குபூஸ்
வெயில்
ஷீ
சாக்ஸ்(ஹூஹீம்)
குய்யா
பென்சில்
பேனா
வெள்ளிக்கிழமை எதிர்ப்பார்ப்பு
இன்பாக்ஸ்
ஃபைல்
அரபி
இன்வாய்ஸ்
எக்ஸெல்
6 மணி அலாரம்
சூ அப்பா இதையெல்லாம் விட்டு நிம்மதி(பெரிய நிம்மதியெல்லாம் இல்லை ஜஸ்ட் 1 மாசம்தான்) ஊருக்குப் போறோம்'ல. இதனால் யாருக்கும் பின்னூட்டம் போட முடியாது,ஓட்டுப் போடவும் முடியாது. இடையில் சில நேரங்களில் பதிவுகளை எட்டிப் பார்க்கும் விபரீதம் இருப்பதால் நல்ல பதிவுகளை இடவும். கணினியில் ரைட் க்ளிக் பண்ணா REFRESH வருகிறமாதிரி நான் ஊருக்கு போய் என்னை REFRESH பண்ணிக்கிறேன்.
இதெல்லாம் எங்கள் ஊரின் அழகை பறைசாற்றும் புகைப்படங்கள்..அட அட என்னே ஒரு ரம்மியமான காட்சி.மனதைக் கொள்ளை கொள்ளும் இப் படங்களை எடுத்தவர் ஜாஹிர் அவருக்கு நன்றி..
ஒன்லி மொக்கை பதில் அவசியம்..
1. யாரோ ஒருவர் உலக ஆசைகளை துறந்தார்ன்னு படிச்சிருக்கேன்..அப்படி ஆசைகளை துறக்கறதும் ஒரு வகை ஆசைதானே. இதை தெரிந்துக் கொள்ளத்தான் எனக்கு ரொம்ப ஆசை.யாருக்காவது பதில் சொல்ல ஆசையிருந்தால் சொல்லவும்..(என்ன ஓவர் மொக்கையா இருக்கா, மொக்கையா இருந்தாலும் நியாயமான கேள்விதானே)
2. பல பேர் பேசும் போது "காசா பணமா" என்கிறார்கள்.. ரெண்டும் ஓன்றுதானே பிறகு ஏன் இப்படி?. ஒன்ன தமிழ்லேயும் இன்னொன்ன இங்கிலீஷ்'லயேயும் சொன்னாக்கூட ஏத்துக்கலாம்.. ஏன் இப்படி சொல்லவேண்டும்?
சலூன் கடை பெஞ்சு
3. நம் இந்தியாவின் பணத்திற்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள் சந்தோஷம் அந்த வடிவமுள்ள பணம் ஏழைகளுக்கு போய் சேர்ந்தால் இன்னும் சந்தோஷப்படலாம்.அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் பிடிக்குமோ...
4. பன்ருட்டியில் 2 வயது சிறுவனை தழும்பு வர்ற அளவுக்கு அடிச்ச ஆசிரியர் அவன் எல்லாம் மனுஷனா.'பாலபத்திர ஓணாண்டிய தலைகீழா தொங்கவிட்ட மாதிரி இவன தொங்கவிட்டு மிளகா பொடிய கண்ணுல கொட்டனும்.
5. சூப்பர் சிங்கர் 3 விஜய் டிவியில் ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை பேர்
அழப்போறாங்களோ..
அடிக்கடி கடி கடி(படித்தது)
'ஏங்க யாரோ சமையலறையில நிக்கிறமாதிரி சத்தம் கேட்குதுங்க'
'பேசாம படு காலையில சுருண்டு விழுந்து கிடப்பான் தூக்கிப் போட்ருவோம் '
'என்னப்பா இது உடம்புல காயம்'
''லைசன்ஸ் எடுக்க எட்டு போட்டுப் பார்த்தேன் அதான் காயமாயிடுச்சு'
''போய் உடம்புக்கு 'பத்து' போடுங்க'
பெண்ணென்றால் பேயும் இறங்கும் - பழமொழி
எதிலிருந்து இறங்கும், கடைசி வரை சொல்லவே இல்ல...
தொழில்நுட்பம்
YOUTUBE வீடியோக்களை உங்களுக்கு தேவைப்பட்ட ஃபார்மேட்டில்(MP4,FLV,3GP,AVI) தரவிறக்க இந்த இரண்டு தளங்கள் ரொம்ப உபயோகமானவை.துல்லியமாக உயர்தரத்தில் அதாவது FULL HD முறையிலும் தரவிறக்கலாம். தேவைப்பட்ட வீடியோவின் உரலை(URL)கட் செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதும்.
http://keepvid.com
http://catchvideo.net
கடைசியாக இது ரொம்ப முக்கியமானது
என்னை யாரும் தொ.பதிவுக்கு அழைக்கவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.அதற்கு எனக்கு நேரமில்லை..ஏதோ இருக்கிற/கிடைக்கிற நேரத்தைக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்.இந்த பதிவுக்கூட கடந்த ஒரு வாரத்தில் கிடைத்த நேரத்தில் பிட்டு பிட்டாக(ம.பிட்டல்ல) எழுதியது என்பதை இங்கே கூறிக் கொள்கிறேன். தவறாக எண்ணமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
வர்ட்டா...
Post Comment