Thanks For Photo Hall's
என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட் ஸ்பாட் ரயிலடி.. ஊரிலிருந்த சமயத்தில் அதிகம் விசிட் செய்தது இங்கேதான்..காலையில் போகாமல் சாயங்காலம் அதாவது நாலு நாலரை மணிக்கு போயிட்டால் என்னெ காற்று என்னெ காற்று இயற்கை காற்று முகத்தில் அறையும்போது வாங்கிக் கொண்டே இருக்கலாம் அம்பூட்டு சுகம்..இந்த தடவை எக்ஸ்ட்ரா டிக்கெட் ஆக என் மகனும் நானும் வருவேன்னு அடம்பிடிக்க, கூட்டிட்டு வந்து உட்கார்ந்தாச்சு ரயிலடியில்..
'இந்த ரோடு எப்டி போட்டாங்க?'
என்னுடைய ஆல்டைம் ஃபேவரிட் ஸ்பாட் ரயிலடி.. ஊரிலிருந்த சமயத்தில் அதிகம் விசிட் செய்தது இங்கேதான்..காலையில் போகாமல் சாயங்காலம் அதாவது நாலு நாலரை மணிக்கு போயிட்டால் என்னெ காற்று என்னெ காற்று இயற்கை காற்று முகத்தில் அறையும்போது வாங்கிக் கொண்டே இருக்கலாம் அம்பூட்டு சுகம்..இந்த தடவை எக்ஸ்ட்ரா டிக்கெட் ஆக என் மகனும் நானும் வருவேன்னு அடம்பிடிக்க, கூட்டிட்டு வந்து உட்கார்ந்தாச்சு ரயிலடியில்..
'இந்த ரோடு எப்டி போட்டாங்க?'
தண்டவாளத்தை பார்த்து கேட்கிறான்..சில பதில்கள் சொன்னேன்..இங்கே விளக்கியெல்லம் சொன்னால் தாவு தீர்ந்திடும்..
'இந்த ரோடு எதுவரை போகும்?' ரெண்டாவது கேள்வி..சர்ரென்று வாங்கிட்டுவந்த 'Kit Kat' ல் பாதியை உடைத்து குடுத்து வாயை அடைச்சாச்சு... ஏன் முழு சாக்லெட்டையும் குடுக்கலைன்னு நீங்க கேட்கலாம் எப்படியும் மறுகேள்வி கேப்பான்ல அதுக்குத்தான் மீதி...ஆனாலும் சின்ன குழந்தைகளின் கேள்விகள் வெகு சுவராஸ்யம்..கேள்விகள் கேட்டுவிட்டு பதிலை உடனடியாக எதிர்ப்பார்க்கும் தன்மை..ஆச்சரியப்படுத்தும் பதில்களை சொல்லும்போது புருவங்களை ஏற்றி கண்களை அகலவிரித்து வாயை லேசாக திறந்து கேட்கும்போது வாவ் கொள்ளை அழகு...
'எப்ப ட்ரையினு வரும்?'
'நைட்டுக்குத்தான் வரும்..'
அவனை கூட்டிட்டு போனநேரம் பார்த்து விவரிக்கமுடியாத அளவுக்கு அற்புதமான வானிலையை கொண்டிருந்தது எங்கள் ஊர்..அமேஸிங்..கரு மேகங்கள் ஒன்றுகூடி முறுக்கிக் கொண்டிருந்த பத்து அல்லது பதினைந்து நிமிஷத்தில் ஒருதுளி மகனின் கன்னத்தில் பொட்டென்று விழுந்தவுடன் 'ப்பா மழ வரப்போவுது வா வீட்டுக்கு போலாம்' என்றான்..சரியென்று நானும் கிளம்பி வெளியில் நின்றிருந்த பைக்'ஐ எடுக்கலாம் என போனால் புள்ளி மானின் உடம்பிலிலுள்ள புள்ளிகளைப் போல பைக்கின் பெஞ்சை ஒவ்வொரு புள்ளியாக தொட்டு அலங்கரித்திருந்தது மழைத்துளி.. மணி ஆறு இருபதை தொட்டிருக்க கரு மேக சூழலாம் ஊரே இருட்டாக இருக்க தன் பங்குக்கு பவர்கட் செய்து மேலும் இருட்டாக்கியது தமிழ்நாடு மின்சார வாரியம்..அது அவர்களுக்கு பழக்க தோஷம் என்பதால் அந்த 'தோஷம்' அகலவே மாட்டேங்கிறது தமிழ்நாட்டைவிட்டு..பைக் கிக்கரை உதைத்தேன் மகனை முன்புறம் உட்காரவைத்துவிட்டு..கடற்கரை ஒட்டியே ரயிலடியும் இருப்பதால் மழைத்துளி மண்ணில் பட்டதும் மண்ணின் மணம் நாசியை துளைத்தது..அற்புத தருணம் அது..பைக்கின் வேகம் கூட கூட லேசாக வரும் மழைத்துளியும் அதிகமாக வந்ததால் துணிப்பை'யை மகனின் தலையில் கவிழ்த்துவிட்டு சீரான வேகத்தில் வீட்டை அடைந்தேன்..மழை வரப்போய் வீட்டிற்க்கு போயாச்சு.. மழை இல்லாத அடுத்த நாள் இரவு ஏழு மணிவாக்கில் மெயின்ரோடு சாரா கல்யாண மண்டபத்திற்கு பக்கத்தில் ஒருத்தர் தள்ளு வண்டியில் வைத்து ஆவி பறக்க சுண்டல், வெள்ளை கொண்டக்கடலை, சோழ/ல/க்கதிர், அவிக்காத நிலக்கடவை விற்பார்...பழைய டால்டா நெய் டப்பாவில் செங்குத்தான சிறிய குழாயில் திரிவைத்து இருப்பார்..அந்த டப்பாவில் மண்ணென்னையை ஊற்றி திரியை கொஞ்சம் ஈரமாக்கி கொளுத்துவார்..ஓரளவு வெளிச்சத்தில் எரியும் அவ்விளக்கே அந்த தள்ளுவண்டியின் பிரதான அடையாளம்..தெருவிளக்கு,ரோட்டில் போகும் வாகனங்களின் வெளிச்சம் இருந்தாலும் இந்த விளக்கின் மேல் அவருக்கு நம்பிக்கை..எரியும் நெருப்பின் புகையும், சுண்டலிலிருந்து வரும் ஆவியும் ஒன்றாக கலக்கும் அத் தருணத்தை ஏதோச்சயாக பார்த்திருக்கிறேன்..முன்பு எல்லாம் தெரு வழியாக வண்டியை தள்ளிக் கொண்டே விற்பனை செய்வார்..
'முன்ன மாதிரி முடியலீங்க'ன்னார்.. ஒருவிதமான சலிப்பு பேச்சில்..ஆர்வங்கொண்டு தொழில் செய்ய இயலாத அளவுக்கு உடல்நிலை இருந்தாலும் தொழில் செஞ்சே ஆகவேண்டுமென அவரை கொண்டு போய் தள்ளியிருந்தது வறுமை..சின்ன சின்ன மாங்காய் கீத்துகள்,பச்சை மிளகாய் ஆங்காங்கே தூவப்பட்டு,வெங்காயம்,கேரட் போன்றவற்றோடு கூட்டணி அமைத்து மெஜாரிட்டியோடு நம் மனங்களை வென்று நம்மை சாப்பிடவைக்கிறது அவரிடம் இருக்கும் சுண்டல். வெள்ளை கொண்டக்கடலையும் சாப்பிட நன்றாக இருந்தது..
'மழை வந்தா என்ன செய்வீங்க?'
'இந்தெ [சிகப்பு கலர் தார்ப்பாயை எடுத்து காட்டுகிறார்] வண்டிய சுத்தி மூடிட்டு நான் ஓரமா ஒதுங்கி நின்றுவேன்'
'மழ வந்தாத்தான் நல்லது..ஆனா அதிகமா வரப்பிடாது' கண்டிஷன் போடுகிறார் என்னை பார்த்தபடி.
'ஏங்க அப்படி?'
'அப்பத்தான் சீக்கிரம் வித்துப்போவும் நானும் வூட்டுக்கு போயிடுவேன்ல'
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ப்ரார்த்தனைகள்..விதவிதமான அப்ளிகேஷன் ஃபார்ம்கள் பாரமாக கிடைக்கிறது எல்லோர் மனதிலும்..
......................................................
சின்ன தூறல், ஒரு ரெண்டு மூணு நாள் மழையோடு நின்றுவிட்டது..தென்மேற்கு பருவமழை இந்த வருஷம் பொய்த்துவிட்டதாக சொல்கிறார்கள்..எங்கள் ஊரின் மத்தியில் நான்கு குளங்கள் இருக்கிறது..இந்த வருஷ மழையும் பொய்த்துபோனதால் குளம் வத்திப் போய் கிரிக்கெட் விளையாடுகிறார்கள்..பந்து போட கையை உயர்த்தும்போது நீச்சலடிப்பது போன்ற உணர்வை தருகின்றது பார்க்கும் எனக்கு..வாழ்க்கை தரம் எப்போது போலவே என்று சொல்ல முடிந்தாலும் சில வித்தியாசங்கள் இருக்கின்றது..அதிகமாக ரோடுகளில் வேகத்தடைகள் இருப்பது நல்லது என்றாலும் வேகத்தடைகளில் ஒரு ஓரமாக வழியை உண்டு பண்ணி விடுகிறார்கள்..ஒருவர் காட்ட மற்ற எல்லோரும் அவ்வழியே போக போக வேகத்தடை இருப்பதற்க்கான பலன் இல்லாமல் போய்விடுகிறது..10 ம் வகுப்பு படித்தாலும் பைக் + செல்போன் அதிலும் முன் கேமரா,டபுள் சிம்,ஜிபிகணக்கில் மெமரி கார்டு என சகலமும் இருப்பதால் பள்ளிக்கூட புத்தகங்களை வீட்டிலிருந்து ஸ்கூலுக்கும் ஸ்கூலிலிருந்து வீட்டிற்க்கும் 'சும்மா' எடுத்துட்டு போகும் 'வேலை' மட்டுமே பலமாக நடக்கின்றது..படிக்கிறார்களா என ஆராயலாம் என ஸ்கூலுக்கு போனால் ஸ்கூல் வாத்தியாருங்க பரிட்சையில் பெயிலாம்..அவர்கள் நிலைமை படு பாதகமாக இருக்கிறது... பட்டுக்கோட்டையில் நண்பரின் நண்பர் வாத்தியார்..அவரை கேட்கலாம்னா வீட்டை விட்டே அதிகம் வரமாட்றாராம்..இப்படி கிலி'யடித்து போய் கிடக்கிறது கல்வித்துறை..பொதுவாக சொல்லமுடியாவிட்டாலும் தோல்வியடைந்தவர்கள் அனைவரும் சொல்லும் ஒரே காரணம் 'கொஸ்டீன் பேப்பர் கஷ்டமுங்க'..அதையேதான் நாளைக்கு மாணவனும் சொல்வான்..
......................................................
99% சதவீதம் ப்ளாஸ்டிக் ஒழிப்பில் இருக்கிறது எங்கள் ஊர்.. சின்ன டவுன் என்றாலும் இத்தகைய 'கட்டாய' மாற்றத்திற்க்கு பாராட்டத்தான் வேண்டும்..நிற்க... இப்படி ப்ளாஸ்டிக்கை ஒழிக்கும்போது இதே மாதிரி வேறொரு பை'யை கொடுக்கிறேன் பேர்வழின்னு ஒரு வித்தியாசமான சணல்'ஐ விட மெல்லியதால் செய்யப்பட்டிருக்கும் ஒரு பை கொடுக்கிறார்கள்..அதுவும் அந்த பையின் விலை இரண்டு ரூபாய்..50 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் கூட இரண்டு ரூபாய் பையை தர யோசிக்கிறார்கள்..சில கடைகளில் கஸ்டமருக்கும் கடையிலிருப்பவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பில் போய் நின்றிருக்கிறது..மெயின்ரோட்டில் மொபைல் ரீசார்ஜ் பண்ண நான் நிற்க்கும்பொழுது பக்கத்து மளிகை கடையில் ஒரு பெரியவர் ' ப்ளாஸ்டிக் பை'யை ஒழிக்கிறீங்கன்னு சொல்றீங்களே இந்தா 'இது [பிரபல தேயிலை தூள் பாக்கெட்டை காட்டுகிறார்] 'அது [ஷாம்பு சாஷே'வை காட்டுகிறார்] 'ப்ளாஸ்டிக் தானே இதையும் நிப்பாட்டு..இதை ஏன் ஒழிக்கலை' மக்களுக்கு நல்லது செய்றேன்னு கெளம்பி வந்து கஷ்டத்த தான் கொடுக்கிறாங்க'ன்னார்.. அவர் சொல்வதில் நியாயம் என்று பட்டாலும் பால் பாக்கெட்டோ அல்லது அரை கிலோ சர்க்கரையோ வாங்கும்போது அதற்கு தகுந்த பை இல்லை..அந்த இரண்டு ரூபாய் பை வாங்கவும் யோசனை என்றால்? கடைக்காரர்களையும் குறை சொல்லமுடியாது ஒரு ப்ளாஸ்டிக் பை இந்த கடையிலிருந்துதான் கொடுக்கப்பட்டிருக்கிறது என உறுதியால் இரண்டு ஆயிரம் ரூபாய் அபராதம் அடிக்கிறது பேரூராட்சி...இதே கடமை உணர்வுடன் தேங்கி கிடைக்கும் சாக்கடைகள், குப்பைகள் போன்ற மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையில் தேவைகளை சரிசெய்தால் சந்தோஷமே..ஃபைன் அடிக்கும் முனைப்பு இதிலிருக்கட்டும்.. எப்படியோ ப்ளாஸ்டிக் ஒழிப்பில் ஆதரவை விட பொருமலும் ப்ளாஸ்டிக்கினால் வரும் ஆபத்தை புரியாத தன்மையும் நிறைய பேரிடம் இருப்பது உண்மை..
......................................................
பகல் நேரம் இரண்டரை மணி இருக்கும்..ஒரு தேவைக்காக பட்டுக்கோடை போக வேண்டியிருந்தது..பைக் பஞ்சரானதால் பேருந்தில் போகலாம்னு பாயிண்ட் டூ பாயிண்ட் எனப்படும் பேருந்தில் [பாயிண்ட் டூ பாயிண்ட் என்றால் இடையில் 12 கிமி எங்குமே எந்த ஸ்டாப்பிலும் நிற்காமல் அதிரை டூ பட்டுக்கோட்டை செல்லும் பேருந்து..ஷார்ட்டா பிபி என்பார்கள்] உட்கார்ந்தேன்..டிரைவருக்கு பின் தள்ளி நாலு சீட்டுக்கு ஒரு வலதுபுறத்தில் இடம் கிடைத்தது..டிரைவருக்கு மேலே " அப்பா ப்ளிஸ் வேகமாக போகாதீங்க " என்ற ஸ்டிக்கர் வாசகம் ஒட்டியிருந்தது ஸ்பெஷல்..அதை அவர் கவனிக்கிறாரோ தெரியாது மற்ற எல்லோரும் கவனிக்கிறார்கள்..பகல் சாப்பாட்டுக்கு பிறகான நேரம் என்பதால் எல்லோரும் தூங்கப் போகும் ஸ்டெஜிலேயே இருந்த சமயத்தில் கல்யாண வீட்டு ஸ்பீக்கரில் அளவிற்க்கு ஒரு சத்தம் எல்லோரையும் 'தட்டி' எழுப்பியது..கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தவரின் சைனா மாடல் போனாம்..ஒட்டுமொத்த பேருந்திலிருந்த எல்லோரும் திரும்பி பார்க்க அப்பவும் கொஞ்சம் அலற விட்டுட்டுத்தான் எடுக்கிறார்...இந்த மாதிரி ஹை டெஸிபல் சத்தம் அவர் பரம்பரைக்கே காது கேட்காமல் போய்விடும் என்பது உண்மை..அவர்கிட்ட போய் 'ஏங்க இவ்ளோ சத்தமா ரிங்டோனை வைக்கிறீங்கன்னு சொல்ல யாருக்கும் தேவையும் இல்லை என்பது மாதிரியான ஒரு தோற்றம் நிலவியது பேருந்தில்..நானும் அமைதியாகி விட்டேன்..சில நேரங்களில் சில வேளைகளில் அமைதியாகவே இருந்துவிடுவது உடம்புக்கு சேஃப்ட்டி...ஒன்பதாவது அல்லது பத்தாவது கிமிட்டரில் வண்டி நின்றது..இதுதான் எங்கேயும் நிற்காத பேருந்தாச்சேன்னு பக்கத்திலிருப்பவரிடம்,
'ஏங்க இங்க நிக்குது?'
'இந்த ......' ஸ்கூல்ல மட்டும் நிக்குது என்னான்னு தெரிலீங்கன்னார்..
தவறு நடக்கிறது அதை தட்டிக்கேட்க யாருக்கும் நேரமில்லை..நமக்கேன்? என்ற டோண்ட் கேர் மனப்பான்மை தலைவிரித்தாடுகிறது..கண்டக்டரிடம் பாக்கி பணம் வரவேண்டியிருப்பதால் நான் அந்த மாதிரி கேள்வி பதில் பிசினஸ்க்கெல்லாம் தயாரில்லை..
......................................................
My Twitter Updates
வெக்கேஷன் முடிந்து சொந்த ஊரை விட்டு பிரியும்போது நம்மையறியாமலே நம் நகத்தை விரலில் இருந்து வெடுக்கென்று பிடுங்கிய உணர்வு..
பாகன் என்றொரு சினிமா; எனக்கும் பக்கத்து சீட்டுக்காரருக்கும் ஒரு பந்தயம்; யாருக்கு முதலில் கதை புரியமென்பதில்; ரெண்டுமணிநேரம் ஆச்சு.
விசில் என்பதற்க்கு தமிழில் 'வீளை' என்று அர்த்தமாம்
சில வேளைகளில்/நேரங்களில் மனசும் புத்தியும் ஒன்றோடொன்று மோதி சில்சில்லாய் தெரிக்கிறது உடலில் # வாழ்வியல்
குக்கரின் விசிலுக்கு பயப்புட்ட என் வாரிசு இப்போ ஸ்கைப் ஆன் ஆஃபில் வரும் சத்ததிற்க்கு பயப்படுகிறது # டெக்னாலஜி
மகனின் சட்டையில் குத்தப்பட்ட இந்திய தேசியகொடி பேட்ச்'ஐ கழட்ட விடாமல் பார்த்துக்கொண்டதே இவ்வருட சுதந்திர தின வெற்றி எனக்கு..
அதிர்ஷ்டம் (Luck) என்ற வார்த்தைக்கு தமிழில் 'ஆகூழ்' என்ற வார்த்தையும் உண்டாம்.
மளிகைகடைக்காரர் மெலிந்து, கடை பெருத்து இருக்கிறது # நேட்டிவ் அப்டேட்ஸ்
பிள்ளைகள்/பதக்கங்கள் பெறுவதில் எப்பயுமே சப்ப மூக்குக்காரன்தான் ஃபர்ஸ்ட்டூ..
சாலை விபத்து இன்னம்பிற சோக செய்திகளையும் ஃபேஸ்புக்கில் லைக் செய்கிறார்கள்..என்ன மாதிரியான அளவுகோல் இது?
உறவுகளுக்கு பயந்து உள்ளங்களை விற்றுவிடும் நாம் சமூகத்துக்கு பயந்து உள்ளதையே விட்டுவிடுகிறோம்..
இன்னும் 5,6 வருஷத்துக்கு டெண்டுல்கர் விளையாடுவாராம் # பீதிய கெளப்புறதே வேலையா போச்சு..
பெரிதினும் பெரிது கேள்; என் மகனுக்கு யார் சொல்லிக்கொடுத்தார்னு தெரியவில்லை.
தாய்க்கும் பிள்ளைக்குமான உறவுகளில் சில 'மொழிகள்' தந்தைக்கு புரிவதில்லை # தொப்புள்கொடி லாங்வேஜ்
இரண்டு நண்பர்கள் கேஷ் கவுண்ட்டரில் நான் பில் Pay பன்றேன்னு பர்ஸை எடுக்கும் விதத்தை வெச்சே எது போலி எது ஒரிஜினல்னு சொல்லிறலாம்..
கரை வேட்டி உடுத்தாத கோட்டு சூட்டு போட்ட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் அலுவலகங்களில்.
தெரியாத இந்தியில் 'ஜல்தி என்று சொல்லியும் லேட்டாகத்தான் வர்றான் கேண்டீன் சர்வர்.
ஒப்பனை செய்து கண்சிமிட்டாமல் ஸ்டுடியோவிலெடுத்த எவனுடைய பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவோ எல்லோர் காலிலும் மிதிபடுகிறது அன்றொரு முற்பகலில்..
பல்லவன் பேருந்து லேடீஸ் சைடில் மகளிர்,பெண்டிர்,மங்கை.. லெஃப் சைட் ஆண்கள் பகுதியில் 'திருடர்கள் ஜாக்கிரதை # படித்ததிலிருந்து.
சாவி துவாரத்தின் வழியே பார்த்தால் அது 1980, கதவை திறந்தே பார்ப்பது 2012 # ஜெனரேஷன் கேப்.
மேட்டர்' என்ற வார்த்தையை வில்லங்கமாக்கியது தமிழன்'ஸின் மற்றொரு ஹிஸ்ட்ரி..
ஸெல்லோ டேப்பில் விட்ட இடத்தை திரும்ப பிடிக்கும் கஷ்டம் வேற எதிலும் இல்லை...
தஞ்சாவூரு,ட்ரெய்னு,சென்னை,காலை டிபன்,வேலை முடிஞ்சு,கனவு,முழிப்பு,ஊருக்கு,வந்தாச்சு, # சிறுகதை
அனுபவம்’ என்று எல்லா இடத்திலும் சொல்லமுடிவதில்லை.
வாழ்த்த வயதில்லை என்ற இழுவையைவிட ’ஹேப்பி பர்த்டே என்பது சுளுவாக போய்விடுகிறது..
பழசு : அம்மா ஆடு இலை. புதுசு: அம்மா கரண்ட் இல்லை..
கோல்கேட் பேஸ்ட்டை கடைசி சொட்டு வரை அழுத்துபவன் எவ்ளோ பெரிய க்யூவானாலும் நின்று ஜெயிப்பான் # பித்துவம்
ஏன் போர்ட எடுக்குறீங்க? 'வீட்டுச் சாப்பாடு கிடைக்கும்னு எழுதினா'அதான் எங்கவீட்டுலேயே கிடைக்குமேன்னு எவனோ எழுதிவெச்சிட்டு போய்ட்டான்.
அடுத்த நிமிஷம் ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் பிரமிக்கத்தக்கவை.
ஒரு ஊர்ல அப்படின்னு ஆரம்பிச்சாலே குழந்தைகள் தூங்க போய்டுது..டிஜிட்டலில் கதை சொல்லனும் # 2012
தங்கம்' அப்படின்னு கேள்விப்படலாம் இனி.
கெஞ்சலில் வரும் அன்பைவிட கொஞ்சலில் வரும் அன்பே மேலானது.
காரோட்டும் தகப்பங்காரன் கண்ணாடியில் இடமும் வலமும் பார்க்க அவனையே இடமும் வலமுமாக பார்க்கிறது பின்சீட்டு குழந்தை.
விறுவிறுப்பாக படித்துக்கொண்டிருந்த நாவலின் கடைசி பக்கத்தை கிழித்ததுபோல் இருக்கிறது வார விடுமுறைகள்..
ஷாக் அடிச்சிருச்சு என்பவனை நம்பாதீர்கள் தமிழ்நாட்டில் # சட்டியில இருந்தாத்தானே கம்மிங் டூ அகப்பை.
என்னதான் பச்சைத் தமிழனாய் இருந்தாலும் வெயிலை பார்த்து 'சூடு என்று தெலுங்கலேயும் சொல்ல வேண்டியாதிருக்கிறது..
காமத்தை காமத்தால் வென்றவனைவிட சாமத்தில் வென்றவன் அதிகம் # பித்துவம்
......................................................
அனிமேஷன் ஷார்ட் ஃப்லிமில் இந்த படத்திற்க்கு தனி மகுடமே சூட்டலாம் 6 நிமிஷத்திற்க்குள்ளாக கதையை கொஞ்சமும் சுவராஸ்யம் குறையாமல் சொல்லியிருப்பது அசத்தல்..எந்த இடத்திலும் குறையே கண்டுபிடிக்க முடியாமல் முழுவதும் நிறையே உள்ள இந்த ஷார்ட் ஃப்லிமுக்கு ஐந்து ஸ்டார்களை குத்தலாம்...டோண்ட் மிஸ் இட்..
அருமையான கான்செஃப்ட்..காட்சியமைப்புகளில் சொதப்பாமல் இருப்பது சிறப்பு..சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசிக்க வைக்கும் மென்மையான ஸ்டோரி...சூப்பர்.. பாருங்கள்..
8 வம்புகள்:
ஆஹா! மழையை கவித்துமா விவரச்சி இருக்கீங்க
டிவிட்டுகளிலேயே
பழசு : அம்மா ஆடு இலை.
புதுசு: அம்மா கரண்ட் இல்லை.
இது ரொம்ப பிடிச்சிருக்கு
கோல்கேட் பிதுக்களை
#பித்துவம் என்பதை விட
#பிதுத்துவம்ன்னு சொல்லியிருக்கலாமோ
:)
எழுதிய ஒவ்வொரு வரியும் ரசிக்கும் படியான பகிர்வு. வீடியோஸ் சூப்பர்.
கொஞ்ச நாள் உங்கள் எழுத்தை ஆறப்போட்டு எழுதினாலும் மெயின்ரோட்டு சுண்டல் மாதிரி சூடாகத்தான் இருக்கிறது.
உங்கள் பதிவுகளில் எப்போதும் மண்வாசனை இருக்கும் என்பதில் மழையை விவரித்த அழகை என் வார்த்தைகளால் அழுக்காக்க விரும்பவில்லை.
ஒரு நல்ல பாடல் திடீரென்று முடிந்து விட்டதுபோல் உள்ளது நீங்கள் மழையை விவரித்து மெதுவாக கடற்கரைதெருவழி மெயின்ரோடு சென்றது
super blog.. nice stories..
அடடா... பையன் என்ன இவ்வளவு புத்திசாலியா இருக்கான்... ஆச்சர்யமா இருக்கே... அவுக அம்மா அறிவாளின்னு நெனைக்கிறேன் lol
சகோதரர் நட்புடன் ஜமால்,
ஆசியாக்கா,
சகோதரர் ஜாஹிர்,
ஆமீனா,
கஜேந்திரன்
உங்கள் அனைவருக்கும் நன்றி..!
Post a Comment