Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

நாண‌மும் வாஷிங்மெஷினும்...

 Photo License :hariryariffinismail
..

ஒரே தொட்டியிலிருந்து
தண்ணீர் பெறும்
எல்லா வீட்டுக்காரர்களும்
பிடித்து வைத்துக்கொள்கிறார்கள்
அடுத்தவர்களுக்கான
நீரை
.............

ஒன்றை ஒன்று மறைப்பது
கிரஹனம் என்றால்
கூந்தல் கொண்டு
முகம் மறைக்கும் உன்
குறும்பு செயலை
எந்த கிரஹனம்
என்பது
.............

வீட்டுக்காரம்மா புதிதாக
வாங்கிய வாஷிங் மெஷினை
ஆசை ஆசையாய்
தொட்டுப்பார்க்கிறது
துணி துவைக்கும்
ஆயாவின் குழந்தை
.............

க‌விதை ஆக்கம்: அதிரை ஷ‌ஃபாத் அஹ‌ம‌து
 ............. 

வெளிநாட்டு வாழ்க்கையில் ப‌ர்ஸ் நெற‌ஞ்சாலும் ம‌ன‌சு அவ்வ‌ள‌வாக‌ சொல்லிக்கொள்ளும்ப‌டி இருந்த‌தில்லை என்ப‌த‌ற்க்கு என‌க்கு வ‌ந்த‌ இந்த‌ ரெண்டு சாட்டைய‌டிக‌ளை நீங்க‌ளும் ப‌டித்து வாங்கிக்கொள்ள‌வும்.. 


 


Post Comment

ர‌ஃப் நோட்டும் செல்போனும்..


Photo License Girard
..

அழுத்தி எழுத‌ப்ப‌ட்ட‌
ர‌ஃப் நோட்டின்
தாளின் பின்புற‌த்தில்
எழுத்தின் அச்சியை
த‌ட‌விப் பார்க்கிறேன்
மூச்சு வாங்குகிற‌து..
............................................
 ரெயில் வ‌ருவ‌தாக‌
கூகூ வென‌
ஓடும் சிறுவ‌னின்
ம‌கிழ்ச்சிக்குள்
யாரோ ஒருவ‌ரின்
க‌ண்டிப்பால் த‌ட‌ம்புர‌ள்கிற‌து
அவ‌னும் அவ‌னுடைய‌
ரெயிலும்..
............................................
குள‌த்தின் மீது
த‌ட்டையாக‌ வீச‌ப்ப‌ட்ட‌
க‌ல் நாலு கால்
பாய்ச்ச‌லில்
த‌வ்வி சென்ற‌து..
...........................................
ந‌ண்ப‌னுக்கு க‌ல்யாண‌ம்
இன்விடேஷ‌னோடு ர‌த்தாகி
விடுகிற‌து ந‌ட்பு..
...........................................
சிரிப்பும் கேலியுமாக‌
ந‌க‌ர்கிற‌து முதிர்க‌ன்னியின்
பெருமூச்சுக‌ள்..
...........................................
செல்போனில் நுக‌ர்கிறேன்
மீன்குழ‌ம்பு வாச‌த்தை
...........................................

Post Comment

ஏசியும் குழாயும்..

---

ஏசியிலிருந்து சொட்டும்
நீரிலமைந்த‌ இட‌த்தில்
த‌ன் வெப்ப‌த்தை
த‌ணித்த‌ப்ப‌டி
ப‌டுத்திருக்கிற‌து
பூனை..'
...............................................................................

பைப் குழாயை
திருகிய‌தும் த‌ண்ணீரின்
முத‌ல் சொட்டு
பாத்திர‌த்தின் அடிப்ப‌குதியின்
மைய‌ப்ப‌குதியை முத்த‌மிட்ட‌து
போக‌ போக‌ த‌ண்ணீர்
ரொம்பி பைப் குழாயின்
முனையை திருப்பி
முத்த‌மிட்ட‌து த‌ண்ணீர்..
...............................................................................

ப‌ழுதாகி நின்ற‌
பேருந்தில் இருந்து
இற‌ங்கிய‌ அவ‌ளை
க‌ண்ட‌தும் நான்
ப‌ழுதாகி ம‌ன‌ம்
அவ‌ள்தாகிவிட்ட‌து..
...............................................................................

Post Comment

மாங்காயும் ம‌ழையும்...

Thanks For Photo : Ravages

அடுத்த‌ நாள் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு ம‌ட்ட‌ம் போட‌னும் அப்போ பாட்டி வீட்டிலிருந்தேன். காலையில் ப‌டுக்கையை விட்டு எழாம‌ல் அப்ப‌டியே வ‌யித்து வ‌லிபோல் ப‌ண்ண‌ ஆக்டிங் தோல்வியில் முடிய‌, ம் தோல்வியே வெற்றியின் முத‌ல்ப‌டி'ன்னு நினைத்துக்கொண்டிருந்த தீவிர‌ சிந்திப்பில் லீவுக்கு ஹெட்மாஸ்ட‌ரின் கையை ஒடிக்க‌வேண்டியிருந்த‌து 'ஆமாம்மா நான் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு போயிக்கிட்டு இருந்தேனா அப்ப‌ போற‌ வ‌ழியில் ஹெட்மாஸ்ட‌ர் மேல‌ லாரி?? உர‌சிருச்சு அத‌னால‌ அவ‌ரு கையில் அடிம்மா என்று அடிச்ச‌ உட்டால‌க்க‌டியில் பாட்டி ந‌ம்பிவிட்டாள் 'அந்த‌ லாரி திரும்பி அதே வ‌ழியில்தாம்மா வ‌ரும் நான் போட்டா' என்ற அடுத்த‌ சென்டிமென்ட் ரீவிட்டில் ம‌ன‌மிற‌ங்கி நாளைக்கு போய்க்கோ என்று சொன்ன‌துதான் தாம‌த‌ம் வெளியே கிள‌ம்பியாச்சு..அப்போ ப‌லிங்கி(கோலி) வெளையாட்டு கிரிக்கெட் அள‌விற்க்கு பிர‌ப‌ல‌ம், ஜ‌ன்ன‌ல் க‌ம்பிபோல் த‌ரையில் கோடுபோட்டு பேந்தா' என்னும் அதிஅற்புத‌மான‌ விளையாட்டு எங்க‌ ஏரியாவில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு எல்லோராலும் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ பேச‌ப்ப‌ட்ட‌து. என் தோஸ்துக‌ள் ரெண்டு பேர் மட்டும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த‌ன‌ர் ம‌த்த‌ ப‌ச‌ங்க‌ளெல்லாம் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு போயிருந்தார்க‌ள் பாவ‌ம் அவ‌ங்க‌ வீட்டில் ஏமாளிக‌ள் இல்லை போலும்.அப்ப‌வே மாட்ச் ஃபிக்ஸிங் எல்லாம் தேன்மிட்டாய்,எல‌ந்த‌ வ‌டையோடு அமோக‌மாக‌ இருந்த‌து. ஒரு க‌ட்ட‌த்தில் ப‌லிங்கி(அ)கோலி விளையாட்டு போர‌டிக்க‌, உச்சிவெயில் ம‌ண்டை'ய‌ பிள‌க்கும் ச‌ம‌ய‌த்திலும் எங்க‌ மூவ‌ர‌ணி மாங்காய் அடிக்க‌ கிள‌ம்பிய‌து..எங்க‌ வீட்டுக்கு நான்கைந்து வீடு த‌ள்ளி ஒரு வீட்டில் ச‌ப்போட்டா ம‌ர‌ம் வ‌ள‌ர்த்துவ‌ந்தார்க‌ள் அதில் வள‌ரும் ச‌ப்போட்டாக்க‌ள் எங்க‌ளுக்கு ரொம்ப‌ ச‌ப்போர்ட்டாக‌ இருக்க‌ நாளடைவில் அந்த‌ ம‌ர‌த்தையே பிடுங்கிவிட்டார்க‌ள் அவ‌ங்க‌ வீட்டுக்கு பின்னாடி வைத்திருப்ப‌தாக‌ எங்க‌ள் குழுவின் ஒற்ற‌ன் த‌க‌வ‌ல் அளித்தான்.ச‌ரி இப்போ டார்கெட் மாங்காய்,அதுக்கு ந‌டைப்ப‌ய‌ண‌ம் கொஞ்ச‌ தூர‌ம் போக‌வேண்டியிருந்த‌து..மாங்காய் அடிக்கும் வ‌ர‌லாற்றில் எங்க‌ள் குழு வ‌கை தொகையாய் மாங்காய் ம‌ர‌ ஓனரிட‌ம் மாட்ட‌ 'ம‌றுப‌டி இங்க‌ வ‌ந்தீங்க‌ன்னா முட்டியை பேத்துருவேன்'னு சொல்லி முதுகில் அடித்த‌ அச்சு ஞாப‌க‌ம் இருந்தாலும் அடிச்ச‌ மாங்காயின் ருசி எல்லாத்தையும் ம‌ற‌க்க‌டித்து அந்த‌ ம‌ர‌ ஓன‌ரையே 'அபால‌ஜி' ப‌ண்ண‌ சொன்ன‌து. நெருங்கிட்டோம் அப்போதெல்லாம் க‌ல்லைக் கொண்டுதான் எறிவோம் க‌வ‌ட்டை(அட்டைபில்)வாங்கும் அள‌வுக்கு எங்க‌ள் ஃபைனான்ஸிய‌ல் ரிப்போர்ட் அவ்வ‌ள‌வு சிற‌ப்பா இல்லை, ஆத‌லாம் கையே துணை க‌ல்லே வ‌ழி என்ற‌ அடிப்ப‌டையில் குறிவைத்து அடித்த‌தில் வெற்றி கிட்டி மாங்காய் கிடைத்து வெற்றிக‌ர‌மாக‌ வீட்டுக்கு திரும்புகையில் ம‌ர‌த்தின் ஓன‌ர் வ‌ர‌வில்லை ஆனால் அவ‌ரின் ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ர் கையே த‌டுப்பாக‌ கொண்டு எங்க‌ளை நிறுத்தி 'எத்த‌னை மாங்காடா அடிச்சீங்க‌ ' என்றார். எங்க‌ள‌து ப‌திலை எதிர்பாராம‌ல் 'ரெண்டு மாங்காய‌ கொடுத்திட்டால் நீங்க‌ள் ஓடிற‌லாம்'.. இருந்த‌தே மூணுதான்.எதிர்த்து ச‌ண்டை போடுற‌ அள‌வுக்கு அவ‌ர் ச‌ரிச‌ம‌மில்லை நாங்க‌ ஸ்கூல் ப‌ச‌ங்க‌ அவ‌ர் ரெண்டு பேரை பெத்து ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டுருந்தார்.. ரெண்டு மாங்காயை கொடுத்துவிட்டு ப‌ரிதாப‌மான‌ முறையில் ஒரு மாங்காயை ஆளுக்கு கொஞ்ச‌ம் என்ற‌ ஒப்ப‌ந்த‌ப்ப‌டி சாப்பிட்டு கொண்டோம் இந்த‌முறை மாங்காய் க‌ச‌ந்து எங்க‌ளின் முக‌ங்க‌ள் அஷ்ட‌கோண‌லில் போய் ஒருத்த‌ருக்கு ஒருத்த‌ரின் க‌ண்க‌ள் க‌ண்ண‌டித்துக் கொண்ட‌ன‌.
************************
சோக‌ த‌ருண‌த்தில் உதிர்த்த‌து..

ஊதிவிட்ட‌
சிக‌ரெட்
புகையின்
வ‌ட்ட‌த்திற்குள்
தெரியுது
வாழ்க்கை..
************************
எங்க‌ள் ஊரின் ம‌ழைச்ச‌ம‌ய‌த்தில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள்..

Thanks For Photo : Musthafa

Post Comment

Instant Coffee..!

கண்க‌ளில்
பேசிய‌வ‌ர்க‌ளின்
வாழ்க்கையில்
ப‌ற்றிக்கொண்டு
எரிந்த‌து
காத‌ல் திரி,
ரொம்ப‌வும்
வேக‌மாய்
பூசினார்க‌ள்
பெற்றோர்
முக‌த்தில் க‌ரி..

********************************
ங்கொய்ய‌ல‌ ல‌வ்வு ப‌ன்னுவிங்க‌..,,,,,போடாங்க‌ :-)))



Post Comment

ப‌சியும் போஸ்ட‌ரும்..

ந‌ண்ப‌ன் ஒருவ‌ன்
அவ‌ன‌து ந‌ண்ப‌னின்
கோக‌க் க‌தையை
சொல்ல‌ஆற்றாமையில்
நான் உச் கொட்டினேன்
பூனை வ‌ந்து எட்டிப்
பார்க்கிற‌து ம‌னித‌னின்
சோக‌த்தை வெளிப்ப‌டுத்தும்
மொழி பூனைக்கு ப‌சியை
தூண்டும் அழைப்பாகிவிடுகிற‌து.
____________________
சொன்ன‌தை திரும்ப‌
திரும்ப‌ சொல்லும்
கூண்டுக்கிளி த‌ன்
சுத‌ந்திர‌த்தை ப‌ற்றி
சொல்லாம‌லேயே
இருந்துவிடுகிற‌து.
___________________
இட‌து கையில்
கொடுப்ப‌து
வ‌ல‌துகைக்கு
தெரிய‌கூடாதாம்
போஸ்ட்ரில் தெரிந்த‌ன‌
ரெண்டு கைக‌ளும்.
____________________
துன்ப‌ம் வ‌ரும்
வேளையில்
சிரிக்க‌னுமாம்
சிரிக்கின்ற‌
நேர‌த்திலேயே
துன்ப‌மும்
வ‌ந்துவிடுவ‌தால்
அதுமுடியாத‌
ஒன்றாகிவிடுகிற‌து.
____________________
image Feature : Flickr

Post Comment

பூனை தின்ற‌ ம‌ழை..


பேத‌ம்

ஒருவேளை
பருக்கைக்கு
இருகையேந்தும்
ஏழ்மையை
பார்த்துக்கொண்டே
தானிருக்கிற‌து
இய‌ற்கை..
_______________
உயிரி

ப‌சியில் அங்குமிங்கும்
அல்லாடிய‌ நிலையில்
பெய்த‌ ம‌ழையில்
சேர்ந்த‌ த‌ண்ணிரை
தின்ற‌து பூனை.

**தின்ற‌ = குடித்த‌
________________
அலைக‌ழிப்பு

க‌ருப்புக்கோட்டை
மாட்டிக்கொண்டு
வாதாடுப‌வ‌ர்க‌ளுக்கு
பெரும்பாலும்
தெரிவ‌தில்லை
ஏழ்மையின்
வ‌றுமைகோட்டை..
_______________
சாத‌ல்

அன்று காத‌லில் தோற்று
ம‌ன‌தை வைத்தோம்
பூட்டி
இன்று வானில்
சிற‌க‌டித்து நில‌வுக்கே
போட்டி.
_______________
P.G

தேவையான‌வ‌ற்றை
வாங்க‌
தேவையில்லாத‌தை
தாங்க‌ வேண்டியிருக்கிற‌து.
________________
காம‌ம்

நான் அலை
நீ கரை உன்னை
அடிக்க‌டி தொட்டு
கொண்டிருப்பேன்
என்றேன் சில‌
நேர‌ங்க‌ளில் சுனாமியாய்
மாறிவிடுகிறாய் என்றாள்
உண்மைதான்.
_________________
ஆண்

அவ‌ளின் ஒரு
க‌ண் சிமிட்ட‌லில்
ஆயிர‌ம்முறை
துடித்த‌து ம‌ன‌சு.
________________

Post Comment

பால்கார‌னும் செரிமான‌மும்..

வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ளாக‌
இருந்தாலும்
த‌பால்கார‌ன்
பால்கார‌ன்
என்றே அழைக்கின்ற‌ன‌
குழ‌ந்தைக‌ள்..
பேருந்தில்
இட‌ம்பிடிக்க‌
ஓடினோம்
எங்களையும்
முந்திய‌து
நிழ‌ல்.
சாப்பிட்டுவிட்டு
வ‌ருகையில்
கையேந்திய‌
பிச்சைக்காரியை
பார்த்த‌போது
சாப்பிட்ட‌து
செரிக்க‌வில்லை..


Post Comment

துரோகம்...




தோளில் சுமந்து
விரல் பிடித்து
நடக்க கற்று
கொடுத்தேன் அன்று
யாரோ ஒருவனுடன்
அதே விரலைப் பிடித்து
ஓடி விட்டாள் இன்று.




புடவை கேட்டாள்
கிடைத்தது..
நகை கேட்டாள்
கிடைத்தது...
செல்போன் கேட்டாள்
கிடைத்தது
இவையனைத்திலும் அவள்
கேட்காமல் கிடைத்த ஒன்று
 சந்தேகம்....



"டைமிங் காமெடி"

உனக்கு காய்ச்சலா உடனே டாக்டர்ட்ட போ,அவருக்கு பணம் கொடு அவர் பிழைக்கட்டும்,அவர் எழுதி தந்த மருந்து சீட்டை கொடுத்து மருந்து கடையில மருந்து வாங்கு,மருந்து கடைக்காரருக்கு பணம் கொடு,பாவம் அவர் பிழைக்கட்டும்.ஆனா அவர் கொடுத்த மருந்தை மட்டும் நீ சாப்பிடாதே நீ பிழைக்கமாட்டே...


{இந்த ஜோக் மதுரை முத்து சொன்னது}

Post Comment

வாழ்க்கை





மிஷினில் ரொட்டி வருவதும்
இன்டர்நெட்டில் காய்கறி வாங்குவதும்
ஐபோனில் முகம் பார்த்து பேசுவதும்
வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதும்
இவற்றை பார்க்கையில்
மனிதம் போய் அதிலுள்ள
"மனி" மட்டுமே முக்கியமாகிப் போன
இயந்திர உலகில்
கொசுவர்த்தி சுருளைப் போல்
சுருங்கி விட்டது வாழ்க்கை...

Post Comment

நான் சொல்ல வந்தவை.....




புத்தகங்கள் படித்து
நான் கற்றதை
என் மகன் என் மூலம்
கற்று பெற்றான் கோப்பையை
பள்ளியில்.


ஆடம்பர உடை களைந்து
அழுக்கான ஆடையை
அணிந்தான் துணை நடிகன்.



அதீத ஆசையில் இனிப்பை
வாயில் வைத்து
சுவைக்கும் போது
சொல்லி வைத்தார்போல்
மறந்துவிடுகிறது சர்க்கரை வியாதி.



எதை சொல்லக்கூடாதென்று நான்
நினைப்பது தங்கு தடையின்றி சொல்ல
வேண்டிய இடத்திற்கு சென்று விடுகிறது
இதை சொல்லனும் என்று நினைப்பதை
எவ்வளவோ முயற்சி செய்தும்
சொல்ல முடியவில்லை.



Post Comment

ஹைக்கூ










படிப்பு வரவில்லையென்று
சேர்ந்தான் சினிமாவில் 
ஆசிரியர் வேடத்தை
கொடுத்தார் இயக்குனர்.

Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates