போர்டிங் பாஸ்...

  குபூஸ்
வெயில்
ஷீ
சாக்ஸ்(ஹூஹீம்)
குய்யா
பென்சில்
பேனா
வெள்ளிக்கிழமை எதிர்ப்பார்ப்பு
இன்பாக்ஸ்
ஃபைல்
அரபி
இன்வாய்ஸ்
எக்ஸெல்
6 மணி அலாரம்

சூ அப்பா இதையெல்லாம் விட்டு நிம்மதி(பெரிய நிம்மதியெல்லாம் இல்லை ஜஸ்ட் 1 மாசம்தான்) ஊருக்குப் போறோம்'ல. இதனால் யாருக்கும் பின்னூட்டம் போட முடியாது,ஓட்டுப் போடவும் முடியாது. இடையில் சில நேரங்களில் பதிவுகளை எட்டிப் பார்க்கும் விபரீதம் இருப்பதால் நல்ல பதிவுகளை இடவும். கணினியில் ரைட் க்ளிக் பண்ணா REFRESH வருகிறமாதிரி நான் ஊருக்கு போய் என்னை REFRESH பண்ணிக்கிறேன்.

                              

இதெல்லாம் எங்கள் ஊரின் அழகை பறைசாற்றும் புகைப்படங்கள்..அட அட என்னே ஒரு ரம்மியமான காட்சி.மனதைக் கொள்ளை கொள்ளும் இப் படங்களை எடுத்தவர் ஜாஹிர் அவருக்கு நன்றி..


ஒன்லி மொக்கை பதில் அவசியம்..

1. யாரோ ஒருவர் உலக ஆசைகளை துறந்தார்ன்னு படிச்சிருக்கேன்..அப்படி ஆசைகளை துறக்கறதும் ஒரு வகை ஆசைதானே. இதை தெரிந்துக் கொள்ளத்தான் எனக்கு ரொம்ப ஆசை.யாருக்காவது பதில் சொல்ல ஆசையிருந்தால் சொல்லவும்..(என்ன ஓவர் மொக்கையா இருக்கா, மொக்கையா இருந்தாலும் நியாயமான கேள்விதானே)

2. பல பேர் பேசும் போது "காசா பணமா" என்கிறார்கள்.. ரெண்டும் ஓன்றுதானே பிறகு ஏன் இப்படி?. ஒன்ன தமிழ்லேயும் இன்னொன்ன இங்கிலீஷ்'லயேயும் சொன்னாக்கூட ஏத்துக்கலாம்.. ஏன் இப்படி சொல்லவேண்டும்? 

சலூன் கடை பெஞ்சு

3நம் இந்தியாவின் பணத்திற்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள் சந்தோஷம் அந்த வடிவமுள்ள பணம் ஏழைகளுக்கு போய் சேர்ந்தால் இன்னும் சந்தோஷப்படலாம்.அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் பிடிக்குமோ...

4. பன்ருட்டியில் 2 வயது சிறுவனை தழும்பு வர்ற அளவுக்கு அடிச்ச ஆசிரியர் அவன் எல்லாம் மனுஷனா.'பாலபத்திர ஓணாண்டிய தலைகீழா தொங்கவிட்ட மாதிரி இவன தொங்கவிட்டு மிளகா பொடிய கண்ணுல கொட்டனும்.


5. சூப்பர் சிங்கர் 3 விஜய் டிவியில் ஆரம்பித்து விட்டார்கள். எத்தனை பேர் அழப்போறாங்களோ..



அடிக்கடி கடி கடி(படித்தது)

'ஏங்க யாரோ சமையலறையில நிக்கிறமாதிரி சத்தம் கேட்குதுங்க'

'பேசாம படு காலையில சுருண்டு விழுந்து கிடப்பான் தூக்கிப் போட்ருவோம் '


'என்னப்பா இது உடம்புல காயம்'

''லைசன்ஸ் எடுக்க எட்டு போட்டுப் பார்த்தேன் அதான் காயமாயிடுச்சு'

''போய் உடம்புக்கு 'பத்து' போடுங்க'

பெண்ணென்றால் பேயும் இறங்கும் - பழமொழி


எதிலிருந்து இறங்கும், கடைசி வரை சொல்லவே இல்ல...


தொழில்நுட்பம்

YOUTUBE  வீடியோக்களை உங்களுக்கு தேவைப்பட்ட ஃபார்மேட்டில்(MP4,FLV,3GP,AVI) தரவிறக்க இந்த இரண்டு தளங்கள் ரொம்ப உபயோகமானவை.துல்லியமாக உயர்தரத்தில் அதாவது FULL HD முறையிலும் தரவிறக்கலாம். தேவைப்பட்ட வீடியோவின் உரலை(URL)கட் செய்து இதில் பேஸ்ட் செய்தால் போதும்.

http://keepvid.com 

http://catchvideo.net

கடைசியாக இது ரொம்ப முக்கியமானது

என்னை யாரும் தொ.பதிவுக்கு அழைக்கவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.அதற்கு எனக்கு நேரமில்லை..ஏதோ இருக்கிற/கிடைக்கிற நேரத்தைக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்.இந்த பதிவுக்கூட கடந்த ஒரு வாரத்தில் கிடைத்த நேரத்தில் பிட்டு பிட்டாக(ம.பிட்டல்ல) எழுதியது என்பதை இங்கே கூறிக் கொள்கிறேன். தவறாக எண்ணமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...


வர்ட்டா...

Post Comment

35 வம்புகள்:

Unknown said...

ஊருக்கு வரும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..

உங்கள் சிந்தனைகளுக்கு மீண்டும் இரவு பதில் தர முயற்சிக்கிறேன்

Chitra said...

Have a great trip!

pinkyrose said...

welcome welcome welcome!
நானும் வர்ர செவ்வாய் உங்க ஊருக்கு வருவேன்னு நெனைக்குறேன் ;)

ஸ்ரீராம். said...

விடுமுறையை இன்பமாகக் கழிக்க வாழ்த்துக்கள்.

பத்மா said...

நல்லபடியா ஊருக்கு போய் சந்தோஷமா இருந்துட்டு வாங்க

Thenammai Lakshmanan said...

happy holidays AHAMED..!!!

hahaha vijay tv singar azukai.. nalla sonningka..unmaithan,,:))

Thenammai Lakshmanan said...

happy holidays AHAMED..!!!

hahaha vijay tv singar azukai.. nalla sonningka..unmaithan,,:))

இமா க்றிஸ் said...

சந்தோஷமாக விடுமுறை கொண்டாடி வர வாழ்த்துக்கள் இர்ஷாத்.

r.v.saravanan said...

விடுமுறையை இன்பமாகக் கழிக்க வாழ்த்துக்கள்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

தம்பி இர்ஷாத், தங்களின் பயணம் சிறப்பானதாக இருக்க வாழ்த்துக்கள்.

நாடோடி said...

வாழ்த்துக்க‌ள் இர்ஷாத்.. ப‌ய‌ண‌ம் இனிமையாக‌ அமைய‌ட்டும்..

Ahamed irshad said...

என்னங்க இது எல்லோரும் வழி அனுப்புறதேயே சொல்றீங்க, கேட்ட கேள்விகளுக்கு பதிலே யாரும் தரலயே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஐயா சாமி ஒரு மாசத்திக்கு சேத்து ஒரு பதிவா...

நீங்க பத்திரமா போயிட்டு வாங்க..
உங்க ப்ளாக்க காக்க தூக்கிட்டு போகாம நான் பாத்துக்கிறேன்..

பயணம் சிறப்பானதாக இருக்க வாழ்த்துக்கள்.

vasu balaji said...

அழகான ஊர். அனுபவிங்க ஆசை தீர:)

1)ஆமாம். ஆனா இந்த ஒரு ஆசைமூலம் மத்த ஆசையைத் துறந்தப்புறம் இந்த ஒரு ஆசையும் தானாப் போயிடும்தானே:)

2.ஹி ஹி. பணம் தாளையும், காசு நாணயத்தையும் குறிப்பதால்.

Yasir said...

அதிராம்பட்டினம் கொசுவிற்க்கு..இரத்தம் தேவப்படுதாம்...சீக்கிரம் போங்க ஊருக்கு...JUST KIDDING....வாழ்துக்கள்...சகோதரா.....HAVE NICE AND PEACEFUL VACATION

ஜில்தண்ணி said...

சந்தோசமா ஊருக்கு போயிட்டு வாங்க
அதுக்குள்ள கேள்விக்கு பதில் தேடுறோம் :)

Priya said...

Nice trip & Happy holidays!!!

'பரிவை' சே.குமார் said...

happy journey... enjoy...

என்னா வெயில்லு... வேலைக்கு பொயிட்டு வர்றதுக்குள்ள உடம்புக்குள்ள போன தண்ணியெல்லாம் வியர்வை ஆறா ஓடுது...

போட்டோஸ் அழகு...

30 நாட்களை 300 நாட்களா அனுபவிங்க.

ஹேமா said...

சந்தோஷமாய்ப்
போய்ட்டு வாங்க இர்ஷாத்.

Mc karthy said...

ரொம்ப சந்தோஷம் இர்ஷாத் நல்லபடியா போய்ட்டு வாங்க.. எங்களுக்குத்தான் உங்களின் எழுத்தைப் பிரிய மனமில்லை..ஊருக்கு போனாலும் நேரம் இருந்தால் கட்டுரை எழுதுங்கள். துறவறம் போறதும் ஒரு வகை ஆசைதான்னு சொல்லி நீங்க 'விடாக்கண்டன்' அப்ப்டிங்கிறத நிருபிச்சிட்டீங்க.. எப்படிங்க இதெல்லாம்..ஹய்யோ ஹய்யோ..

சாந்தி மாரியப்பன் said...

எஞ்சாய் த விடுமுறை :-))

சீமான்கனி said...

காசுனா சில்லறை பணாம்னா நோட்டு அதுனாளவோ என்னவோ....விடுமுறையை விரும்பியபடி கொண்டாடுங்கள் சொந்தங்களை கேட்டதாக சொல்லவும்....

ராம்ஜி_யாஹூ said...

சீமாங்கனி சொலவது போல காசு= நாணயங்கள், பணம்= நோட்டுக்கள்.

ஆசையை துறக்க வேண்டும் என்பதே கடைசி ஆசையாக இருக்க வேண்டும், அதன் பிறகு ஆசை யும் இருக்காது, துறத்தலும் இருக்காது.

எந்த ஊர் புகைப்படங்கள், மிக அருமை

பனித்துளி சங்கர் said...

உங்களின் பயணம் சிறப்பாக அமையட்டும் . புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ஒரு புதுமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே

பனித்துளி சங்கர் said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அன்பின் அஹமது இர்ஷாத்

வருக வருக தாயகம் வருக !

அதிர மதுர எல்லா இடங்களூக்கும் வருக

அயலகம் மறந்து தாயகத்தில் மகிழ நல்வாழ்த்துகள்

உலகில் ஒருவரும் ஆசைப்படக் கூடாதென ஆசைப்பட்ட ஒருவனின் ஆசையின் விளை இது

நட்புடன் சீனா

சசிகுமார் said...

நிறைய பேர் ஊருக்கு போறேன்னு சொல்லி போயி அங்கயே தங்கிட்டாங்க ன்னு நெனைக்கிறேன். அதோட பதிவு போடவே இல்லை. நீங்க எப்படின்னு பார்ப்போம்

விஜய் said...

தம்பி மாறு திசை தொடர்பதிவு எழுத அழைத்து பல நாளாகிவிட்டது

வாருங்கள்

விஜய்

கண்ணா.. said...

விடுமுறை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

Raghu said...

ஊருக்கா? அச‌த்துங்க‌ இர்ஷாத் :)

அந்த‌ வ‌ய‌ல்வெளி ந‌டுவே வீடு ஃபோட்டோ ந‌ல்லாருக்கு. ஜாஹிருக்கு பாராட்டுக‌ளை தெரிவிச்சிடுங்க‌

ஊருக்கு போற‌ ச‌ந்தோஷ‌த்துல‌ ப‌ய‌புள்ள‌ எப்ப‌டிலாம் யோசிச்சு கேள்வி கேக்குது பாரு..

யூட்யூப் வீடியோ செய்தி....ப‌ய‌னுள்ள‌ ப‌கிர்வு ந‌ன்றி இர்ஷாத்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

தம்பி இர்ஷாத்: விடுமுறை அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க பிராத்திக்கிறேன். சந்தோஷமாக குடும்பத்துடன் விடுமுறையை கழியுங்கள் .

இந்திரா said...

உங்க சுவாரஸ்ய பதிவு மாதிரி பயணமும் இனிக்கட்டும் இர்ஷாத்.

இந்திரா.
(தீவு.கோம்) .

அதிரை தும்பி said...

வாழ்த்துக்கள்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Bon Voyage...happy holidays... (இவ்ளோ தான் எனக்கு தெரியும்)

ஸ்ரீ.... said...

இர்ஷாத்,

படங்கள் மிகவும் அழகு.

ஸ்ரீ....

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates