Showing posts with label கிறுக்கல்கள். Show all posts
Showing posts with label கிறுக்கல்கள். Show all posts

பெயிண்ட் வாச‌ம்...

 ...

ப‌வுட‌ர் அடித்து
த‌லைவாரி
ஸ்டுடியோப் போய்
கோட் போட்டு
ஒன்றுக்கு
நாலுமுறை
ச‌ரிபார்த்து
எடுத்த‌
எவ‌னுடைய‌
பாஸ்போர்ட்
சைஸ் போட்டோவோ
எல்லோர் காலிலும்
மிதிப‌ட்ட‌து அன்றொரு
காலையில்..
....
எல்லோருக்கும்
நேரில் போய்
கூப்பிட்டு
சொந்த‌ ப‌ந்த‌ங்க‌ள்
அனைத்து உற்றார்
உற‌வுக‌ளோடும்
சாப்பாடு போட்டு
க‌ளைப்பில் அந்த‌
புது வீட்டின்
உள் அறையில்
உட்கார்ந்த‌ போது
பெயிண்ட் வாச‌த்தில்
தெரிந்த‌து முப்ப‌து
வ‌ருஷ‌ உழைப்பை
தின்ற‌ விஷ‌ய‌ம்..
....

Post Comment

ராகுல் Weds சுஜா...



'ராகுல் இன்னைக்கு என்ன‌ நாள் தெரியுமா?'

'என்ன‌ நாள்'  நெற்றிப்பொட்டை சுருக்கினான்.

'நீ என‌க்கு ப்ர‌ப்போஸ் ப‌ண்ண‌ நாள்'

'ம் மூணு மாச‌ம் போன‌தே தெரிய‌ல‌'

'என‌க்கு வீட்ல‌ சொல்ல‌ ப‌ய‌மாயிருக்கு ராகுல்'

'டோண்ட் ஃபீல் சுஜா எங்க‌ வீட்'ல‌ க்ரீன் Signal விழுந்துருச்சு அடுத்த‌ வார‌த்தில் ஒருநாள் உன்னை பெண் பார்க்க‌ வ‌ருவாங்க‌'

'ஓ ரிய‌லி'

'ஆமா'

'எங்க‌ப்பா ஒத்துக்க‌னுமே'

'அதெல்லாம் அக்ஸ‌ப்ட் ப‌ண்ணுவாங்க‌' ந‌ம்பிக்கையில் பி.ஹெச்.டி ப‌ட்ட‌மே வாங்கியிருந்தான் ராகுல்.

அவ‌ன் சொன்ன‌மாதிரியே எந்த‌வொரு இடையூறு இல்லாம‌ல் இர‌ண்டு குடும்ப‌ங்க‌ளும் இவ‌ர்க‌ளை ஏற்றுக்கொண்டு ராகுல் வெட்ஸ் சுஜாதா என்ற‌ டிசைன் போர்டு மேரேஜ் ஹாலில் தொங்கும் வ‌ரை வ‌ந்தாச்சு..

ஹாலில் க‌ணிச‌மான‌ கூட்ட‌ம்.மேரேஜ் ஹாலின் முக‌ப்பில் கூட்ட‌த்தின‌ர் வ‌ந்துக்கொண்டிருக்கும்போதே போலீஸ் ஜீப் வ‌ர‌வும் எல்லோருடைய‌ பார்வையும் அங்கே திரும்ப‌ ஜீப்பிலிருந்து இற‌ங்கிய‌ லேடி எஸ்.ஐ ம‌ண‌வ‌றை நோக்கி நட‌க்க‌ கூட‌ தொடுப்பாக‌ இர‌ண்டு கான்ஸ்ட‌பிள்க‌ள் வ‌ந்த‌ன‌ர்.

ராகுலில் அப்பா சார‌ங்க‌ன் எஸ்.ஐயிட‌ம்,

'என்ன‌ங்க‌ம்மா'

'இந்த‌ பொண்ணு மேல‌ ஒரு பைய‌ன் புகார் கொடுத்திருக்கிறான்'

'என்ன‌ன்னு?'

இந்த‌ப் பெண்ணும் அந்த‌ பைய‌னும் காதலிச்சுருக்காங்க‌ இந்த‌ப் பெண்ணுக்கு க‌ல்யாணம் என்ற‌தும் அவ‌ன் 'சூஸைட் அட்ட‌ம்ப்ட் ப‌ண்ணி சீரிய‌ஸ் க‌ண்டிஷ‌ன்'ல‌ ஜி.ஹெச்'ல‌ இருக்கிறான். அவ‌ன் கொடுத்த‌ வாக்குமூல‌ம்,ல‌வ்லெட்ட‌ர்,மொபைல் மெஸேஜ் அடிப்ப‌டையில் இந்த‌ பெண்ணை அர‌ஸ்ட் ப‌ண்றோம்'

'நோ நோ முடியாது ' க‌த்தினான் ராகுல்

'ஏண்டா இப்ப‌டி க‌த்துறே 'அம்மா வ‌சுந்த‌ரா அவ‌ன் போர்வையை வில‌க்கி அவ‌னை உலுப்ப‌..

 சேவ‌ல் கூவாத‌துதான் ஒன்றுதான் நிச்ச‌ய‌மாய் அது அதிகாலையேதான்.

வேற‌ எவ‌னாவ‌து காத‌லை சொல்ற‌துக்குள்ள‌ இன்னைக்கு எப்ப‌டியாவ‌து சுஜாவைப் பார்த்து காதலை க‌ண்டிப்பாக‌ சொல்லிற‌னும்.. உறுதிமொழியோடு விடிந்த‌து அன்று..


Post Comment

வ‌ச‌ந்த‌மே வ‌ச‌ந்த‌மே..

இந்த‌ வார‌ தின‌க‌ர‌ன் வ‌ச‌ந்த‌ம் இத‌ழில் நான் எழுதிய‌ சுண்ணாம்பும் வெண்ணையும் என்ற‌ ஒரு ப‌க்க‌ க‌தை 'க‌வ‌னிப்பு'என்ற‌ பெய‌ரில் வெளியாகிவுள்ள‌து ம‌கிழ்ச்சி..வெளியிட்ட‌ தின‌க‌ர‌ன் நிர்வாக‌த்தாருக்கும் நான் எழுத‌ ஊக்க‌ம‌ளிக்கும் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக‌ள்.. த‌மிழில் இருப்ப‌தால் என‌க்கு ஸ்கீரின் ஷாட் எடுக்க‌ முடிய‌வில்லை.. இந்த‌ லிங்கில் போய் பாருங்க‌ள்.. தின‌க‌ர‌ன் வ‌ச‌ந்த‌ம் 

Post Comment

சுண்ணாம்பும் வெண்ணையும்..

மனதில் ஏற்படும் காயம் உடம்பின் ஒட்டுமொத்த இயக்கத்தையே மங்க வைக்கிறது.பதிவுலகம்தான் ஓரளவு கவலைகளை மறக்கடிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இன்னமும் அதே நிலையில்தான் நான், முகப்புத்தகத்தில்,பஸ்ஸில்,மெயிலில் ஆறுதல்படுத்திய, ஆறுதலாய் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

########################################################################



'அந்த டேபிள்'ல இலையை எடும்மா'

'மூணாவது டேபிளுக்கு சாம்பார் கொண்டு போ'

காலை நேர பரபரப்பிலிருந்து உதயம் ஹோட்டல்.

' யோவ் எவ்ளோ நேரமாச்சு தோசைன்னு சொல்லி இன்னும் காணோமே சிறுகுடல பெருங்குடலு சாப்பிடறதுக்குள்ள கொண்டு வந்துரு' சர்வரை பார்த்து எகிறிக்கொண்டிருந்தவருக்கு கண்டிப்பா பி.பி. இருக்கும்..

ஓனரின் தம்பி கல்லாவை ஃபுல்லாவே ஆக்கிரமித்து இருந்தார்.

'தம்பீ ரெண்டு இட்லி ஒரு வடை மட்டும் போதும்பா'
அறுபதைத் தாண்டிய ஒருவர் சர்வர் குமரேசனிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே 

'தெரியும் நீங்க அதுக்கு மேல ஆர்டர் பண்ண மாட்டீங்கன்னு அதான் டெய்லி வர்றீங்களே' வார்த்தைகளின் ஸ்வரம் மாறியிருந்தது.

'ராசு அந்த கிழத்துக்கு ரெண்டு இட்லியாம் சீக்கிரம் கொடு'

பெரியவரின் டேபிளில் இட்லியை அலட்சியமாக வைத்தான்.
பதினைந்து ரூபாய் பில்லை கவுண்டரில் செலுத்திவிட்டு வெளியேறினார் அந்தப் பெரியவர்..

சம்பள நாள்..

ஓனர் ராஜன் எல்லோருக்கும் பணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு குமரேசனை மட்டும் உட்கார சொன்னார்.

'உனக்கு எத்தனை குழந்தைங்க?'

'ஆண் ஒன்னு பொன்னு ஒன்னுண்ணே'

'ரெண்டையுமே ஒரே மாதிரிதான் கவனிப்பியா இல்ல..?'

'இதென்ண்ணே கேள்வி ரெண்டையும் ஒரே மாதிரிதான் கவனிப்பேன்'

'ஓ அப்படியா அதேமாதிரிதான் இந்த எனக்குஹோட்டலும் 
ஒரு டீ சாப்பிடறவரும் கஸ்டமருதான்,கல்யாண சாப்பாடு ஆர்டர் பண்றவரும் கஸ்டமர்தான்.

' நீ நேத்து இவர்கிட்ட என்ன சொன்னே'

அதே பெரியவர் இன்னொரு அறையிலிருந்து வரவும் மேற்கொண்டு பேச முடியாமல் குமரேசனின் உதடுகள் தந்தியடிக்க..

'இவரு என் சித்தப்பாதான் நம்ம ஹோட்டல் நிர்வாகம்,வேலையாட்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்கிறதுக்காகவே ஒரு பத்து நாளா கஸ்டமர் மாதிரி வரச்சொன்னேன்.ஆனா உன் நடவடிக்கை 'ல மட்டும் வித்தியாசம். அது என்னய்யா ரெண்டு இட்லி சாப்பிடறவன் மட்டம்,நெறையா சாப்பிடறவன் ஒசத்தியா, ஒரு கண்'ல வெண்ணையையும் மறு கண்'ல சுண்ணாம்பையும் வெச்சிருக்ககூடாது உன் கணக்கு எல்லாம் செட்டில் பண்ணியாச்சு நீ கெளம்பலாம்..

'நன்றி மீண்டும் வருக' என்ற போர்டு குமரேசன் வெளியேறியபோது கண்ணில் பட்டது..

Post Comment

ஒரிஜினல் ஒரிஜினல்தான்..


'இதோ பார் வைஷீ நீ கட்டின புடவையோடு வந்தா போதும் நகை எதுவும் எடுக்க வேண்டாம் புரிஞ்சுதா'

'அய்யோ எத்தனை தடவை இதையே சொல்வீங்க'

'சரி சரி நான் க்ராஸ்கட் ரோட்ல இருக்கிற பஸ் ஸ்டாப்புல நிக்கிறேன் சீக்கிரம் வந்துடு'

'ம் இன்னும் அரைமணி நேரத்தில் அங்கே இருப்பேன்'

'சொன்னா போதாது செய்யனும்'

கோவையின் அதிகாலை குளிரிலும் தினேஷீக்கு வியர்த்துக் கொட்டியது.
நூற்றுக்கும் மேற்பட்ட எடையை சதையாய் கொண்ட மனிதர்கள் மெனக்கெட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்... ஜாக்கிங்காம்..

பி.எஸ்.ஜியில் இரண்டாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்துக்கொண்டிருந்த தினேஷீக்கு படிப்பில் ஏறாத கெமிஸ்ட்ரி வைஷ்ணவியை பார்த்தவுடன் உடம்பில் தாறுமாறாய் ஏறியது.

அதற்குமேல் வழக்கமான காதல்,காதல்,இ- மெயில்,எக்ஸ்ட்ரா,எக்ஸ்ட்ரா..

ஹலோ சொல்லி சினேகமானது இன்னைக்கு இந்தளவுக்கு வந்து நிற்பது சத்தியமாய் காதல் என்ற கண்றாவியால்தான்..

"வைஷீ நாம நிஜமாகவே ஓடிப்போகப்போறதில்லை, உங்க வீட்டிற்கும் எங்க வீட்டிற்கும் நம்ம காதலை புரிய வைக்க இது ஒரு டிராமா அவ்ளோதான்.நம்மை அவர்கள் தேடனும், சாகப்போறேன்னு எழுதி வைச்சுட்டு வந்துடு' 

இரண்டு நாளைக்கு முன்பு அவளிடம் இவன் சொன்னது.

வைஷ்ணவி வைஷ்ணவி' அம்மா சகுந்தலா தொடர்ந்து குரல் கொடுக்க மவுனம் மட்டுமே திரும்பி வந்தது. மாடியின் மேலே சென்று பார்த்தாள் அங்கே அவள் எழுதி வைச்சிருந்த லெட்டரைப் படித்துவுடன் மனதில் பயங்கொள்ள கணவர் சபாபதிக்கு போனை போட்ட அதே நேரம்...

சபாபதி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க காரில் டெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார்.கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே மொபைல் ரிங் அடிக்க கட் பண்ணிணார்..மறுபடியும் விடாமல் ரிங் அடிக்கவே லவுட் ஸ்பீக்கரில் "என்னங்க வைஷீ ஓடிப்போய்ட்டாங்க" சொன்ன மறு நிமிடம் எதிர் திசையில் வந்தவரின் மீது மோதிய வேகத்தில் அவர் தூக்கியெறியப்பட்டு அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது..

'யோவ் ஏட்டு அந்த செத்தவரு பாக்கெட்'ல ஏதும் அட்ரஸ் இருக்கான்னு பாரு'
 

'
இருபது ரூபாய் தாள் இரண்டோடு இடுப்பில் இருந்த ரேஷன் கார்டில் மூணாவது மகன் பெயர் தினேஷ் என்றிருந்தது.....

Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates