உயிரின் வலி.......


ஐந்து நட்சத்திர ஹோட்டலின் டிஸ்கொதே கிளப்....

"ஹேய் லோகேஷ் ஆர் யூ ஃப்ரீ டுமாரோ?"

"ஒய் டார்லிங்"?

"இல்லடா எனக்கு ஜீவல்ஸ் வாங்கனும் அப்பாவும் அம்மாவும் பிஸினஸ் ட்ரிப் போயிருக்காங்க அதான்"

"ஓகே ஐ கேன் ட்ரை டு கம் வித் யூ"

               "ஹேய் ரொம்ப குடிக்காதேடா அப்புறம் எப்டிடா வண்டி ஓட்டுவே?"

                   "ஃபுல் ரவுண்ட் அடிச்சாலும் நான் ஸ்டெடி மைன்ட்'ல தான் இருப்பேன் யூ டோண்ட் வொர்ரி"

                   "ஓகே லெட் அஸ் கோ"

பி.எம்.டபிள்யூ காரை லோகேஷ் ஓட்ட வண்டி கிளம்பியது.

பத்தாவது நிமிஷம்..

ரோடு கூட்டும் தொழிலாளி மேல் லோகேஷின் வண்டி மோதியதில் அவர் தூக்கியெறியப்பட்டு விழுந்து கிடந்தார்.ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் அவரை ஜி.ஹெச்சுக்கு கொண்டு சென்றார்கள்.

அந்த ஏரியா எஸ்.ஐ விமலன் ஸ்பாட்டுக்கு வந்தார்.

"ஹேய் யார் நீ ட்ரன்க்டு டிரைவிங் கூடாது தெரியுமில்ல"

அதற்குள் ஏட்டு ஒருவன் எஸ்.ஐ காதில்,

"சார் பையன் யாரு தெரியுதா ஆளுங்கட்சி காண்ட்ராக்டர் 
ஜோதிவர்மனோட புள்ள, கைய கிய்ய வெச்சா ஏடாகூடாமாயிடும் சார்"

         "ஓகே ஓகே டிராஃபிக் க்ளீயர் பன்னு"

ஒரு வழியாக டிராஃபிக்கை "க்ளீயர்" செய்தார்கள்...

ரூமில் இருந்தான் லோகேஷ்.அப்போது வேகமாக வந்த ஜோதிவர்மன் லோகேஷின் கன்னத்தில் அறைந்து,

"ஏண்டா காஸ்ட்லி காரைக் கொண்டா மோதுவே 45 லட்சம் ருபா கார் டேமேஜ் ஆயிடுச்சு பாரு"

"அப்பா நான் ஒன்னும் வேனும்னே மோதல,இன்னிக்கு ரவுண்டு ஜாஸ்தியாயிடுச்சு அதான்"

                    "சரி சரி சாப்பிட்டியா?"

                   "இல்ல"

                  "போ போய் சாப்பிடு"

அடுத்த நாள்.....

ஹாலில் உட்கார்ந்து நியூஸ் பேப்பரை படித்துக் கொண்டிருந்த ஜோதிவர்மன் காலிங் பெல் சத்தத்தை கேட்டு எழுந்துப் போய் கதவை திறந்தார்.
வெளியில் மெக்கானிக் மாணிக்கம்.

"ஐயா இன்னிக்க நம்ம சுகுணாம்மா வண்டிய கொண்டு வந்தாங்களாம்"

               "சரி அதுக்கென்ன இப்ப"

"இல்லீங்கய்யா என் பொஞ்சாதிக்கு உடம்பு சரியில்லைன்னு புதுசா வேலைக்கு சேர்த்த பையனை வெச்சுட்டு நான் ஆசுபத்திரிக்குப் போய்ட்டேன்"

                       "சரி"

"பையன் வண்டிய ஒழுங்கா பார்த்தானா இல்லையான்னு கேட்டுட்டு போலாம்'னு வந்தேங்கய்யா"

            "சுகுணா வந்ததும் சொல்லி அனுப்புறேன்"

            " சரிங்கய்யா நான் வரேன்ங்க"

சரியாக அதே பத்தாவது நிமிஷம்...

காண்ட்ராக்டர் ஜோதிவர்மனோட மகள் சுகுணாவின் கார் தாறுமாறாக ஓடி லாரியில் மோதியதில் அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி டி.வி.யில் ஸ்க்ரோலிங்காக ஓடிக்கொண்டிருந்தது.......

Post Comment

40 வம்புகள்:

Mythees said...

:)

சௌந்தர் said...

ஹா ஹா ஹா சூப்பர் அஹமது

Unknown said...

நீதி கிடைத்து விட்டதாக கதையை முடித்து இருக்கிறீர்கள்...
குமுதம் ஒரு பக்க கதைக்கு அனுப்புங்கள் ..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது இது தானோ?

Priya said...

தெளிவான சிறுகதை... நன்றாக இருக்கிறது இர்ஷா!(ஷார்ட்டா இர்ஷான்னு கூப்பிடலாமா?)

Ahamed irshad said...

Priya said...
//ஷார்ட்டா இர்ஷான்னு கூப்பிடலாமா?)//

O Yes....

SUFFIX said...

நல்லா இருக்கு.

நேசமித்ரன் said...

சிறுகதை! நன்றாக இருக்கிறது

ஸாதிகா said...

//முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்பது இது தானோ//ரீபிட்

அ.முத்து பிரகாஷ் said...

இந்த மாதிரி காலமே அப்போதைக்கு அப்போ தண்டனை கொடுத்துட்ட நல்லாத் தானிருக்கும் இர்ஷா ..

ஹேமா said...

நிச்சயயம் ஒரு வினைக்கு பின்வினை இருக்கு.தொடரும் வினைகள்.நல்ல கதை இர்ஷாத்.

பத்மா said...

GOOD IRSHAATH

settaikkaran said...

நச்சுன்னு ஒரு புனைவு! க்ரேட்!!!

Riyas said...

Good story keep it up.

vasu balaji said...

ரொம்ப நல்லாருக்கு.

நாடோடி said...

க‌தை ந‌ல்லா இருந்த‌து இர்ஷாத்....

r.v.saravanan said...

நன்றாக இருக்கிறது இர்ஷாத்

விஜய் said...

இன்னும் முயற்ச்சித்தால் திறம்பட எழுத முடியும் உங்களால்.

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிறந்த கதை எழுத்தாளர் விருது வாங்கின
கதையோடு, மன்னிக்க- கையோடு...
கதையா? பலே!

Unknown said...

தன் வினை தன்னை சுடும் ,அழகாக சுட்டி காட்டியுள்ளிர்கள் வாழ்த்துகள்.

வலைத்தமிழன் said...

முடிவு நல்லாயிருக்குங்க இர்ஷாத்.கதை சூப்பர்

அப்துல்மாலிக் said...

:)))

ஹரீகா said...

இது மாதிரி நல்ல கதைகள் இன்னும் நிறைய உங்களிடமிருந்து எதிர் பார்ப்புகளை ஏற்படுத்துகிறது இர்ஷாத்!

எம் அப்துல் காதர் said...

கதை சொல்வதில் கூட உங்களிடம் தனி அழகு மிளிர்கிறது! தொடர வாழ்த்துக்கள்!!

Madumitha said...

ஆனா நிஜத்தில
இப்படியெல்லாம்
முடியறதில்ல இர்ஷாத்.

ஸ்ரீராம். said...

இந்த முற்பகல் பிற்பகல் எல்லாம் நாம் கதை எழுதிதான் ஆத்திக்க முடியுது....இல்லை இர்...(ஹி..ஹி நான் இன்னும் சுருக்கிட்டேன்...!)

செ.சரவணக்குமார் said...

நல்லாயிருக்கு அஹமத்.

Ahamed irshad said...

வாங்க மைதீஸ் வருகைக்கு மிக்க நன்றி...

வருகைக்கு நன்றி சவுந்தர்...

ரொம்ப நன்றிங்க செந்தில் வருகைக்கும் ஊக்கத்திற்கும்..உங்களுக்கு நான் அனுப்பிய மெயில் கிடைத்ததா?

Ahamed irshad said...

வாங்க நாய்க்குட்டி மனசு வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

ரொம்ப நன்றி ப்ரி... ஹி ஹி எங்ககிட்டேவா...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஷஃபிக்ஸ்..

Ahamed irshad said...

வருகை தந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றிங்க நேசமித்ரன் அவர்களே...

உங்க ரீபிட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க ஸாதிகா அக்கா..

வருகைக்கு மிக்க நன்றி நியோ..

Ahamed irshad said...

ரொம்ப நன்றிங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும்..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க பத்மா....

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சேட்டைக்காரன்..

Ahamed irshad said...

வருகைக்கு நன்றி ரியாஸ்..

வாங்க வானம்பாடி அய்யா வருகை தந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றிங்க...

வாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

வருகைக்கு மிக்க நன்றி சரவணன்...

Ahamed irshad said...

ரொம்ப நன்றிங்க விஜய் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்...

நிஜாமுத்தீன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க இளம்தூயவன்..

மிக்க நன்றிங்க வானவில் வருகைக்கு...

Ahamed irshad said...

அபுஅஃப்ஸர் வருகைக்கு மிக்க நன்றிங்க...

ரொம்ப நன்றி ஹரீகா வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும்...

மிக்க நன்றிங்க அப்துல் காதர் வருகைக்கும் கருத்துக்கும்..

கண்டிப்பா மதுமிதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...

Ahamed irshad said...

இல்லை இர்...(ஹி..ஹி நான் இன்னும் சுருக்கிட்டேன்...!//

கிழிஞ்சிச்சி கிருஷ்ணகிரி இப்படியே போயி என்னாவாக போகுதோ...

மிக்க நன்றி ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும்..

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சரவணக்குமார்..

Mc karthy said...

சிறுகதை நச் இர்ஷாத்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்" - இப்பவெல்லாம் தெய்வம் கூட அன்றே கொல்லும்... நல்ல நீதி கதை...

நறுமுகை said...

கதை அருமை.. குமுததில் வரும் கதைகளுக்கு இது ஆயிரம் மடங்கு சூப்பர்..


www.narumugai.com
நமக்கான ஓரிடம்

அன்புடன் மலிக்கா said...

ஒருபக்க கதை அருமை.

நீங்க கொடுத்த விருதை மாட்டியாச்சி எங்கவீட்டில்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லாருக்கு.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates