ஆருடம் சொன்னவனை நம்பி
மனைவியின் நகைகள் அனைத்தையும்
அடகு வைத்துவிட்டு இங்கு வந்து
சேர்ந்தவனுக்கு ரோட்டில் தார்
போடும் வேலை....
கயிற்றில் நடப்பவன்
கவனம் முழுவதும்
காலி டப்பாவில்.
தோளில் செங்கல்லை சுமந்தபடி
சாலையை கடந்த சிறுவன்
சுவற்றில் எழுதியதை படித்தான்
"இளமையில் கல்"
டிஸ்கி :இந்த கவிதைகள் எங்கங்கோ படித்தவை....
இதை சொன்னது யாரு?
தோற்றத்தில் பயல், இசையில் புயல்...
ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி இப்படி சொன்னவர் யாரு?
தெரிஞ்சவங்க சொல்லலாம்......
என் சித்தப்பா பையனுக்கு காய்ச்சல்,அவனுக்கு மாத்திரை என்றாலே பிடிக்காது(யாருக்குத்தான் பிடிக்கும்) என்னடா பன்றதுன்னு ஒரு ஐடியா பன்னி, வாழைப்பழத்துல மாத்திரையை உள்ளே வெச்சு கொடுக்கலாம்னு வாழைப்பழத்தை அவனுக்கு கொடுத்தோம். அவனும் சாப்பிட்டான். எப்படிடா இருந்துச்சுன்னு கேட்டதுக்கு வாழைப்பழமெல்லாம் நல்லா இனிப்பாத்தான் இருந்துச்சு, ஆனா பழத்துல இருந்த "விதை"தான் ரொம்ப கசப்பா இருந்துச்சி அதான் துப்பிட்டேன்னான்......
(ரொம்ப உஷாராயிருக்கிறாய்ங்க.... இந்த ஜோக் வழக்கம்போல மதுரை முத்து சொன்னது..)
30 வம்புகள்:
ஜோக் நல்ல இருக்கு..... கவிதைகளின் தொகுப்பும் நல்லா இருக்கு..
கவிதைகள் மிக அருமை.
ஜோக் பழசானாலும் பழத்தை போல சுவையா இருக்கு.
அசத்தப்போவது யாரு தீவிர ரசிகரா?
கவிதைகள் சுவை...... அதை விட சுவை நகைச்சுவை....
ஜோக் ரொம்ப நல்லாருக்கு, பதிவுகளும்தான்...வாழ்த்துக்கள்
கலக்குறீங்க தம்பி, அசத்த போவது யாரு, அசத்துறது எல்லாம் நீங்கள தான். :):):) வாழ்த்துக்கள்.
//"ஒரு ஐடியா பன்னி"//
என்னங்க...நல்ல ஐடியா தானே கொடுத்துருக்காங்க...அவங்களைப் போய் இப்படி திட்டறீங்க...!!
கவிதைகள் யதார்த்தம்.சிரிக்க வச்சீங்க இர்ஷாத்.சந்தோஷம்.
கவிதையும் ஜோக்ஸ் அருமை
நல்லா சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குது உங்க இடுகை... :)
வாழைபழ ஜோக் சூப்பர்... கரகாட்டகாரன் ஜோக்க்கு அப்புறம் இது இனி ஞாபகம் வரும் எப்போதும் (வெவரமாத்தான் இருக்காயங்க)
நாடோடி,
அக்பர் ,
அபுஅஃப்ஸர்,
தமிழரசி,
M.A.K,
தாஜூதீன்,
ஸ்ரீராம்,
Chitra,
ஹேமா,
Starjan(ஸ்டார்ஜன்),
Udukkai,
அப்பாவி தங்கமணி,
வந்து வாசித்து,வாழ்த்திய,அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..
ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை ஏன்?
//கயிற்றில் நடப்பவன்
கவனம் முழுவதும்
காலி டப்பாவில்.//
அழகான வரிகள். எனக்கு பிடிச்சிருந்தது..
வாழைப்பழ காமெடியும் டாப்பு..
//தெரிஞ்சவங்க சொல்லலாம்...... //
யாரைத்தெரிஞ்சவங்க ?
ஒண்ணு கலைஞரா இருக்கும் இல்லன்னா நீங்களாயிருக்கும் சரியா ?
இப்படிச் சொன்னா நல்லாயிருக்கா
"தோற்றத்தில் முயல் ; இசையில் புயல் ; மொத்தத்தில் நம்ம பயல் " :)
கலைஞரும் கிடையாது... சரியான பதிலுக்காக வெயிட்டிங்
Monks உங்கள் முதல் வருகைக்கு நன்றி.. இன்னும் ரெண்டு சான்ஸ் உண்டு உங்களுக்கு....!
கண்ணா.. முதல் வருகைக்கு நன்றி.
கவிதை ரொம்ப நல்லாருக்கு; ஜோக்ஸ் அருமை
கவிதைகள் நல்லா இருந்தது.
ரஹ்மானை பத்தி சொன்னது - வேற யாரா இருக்கும்? வாலியா இருக்கும். கரெக்டா?
ரொம்ப நன்றி சரவணகுமரன் முதல் வருகைக்கு,
வாலியும் இல்லை....
நெக்ஸ்ட், நெக்ஸ்ட்.......
//**(((ஏ.ஆர்.ரஹ்மான் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை ஏன்?))//**
ஹி .. ஹி.. அது நாந்தாங்க. ஹூம் சொன்னா நம்பவா போறீங்க. விடுங்க. கடைசிவரை தெரியாமலா போபோவுது. இப்ப நானும் உங்க வீட்டுக்கு வந்துட்டேன். சரியா)))) சலாம் நண்பரே !!!
வாங்க ஹரீகா உங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி..
சொன்னது நீங்கதான்னு நினைச்சா எனக்கு ரொம்பவே.....
நெக்ஸ்ட், நெக்ஸ்ட்.....
அழகான கவிதைகள்!
வாழைப்பழ காமெடி, குட் ஜோக்!
ரொம்ப நன்றி ப்ரியா வருகைக்கு..
கேள்விக்கு பதில் என்ன? யாருக்கும் தெரியலையா? ஒரு க்ளு அவர் ஒரு எழுத்தாளர்...
அருமையான கவிதை இர்ஷாத்.... சூப்பர்..
எழுத்தாளர் பாலகுமாரன் ஐம் கரெக்ட்.....!
முதல் வருகைக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி ராஜ்...
பாலகுமாரனும் இல்லை.....
கவிதையும் ஜோக்கும் அருமை!!
பகிர்வு நன்று.
வாழைப்பழ ஜோக்:))!
மிஸஸ்.மேனகாசாதியா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ராமலஷ்மி உங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி...
@மின்மினி ரொம்ப நன்றி மின்மினி வருகைக்கு.
Post a Comment