பாஸ்(எ)பாஸ்கரன் படம் எப்படி என்று தெரியவில்லை..பாட்டு ஏ ஒன்..திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. பையா, நான் மகான் அல்ல,காதல் சொல்ல வந்தேன், பாணா காத்தாடி, இந்த படம் என யுவனுக்கு இந்த வருஷம் சூப்பர் ஹிட் பாடல்கள்தான்..அதிலும் 'யார் இந்த பெண்தான்' ஹரிச்சரன் குரல்'ல வர்ற அந்தப் பாட்டு ஃபர்ஸ்ட் க்ளாஸ். எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.. ப்ரீத்தி மிக்ஸிக்கு ஒரு வருஷம் கேரண்டிங்கிற மாதிரி இந்த பாட்டுக்கு நான் கேரண்ட்டி...
###############################################################################
சென்னையிலுள்ள பிரபல தி.ரில் வம்சம் பார்த்தேன்.இந்தளவுக்கு "நேட்டிவிட்டி' நோ சான்ஸ்.எப்படி இவ்வளவு விஷயங்களை ஞாபகம் வச்சு ஸ்கிரிப்ட் ரெடி பண்ணாங்கன்னு ஆச்சிரியமா இருக்கு.. எ.ப.பி.படாதவர் என்ன பேரு இது..புதுமைதான்.சின்ன சின்ன விஷயங்களை கவனிக்கவே நேரம் போயிருது.பாண்டிராஜ்க்கு மூட நம்பிக்கை ஜாஸ்தி போல அம்மாதிரியான விஷயங்கள் படத்தில் நிறைய..ஜெயப்பிரகாஷ் மனிதர் பின்னிட்டார். அதே போல் அருள்நிதி நல்லா பண்ணியிருக்கார்.. ஜெ.பிரகாஷ் மேல சாணியை கரைச்சு ஊத்திட்டு கோபத்தோட வருகிறபோது வீட்டுக்கு அருள்நிதி அவங்க அம்மாவும் வந்திருந்ததை பார்த்தவுடன் அடக்கமான பொண்ணாக முகபாவனை மாற்றும் இடத்தில் சுனைனாவுக்கு நூறுக்கு இருநூறு மார்க் போடலாம் அவ்வளவு இயல்பு நடிப்புல..அதுவுமில்லாம 'ஓ.....மலருருருருருரூபுள்ள்ள் ள்ள்ள்ள்ள்ளள்ள்ள்ள்ள்ள்ள் ளளளளளள...ஹை பிட்சில் கத்தி கூப்பிடம் இடத்தில் படு கிராமத்தனம்.அசத்தப்போவது இயக்குனர் ராஜ்குமார் இதில் வில்லன். டிவியில் எல்லோரையும் சந்தோஷப்படுத்துறவர் இங்கே கோபபடுத்துகிறார்.இவருக்கு தியேட்டர் உள்ளே இவரால் அடையாளம் காட்டப்பட்டு டிவியில் சிரிக்க வைப்பவர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்து ப்ளக்ஸ் எல்லாம் வைத்திருந்தது எல்லோராலும் கவனிக்கப்பட்டது.இன்னொறு முக்கிய விஷயம் இசை தாஜ்நூர் ..ரொம்ப நல்லாயிருந்தது.. பேக்ரவுண்டிலும்,பாடலிலும் நல்லா ஸ்கோர் பண்ணியிருக்கார்.குறிப்பாச் சொன்னா 'மருதாணி பூவப்போல' இந்த வருஷத்தில் மெலடி ஹிட்டில் கண்டிப்பா இந்த பாட்டுக்கு இடம் உண்டு. 'என்னஞ்சே" இந்த பாட்டு கச்சேரிகளில் இனி கேட்கலாம்.மியூஸிக் நல்லாயிருக்கே அப்படின்னு பார்த்தா தாஜ்நூர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அஸிஸ்டெண்டாம்..அப்புறமென்ன சொல்லவா வேணும். தியேட்டரில் 'கொசு' எங்களையெல்லாம் கடிச்சு அது அதோட வம்சத்த கூட்டிக்கிட்டு இருந்தது தனிக்கதை...
###############################################################################
உங்க இன்டர்நெட் கனெக் ஷன் வேகமாக இருந்தால் சன் மியூஸிக் சேனலை நேரடியாக ஆன்லைனில் பார்க்கலாம்.. அதே போல் கே.டிவியும்...
சன் மியூஸிக்
கே டிவி
###############################################################################
அப்புறம் இந்த வீடியோ.பாண்டிச்சேரி பக்கத்துல பாலூர் ரயில்வே ஸ்டேஷன்.. 'THE GREAT INDIAN RAILWAY" பற்றி 'நேஷனல் ஜியாக்ரபி' எடுத்திருக்கும் வீடியோ. '' ஊர் ஞாபகத்த கொஞ்சம் ஓவராகவே கூட்டுவதை மறுக்கமுடியாது.பாலூர் என்ற பேரை அழித்துவிட்டு அதிராம்பட்டிணம் என்ற பேரை எழுதினாலும் தகும்..அச்சு அசல் எங்கள் ஊர் ரயிலடியை பார்த்த உணர்வு..
###############################################################################
இந்த ஜோக் மெயிலில் வந்தது.
Movie Name:- SHOCK..
Director:- Who else??? RAMGOPAL VERMA!!
A thrilling suspense story !!!
.
.
Mom, Dad and Son (Hero)......
.
.
The Boy saw a girl and falls in love with her
.
.
Luckily she comes to stay opp his house !!!
.
.
He proposes her
.
.
Love goes smoothly
.
.
One day Dad saw his son with that girl
.
.
Son is shocked !!!
.
.
.
>>>>Interval<<<<
.
.
Dad askd "Who is that girl ?
.
.
Son : I love her Dad and I want to marry her
.
.
Dad is shocked !!!
.
.
$$Climax$$
.
.
Dad : "Its impossible. You cannot marry her !!!""Because she is your sister"
.
.
Son is shocked !!!
.
.
And now, a twist in the story !!!
.
.
Mom "Dont worry son, I will arrange your marriage....!!!!!!!!
.
.
"You are not his son !"
.
.
Dad gets Shocked !!
Zzzzz
.............................. ............................
THE End
.............................. ............................
21 வம்புகள்:
அருமையான காணொளி:) பகிர்வுக்கு நன்றி இர்ஷாத்.
எங்கிருந்து இந்த ஜோக்கைப்
பிடிச்சீங்க இர்ஷாத்?
என்ன இர்ஷாத் ரூம் போட்டுவோமா டிஸ்கஷனுக்கு ! எப்படிப்பா இப்புடி கதை சொல்றே !!
அந்தக்கதையை ராம்கோபால் வ்ர்மாவுக்கே அனுப்புங்க. மனுஷன் நிஜமாவே எடுத்தாலும் எடுப்பார் :-))))
சூப்பர்
super irshaad
நம்ம ஊர் லட்சணங்களோட காணொளியும் நகைச்சுவையும் ரசித்தேன் இர்ஷாத்.
பாடல் படம் சிரிப்பு அத்தனையும் சூப்பர் - ஜோக்கு சும்மா சொல்லக் கூடாது - செம ட்விஸ்ட்தான்
நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா
அந்த திரைக்கதை..........ஹா.........ஹா...
//அடக்கமான பொண்ணாக முகபாவனை மாற்றும் இடத்தில் சுனைனாவுக்கு நூறுக்கு இருநூறு மார்க் போடலாம் அவ்வளவு இயல்பு நடிப்புல..
//
அம்பூட்டு நல்லவரா நீங்க???வீடியோ ஜூப்பர்...வாழ்த்துகள் இர்ஷா....
Nalla Joke Irshad...
Nalla Joke Irshad...
அது சரி! :-)
பாடல்கள் எடுத்துக் கொண்டேன். நல்ல பாடல்கள்தான். சன், கே டிவி வரவில்லை. நேரம் இழுக்கிறது. ஜோக் ஓஜ். புகை வண்டி காணொளி பிரமாதம். மனதைத் தொட்டது.
சூப்பர்ர்...அந்த ஜோக் செம கலக்கல்...
வாங்க பாலா சார் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க Madumitha கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க அபுஇபுறாஹிம் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க அமைதிச்சாரல் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க Admin கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க r.v.saravanan கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க ஹேமா கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க cheena (சீனா) கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க சைவகொத்துப்பரோட்டா கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க சீமான்கனி கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க Mc karthy கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க Chitra கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..(எது சரிங்க சித் கொஞ்சம் எனக்கும் சொல்லுங்களேன்)
வாங்க ஸ்ரீராம். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..(கொஞ்ச நேரம் லோட் ஆன அப்புறம்தான் வொர்க் ஆகும்..)
வாங்க சசிகுமார் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
வாங்க Mrs.Menagasathia கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..
நல்லாயிருக்குங்க பாடல்கள்..வம்சம் விமர்சனமும் அருமைங்க..
Post a Comment