Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

ராகுல் Weds சுஜா...



'ராகுல் இன்னைக்கு என்ன‌ நாள் தெரியுமா?'

'என்ன‌ நாள்'  நெற்றிப்பொட்டை சுருக்கினான்.

'நீ என‌க்கு ப்ர‌ப்போஸ் ப‌ண்ண‌ நாள்'

'ம் மூணு மாச‌ம் போன‌தே தெரிய‌ல‌'

'என‌க்கு வீட்ல‌ சொல்ல‌ ப‌ய‌மாயிருக்கு ராகுல்'

'டோண்ட் ஃபீல் சுஜா எங்க‌ வீட்'ல‌ க்ரீன் Signal விழுந்துருச்சு அடுத்த‌ வார‌த்தில் ஒருநாள் உன்னை பெண் பார்க்க‌ வ‌ருவாங்க‌'

'ஓ ரிய‌லி'

'ஆமா'

'எங்க‌ப்பா ஒத்துக்க‌னுமே'

'அதெல்லாம் அக்ஸ‌ப்ட் ப‌ண்ணுவாங்க‌' ந‌ம்பிக்கையில் பி.ஹெச்.டி ப‌ட்ட‌மே வாங்கியிருந்தான் ராகுல்.

அவ‌ன் சொன்ன‌மாதிரியே எந்த‌வொரு இடையூறு இல்லாம‌ல் இர‌ண்டு குடும்ப‌ங்க‌ளும் இவ‌ர்க‌ளை ஏற்றுக்கொண்டு ராகுல் வெட்ஸ் சுஜாதா என்ற‌ டிசைன் போர்டு மேரேஜ் ஹாலில் தொங்கும் வ‌ரை வ‌ந்தாச்சு..

ஹாலில் க‌ணிச‌மான‌ கூட்ட‌ம்.மேரேஜ் ஹாலின் முக‌ப்பில் கூட்ட‌த்தின‌ர் வ‌ந்துக்கொண்டிருக்கும்போதே போலீஸ் ஜீப் வ‌ர‌வும் எல்லோருடைய‌ பார்வையும் அங்கே திரும்ப‌ ஜீப்பிலிருந்து இற‌ங்கிய‌ லேடி எஸ்.ஐ ம‌ண‌வ‌றை நோக்கி நட‌க்க‌ கூட‌ தொடுப்பாக‌ இர‌ண்டு கான்ஸ்ட‌பிள்க‌ள் வ‌ந்த‌ன‌ர்.

ராகுலில் அப்பா சார‌ங்க‌ன் எஸ்.ஐயிட‌ம்,

'என்ன‌ங்க‌ம்மா'

'இந்த‌ பொண்ணு மேல‌ ஒரு பைய‌ன் புகார் கொடுத்திருக்கிறான்'

'என்ன‌ன்னு?'

இந்த‌ப் பெண்ணும் அந்த‌ பைய‌னும் காதலிச்சுருக்காங்க‌ இந்த‌ப் பெண்ணுக்கு க‌ல்யாணம் என்ற‌தும் அவ‌ன் 'சூஸைட் அட்ட‌ம்ப்ட் ப‌ண்ணி சீரிய‌ஸ் க‌ண்டிஷ‌ன்'ல‌ ஜி.ஹெச்'ல‌ இருக்கிறான். அவ‌ன் கொடுத்த‌ வாக்குமூல‌ம்,ல‌வ்லெட்ட‌ர்,மொபைல் மெஸேஜ் அடிப்ப‌டையில் இந்த‌ பெண்ணை அர‌ஸ்ட் ப‌ண்றோம்'

'நோ நோ முடியாது ' க‌த்தினான் ராகுல்

'ஏண்டா இப்ப‌டி க‌த்துறே 'அம்மா வ‌சுந்த‌ரா அவ‌ன் போர்வையை வில‌க்கி அவ‌னை உலுப்ப‌..

 சேவ‌ல் கூவாத‌துதான் ஒன்றுதான் நிச்ச‌ய‌மாய் அது அதிகாலையேதான்.

வேற‌ எவ‌னாவ‌து காத‌லை சொல்ற‌துக்குள்ள‌ இன்னைக்கு எப்ப‌டியாவ‌து சுஜாவைப் பார்த்து காதலை க‌ண்டிப்பாக‌ சொல்லிற‌னும்.. உறுதிமொழியோடு விடிந்த‌து அன்று..


Post Comment

வ‌ச‌ந்த‌மே வ‌ச‌ந்த‌மே..

இந்த‌ வார‌ தின‌க‌ர‌ன் வ‌ச‌ந்த‌ம் இத‌ழில் நான் எழுதிய‌ சுண்ணாம்பும் வெண்ணையும் என்ற‌ ஒரு ப‌க்க‌ க‌தை 'க‌வ‌னிப்பு'என்ற‌ பெய‌ரில் வெளியாகிவுள்ள‌து ம‌கிழ்ச்சி..வெளியிட்ட‌ தின‌க‌ர‌ன் நிர்வாக‌த்தாருக்கும் நான் எழுத‌ ஊக்க‌ம‌ளிக்கும் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கும் ந‌ன்றிக‌ள்.. த‌மிழில் இருப்ப‌தால் என‌க்கு ஸ்கீரின் ஷாட் எடுக்க‌ முடிய‌வில்லை.. இந்த‌ லிங்கில் போய் பாருங்க‌ள்.. தின‌க‌ர‌ன் வ‌ச‌ந்த‌ம் 

Post Comment

அரைச்ச‌ மாவு..


தென்றல் அட்வர்டைசிங் கம்பெனி.

“சுந்தரம் எத்தனை பேர் இன்டர்வியூக்கு வந்திருக்காங்க"

“பதினாலு பேர் சார்"

“ஒகே ஒவ்வொரு ஆளா வரச்சொல்லு”

இன்டர்வியூ முடிந்து அதில் கணேஷ் மட்டும் தேர்வு பெற்றதாக அறிவித்து அவனுக்கு அப்பாயின்மென்ட் லெட்டரை கொடுத்தார் எம்.டி. ராஜன்.

"வந்திருந்த எல்லோரையும்விட “எக்ஸ்ப்ரீயன்ஸ்" குறைவான கணேஷை மட்டும் ஏன் தேர்தெடுத்திங்க சார்?"

“சுந்தரம் நாம நடத்துறது அட்வர்டைசிங் கம்பெனி, வந்திருந்த எல்லோரும் மவுன்ட் ரோட்ல வச்சா நல்லாருக்கும்,பீச்சுல வச்சா நல்லாயிருக்கும்னு அரைச்ச மாவையே திரும்ப அரைச்சாங்க,ஆனா கணேஷ் மட்டும்" இப்ப இருக்கிற பரபரப்பான வாழ்க்கையில பெத்த புள்ளகிட்டகூட பேச நேரமில்லாம போய்டுது,ஆனா ஒரு மனிதன் நிம்மதியா,அவசரமில்லாம போற ஒரே இடம் கழிப்பறைதான்,எந்த ஒரு டென்ஷன் இல்லாம இருக்கிற இடத்தில் நம் விளம்பரத்தை வைத்தால் நன்றாக மனதில் பதியும் சார் என்றான். இப்ப உள்ள சூழ்நிலையில அனுபவத்தைவிட புதுமைதான் நமக்கு முக்கியம், அதனால்தான் அவனை தேர்தெடுத்தேன்.

டிஸ்கி: இது மீள்ஸ்ங்கோ... டைம் ந‌ஹி ஹி ஹி....

Post Comment

வ‌ர‌மா சாப‌மா...



மார்க‌ழி குளிரில் போர்வையை இழுத்து போர்த்தி தூங்குவ‌து எவ்வ‌ள‌வு சுக‌ம் அம்மாவும் அப்பாவும் தூர‌த்து உற‌வின‌ர் க‌ல்யாண‌த்திற்கு கொஞ்ச‌மில்ல‌ ரொம்ப‌வே தூர‌ம் ர‌யிலில் போயிருக்கிறார்க‌ள், ப‌த்து ம‌ணிக்கு இன்ட‌ர்வியூ இன்னிக்கு அப்பாயின்மென்ட் லெட்ட‌ரோடுதான் வ‌ருவ‌து என்ற‌ க‌ற்ப‌னை ஓடிக்கொண்டிருக்க‌ போர்வையை வில‌க்கி அப்பாவின் அலார‌த்தைப் பார்த்தான் சுந்த‌ர் ஹீம் இன்னும் முழுசாய் மூணு ம‌ணி நேர‌மிருக்கிற‌து இன்னும் அரைம‌ணி நேர‌ம் தூங்கிட்டு இன்னிக்காவ‌து கொஞ்ச‌ம் சீக்கிர‌ம் போவோம் என‌ அவ‌னுக்குள்ளே சொல்லிக்கொண்டான்.குளித்துவிட்டு ப‌வுட‌ர்,சென்ட் டையை க‌ழுத்தில் இறுக்கும் வ‌ரை சுத்த‌மாய் முக்கால் ம‌ணி நேர‌ம் ப‌ற‌ந்திருந்த‌து.. வ‌ழ‌க்க‌மாய் நான்குக்கு மேல் போகும் இட்லி இன்று ரெண்டோடு உள்ளே போக‌ ம‌றுத்த‌து இன்ட‌ர்வியூ கிலியோ என்ன‌வோ.. செல்போனை எடுத்தால் இர‌க்க‌மே இல்லாம‌ல் சார்ஜ் போயிருந்த‌து..


வெளியே வ‌ந்தால் ப‌னியின் தாக்க‌ம் ம‌றைந்து வெயில் ந‌ல்லாவே அடித்த‌து.
இதோ நீங்க‌ள் கேட்ட‌ பாட‌ல் ரேடியோ மிர்ச்சி 98.3 இட்ஸ் ஹாட் ' ரேடியோ ஜாக்கியின் குர‌ல் உள்ளே போய் ஹ‌ரிஹ‌ர‌னின் குர‌ல் பாட்டாய் வெளி வ‌ந்த‌து டீக்க‌டை ரேடியோவில்.

ச‌ரி அம்மாவுக்கு போன் ப‌ண்ணி சொல்லிட்டு போவோம் என்ற‌ப‌டி ஒரு ரூபாய் காயின் போட்டு ரிங் போன‌து ஆறாவ‌து ரிங்கில் லைனில் அம்மா

'என்ன‌டா இன்ட‌ர்வியூ ந‌ல்ல‌ப‌டியா முடிஞ்ச‌தா..?'

'ஏம்மா இப்ப‌தான் போறேன்'

'இன்ட‌ர்வியூ எத்த‌னை ம‌ணிக்கு'?

'ப‌த்து ம‌ணிக்கு'

'ஹீம் ப‌த்து ம‌ணி இன்ட‌ர்வியூக்கு ப‌த்த‌ரை ம‌ணிக்கு கிள‌ம்புற‌ ஒரே ம‌க‌ன் நீதாம்ப்பா நீதான் வாட்ச் க‌ட்ட‌மாட்டே யார்க்கிட்டேயாவ‌து டைம் கேக்க‌வேண்டாமா?'

'அப்பாவோட‌ அலார‌த்தை வெச்சுதான் கிள‌ம்பினேன்'

'ஏண்டா உங்க‌ப்பா எப்ப‌வுமே ரெண்டு ம‌ணி நேர‌ம் முன்னாடியே செட் ப‌ண்ணி வைக்கிற‌து உன‌க்கு தெரியாது'?

'ச‌ரி போனை வை நான் ஆட்டோ பிடிச்சு போறேன்'

ம‌ன‌தில் ப‌ட‌ப‌ட‌ப்பு தொற்றிக்கொள்ள‌ எதிரில் வ‌ந்த‌ ஆட்டோவை பிடித்து,


'அண்ணே சீக்கிர‌ம் இந்த‌ இட‌த்துக்கு போக‌னும்'

'200 ரூபா ஆகும்ப்பா'

'ஓகே போங்க‌ சீக்கிர‌ம்'


அய்ய‌ய்யோ இந்த‌ இன்ட‌ர்வியூ மிஸ் ஆக‌க்கூடாது த‌ட‌த‌ட‌க்கும் நிமிட‌ங்க‌ள் ம‌ன‌சையும் சேர்த்து த‌ட்டிய‌து.. வாழ்வின் மோசமான‌ நிமிட‌ங்க‌ள் அவை.

கிரிக்கெட்டில் ச‌ச்சின் ந‌க‌த்தை க‌டிப்ப‌து போல் இவ‌னும் அதே ஸ்டைலில் க‌டித்தான்..

மிக‌ச்ச‌ரியாக‌ அவ‌ன் சொன்ன‌ இட‌த்தை அந்த‌ ஆட்டோ அடைய‌ ஒன்றரை ம‌ணி நேர‌ம் க‌ழிந்திருந்த‌து ஆட்டோக்கார‌ரிட‌ம் ப‌ண‌த்தை கையில் ப‌ண‌த்தை திணித்துவிட்டு வேக‌மாக‌ ஓடினான். அவ‌ன் தேடிய‌ க‌ம்பெனி ஆறாவ‌து தள‌த்தில் இருப்ப‌தாக‌ சொன்ன‌து அங்கேயுள்ள‌ போர்டு..

லிஃப்டை கிழே அழைக்க‌ ப‌ட்ட‌னை அழுத்தினான்..

இந்த‌ நேர‌த்திலா லிப்ட் மேலே போக‌னும், உல‌க‌த்திலுள்ள‌ அத்த‌னை கெட்ட‌ வார்த்தையிலும் லிஃப்டை திட்ட‌ தோன்றியது

நிமிட‌ங்க‌ள் யுக‌மாக‌ மாற‌ லிஃப்ட் வ‌ந்தது..


ஆறாவ‌து ந‌ம்ப‌ரை அழுத்தினான்..

அவ‌ன் சொன்ன‌ப‌டி கேட்ட‌து லிஃப்ட்..
 ஆறாவ‌து த‌ள‌ம் வ‌ந்த‌தும் வேக‌மாக‌ ஓடி அந்த‌க் க‌ம்பெனியை அடைந்தால்
அங்கே வாட்ச்மேன் ம‌ட்டும் உட்கார்ந்திருந்தார்..


இன்ட‌ர்வீயூ எல்லாம் முடிஞ்சிருச்சிப் போல‌ என்று எண்ணிய‌ப‌டி வாட்ச்மேனை நெருங்கி..

'என்ன‌ப்பா இன்ட்ர்வியூக்கு வ‌ந்தியா மேனேஜ‌ருக்கு ஓன‌ர்க்கிட்டேயிருந்து அவ‌ச‌ர‌மா ஐத‌ராப‌த்துக்கு வ‌ர‌ச் சொல்லி போன் வ‌ந்த‌துனால‌ இன்ட‌ர்வியூவ‌ அடுத்த‌ வார‌த்துக்கு த‌ள்ளிவெச்சுட்டாங்க‌'

உட‌ம்பிலுள்ள‌ அத்த‌னை ஹார்மோன்க‌ளும் துள்ளிக்குதிக்க‌ அந்த‌ வாட்ச்மேனோடு நியூசிலாந்தில் டூயிட் பாட‌னும்போலிருந்த‌து சுந்த‌ருக்கு....

Post Comment

சுண்ணாம்பும் வெண்ணையும்..

மனதில் ஏற்படும் காயம் உடம்பின் ஒட்டுமொத்த இயக்கத்தையே மங்க வைக்கிறது.பதிவுலகம்தான் ஓரளவு கவலைகளை மறக்கடிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.இன்னமும் அதே நிலையில்தான் நான், முகப்புத்தகத்தில்,பஸ்ஸில்,மெயிலில் ஆறுதல்படுத்திய, ஆறுதலாய் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

########################################################################



'அந்த டேபிள்'ல இலையை எடும்மா'

'மூணாவது டேபிளுக்கு சாம்பார் கொண்டு போ'

காலை நேர பரபரப்பிலிருந்து உதயம் ஹோட்டல்.

' யோவ் எவ்ளோ நேரமாச்சு தோசைன்னு சொல்லி இன்னும் காணோமே சிறுகுடல பெருங்குடலு சாப்பிடறதுக்குள்ள கொண்டு வந்துரு' சர்வரை பார்த்து எகிறிக்கொண்டிருந்தவருக்கு கண்டிப்பா பி.பி. இருக்கும்..

ஓனரின் தம்பி கல்லாவை ஃபுல்லாவே ஆக்கிரமித்து இருந்தார்.

'தம்பீ ரெண்டு இட்லி ஒரு வடை மட்டும் போதும்பா'
அறுபதைத் தாண்டிய ஒருவர் சர்வர் குமரேசனிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே 

'தெரியும் நீங்க அதுக்கு மேல ஆர்டர் பண்ண மாட்டீங்கன்னு அதான் டெய்லி வர்றீங்களே' வார்த்தைகளின் ஸ்வரம் மாறியிருந்தது.

'ராசு அந்த கிழத்துக்கு ரெண்டு இட்லியாம் சீக்கிரம் கொடு'

பெரியவரின் டேபிளில் இட்லியை அலட்சியமாக வைத்தான்.
பதினைந்து ரூபாய் பில்லை கவுண்டரில் செலுத்திவிட்டு வெளியேறினார் அந்தப் பெரியவர்..

சம்பள நாள்..

ஓனர் ராஜன் எல்லோருக்கும் பணத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு குமரேசனை மட்டும் உட்கார சொன்னார்.

'உனக்கு எத்தனை குழந்தைங்க?'

'ஆண் ஒன்னு பொன்னு ஒன்னுண்ணே'

'ரெண்டையுமே ஒரே மாதிரிதான் கவனிப்பியா இல்ல..?'

'இதென்ண்ணே கேள்வி ரெண்டையும் ஒரே மாதிரிதான் கவனிப்பேன்'

'ஓ அப்படியா அதேமாதிரிதான் இந்த எனக்குஹோட்டலும் 
ஒரு டீ சாப்பிடறவரும் கஸ்டமருதான்,கல்யாண சாப்பாடு ஆர்டர் பண்றவரும் கஸ்டமர்தான்.

' நீ நேத்து இவர்கிட்ட என்ன சொன்னே'

அதே பெரியவர் இன்னொரு அறையிலிருந்து வரவும் மேற்கொண்டு பேச முடியாமல் குமரேசனின் உதடுகள் தந்தியடிக்க..

'இவரு என் சித்தப்பாதான் நம்ம ஹோட்டல் நிர்வாகம்,வேலையாட்கள் எப்படி இருக்காங்கன்னு பார்க்கிறதுக்காகவே ஒரு பத்து நாளா கஸ்டமர் மாதிரி வரச்சொன்னேன்.ஆனா உன் நடவடிக்கை 'ல மட்டும் வித்தியாசம். அது என்னய்யா ரெண்டு இட்லி சாப்பிடறவன் மட்டம்,நெறையா சாப்பிடறவன் ஒசத்தியா, ஒரு கண்'ல வெண்ணையையும் மறு கண்'ல சுண்ணாம்பையும் வெச்சிருக்ககூடாது உன் கணக்கு எல்லாம் செட்டில் பண்ணியாச்சு நீ கெளம்பலாம்..

'நன்றி மீண்டும் வருக' என்ற போர்டு குமரேசன் வெளியேறியபோது கண்ணில் பட்டது..

Post Comment

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates