############################################################
நம் ஆல் டைம் ஃபேவரிட் ரயில்வே ஸ்டேஷன். மாறவில்லை அதே கடல்காற்று, இயற்கை ரம்மியம், மன நிம்மதியான இடம், நான் ஊரிலிருந்த ஒரு மாதத்தில் அதிகம் விஜயம் செய்தது இங்கேதான்.இன்னும் இங்கே மீட்டர்கேஜில் தான் ரயில்கள் போய்க்கொண்டிருக்கின்றன,பிராட்கேஜ்ஜா மாத்தச்சொல்லி கோரிக்கை, போராட்டம்.... ம்ஹீம் எதுக்கும் பலன் இல்லை..என்ன செய்யலாம் சொல்லுங்க..
############################################################
சாப்பிடும்போது, பைக் ஓட்டும்போது,குளிக்கும்போது இப்படி எப்பவெல்லாம் வேலையா இருப்போமோ அப்பவெல்லாம் மொபைல் ரிங் பதறியடிச்சுக்கிட்டு யார் போன் பண்றாங்க அப்படின்னு எடுத்தா மறுமுனையில ரஜினி 'நான் ஒரு தடவை சொன்னா' அப்படின்றாரு அவரு ஒரு தடவையோ இல்ல நூறு தடவையோ சொல்ற மாதிரி நான் எதுவுமே செய்யல, இதே மாதிரி, பாட்டு, ரிங்டோன், கவிதை, அட்வைஸ் அப்படின்னு லிஸ்ட் சொல்லிக்கிட்டே போகலாம்.. இந்த செல்போன் கம்பெனிக்காரங்க கொடுக்கிற லொள்ளு தாங்கல.. புறப்படும் சமயத்தில்தான் 'DO NOT DISTURB' அப்படிங்கிற ஆப்ஷன் இருக்கிறது தெரிஞ்சது.. தெரிஞ்சு..
############################################################
ஒரு அரசுடைமை வங்கியில் பணம் எடுக்கிறது சம்பாதிக்கறதை விட கஷ்டமாயிருக்கிறது.வழக்கம்போல் க்யூஉ உ உ உ உ உ உ உ நிற்க என்ன இவ்வளவு பெரிய க்யூ அப்படின்னு பார்த்தால் பணம்/எடுக்க/டெபாஸிட் பண்ண அப்படீன்னு இரண்டு கவுண்டர்கள் இருக்க ஒரு கவுண்டரில் ஆள் வராததால்(அதுவும் திங்கள்கிழமை வெளங்கிரும்) இன்னொன்றில் உள்ளவரே இரண்டு வேலையையும் கவனிக்க வேண்டியதாயிற்று.. இதற்கிடையில் கம்ப்யூட்டர் ஹேங்க் ஆயிருச்சு என்ற அறிவிப்பு வேற.இதில் கவனிக்க வேண்டிய விளம்பரம்.
'நீங்கள் ஏன் க்யூவில் நின்று காத்திருக்க வேண்டும் ஏடிஎம் கார்டு அப்ளை பண்ணி கார்டு வாங்கிக்கொள்ளுங்கள்'
ஏடிஎம் ஃபார்ம் குறைந்தது ஐந்து தடவை கேட்டிருப்பேன் இன்னும் நூறு தடவை கேட்டாலும் வர்ற ஒரே பதில் 'தீர்ந்திருச்சு சார் போய் மேனேஜர்ட்ட சொல்லுங்க'
மேனேஜரிடமும் அதே பதில்தான் வந்தது அப்படிங்கிறதை சொல்லித்தான் தெரியனுமா..
Photo Courtesy: Zakir Hussian
37 வம்புகள்:
அர்ஷாத்....எல்லாமே நல்லா இருக்கு....
ட்ரெய்ன் எங்க ஊரு ட்ரெய்ன் மாறில்ல இருக்கு....(பட்டுக்கோட்டை டூ...அதிராம்பட்டினம் வழியா இது?)
ஆமா தேவா.. நீங்க எந்த ஊரு..
மறக்க முடியாத,மனதில் என்றும் நினைவுடன் அந்த ரயில் நிலையம்... அழகான vacation பதிவு.
அன்பின் இர்ஷாத்
அருமை அருமை - சிறுவயதில் சுற்றித் திரிந்த புகைவண்டி நிலையம் - தவிர்க்க இயலாத காரணக்களினால் வங்கியில் தாமதம் - இரண்டினையும் வைத்து ஒரு அருமையான இடுகை.
நன்று நன்று - நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா
:) ஏ.டி.எம் அட்டை வாங்கிட்டாலும்:))
முதல் இரண்டு படங்கள் இயற்கையோடு ஒன்றி அழகாய் இருக்கு...
மதுக்கூருங்க...!
செயற்கை கலவாத படங்கள்.... சிறு வயது பள்ளிக் கூட நினைவுகள்.. நாட்டின் வளர்ச்சி மற்றும் மாறாத அரசு .. எல்லாமே அருமை நண்பரே... தொடரட்டும்...
dheva
மதுக்கூருங்க...!//
அப்படியா அது சரி மதுக்கூரு நமக்கு ரொம்ப பக்கம்'ல. தேவா மெயில் பன்னுங்க... sajjithas@gmail.com..
வானம்பாடிகள் .
:) ஏ.டி.எம் அட்டை வாங்கிட்டாலும்:))//
அடிக்கடி ஏடிஎம் மிஷின் ரிப்பேர்'ன்னு செய்தி வருது..
ரயில் படங்கள் அருமையா இருக்கு இர்ஷா...இப்போலாம் ஏ.டி.எம் லேயே கூட்டம் அம்முது இர்ஷா...
A T M நிகழ்வு வருந்த தக்கது !
என்னவோ போங்க
இந்த ராமநாதபுரம் e c r ல போறது செமையா இருக்குங்க இர்ஷாத் ..அட்டகாசமான ரோடு
தம்பி ATM பக்கம் போனா தனியாத் தான் போவனும் சரியா... :
ரயில் படம் பார்க்க எப்பவுமே அழகுதான்... 'பேங்குக்கு பனிரெண்டு மணிக்கு மேல போனா கூட்டம் இருக்காது...!
இங்க வந்த பிறகும் சொந்த ஊர் ஞாபகம் இன்னும் மறக்கவில்லை போல.. கண்டிப்பா மறக்காது..அப்டேஷன் தொடரட்டும்.. :)
புகையிரத நிலையத்துப் புகைப்படங்கள் மூன்றும் அருமை இர்ஷாத். அதிலும் அந்த மூன்று ஆடுகள்.. அழகு. ;)
உங்களுக்கு Do not Disturb முன்பே தெரிந்திருந்தாலும் பயனில்லை அது வேலை செய்ய குறைந்தது 45 நாட்கள் ஆகும். அதுக்குள்ள நீங்க ஊர விட்டே வந்தாச்சு
செல்போன் கம்பெனிக்காரங்க கொடுக்கிற லொள்ளு தாங்கல..
ripeettuuuuuuuuuuuu
சுவராசியமான பகிர்வு!!
நமது பள்ளியின் போட்டோவை போட்டு பள்ளி வாழ்க்கையை ஞாபக படுத்தி விட்டீர்கள்...அதோடு இல்லாமல்..கனரா வங்கியின் (அப்படிதான் நினைக்கிறேன் ) வண்டாவாளத்தை தண்டாவாளத்தில் ஏத்தி வீட்டீர்கள்..ஸ்டேட் பாங்க் நமது ஊரில் செப் 15 திறப்பதாக கேள்விப்பட்டேன்....பார்ப்போம் அப்போதாவது...நாம் கஷ்டப்பட்டு சம்பாரித்து அனுப்பிய பணத்தை இசியாக எடுக்க முடியுதாண்டு
ரோடு, ரெயிலு, பள்ளிக்கோடம், பேங்க்கு, செல்ஃபோனு... ஊருக்குப் போயிட்டு வந்ததும் இப்டித்தான் எல்லாருமே புலம்புவாய்ங்களோ??!! ஹி.. ஹி.. நானும்..
இர்ஷாத் படங்கள் அருமை அதைவிட அருமை நீங்கள் ஆசிரியர் தின வாழ்த்துக்களை பள்ளி கூடத்தை பற்றியும் ஆசிரியர் பற்றியும் குறிப்பிட்டு சொல்லியிருப்பது
நீங்கா நினைவுகள் அருமை
ஆஹா அருமை நானும் ஊருக்கு போய்ட்டு வந்த உணர்வாக்கீது.. ரெய்ல்வே ஸ்டேஷன் இன்னும் அதே மிளிருடன் இருக்கு. புது டிராக் போட்டால் பழையது மறந்துப்போய்டுமு மாத்தாம இருக்காஹ போல
இர்ஷாத்!
என்ன இப்டி ஈத் கூட கொண்டாடாம ஊருக்கு டாடா காமிச்சுட்டீங்க...
உங்க ஊர் அழகுதான் அதிலும் கடற்கரை தோப்பு செம செம
கேமராவை இந்தியாவுக்கு எடுத்துட்டுப்போய் பூந்து விளஃஇயாடி இருகிங்க.இன்னும் ஸ்டாக் உண்டா?
உங்கள் ஆசிரியைக்கு எனது வாழ்த்துக்களும்...
எனக்கும் நம்ம ஊரு ட்ரெயின் ரெம்ப பிடிக்கும்... அது என்னமோ
செல் போன் தொல்லை பெரும் தொல்லை தான் போல இருக்குங்க... ஹ ஹ ஹ
அடப்பாவமே பேங்க் கொடுமை அதை விட பெருசா இருக்கும் போலியே... ரெம்ப கஷ்டம்
உங்கள் ஊரைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. வாழ்ந்தால் இது மாதிரி ஊரில் தான் வாழனும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபூபக்கர்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா ஐயா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானம்பாடிகள் பாலா சார்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழரசி..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெறும்பய..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீமான்கனி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பத்மா(ஆமா நல்லா ரோடு போட்டு இருக்காங்க)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபுஇபுறாஹிம்(என்ன கேள்வி இது? எனக்கு தெரிஞ்சு எல்லோரும் தனியாதான் போறாங்க)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.(அப்படியும் போய் பார்த்தாச்சு. ம் ஹீம் கூட்டம்தான்)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நாடோடி@ஸ்டீபன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இமா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகுமார்(எனக்கு லீவே 31 நாள்தாங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி vinu.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சைவகொத்துப்பரோட்டா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யாசிர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹுஸைனம்மா..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி r.v.saravanan..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்துல்மாலிக்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரோஸ் {என்ன பண்றது ரோஸ்..அடுத்த தடவை கரெக்டா போயிரவேண்டியதுதான்}
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸாதிகா(இது நான் எடுத்த படங்கள் இல்லை..நண்பர் ஜாஹிர் எடுத்தது ஸ்டாக் இருக்கு அடுத்தடுத்த பதிவுகளில் வரும்)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்பாவி தங்கமணி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆட்டையாம்பட்டி அம்பி..
இர்ஷாத் அருமையான ஆக்கம் ,புகை படங்களும் அருமை
Post a Comment