எனக்கு வந்த தகவலின் பேரில் நான் பதிவிட்ட உதவி செய்யலாமே என்ற பதிவை தன் ப்ளாக்கில்,கூகிள் பஸ்ஸில்,ஃபேஸ்புக்கில் பகிர்ந்து மற்றவர் பார்வைக்கு கொண்டு சென்ற அத்துணை நண்பர்களுக்கும் நன்றி..அந்த மாணவருக்கு தக்க உதவி கிடைத்துவிட்டதாக நான் அறிந்த தகவலின் பேரில் உறுதி செய்கிறேன்..மகிழ்ச்சி.
_________________________________
சமச்சீர் கல்வி படித்தால் கிளார்க் வேலைக்குத்தான் போக முடியும்'ன்னு திருவாய் மலர்ந்திருக்கிறார் நம்ம கேப்டன்..அம்மாவிற்க்கு ஏதுவாக பேசாவிடில் போயஸ் கார்டன் என்கிற எழுத்தை கூட படிக்கமுடியாதென சீனியர்? வைகோ'வைவிட நன்றாக இவர் அறிந்திருப்பதன் உச்சம் இது..தன் பிள்ளை கான்வென்ட்டில் படித்தால் போதுமா அடுத்தவன் பிள்ளை எக்கேடு கெட்டால் என்னா.. அச்சச்சோ மறந்தே போயிட்டேன் பாருங்க.. எல்க் ஷன் முடிஞ்சி இவரே நினைத்து பார்க்காத அளவுக்கு சீட் ஜெயிச்சதுக்கு கண்ணு மறச்சிருச்சு.. இந்த மக்கள் மக்கள்'ன்னு இருக்கிறாங்களே அவங்களைத்தான்... உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.. கண்டிப்பா வரும்.. டோண்ட் ஒர்ரீ...
_________________________________
விகடனிலிருந்து குமுதம்,குங்குமம் வரை பணம் கட்டித்தான் ஆன்லைனில் படிக்கமுடியும் என்ற நிலையில் கிட்டத்தட்ட எல்லா வார இதழும் அப்லோடி தமிழர் பண்பாடான இலவசம் என்ற கொள்கையை எடுத்து ஃபிடிஎப் கோப்பாக சேமித்து சும்ம்மா அள்ளிக் கொடுத்திருக்கிறார் இவர்.. ஆ.வி, ஜீ.வி,குமுதம்,கல்கண்டு,நக் கீரன்,அவள் விகடன்,மோட்டார் விகடன், அப்படின்னு நடுத்தர வர்க்கத்தின் முதுகை சொறியும் அத்துணையும் இங்கே இருக்கு.. ரெண்டு நாளைக்கு கட்டாயமாய் ஒரு புத்தகத்தை அப்லோடி விடுகிறார்..எனக்கு தெரிந்து இது நல்லதுதான்.. இலவசம் என்று யார் வந்தாலும் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவு உண்டு.. இவருக்கும்.. சில லிங்க் வேலை செய்யவில்லை என்ற குறை இருப்பதை இவர் தவிர்த்தால் அதுவும் மகிழ்ச்சி..
_______________________________________
விகடனில் மூங்கில் மூச்சு தொடர் திருநெல்வேலி தமிழில் சூப்பராக இருக்கிறது.நான் தொடர்ந்து படிப்பதற்க்கு வாய்ப்புகள் அமைவதில்லை எப்படியும் விகடன் அதை புத்தகமாக போட்டுவிடுவார்கள் அப்புறம் வாங்கிக்கொள்ளலாம்.ஆனாலும் அருமையான நடையில் வெகு சுவராஸ்யமாக எழுதும் சுகாவிற்க்கு வலைத்தளமும் இருக்கிறது ஒவ்வொரு ப்ளாஷ் மெமரியும் ஏ ஒன்..அதே போல் அண்டன் ப்ரகாஷ் எழுதும் 'வலை தொழில்நுட்பமும்'அருமை எளிய தமிழில் பாமரனுக்கும் புரியும்படி இன்றைய டெக்னாலஜியை பற்றி விளக்குகிறார் அதுவும் புத்தகமாக வந்தால் (வரும்..!) வாங்கிட வேண்டிய லிஸ்ட்டில் இருக்கிறது..முன்னவரின் வலைத்தளம்..
அந்த டிசம்பர் மாத வாய் தந்தியடிக்கும் அதிகாலையில் நாயக்கர் கடையில் டீ யை குடுச்சிட்டு போட்டிருந்த சட்டை,உள் பனியனையும் தாண்டி இதயத்தை ஈரமாக்கும் குளிரில் நண்பனோடு சைக்கிளில் பேப்பர் வாங்க பஸ்ஸ்டாண்ட் MP கடைக்குப் போய் வாங்கிட்டு வீட்டுக்கு போகயில் மணி ஏழு ஆயிட்டிருக்கும்.போற வழியிலேயே கொத்தனார்,சித்தாள் வேலைகளுக்கு சேர்மன்வாடியில் நிற்க்கும் அன்றாட வாழ்வை துரத்தும் மக்கள்,அந்த குளிரிலும் வெறும் பனியனோடு செய்யது பீடியை கடைசிவரை இழுத்துக்கொண்டே இருப்பது அவர்களுக்கு ஏதோ ஒரு சொகம்,தஞ்சாவூருக்கு செல்லும் சாமியப்பா பஸ்ஸீம் வேகமான சத்தத்தோடு கிரிச்ச்சிட்டு வந்து நிற்க்கும் பஸ்ஸ்டாப்பை கடந்து நாங்கள் சைக்கிளில் போவோம்.. சைக்கிள் இருந்தவரை இருந்த பொற்காலம்,பைக் வந்ததும் இல்லாமற் போனது பெட்ரோல் விலையேற்றமா,அல்லது ஆருயிர் நண்பன் வெளிநாடு போனதா.
சைக்கிள் மெமரீஸ் # 1
______________________________________
'சைக்கிள்
வாங்கிகேட்டு
சண்டைபோட்டு
உடைத்த கதவின்
அச்சு இன்னும்
இருக்கிறது
சைக்கிளைத்தான்
காணோம் '
சைக்கிள் மெமரீஸ் # 2
________________________________________
குழந்தை சிரித்தாலே அல்லது அதன் மழலை மொழியில் எது செய்தாலும் நமக்கு அது சந்தோஷத்தை கொடுக்கும்..இங்கு ஒரு அழகான குழந்தையின் இமிடேட் சிறப்பை பாருங்கள்..
100 Kisses to this cute little one. Sooooo cute..
9 வம்புகள்:
நீங்கள் வலையில் பகிர்ந்த செய்தி மூலம் கிடைத்த பலன், ஆன்லைனில் படிக்கக் கூடிய சஞ்சிகைகள் பற்றிய பகிர்வு, மழலையின் உணர்வுகளைத் தாங்கி சுவாரஸ்யமான பதிவாக உங்கள் பதிவு வெளிவந்திருக்கிறது.
ரசித்தேன்.
இரண்டு சுவாரஸ்யமான லிங்க் கொடுத்துள்ளீர்கள். விகடனில் சுகா கட்டுரை ரசித்துப் படித்து வருகிறேன். அவர் வலைத் தளம் பற்றி இன்று அறிந்தேன். நன்றி.
நானும் சுகா எழுதும் தொடர் விகடனில் படித்து வருகிறேன் இர்ஷாத் very interesting அவரது வலைத்தளம் லிங்க் கொடுத்தமைக்கு நன்றி
//சைக்கிள்
வாங்கிகேட்டு
சண்டைபோட்டு
உடைத்த கதவின்
அச்சு இன்னும்
இருக்கிறது
சைக்கிளைத்தான்
காணோம் '
// யதார்த்தம்
சுவாரஸ்யமான பதிவு. இரு லிங்க் கொடுத்தமைக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்களில் நானும் அவற்றை படித்து வருகிரே. நீங்க லிங்க் கொடுத்திருப்பது இன்னும் உபயோகம்மா இருக்கும். நன்றி.
நல்ல பகிர்வுகள் நண்பா... குறிப்பாக kricons.blogspot.com பகிர்வுக்கு...
அந்த அதிகாலையும் சாமியப்பா பஸ் கிரீச்...எல்லாம் முன்பு இப்போது கொசு, எப்போதும் எதோ எரியும் வாடை, சாக்கடை இதுதான் அப்டேட் செய்தி அதிரையில்... ஊரை கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டானுங்க இர்சாத்...
சகோதர் ஜாஹிர்
:(
வெளில சொல்லகூடிய அளவுக்காவது விட்டு வெச்சா சரி..
Post a Comment