லோக்கல் ஸ்லாங்கும் எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று.... ‘வந்துருவாம்ல... தெங்காசில பஸ்ஸ புடிச்சிட்டியளா...’ ஏதோ ஒரு உரிமையானவர் பேசுறது மாதிரியான வட்டார வழக்கு அது... அந்த ஊர்க்காரர்களிடம் வேனும்னே பேச்சை கொடுத்து அவர்களை பேசும் பாங்கை, அந்த வட்டார வழக்கை ரசித்துட்டு இருப்பேன்...
பேருந்தில் வந்து களைப்பு, சீசன் நேரம் என்பதால் எல்லா லாட்ஜும் மேக்ஸிமம் ஃபுல்... போனதும் ரெண்டு உள்ளங்கையை விரிக்கிறார்கள்.. ரூம் இல்லை... அந்த மெயின் அருவி ரோட்லேர்ந்து நடந்து நடந்து கொஞ்சம் தூரம் வந்ததும் வீடு மாதிரியான லாட்ஜில் ரூம் கிடைத்தது...
ரெண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு கழுத்தில் துண்டை போட்டுட்டு கெளம்பியாச்சு.... முதலில் பழைய குற்றாலம் போகனும்... அங்கே போய் ஆசை தீர குளியலை போட்டுட்டு திரும்பலாம் என்ற ப்ளான்... முட்டி தெரிய டவுசரை போட எனக்கு விருப்பமில்லை... நிறைய பேர் அப்படித்தான் அலைந்தார்கள்... நண்பரும் முட்டி தெரிந்த வஸ்து தான் போட்டிருந்தார்...பழைய குற்றாலம் போயாச்சு... ஜனத்திரள் அதிகம்... அதுவும் மேடான ரோடு அது... அதில் போய் முடியும்வரை வந்துக்கொண்டே இருக்கிறார்கள்.. அருவியில் பனியனோடு போய் கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே புகுந்து தலையை காட்டி....பிரமாதமான ஃபீல்... எத்தனையோ முறை வந்தாலும் அந்த நேரத்து அனுபவம் குற்றாலத்தை பொறுத்து புதுசுதான்...
நான் ஏன் பனியோடு உள்ளே போனேன் என்றால் சக குளியர்கள் எண்ணெய்யை தன் உடம்பில் தேய்த்து வந்துவிட்டு நம் உடம்புகளுக்கு தவணை முறையில் எக்சேஞ்ச் செய்துவிட்டு போய்விடுகிறார்கள்... இந்த படுமோசமான எக்ஸ்ப்ரீயன்ஸ் பொதுவா எல்லோருக்கும் இருக்கும்.. அதனால் பனியன் உடுத்தி அல்லது போர்த்தி குளித்து தடுத்தேன் எண்ணெய்களை.. உச்சந்தலையில் விழும் தண்ணீரின் இன்பமான பாரம் எவ்ளோ நேரம் வேண்டுமானாலும் தாங்ககூடியதுதான்... சரியான குளியல்... ஊறியாச்சு...போகவே மனசில்லை... நேரமாச்சுன்னு நண்பர் சொல்லியதால் அந்த பழைய குற்றால மலைப்பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தோம்... மென் தூறல் வேற உடம்பில் பட்டு பட்டு தெறித்தது....
ஐந்தருவியிலும் தண்ணீர் தாராளமாய் கொட்டியது.. மக்கள் கூட்டமாய் இருந்தார்கள்... இருக்கத்தானெ செய்வார்கள்... இங்கே ஐந்தருவியில் மேற்படி பழைய குற்றால குளியல் டெக்னிக்லேயே பனியனோடுதான் பாத் என்ற கொள்கையோடு உள்ளே புகுந்து குளிக்க ஆரம்பிச்சாச்சு... இங்கே நண்பர் பனியோடு குளிக்க வந்திருந்தார்... ஒரு வண்டி எண்ணெய்யை தடவிட்டாங்க போல ப.குற்றால அருவியில் குளிக்கும்போது... பட்டாத்தான் தெரியும் பட்டாளத்தானுக்கு என்ற பழமொழியை அவர்கிட்ட சொல்லலை...உங்ககிட்ட சொல்றேன்.. ஐந்தருவியில் இருந்த போலீஸ்க்காரரின் கெடுபிடி அதிகமாக இருந்தது...நல்லதுதான்... கண்டிப்புதான் ஒழுங்குப்படுத்தும்...பிரமாதமான, அதிக நேர குளியல் ஐந்தருவியில்... அங்கே குளித்துமுடித்துவிட்டு கொஞ்ச தூரம் ரோட்டில் நடந்து போய் பிறகு போவோம் என்று நடந்தபடியே பேசிட்டு போனோம்...அடுத்த வருஷம் இதே ரெண்டு நாளை நாலு நாளா மாத்தி வரனும் அப்படின்னு சொல்லிட்டு இருந்தேன் நண்பரிடம்...ஆமோதித்தார்...
அன்றைய முதல் நாள் குளியல் + குளியல் + குளியல் என்றபடி கடும் ஈரத்தோடு அமோகமாய் அற்புதமாய் போனது... டூரிஸ்ட் ப்ளேஸ் என்றால் ஏடிஎம் கொஞ்சம் கூடுதலாய் வைத்திருக்கலாம்... நாங்க தங்கியிருந்த லாட்ஜ்க்கு பக்கத்தில் இருந்த ஏடிஎம் ஒர்க் ஆகவில்லை என்று பேருந்து நிலையம் வரை போகவேண்டியிருந்தது அடுத்த ஏடிஎம்க்கு.... இது ஒரு மைனஸ்...ரெண்டாவது நாளில் பனை ஓலையில் பின்னி மடிக்கப்பட்ட சிறிய பாக்ஸில் பனங்கல்கண்டு கருப்பட்டியில் ஆரம்பித்தது முதல் பர்சேஸ்... அப்படியே தொடர்ந்து கிர்னி பழம் என தொடர்ந்து ஒரு மணி நேரம் தொடர் பர்சேஸ்.... பத்து மணிக்கு காலை சாப்பாட்டை முட்டை தோசை சட்னியோடு முடித்தாச்சு... அந்த அடாத்து மு.தோசையை ரோஸ்ட் என்று வேறு எழுதிவைத்திருந்தார்கள் அந்த ஓட்டலில்.. ரோஸ்ட்’ஐ ஃபோட்டோ எடுத்துட்டு போய் காட்டனும்..
ஒருவழியாக ஒன்றரை மணி நேர குளியலுக்கு பிறகு மெயின் அருவிலேர்ந்து பேருந்து நிலையம் வரை வரும் ரோட்டில் நடந்தோம்.... அப்போது நடந்து வருகையில் பழாச்சுளை மற்றும் அதே செம்மஞ்சள் மாங்காய் கீத்துகளை சைக்கிளில் கூடைவைத்து அந்த சைக்கிளை ஸ்டாண்டு போட்டு வைத்திருந்து நின்றபடியே விற்றுக்கொண்டிருந்தார்... சொல்லவா வேண்டும்... வாங்கியாச்சு.. கண்டிப்பா அந்த பழாச்சுளை செம டேஸ்ட்.... இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாம்ன்னு ரூம் கிட்ட வந்தபோது தோன்றியது.. திரும்பி போக மனமில்லை.. கால்களின் முட்டி ரெண்டும் லீவுல போயிருந்தது... முறையான வலி...பகல் ஒரு மணிக்கு ரூம் வந்தாச்சு... மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு மறுபடியும் குளியலுக்கு ரெடி... கடைசியாக பேரருவி மட்டுமே பாக்கியிருந்ததால் சீக்கிரமே போயாச்சு... அங்கேயும் கணிசமான கூட்டம் இருந்தது... ஒரு மணி நேரம் பத்து நிமிஷம் குளித்து இருப்போம்... குத்துமதிப்பான நேரம்தான் அது.... பேரருவி தண்ணீரின் ஃபோர்ஸ் கொஞ்சம் கூடுதலாய் இருந்தது... மழைத்தூறல் வேற.. அன்றைய தினம் பயணம் என்பதால் அந்த கடைசி பேரருவி குளியலின் ஈரம் இன்னும் ஞாபகமிருக்கிறது...
குளியல் முடித்து ரூமிற்க்கு வருகையில் ’அசல் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மற்றும் பால் பொருட்கள் பண்ணையிலிருந்து நேரடி விற்பனை’ என்ற போர்டு கண்டேன்... அந்த குற்றால பயணத்தின் கடைசி பர்சேஸ்’ஆக நெய்யினால் செய்யப்பட்ட பால்கோவா’வை வாங்கிட்டு ரூம்’க்கு வந்தாச்சு... மணி நான்கரை’க்கு மேல் ஆகிவிட்டிருந்தது... வெளியில் சிறுதூறல்...எப்படியப்பா இந்த ஊரை விட்டு போறதுன்னு சின்னப்புள்ளைத்தனமான பிடிவாதத்துடன் கெளம்பியாச்சு... குற்றாலம் பேருந்து நிலையத்தில் தென்காசி பேருந்துக்கு வெயிட்டிங்... நாங்க நின்றபோது தூறல் வேற... ஒரு பேருந்தும் இல்லை...அப்புறம் ஒரு மினிபேருந்து வந்தது... எனக்கு தயக்கம்...ஆனால் நண்பர்.. இதை விட்டா தூறலில் நனைய முடியாது... வாங்க போவோம்ன்னார்... அதுவும் சரிதான்னு இரண்டு நாள் குற்றாலத்திற்கு விடை கொடுத்தது போல் கிளம்பியது மினிபஸ்... அந்த மினிபேருந்தில் ஏறியது எவ்ளோ நல்லதுன்னு பிறகுதான் புரிஞ்சது... ஏனென்றால் அந்த குற்றால சுற்றுவட்டாரமே பார்க்க கண்கொள்ளா காட்சிகளை அளித்தது.. மலையும் மலையை கிழிக்கும் மேக உரசலும்னு ரெண்டு கண்களும் நம்பகிட்ட இல்லை... அதிலும் அந்த மினிபஸ் போன வழியெல்லாம் மிகப்பிரமாதமான வழி... ‘இலஞ்சி' என்னும் அருமையான ஊர்வழியாக சுற்றிதான் கூட்டிப்போனார்கள்... அதுவும் மிக நல்லதா போயிருச்சு... பார்க்க பார்க்க பிடிக்கும் படியான பச்சை பசேல் வண்ணங்களை தீட்டியது போலான நிலப்பரப்பு... அட்டகாசமான உணர்வு... ப்ச்... சூப்பர்.... ஆக இப்படியாக இரண்டு நாள் பயணம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது...
Disclaimer: இந்த ஆக்கத்திற்க்கு தேவைப்பட்டமையால் இணையத்திலிருந்த மேற்கண்ட படங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது.
என்றும் அன்புடன்
அஹமத் இர்ஷாத்
4 வம்புகள்:
சுட்ட படம் என்றாலும் போஸ்ட் போலவே எல்லாம் ஜில்ல்.
ஹை! இமாதான் ஃபர்ஸ்ட்டா!! ம். பரிசாக எனக்கு ஒரு மாங்கீற்று பார்சல் ப்ளீஸ் இர்ஷாத்.
இமா...:) உங்களுக்கே மாங்காய் கீற்றுகள்...
கருத்திட்டமைக்கு நன்றி..!
நீங்க பஸ்ல போனியலா
நாங்க எப்பவும் திர்னவெல்லேந்து ட்ரைன்லைல போவோம். அதாம்ப்ல நல்லாருக்கும்.
Post a Comment