ச‌ட்டென்று மாறுது வானிலை..


 ..

வெளிநாட்டு வாழ்க்கையில் எங்க‌ளுக்கு சொந்த‌ப் ப‌ந்த‌ங்க‌ள் ரூம் மேட்க‌ள்தான்..ஒவ்வொருவ‌ரும் வெவ்வேறு வித‌மான‌ க‌ன‌வுக‌ளில்,ல‌ட்சிய‌ங்க‌ளில் இங்குள்ள‌ வீணாப்போன‌ வாழ்க்கையை வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ ந‌க‌ர்த்திக் கொண்டிருக்கிறோம்..அலுவ‌ல‌க‌ அர‌சிய‌லில் அடிப‌ட்டு,பிடிக்காத‌ சாப்பாட்டை பிடித்த‌ மாதிரி சாப்பிட்டு தூங்கி விழுகின்றோம்..அவ‌ன் பேர் ஜிஃப்ரி என் ரூம்க்கு ப‌க்க‌த்து ரூம்கார‌ன்..அந்த‌ ப்ளாட்டில் ரொம்ப‌ ஜோவிய‌லாக‌,க‌ல‌க‌ல‌ப்பாக‌ ஏதாவ‌து பேசிக்கொண்டே தோளில் கைப்போட்டுக்கொண்டு பேசுவான்..பிற‌ப்பிட‌ம் பீகார் வாழ்விட‌ம் எங்க‌ளோடு க‌த்தாரில்..மூன்று வ‌ருட‌மாய் இங்கே இருக்கின்றான்..சிவில் இன் ஜினிய‌ர்..ஊருக்கு வெக்கேஷ‌ன் போற‌துக்கு அவ‌னோடு நானும் என் ஃப்ரெண்ட்டெல்லாம் போய் ப‌ர்சேஸ் செஞ்சோம்..எதையுமே ம‌ன‌சிலே வைக்காம‌ பேசும் ஆள்..என்னைப் போல‌..இருப‌து நாளைக்கு முன்னாடி அன்றொரு இர‌வில் ஊருக்கு கிள‌ம்பினான்..ம‌கிழ்ச்சியாக‌ அனுப்பி வைத்தோம்..ஒன்று தெரியுமா சொந்த‌ ஊருக்கு யார் டிக்கெட் போட்டாலும் ம‌ற்ற‌ எல்லோருக்கு ம‌கிழ்ச்சியாக‌ இருக்கும் இங்கே அவ்வ‌ள‌வு ப‌ரித‌விப்பும் ஏக்க‌மும் ஒவ்வொருத்த‌னின் க‌ண்க‌ளில் இருப்ப‌தை ம‌றுக்க‌வியலாது..ச‌ரி அதை விடுவோம்..வெள்ளிக்கிழ‌மை ல‌ஞ்ச் முடிச்சிட்டு ரூமில் கொஞ்ச‌ நேர‌ம் தூங்க‌லாம்'னு போர்வை எடுத்துக்கொண்டிருக்கும் போது ப‌க்க‌த்து ரூம்க்கார‌ன் வேக‌மாக‌ வ‌ந்து என் ரூம் க‌த‌வை த‌ட்டினான்,நான் க‌தவை திற‌ந்து அத‌ட்டினேன்..

'டேய் எல்லோரும் தூங்குற‌ நேர‌த்துல‌ என்ன‌டா இப்டி க‌த‌வ‌ த‌ட்றே'

என்ன‌மோ சொல்ல‌ வ‌ர்றான்..ஆனா முடிய‌லை..

'டேய் என்னாடா' அவ‌ன் க‌ண்ணில் இருந்த‌ அபாய‌ம் என‌க்கு விள‌ங்கவே,

'என்னாச்சி' தோளை உலுக்கினேன்..

'ந‌ம்ம‌ ஜிஃப்ரி ஊர்ல‌ ஆக்சிடென்ட்'ல‌ ஆள் இற‌ந்துப் போய்ட்டான்டா'

அப்ப‌டியே உட்கார்ந்துவிட்டேன்..இதை டைப்பும்போது ம‌ன‌சு அழுகின்ற‌து..அலுவல‌க‌ முடிந்து ட‌ய‌ர்டா லிஃப்ட்டில் வ‌ரும்போது,ஒன்றாக‌ சாப்பிட்டு இருக்கிறேன் அவ‌னோடு கிட்ட‌த்த‌ட்ட‌ நான் இந்த‌ ப்ளாட்டிற்க்கு வ‌ந்த‌து ஏழு மாத‌த்திற்க்கு முன்னாடிதான்..ஆர‌ம்ப‌த்திலே இர்ஷாத்'ன்னு ரொம்ப‌ ப‌ழ‌கின‌ மாதிரி அத‌ட்டி கூப்பிட்ட‌வ‌ன் அவ‌ன் இன்னைக்கு இல்லை..சிம்பிளா பெரிய‌ 'டாட்டா' காட்டிட்டு போய்ட்டான்..சொந்த‌ம் இல்லை அவ‌ன் இருந்தாலும் சின்ன‌ க‌ண்ணீர் துளிக‌ள் அவ‌னுக்காக‌ எட்டிப் பார்க்கிற‌து..சில‌ நேர‌த்தில் ஏற்ப‌டும் இழ‌ப்புக‌ளுக்கு வ‌லி சொல்ல‌ இய‌லாது..ரொம்ப‌வும் வ‌ருத்த‌ப்ப‌ட்ட‌ நிக‌ழ்வு இது ச‌மீப‌த்தில்.


--------------------------- 

எப்பொழுதுமே ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌ 'க்ரீன் கார்ட‌ன்' ஹோட்ட‌லுக்குத்தான் சாப்பிட‌ போவேன்..அத‌ற்க்கு ப‌க்க‌த்திலேயே இன்னொரு மானா ஹோட்ட‌லும் உண்டு..ஆனால் க்ரீன்'தான் ரொம்ப‌ பிடிச்ச‌ சாப்பாடுக‌ள் இருப்ப‌தாக‌ என‌க்கு தோன்றிய‌து..இன்ற‌ல்ல‌ நேற்ற‌ல்ல‌ ஒரு வ‌ருஷ‌மா ஒரே ஹோட்ட‌ல்..இடையில் ஒரு மாச‌ம் வெக்கேஷ‌ன் போனாலும் எங்கே சார் ஆளையே காணோம்'னு சொல்லுவார் ச‌ப்ளையர் மூர்த்தி..கிட்ட‌த்த‌ட்ட‌ தோஸ்த்'ஆக‌வே மாறிவிட்டார்..ஒருவார‌ம் முன்பு மேற்க‌ண்ட் இர‌ண்டு ஹோட்ட‌லைத் த‌விர்த்து நான் த‌ங்கியிருக்கும் அறைக்கு பின்புற‌த்தில் ஒரு அஞ்சு அல்ல‌து ஆறு நிமிஷ‌ ந‌டையில் 'டாக்ஸி' ஹோட்ட‌ல் இருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து..அதையும் ப‌க்க‌த்து ரூம்'க்கார‌ ஹைத‌ர‌பாத்தி'தான் சொன்னான்..ச‌ரி ஒரு வித்தியாச‌த்துக்கு இங்கேயும் போய்த்தான் பார்ப்போமோ என்ற‌ப‌டி க‌ட‌ந்த‌ வார‌த்தில் ஒரு டின்ன‌ரை ப‌ரோட்டா ப்ள‌ஸ் சிக்க‌ன் ஃப்ரை'யோடு சாப்பிட்டேன்..சொன்னால் ந‌ம்ப‌மாட்டீர்க‌ள் அமிர்த‌ம்..சூப்ப‌ர்..அடடா இவ்ளோ நாளா இந்த‌ ஹோட்ட‌லை மிஸ் ப‌ண்ணிட்டோமே என்ற‌ப‌டி நினைத்துக் கொண்டேன்..இனி மூர்த்தியை அதான் க்ரீன் கார்ட‌னை ம‌ற‌ந்து டாக்ஸி ஹோட்ட‌லுக்கு க‌ட‌ந்த‌ ஒரு வார‌ம் தொட்டு போய்க்கொண்டிருக்கிறேன்..என்ன‌மோ ரொம்ப‌ பிடித்துப் போய்விட்ட‌து அந்த‌ சிக்க‌ன் ஃப்ரை வித் ப‌ரோட்டா காம்பினேஷ‌ன்..க‌ட‌ந்த‌ அஞ்சு நாட்க‌ளாய் தொட‌ர்ந்து சாப்பிட்ட‌ என்னை இன்னிக்கு போன‌தும்,

'சார் உங்க‌ளுக்கு சிக்க‌ன் ஃப்ரை ப‌ரோட்டா'?

'ஆமா'ங்கிற‌ மாதிரி த‌லையாட்டினேன்..

'அதான் தெரியுமே டெய்லி அதானே சாப்பிடுறீங்க‌' என்று அவ‌ன் சொன்ன‌தில் ஒரு 'குட்டு' ஒன்னு இருந்த‌து தெரிந்த‌து..

இதை ஏன் நான் சொல்றேன்'னா க‌ட‌ந்த‌ வ‌ருட‌த்தில் நான் என் ப்ளாக்கில் ஒரு ப‌க்க‌ க‌தையை எழுதினேன்..'சுண்ணாம்பும் வெண்ணையும்' என்ப‌து த‌லைப்பு..தின‌க‌ர‌ன் வ‌ச‌ந்த‌த்தில் 'க‌வ‌னிப்பு' என்ற‌ பெய‌ரிலும் வெளிவ‌ந்த‌து..


http://bluehillstree.blogspot.com/2010/10/blog-post_12.html

http://bluehillstree.blogspot.com/2011/01/blog-post_31.html


அந்த‌ க‌தையில் ஒரு வ‌ரியில் இப்ப‌டி வ‌ரும்..

// தம்பீ ரெண்டு இட்லி ஒரு வடை மட்டும் போதும்பா'
அறுபதைத் தாண்டிய ஒருவர் சர்வர் குமரேசனிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே

'தெரியும் நீங்க அதுக்கு மேல ஆர்டர் பண்ண மாட்டீங்கன்னு அதான் டெய்லி வர்றீங்களே' வார்த்தைகளின் ஸ்வரம் மாறியிருந்தது //

கிட்ட‌த்த‌ட்ட‌ அதே ச‌ம்ப‌வ‌ம் என‌க்கு ந‌ட‌ந்திருக்கிற‌து பாருங்க‌ள்..சில‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை க‌தையா நாம‌ எதார்த்த‌மாக‌ எழுதினால் இய‌ல்பிலும் அதே போல் ந‌ட‌க்கிற‌து சில‌ நேர‌ங்க‌ளில்...

இனி மூர்த்தி'தான் ந‌ம்ம‌ தோஸ்த் ப‌டா தோஸ்த்..க்ரீன் ஐ'ம் நாட் மிஸ்ஸிங் யூ..

Post Comment

6 வம்புகள்:

நட்புடன் ஜமால் said...

:(

முதல் நிகழ்வு அடுத்ததில் ஒன்றாமல் செய்துவிட்டது

ஜெய்லானி said...

:-(

ஹேமா said...

வணக்கம் இர்ஷாத்.இரண்டு நிகழ்வுகளும் வாழ்வோடு ஒட்டி இருந்தாலும் முதலாவது தவிர்க்கமுடியாதது ஆகிவிடுகிறது !

Ahamed irshad said...

வ‌ண‌க்க‌ம் ஹேமா..ந‌லமா..

இன்ப‌ம் துன்ப‌ம் க‌ல‌ந்துதானே வாழ்க்கை..

Priya said...

நிகழ்வுகளின் தொடக்கமே மனதை என்னவோ போலாக்கிவிட்டது:-(

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

Best Regarding.

www.ChiCha.in

www.ChiCha.in

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates