சலூன் கடை பெஞ்சு....


இன்றைக்கு வலையை மேய்தது ஏண்டான்னு போச்சு.  துபாயில் இருந்து புனே வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென 7,000 அடி கீழே தாவி, எதிரே வந்த விமானத்துடன் மோத இருந்த மாபெரும் விபத்து  தவி்ர்க்கப்பட்டுள்ளது என்று செய்தி... ஏர் இந்தியா மட்டும் ஏன் இப்படி அடிக்கடி சர்ச்சையை உண்டாக்கிறது ஏன் என்றே தெரியவில்லை.
 ########################################################
இதைவிட சோகம் நித்தி புகழ் சாரு,இவரு விஜய் டி.வியின் நீயா நானா ப்ரோகிராமுக்கு போனாராம்.அங்கே கோபிநாத்தும்,இயக்குனரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்கவெச்சாங்களாம்.. சரியாக ஐந்து,ஆறேழு மாதங்கள் முன்பு இதே நீயா நானா இயக்குனர் ஆண்டனி பற்றி தான் ப்ரோகிராம்'ல கலந்துகிட்டதுக்கு பணம் தரவில்லையென புலம்பித்தள்ளிய சாரு இன்னிக்கு மறுபடியும் புலம்புறாரு. மக்கள் கணிப்பின்படி இன்னும் சரியாக ஆறு மாதங்களில் நீ.நா வைப் பாராட்டி இதே சாருவிடம் கட்டுரை வரும்.. என்ன பண்றது தமிழ்நாட்டு மக்களப் பார்த்த எல்லோருக்கும் "மைதானம்" மாதிரி தெரியுது..அதான் ஆளாளுக்கு புகுந்து விளையாடுகிறார்கள்... கோபிநாத்தின் "அதிமேதாவித்தனத்தினால்" நீ.நாவை நிறைய பேர் புறக்கணிக்கிறார்கள் என்பது வேறு விஷயம்..

############################################################

தெரிஞ்சிக்குவோமா


லஞ்சத்த ஒழிக்க ஒரே வழி...!


 என்ன வழி?


லஞ்சம்ங்கிற பேருக்கு பதிலா வேறு பெயரை வைத்தால் ஒரேடியா ஒழிஞ்சிரும்....


கேள்வி - பதில்


குண்டூசி ஒல்லியாத்தானே இருக்கு அப்புறம் ஏன் அதற்கு "குண்டூசின்னு' பெயர் வந்தது...?



பதில் தெரிந்த விஞ்ஞானிகள்?........


Post Comment

40 வம்புகள்:

இமா க்றிஸ் said...

'பின்'குறிப்பு ;)

நறுமுகை said...

நீயா நானா போன்ற டாக் ஷோ வே தமிழில் இல்லை என்பது தானே உன்மை??
சாரு வழக்கம் போல ஸ்டண்ட்..


www.narumugai.com

Priya said...

கேள்வி பதில் சூப்பர்... ஆராயப்பட வேண்டியது:)

அப்துல்மாலிக் said...

சலூன் கடை பெஞ்சுலே உள்ள பேப்பர் படிக்க நல்லாதான்கீது. சாரு ஏற்கனவே நித்தி மேட்டருலே டங்குவாரு கிழிக்கப்பட்டவர், அவர் சிறப்பு விருந்தினர் என்றவுடனே சேனலை மாற்றிவிட்டேன்.

‍‍
தலையிலே குண்டும் காலுலே ஊசியும் இருக்குலே( தலை கால் புரியலேனு சொல்லுறதில்லையா அதுமாதிரிதான்)

Unknown said...

நீயா?.. நானா?

பதிவுலகம் ..

மகேஷ் : ரசிகன் said...

// குண்டூசி ஒல்லியாத்தானே இருக்கு அப்புறம் ஏன் அதற்கு "குண்டூசின்னு' பெயர் வந்தது...? //

இதை நீங்களே சிந்திச்சீங்களா?

மகேஷ் : ரசிகன் said...

ஏர் இந்தியா... கொஞ்சம் பயமாத் தான் இருக்கு,

Ahamed irshad said...

மகேஷ் : ரசிகன் said...
// குண்டூசி ஒல்லியாத்தானே இருக்கு அப்புறம் ஏன் அதற்கு "குண்டூசின்னு' பெயர் வந்தது...? //

இதை நீங்களே சிந்திச்சீங்களா?///


இந்த ஊரு இன்னுமா நம்பள நம்புது..?!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

கலகலப்பாகவும் சிந்திக்க வைக்கும்படியும்
இருக்கு!

பத்மா said...

கலந்து கட்டி செமையா இருக்கு

ஹேமா said...

"நீயா நானா" சில நிகழ்சிகளின் கல்ந்துரையாடல் தேவையானதாகவே இருப்பதாய் உணர்கிறேன் செந்தில்.

Ahamed irshad said...

This comment has been removed by the author.

Ahamed irshad said...

ஹேமா said...
"நீயா நானா" சில நிகழ்சிகளின் கல்ந்துரையாடல் தேவையானதாகவே இருப்பதாய் உணர்கிறேன் செந்தில்///


நீ.நா மாதிரியான நிகழ்ச்சிகள் தேவைதான் ஹேமா.ஆனால் அதில் கோபிநாத்தின் அனுகுமுறை சரியில்லை என்பதை அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தால் தெரியும்..

Asiya Omar said...

நல்லாயிருக்கு,குண்டூசி பின்னால் ஒரு குண்டு மாதிரி இருக்கே அதனாலவா?
ஏதோ என்னால முடிஞ்சது?
லஞ்சத்துக்கு பதில் பஞ்சம் இருந்தால் ஒழிந்திருக்குமோ?
அருமை.
சலூன் கடை பெஞ்சு நல்லாதான் இருக்கு,அடுத்து டீ கடை பெஞ்சா?
பின்னூட்டத்தில் பின்னி எடுக்க ஆசைப்பட்டு முயற்சி செய்தேன் தம்பி.ரொம்ப நாள் கழிச்சி வந்ததால் நினைவு இருக்கட்டுமேன்னு சும்மாதான்.அதிராம்பட்டினம் ரெயில்வே ஸ்டேஷன் வந்து பார்க்கணும் தம்பி.

Ahamed irshad said...

asiya omar said...
/அதிராம்பட்டினம் ரெயில்வே ஸ்டேஷன் வந்து பார்க்கணும் ///

நீங்கள் எங்கள் ஊருக்கு அருகிலா..!

ஸாதிகா said...

நீங்களும் கொத்துபரோட்டோ கொத்தியாச்சா?பின் குறிப்பு அருமை.

Asiya Omar said...

அஹமது இர்ஷாத் உங்களுக்கு சன்சைன் விருது கொடுத்து இருக்கிறேன்,பெற்றுக்கொள்ளவும்.

தமிழ் உதயம் said...

அஹமது இர்ஷாத் said...

அதில் கோபிநாத்தின் அனுகுமுறை சரியில்லை என்பதை அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்தால் தெரியும்..

உண்மையை உடைத்திருக்கிறிர்கள். மிக சரி. நேர்மையற்ற நடுநிலையாளர்.

சீமான்கனி said...

ஆஹா...கோபிநாத் ஆமாவா ??? பள்ளிகூடத்துல இருந்து நாங்களும் பெஞ்சு தேச்கிக்கிட்டுதன் இருக்கோம் இனி இங்கயும் தேயிக்கனுமா?? ஒ.கே...

Mc karthy said...

சாரு அவர் அப்படித்தான்.. குண்டூசி,லஞ்சம் குறிப்புகள் சூப்பருங்க... சலூன் கடை பெஞ்சு நல்லாயிருக்கு. இது தொடருமா?

வலைத்தமிழன் said...

சுவராஸ்யம் அஹமது நல்லாயிருக்கு..அதுசரி குண்டூசிக்கு என்னா விடை? சொல்லிவிடுங்கள் ப்ளீஸ்...

Menaga Sathia said...

நல்லாயிருக்கு அஹமது!!

Thenammai Lakshmanan said...

குண்டூசிக்கும் லஞ்சத்தும் விளக்கம் ம்ம்ம்:))

சௌந்தர் said...

லஞ்சத்த ஒழிக்க ஒரே வழி...!

என்ன வழி?

லஞ்சம்ங்கிற பேருக்கு பதிலா வேறு பெயரை வைத்தால் ஒரேடியா ஒழிஞ்சிரும்....

இது நல்ல யோசனை இப்படி செய்தால் லஞ்சம இருக்காது :)

முஹம்மது ஆரிப் said...

இர்ஷாத் மேசைக் கீழே கட்டு ஒன்னு வச்சிருக்கேன். அதை எடுத்துக்கிட்டு லஞ்சத்தை ஒழிச்சுடுங்க!

என்ன தான் இதை நாம் ஜோக்கா சொன்னாலும் யார் இதை முதலில் ஆரம்பித்து வைப்பது?

சரி பணத்தை எண்ணி பார்த்தீங்களா? அதில் நல்ல நோட்டும் இருக்கு, ஒரு கள்ள நோட்டும் இருக்கு?

தேவையானதை எடுத்துக்கிட்டு குண்டூசிக்கு பதிலை சொல்லுங்க. இல்லாவிட்டால் உங்க மனசாட்சியே கொன்று விடும்.

சிநேகிதன் அக்பர் said...

எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க. பேசாம உங்களை லஞ்ச ஒழிப்பு துறை தலைவரா போடலாம்.

ILA (a) இளா said...

லஞ்சத்துக்கு என்ன பேர் வெக்கலாம்? ஆங்.. நல்லதுன்னு வெச்சிரலாமா? நல்லது குடுங்க.. நல்லதை வாங்கிய போலீஸார் கைது..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல கேள்வி... இருங்க அதை அந்த ஒல்லி ஊசி கிட்டயே கேட்டு சொல்றேன்... (தொங்கிகிட்டே யோசிப்பாய்ங்களோ.....)

ஸ்ரீராம். said...

லஞ்ச விளக்கத்துல காலி பண்ணிட்டீங்க....குண்டூசி விளக்கத்துல குத்திட்டீங்க...

Ahamed irshad said...

வாங்க இமா நன்றி வருகைக்கும் கருத்துக்கும்,

வாங்க மால்குடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாங்க ப்ரியா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Ahamed irshad said...

அபுஅஃப்ஸர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

வாங்க செந்தில் சரியாக சொன்னிங்க..நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...

நண்பா மகேஷ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க நிஜாமுத்தீன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

வாங்க பத்மா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

வாங்க ஆசியாக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஸாதிகா அக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க தமிழ் உதயம் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வாங்க சீமான்கனி முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ராஜ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானவில்..

Ahamed irshad said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மேனகாசாதியா அவர்களே..

வாங்க தேனக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சவுந்தர்..

Ahamed irshad said...

நான் உங்கள் ரசிகன் சார்' சரியான கேள்விதான் கேட்டீங்க.. குண்டூசி'க்கு பதில் தெரியாமத்தானே உங்களையெல்லாம் கேட்டேன்.. உங்கள் (முதல்)வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

கூடிய விரைவில் பதிவியேற்பு விழா நடக்கும் அக்பர்,அநேகமா நீங்கள் கேட்'ல உள்ள வாட்ச்மேனிடம் பத்து ரூபாய் கொடுத்துதான் உள்ளே வரவேண்டி இருக்கும்.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா..

சரியாக சொன்னீர்கள் இளா,நல்லது கொடுங்க" ஹா ஹா அருமை.. உங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

என்னங்க பண்றது தங்கமணி எப்படியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கு.. உங்கள் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றிங்க...

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

r.v.saravanan said...

நல்லாயிருக்கு அஹமது

சாந்தி மாரியப்பன் said...

சலூன் கடை பெஞ்சில் உக்காந்து நல்லாத்தான் யோசிச்சிருகீங்க. லஞ்சத்தை ஒழிக்க வழி கண்டுபிடிச்சதுக்காகவே ஸ்பெஷல் டாக்டர் பட்டம் கொடுக்கிறோம். அதுக்காக குண்டூசியாலதான் ஊசி போடுவேன்னு அடம்பிடிக்க கூடாது :-)))

Ahamed irshad said...

ரொம்ப நன்றி வருகைக்கு அமைதிச்சாரல்..

எனக்கு டாக்டர் பட்டமா, ஜனத்தொகையை குறைக்க இப்படி ஒரு வழி இருக்கா.........!!!!!!!!!!!!!!!

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates