---> Part 1
..
அந்த அட்ரஸில் இருக்கும் அலுவலகம் நோக்கி புறப்பாடு நானும் நண்பனும் காலையில் கிளம்பி மதியத்துக்குள் போய்ச் சேர்ந்தாச்சு பகல் சாப்பாட்டையும் முடித்துக் கொண்டே சென்றோம் அந்த அலுவலகத்துக்கு மூணாவது மாடியில் இருந்ததாக சொன்னது அந்த அழுக்கடைந்த போர்டு ஆக பத்திரத்தை வாங்கிட்டு பத்திரமா திரும்பிடவேண்டியதுதான் என நினைத்துக்கொண்டே அந்த அலுவலகத்திற்க்குள் நுழைந்தேன் இல்லை நுழைந்தோம். ஒரு பொண்ணு உட்கார்ந்திருந்தது இன்னொருத்தர் கொஞ்சம் வயசானவரும் இருக்க நான் இதுமாதிரி மேற்படி கலாட்டா ப்ளஸ் இன்லாண்ட் லெட்டர் விஷயத்தையும் சொன்னேன். ஒரு லெட்ஜரை நீட்டி இதில் உங்க பெயர்,விலாசம்,தேதி போடுங்கன்னதும் அதே மாதிரி போட்டாச்சு சுத்தி நோட்டமிட்டேன் ஒரு நாளிதழ்'ல தேசிய கொடியையெல்லாம் போட்டு விளம்பரம் கொடுத்தாய்ங்க அது இதானா ரொம்ப சாதாரணமா இருக்கே..ரெண்டு டேபிள்,மானேஜர் அறை பூட்டி இருந்தது மூணு சேர் இருக்கும் ஒரு ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது இவ்ளோதான் அந்த அலுவலகமே..சரி எப்படி இருந்தா நமக்கென்ன ஆக வேண்டியதைப் பார்ப்போம்'னு இருந்ததில் ஒரு அரை மணி நேரம் கழன்டு ஓடியிருந்தது..
இதுக்கு மேலேயும் உட்காரமுடியாது என்ற நிலையில் எப்பங்க பார்க்க போறது மனையை பார்க்க என்று கேட்டேன் இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல வண்டி வந்துரும் சார் உங்கள மாதிரி போட்டியில ஜெயிச்சவங்க இன்னும் கொஞ்ச பேர் வந்துக்கிட்டு இருக்காங்க அவங்க வந்ததும் உடனே போகவேண்டியதுதான் என்றது அந்தப்பொண்ணு..நண்பன் முனகல் இன்னும் வர்லியே என்று நினைத்ததும் தான் தாமதம் எவ்ளோ நேரம்டா ஆகும்ன்னான் நானும் உங்கூடதானே வந்தேன் எனக்கு எப்படிறா தெரியும்ன்னேன் அது எப்படிடா எல்லாத்துக்கும் ஒரு பதில் வெச்சிருக்கேன்னான் அதுதான் எப்படின்னு தெரியலைடான்னு சொல்லி வெச்சேன்..இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கும்..சில பேர் வந்திருந்தார்கள் முகத்தில் ஏக சந்தோஷம் தெரிந்தது அவர்களுக்கு அதைப் பார்த்து எனக்கும் கொஞ்சம் பூரிப்பு இருக்காதே பின்னே.அப்புறம் ஃபோன் வந்தது எடுத்த பெண் ரெண்டு தடவை வலதுப்பக்கமும் இடதுப்பக்கமும் ஆட்டினால் நான் கண்களை அகல விரித்தேன் ஆஹா வண்டி வந்துருச்சு போய் பார்த்திட வேண்டியதுதான்..அதே போல் அப்பெண் தலைக்கு நூறு ரூபாய் கேட்டாள் எனக்கும் நண்பனுக்கும் சேர்த்து இருநூறாய் கொடுத்தேன் கீழே டாடா சுமோ நின்றது அதில் ஏற சொன்னார்கள் நானும் நண்பனும் ஏறியதும் எங்களைத் தொடர்ந்து சில பேர்களை ஏத்திவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய சொன்னார் கோட் போட்ட ஒருத்தர் ஒருவேள இவர்தான் மேனேஜரோ, இருக்கலாம் இந்த நாலு சேர்,ரெண்டு டேபிள் கம்பெனிக்கு ஏத்த ஆள்தான் எண்ணிக்கொண்டேன் ஆளும் அப்படித்தான் இருந்தார்..
சுமார் நாற்பது நிமிஷ பயணத்தில் ஒரு ஒத்தையடி பாதை வழியாக மெயின் ரோட்டிலிருந்து கட்டாகி உள்ளே சென்றது சுமோ நான் சுத்திப் பார்க்கிறேன் எனக்கு தெரிந்து இந்தியாவிலேயே இப்படி ஒரு இருக்குமான்னுதான். விளம்பரத்தில் போட்டியில் சொன்ன இடம் இதுதானா ரெண்டு கண்களையும் கசக்கி பார்த்தாலும் ஒரே மாதிரிதான் தெரிந்தது இதுவேற பத்தாதுன்னு வண்டி உள்ளே உள்ளே போய்க்கிட்டே இருந்தது ஒருவேள பெட்ரோல் முடிந்தாத்தான் நிறுத்துவார்கள் போலிருக்குது என்று நினைப்பதற்க்குள் வண்டி நிறுத்தப்பட்டது..கோட் ஆசாமி எல்லோரையும் இறங்க சொன்னார். இறங்கி ரெண்டு நிமிஷ நடை வேற வெளங்கீரும்..இந்த இடத்திற்க்கெல்லாம் எதுக்குடா போட்டி ங்கொய்யல சும்மா கொடுத்தாலே வரமாட்டாய்ங்களே சரி வந்தது வந்தாச்சு மேற்கொண்டு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்'ன்னு இருந்தேன் கோட் ஆசாமி என்கிட்ட வாங்க உங்களுக்கு ஒதுக்கப்பட்ட? இடத்தை காட்றேன்னு சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டினார் எனக்கு ஒன்னுமே புரியலை ஏங்க இது எத்தனை அடி,எத்தனை ஸ்கொயர் என்று கேட்டேன் என்னமோ சொன்னார் எனக்கும் மறந்துவிட்டது..இடத்தை சுற்றி வெறும் பொட்டல் ஒரு மருந்துக்கு கூட மரம் கூட இல்லாத இடமாக இருந்தது சொல்லப் போனால் சும்மாதானே கிடைக்கிறது என்று நினைத்தவன் கூட வாங்க வர முடியாத இடமாக இருந்தது நானும் வந்த டிக்கெட் ப்ளஸ் சாப்பாட்டு செலவையாவது இதிலிருந்து ஈடு கட்டிறலாம் என்று பேராசைக் கொண்டேன்..அவ்வ்..
எல்லோருக்கு முகத்திலிருந்த மகிழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கியிருந்தது..இதில வேற நண்பன் ஒப்பாரி வைத்துவிட்டான் அது தனி கதை அதை விட்ருவோம்..சரி இதான் எனக்குன்னு சொன்னவுடன் நான் மேற்கொண்டு அந்த மனையின் பட்டா உட்பட எல்லா விவரமும் கேட்கலாம்னு எண்ணி இருந்ததை கைவிட்டு விட்டேன் ஏனென்றால் அந்த இடம் அப்படி..சும்மா தந்தாலும் பிடிக்கவில்லை..ஆனால் நண்பன் ஒன்னு சொன்னான்..மச்சி வந்தாச்சி வேணாம்னு சொல்லாம கொறைஞ்சது ஒரு ஆறாயிரமாவது வாங்கிட்டு போய்டலாம்னான் எனக்கு கொஞ்சம் யோசனை இவன் சொல்ற மாதிரியே செய்வோன்னு கோட் ஆசாமிக்கிட்ட போய் மேற்கொண்டு டீட்டெய்ல்ஸ் பேசலாம்னு பார்த்தா அடுத்த ஒரு விஷயம் சொன்னான் பாருங்க அதத்தான் என்னாலே ஜீரணிக்கவே முடியலை அதாவது என்னான்னா அந்த மனையோட மொத்த மதிப்பு ஐம்பது ஆயிரத்தையும் தாண்டுமாம் என்றதும் நான் கடிச்ச நகத்தில் ரத்தம் வந்தது அடங்கொன்னியா டேய் சோத்துல பூசணிக்காயை மறைக்கலாம் சோத்தையே இல்லைன்னா எப்டிடா..கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமத்தான் அந்த கோட் ஆசாமி பேசினான் நான் சொல்லித் தெரியவேண்டியது இல்லை நீங்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால்..சரி அதையெல்லாம் விட்ருவோம் மேற்கொண்டு நடந்ததுதான் க்ளைமேக்ஸ்..
அதாவது அந்த ஐம்பது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மனையை பெற அதில் பாதி கட்டணத்தை அதாவது இருவத்து அஞ்சாயிரம் ரூபாயை கட்டினால் இந்த மனை உங்களுக்குத்தான் என்றானே பார்க்கலாம்..எனக்கு வந்த கோபத்துக்கு நாலு அப்பு அப்பியிருக்கனும் அமைதியாக இருந்துட்டேன் சரி அப்ப எதுக்கு மனை இலவசம்'னு போடனும்'னு உங்களுக்கு தோன்றுகிற அதே கேள்வியை நான் கேட்கவில்லை அதுக்கும் அநியாயமான மொக்கை பதில் வரும்னு எனக்கு தெரியும் அதனால் நோ கொஸ்டீன் அன்ட் கோ டூ ஹோம்..இதனால் தெரியவேண்டியது இம்மாதிரியான போட்டிகளில் கலந்து அநியாயமா இன்லாண்ட் லெட்டரை வேஸ்ட் செய்யாதீர்கள் அதோடு கொடூரமான கோட் போட்டவனையும் நீங்கள் சந்திக்க வேண்டி வரலாம்..அவன மறந்தாலும் அந்த இடம்ங்கிற பேர்ல காட்டின ஒரு மனையையும் அவனுடைய கோட்'ஐயும் என்னால மறக்கமுடியாது..
இதுக்கு ஏம்ப்பா இப்படி ஒரு தலைப்பு'ன்னு நீங்கள் கேட்கலாம்..ஒரு ஆர்வத்துல வெச்சுட்டேன் ஐ'யம் சாரி..ஆனா ஒன்னுங்க தேவதை குடிச்சது சர்பத்தா இருக்கலாம் ஆனா துப்பினது கண்டிப்பா ஆசிட்'தான் அதில எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது..
இதுக்கு ஏம்ப்பா இப்படி ஒரு தலைப்பு'ன்னு நீங்கள் கேட்கலாம்..ஒரு ஆர்வத்துல வெச்சுட்டேன் ஐ'யம் சாரி..ஆனா ஒன்னுங்க தேவதை குடிச்சது சர்பத்தா இருக்கலாம் ஆனா துப்பினது கண்டிப்பா ஆசிட்'தான் அதில எந்த ஒரு மாற்றுக்கருத்தும் கிடையாது..
4 வம்புகள்:
இது உங்கள் அனுபவமா?
உங்கள் அனுபவமா இர்ஷாத்
என் அனுபவம்தாங்க............
கொஞ்சம் இருங்க...யாரோ கேப்பை ..நெய்னு ஏதோ சொல்றாய்ங்க!!! கேட்டுட்டு வந்து கமென்ட் எழுதறேன்.
கேப்பை & நெய் = நிலம் , அதிர்ஷ்ட பரிசு
Post a Comment