சந்தோஷமும் வாழ்க்கையும்....


"என்னா சாலாட்சி நாலஞ்சி நாளா எங்கே போனே?"

    "இல்லம்மா வுட்டுக்காரருக்கு உடம்பு சரியில்ல அதான் வரமுடியல" 

                                   "என்னா பண்ணுது?" 


     "காய்ச்சதான் எப்பவும் ஒன்னு ரெண்டு நாள்'ல எந்திருச்சி ஆட்டோவ எடுத்துட்டு வேலக்கி போவாரு' இந்த வாட்டி நாலு நாளா எந்திரிக்கக்கூட முடியல"

                                "டாக்ட்ரு என்னா சொன்னாரு"?     

"காய்ச்சதான், மாத்தர,சிவப்பு டப்பி எல்லாம் எலுதி தந்தாரு முன்னூறு ரூவா செலவாச்சி"   

"சரிம்மா உன் வுட்டுக்காரரு போனு கீனு பன்னாரா?"           

"நேத்துதான் பண்ணாங்க,வெளிநாடு முன்னமாதிரி இல்லயாம் சம்பளம் கொறவு வேல அதிகமுன்னு சொன்னாரு"

"ஆமா சில்லுதெரு பாய்வீட்டம்மாக்கூட அப்படித்தான் சொன்னிச்சு"

"பொண்டாட்டி புள்ள எல்லாத்தயும் விட்டுபுட்டு எப்பிடிமா உன்ற வுட்டுக்காரரெல்லாம் இருக்காங்க?"

"என்னா செய்றது வாழனுமே அதுக்கு வழி வெளிநாடுதானே,அவரு இங்க இருந்து நாலு காசு சம்பாரிச்சாலும் மிஞ்சுமா?"

"இல்லம்மா என்னதான் புள்ள கான்வன்டு'ல படிக்க வச்சாலும் புருசன் பொண்டாட்டி புள்ள எல்லாரும் ஒன்னா இருந்தா அதுல  கெடக்கிற சந்தோசம் என்ன வெல கொடுத்தாலும் வருமா"

              "வராதுதான் என்னா பன்றது?"

"இல்லமா கூலோ கஞ்சியோ குடிச்சாலும் புள்ள புருசனோட சந்தோசமாத்தான் இருக்கிறேன்.ஆனா சமூவம் எங்கல அன்டாடங்காச்சியாத்தான் பார்க்குது"

                "ஆமா அதானே உண்மை"

இரும்மா,ஆனா உன்னய உயர்வாத்தான் பார்க்குது ஏன்னா உன் வுட்டுக்காரரு வெளிநாட்'ல இருக்கிறது நால"

                 "இப்ப நீ என்ன சொல்ல வர்றே?"

"ஏம்மா ஆத்திரப்படுறே,நாம வசதியாயிருந்த மதிக்கிற சமூவம் சூல்நில மாறினாலோ,இல்ல நம்ம வசதிப்படி வால நெனச்சாலோ மிதிக்குது. அதத்தான் சொன்னேன். அழுவையோ,சிரிப்போ எல்லாத்தையும் அவர்ட்டதான் சொல்வேன்,ஆனா உனக்கு போனுதான் எல்லாமே. சமூவத்துக்காக சந்தோசத்த வித்துட்டு நிக்கிறம்மா நீ..

                         நான் வரேன்மா...


இந்த நேரத்தில் எங்கோ படித்த இந்தக் கவிதை சரியானது என நினைக்கிறேன்..

            ###############################################
                                     பிரிந்திருந்து பிரியம்
                                      காட்ட வேண்டாம்
                                      நீ அருகிலிருந்து
                                      சண்டை போட்டாலே
                                      போதும்
           ###############################################

Post Comment

49 வம்புகள்:

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு அஹமது இர்ஷாத்.

நாடோடி said...

க‌தையும், க‌விதையும் சிந்திக்க‌ வைக்குது இர்ஷாத்.. ந‌ல்லா இருக்கு..

சேட்டைக்காரன் said...

சிறுகதையும் அதன் சாரத்தைச் சொன்ன சிறுகவிதையும் அழகு!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

கடினம்தான்!
அக்கரைக்கு இக்கரை பச்சை!

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு இர்ஷாத்.

M.A.K said...

//பிரிந்திருந்து பிரியம் காட்ட வேண்டாம் நீ அருகிலிருந்து சண்டை போட்டாலே போதும்\\

இந்த வரிகள் மெய் சிலிர்க்க வைத்தது

கதையும் கவிதையும் ரொம்ப நல்ல இருக்கு, இர்ஷாத்... gr8

LK said...

கதையும் கவிதையும் அழகு

ஹேமா said...

உறவுகளைப் பிரிந்திருப்பதாலோ என்னவோ எனக்கு காசு பணம் வேணாம்.என் மண் ,என் உறவுன்னு ஆதங்கம் இருக்கு.

யதார்த்த சிந்தனை இர்ஷாத்.
நல்லாருக்கு.

மன்னன் மகள் said...

கதையை கொண்டு வந்து கவிதையில் முடிசீங்க பாருங்க அங்க நிக்கிது உங்க திறமை! வாழ்க வளமுடன்.

ஹரீகா said...

கலக்குறீங்க அஹ்மத் இர்ஷாத். ம்..ம்..ம்

ஜெஸீரா said...

கதையின் கருவே கவிதை தானா? சிந்திக்க வைக்கிறது.

Kanchi Suresh said...

பிரிந்து வாழ்பவ்ர்களின் நிலையை காட்டும் கவிதை நல்லா இருக்கு.

soundar said...

நல்ல சிந்தனை நல்ல கவிதை...

Riyas said...

நல்லா இருக்கு இர்சாத் தொடருங்கள்

பருப்பு The Great said...

ஆஹா! கலக்குறீங்களே பாஸ்...


Superb!

கே.ஆர்.பி.செந்தில் said...

நல்லா இருக்குங்க...

ஸாதிகா said...

யதார்த்தம்.கதையோடு கவிதையும் சூப்பர்

Mrs.Menagasathia said...

excellent story!!

இமா said...

ஆழமான கதைக்கரு.

ஜில்தண்ணி said...

நல்ல வட்டார வழக்குதான்
கதையும் கவிதையும் பக்கா பக்கா

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

யதார்த்தம் மிக்க சிறுகதை; அதற்கு இசைந்தார்போல கவிதையும் அழகு.. நல்லாருக்கு இர்ஷாத்.

அன்னு said...

என்னங்ணா சொல்றது? உண்மைதான். வீட்டுக்காரர் ஆசைப்பட்டுட்டா ஆசை இல்லைன்னாலும் இப்படிதானே எங்களை மாதிரி தங்கமணீஸ் எல்லாம் வாழ வேண்டியிருக்கு?

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

அஹமது இர்ஷாத் said...

வாங்க பா ரா சார் உங்கள் கருத்துக்கும் (முதல்) வருகைக்கும் மிக்க நன்றி..

வாங்க ஸ்டீபன் உங்கள் ஆதரவுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி..

வாங்க சேட்டைக்காரன் உங்கள் கருத்துக்கும் (முதல்) வருகைக்கும் மிக்க நன்றிங்க...

அஹமது இர்ஷாத் said...

வாங்க ஷங்கர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க வானம்பாடி அய்யா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க மஜீத் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க எல்.கே உங்கள் கருத்துக்கும் (முதல்) வருகைக்கும் மிக்க நன்றிங்க...

ரொம்ப நன்றி ஹேமா வருகைக்கும் தொடர் ஆதரவுக்கும்..

வாங்க மன்னன் மகள் உங்கள் கருத்துக்கும் (முதல்) வருகைக்கும் மிக்க நன்றிங்க.

அஹமது இர்ஷாத் said...

வாங்க ஹரீகா உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி...

வாங்க ஜெஸீரா உங்கள் கருத்துக்கும் (முதல்) வருகைக்கும் மிக்க நன்றி...

வாங்க சுரேஷ் உங்கள் கருத்துக்கும் (முதல்) வருகைக்கும் மிக்க நன்றி...

அஹமது இர்ஷாத் said...

சவுந்தர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

ரியாஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

பருப்பு நண்பா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

அஹமது இர்ஷாத் said...

வாங்க செந்தில் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...

வாங்க ஸாதிகா அக்கா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வாங்க மேனகா உங்கள் தொடர் ஆதரவும்,வருகைக்கும் ரொம்ப நன்றி...

அஹமது இர்ஷாத் said...

வாங்க இமா ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...

வாங்க ஜில்தண்ணி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வாங்க ஸ்டார்ஜன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க..

அஹமது இர்ஷாத் said...

//அன்னு said...
என்னங்ணா சொல்றது? உண்மைதான். வீட்டுக்காரர் ஆசைப்பட்டுட்டா ஆசை இல்லைன்னாலும் இப்படிதானே எங்களை மாதிரி தங்கமணீஸ் எல்லாம் வாழ வேண்டியிருக்கு?///

கண்டிப்பாங்க அன்னு உங்கள் (முதல்) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

//நேசமித்ரன் said...
நல்லா இருக்குங்க///

வாங்க நேசமித்ரன் சார் உங்களின் (முதல்) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...

RAJ said...

அருமையான கதைங்க... சொன்ன விதம் சூப்பர்.. அதற்கேற்ப கவிதை வாவ்....

ஆமா இது எந்த ஊரு வட்டார மொழிங்க?

அக்பர் said...

செவிட்டில் அறைந்த கதை. வாழ்நாளில் மறக்க முடியாது இர்ஷாத்.

வானவில் said...

கதைக்கு ஏற்ப கவிதையும் அருமைங்க..ரொம்ப நல்லாயிருக்கு.. அசத்துறீங்க வாழ்த்துக்கள்...

ஷாகுல் said...

கதை அருமை அதைவிட கவிதை அழகு!

க.பாலாசி said...

நல்லா எழுதியிருக்கீங்க இர்ஷாத்... தொடருங்கள்...

அஹமது இர்ஷாத் said...

//RAJ said...
அருமையான கதைங்க... சொன்ன விதம் சூப்பர்.. அதற்கேற்ப கவிதை வாவ்....
ஆமா இது எந்த ஊரு வட்டார மொழிங்க?///

ரொம்ப நன்றிங்க ராஜ் வருகைக்கும்,கருத்துக்கும்...

இது தஞ்சாவூர் வட்டார மொழிங்க..


// அக்பர் said...
செவிட்டில் அறைந்த கதை. வாழ்நாளில் மறக்க முடியாது இர்ஷாத்///

வாங்க நண்பா அக்பர் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

அஹமது இர்ஷாத் said...

வாங்க வானவில் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஷாகுல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

அஹமது இர்ஷாத் said...

// க.பாலாசி said...
நல்லா எழுதியிருக்கீங்க இர்ஷாத்... தொடருங்கள்...///

வாங்க பாலாசி.. தொடர்ந்து எழுத சொல்லியிருக்கீங்க முயற்சிக்கிறேன்.. உங்களின் ஊக்கத்திற்கும் வருகைக்கும் மிக்க நன்றி...

ஹுஸைனம்மா said...

கதையும், கவிதையும் நல்லாருக்கு.

வழக்கமாக வெளிநாடு எனும் மாயவலையில் வீழும் அடித்தட்டு மக்களும் இப்போது யதார்த்ததைப் புரிந்து, கிடைப்பதைக் கொண்டு வாழப் பழகிக் கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியே!!

ஜெயந்தி said...

எழுத்து நல்லாயிருக்கு.

Madumitha said...

நல்லா இருக்கு இர்ஷாத்.

padma said...

இர்ஷாத் ரொம்ப நல்லா இருக்கு .இக்கரைக்கு அக்கரை பச்சை தான் .இது இருந்தால் அது வேண்டும் ..அது இருந்தால் இது வேண்டும் ...எதாவது தேடலோடு இருக்கும் வரைதான் உயிர்ப்போடு இருக்கும் வாழ்க்கை.நல்லா இருக்கு கதை வாழ்த்துக்கள்

விஜய் said...

அட்டகாசம் கவிதை

வாழ்த்துக்கள்

விஜய்

அஹமது இர்ஷாத் said...

வாங்க ஹீசைனம்மா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

ரொம்ப நன்றி ஜெயந்தி (முதல்) வருகைக்கும் கருத்துக்கும்

வாங்க மதுமிதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அஹமது இர்ஷாத் said...

மிக்க நன்றி பத்மா தொடர் ஆதரவுக்கும்,ஊக்கத்திற்கும்...

வாங்க விஜய் (முதல்) வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

r.v.saravanan said...

நல்லா இருக்கு அகமது இர்ஷாத் சிறு கதையும் அதனுடன் நீங்கள் கொடுத்திருக்கும்
சிறு கவிதையும் வாழ்த்துக்கள்

r.v.saravanan
kudanthaiyur.blogspot.com

அப்பாவி தங்கமணி said...

சூப்பர்... வேற வார்த்தைகள் வர்ல... அற்புதமான மெசேஜ்

Jaleela said...

present

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates