Photo License Girard
..
அழுத்தி எழுதப்பட்ட
ரஃப் நோட்டின்
தாளின் பின்புறத்தில்
எழுத்தின் அச்சியை
தடவிப் பார்க்கிறேன்
மூச்சு வாங்குகிறது..
............................................
ரெயில் வருவதாக
கூகூ வென
ஓடும் சிறுவனின்
மகிழ்ச்சிக்குள்
யாரோ ஒருவரின்
கண்டிப்பால் தடம்புரள்கிறது
அவனும் அவனுடைய
ரெயிலும்..
கூகூ வென
ஓடும் சிறுவனின்
மகிழ்ச்சிக்குள்
யாரோ ஒருவரின்
கண்டிப்பால் தடம்புரள்கிறது
அவனும் அவனுடைய
ரெயிலும்..
............................................
குளத்தின் மீது
தட்டையாக வீசப்பட்ட
கல் நாலு கால்
பாய்ச்சலில்
தவ்வி சென்றது..
தட்டையாக வீசப்பட்ட
கல் நாலு கால்
பாய்ச்சலில்
தவ்வி சென்றது..
...........................................
நண்பனுக்கு கல்யாணம்
இன்விடேஷனோடு ரத்தாகி
விடுகிறது நட்பு..
இன்விடேஷனோடு ரத்தாகி
விடுகிறது நட்பு..
...........................................
சிரிப்பும் கேலியுமாக
நகர்கிறது முதிர்கன்னியின்
பெருமூச்சுகள்..
நகர்கிறது முதிர்கன்னியின்
பெருமூச்சுகள்..
...........................................
செல்போனில் நுகர்கிறேன்
மீன்குழம்பு வாசத்தை
மீன்குழம்பு வாசத்தை
...........................................
13 வம்புகள்:
இணைத்துள்ள படங்கள் இன்னொரு கவிதை...
ஒரே கவிதை இரண்டு இடத்தில் வருகிறது... சரிபார்க்கவும்...
இரண்டு முறை ஒரே கவிதை...அதைப் பற்றிதான் என் பின்னூட்டமும். "நண்பனின் கல்யாணத்தோடு அப்போது நட்பு ரத்தானாலும் நல்நட்புகள் போதிய இடைவெளியில் பின்னும் தொடரும்...!
இன்விட்டேசனோடு ரத்தாகும் அளவுக்கு நட்பு இருந்தால் அதற்க்கு பெயர் Talking Companion இந்த Talking Companion ஐத்தான் தவராக நட்பு என நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
சரி செஞ்சுட்டேன் நண்பர்களே.. பிரபாகரன்,ஸ்ரீராம்,ஜாஹிர் நன்றிகள்..
கவிதையும் படமும் அழகு.
செல்போனில் நுகர்கிறேன்
மீன்குழம்பு வாசத்தை//
மீன் குழம்பு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சா?
ஹைகூவா?
கவிதைகள் அழகு என்பதை சொல்லும் போது அழகிய கவிதையாய் படங்கள் இருப்பதை சொல்லாமல் இருக்க முடியுமா?
சிரிப்பும் கேலியுமாக
நகர்கிறது முதிர்கன்னியின்
பெருமூச்சுகள்..
:(
supper
உங்க சைட் மட்டும் சைன் இன் ஆகுது
<<>> மிகவும் ரசித்தேன்
Post a Comment