி அன்பரசன்.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி Chitra.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி அன்னு.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி வெறும்பய.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி பூபாலன்(ந‌ல்ல‌து)

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி அதிரை வாய்ஸ்.

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி வானம்பாடிகள்.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி அமைதிச்சாரல்.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி இமா(ரெடி ப‌ண்ணுங்க‌ இமா)

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி Kanmani .

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி saravanan.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி வார்த்தை .

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி Mc karthy.


வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி கவிநா..

Asiya Omar said...

கதையை படித்து விட்டு அப்பாடான்னு இருந்தது.அருமை.

ஹுஸைனம்மா said...

//நல்லா விசாரிங்க தம்பீ. மலையாளியா இருக்கப் போகுது. //

மலையாளின்னா எல்லாருக்குமே காண்டுதான் போல!!

இர்ஷாத், இது உங்க இண்டர்வியூ அனுபவமா? அந்த “தெரியும்;ஆனா தெரியாது”ங்கிற இண்டர்வியூ போனீங்களே, அது இது மாதிரிதானா? :-))

Ahamed irshad said...

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி asiya omar.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ஹுஸைனம்மா(அதெல்லாம் இல்லைங்க‌ ஹீசைன‌ம்மா)

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates