Kumbakonam Bus Stand..
--
சென்னை செல்வதற்காக பட்டுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் ஏறினேன்.நல்ல குஷன் பேக் சிஸ்டெமெல்லாம் இருந்து டிவியில் கார்த்திக்கும் அவரது நண்பர்களும் ஏதோ பாடிக் கொண்டிருந்தார்கள். ஜன்னலோர சீட் வாய்த்ததால் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.அரை மணி நேரத்தில் வண்டி கிளம்பியது. கிளைமேட் வேற நல்லா இருந்ததால் அந்தப் பேருந்தில் போவது ஏதோ ஒரு மகிழ்ச்சியை தந்தது. சில்லென்ற காற்று முகத்தில் அறைந்துக்கொண்டே இருந்தது வாங்கிய அறையெல்லாம் போதும் என்ற நிலையில் ஜன்னலை மூடிவிட்டேன்...வண்டி கிளம்பிய கால் மணி நேரத்தில் பக்கத்திலிருந்தவர் தூங்கிவிட்டார்!!! எப்படித்தான் சில பேருக்கு உடனேயே தூக்கம் வருகிறது என்பதை யாராவது பி.ஹெச்.டி செய்தால் நலம். குறட்டை,தோள்'ல சாய்றது போன்ற தொந்தரவு இல்லாதது என் பாக்கியம்.மதுக்கூர்,மன்னார்குடி,வலங்கைமான் வழியாக கும்பகோணம் பஸ்ஸ்டாண்ட் வந்து சேர்வதற்குள் மூணு மணி நேரம் அவுட்'டாகியிருந்தது.பத்து நிமிஷம் வண்டி நிற்கும் என கண்டக்டர் திருவாய் மலர்ந்ததால் நான் கீழே இறங்கி வாழைப்பழமும்,வாட்டர் பாட்டிலும் வாங்கிவிட்டு என் சீட்டிற்கு வந்துவிட்டேன்.நான் சீட்டில் உட்கார்ந்து இருக்கும்பொழுது ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த ஒருவன் பதற்றத்துடன் 'சார் உங்க மொபைலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுக்கமுடியுமா அவசரம் சார் என் ஃப்ரெண்டுக்கு அடிப்பட்ருச்சு ப்ளீஸ் சார்' நமக்குதான் இரக்க குணமாச்சே!' சரி நம்பரை குடுங்க என்றேன்.. இதோ தர்றேன் என்றவன் ' குடுங்க சார் நான் அடிக்கிறேன் என்றவனை நம்பி மொபைலைக் கொடுத்ததும், 'ஹலோ ஹலோ ஹலோ'ன்னு அவன் பேசியபடியே பஸ்ஸீக்கு பின்னாடி போனதும் எனக்கு பொறி தட்டியது, ஆஹா ஏதோ தில்லுமுல்லுன்னு நினைத்து பஸ்ஸை விட்டு இறங்கி தேடினேன் P.T. உஷாவுக்கு கும்பகோணத்துல ரசிகர் மன்றம்? வெச்சிருப்பான் போல, மின்னல் மாதிரி பறந்துட்டான்.. என்ன பண்றதுன்னே தெரியல,என் கவனக்குறைவுக்கு அது சாட்டையடி என நினைத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் வாங்கி கொண்டார்கள்.அங்கே என்னோடு இன்னொருத்தரும் நின்றிருந்தார் அவரது பெட்டியை எவனோ ஆட்டைய போட்டுட்டானாம்.. நல்லவேளை நான் பெட்டி கொண்டு வரவில்லை..அந்த சம்பவத்திலிருந்து அறிமுகமில்லாதவர் யாரும் ஏதும் கேட்டால் அந்த இடத்தில் நான் "பே பே பே' தான்..
6 வம்புகள்:
பஸ் பயணம் பத்தின பதிவுகளாத்தான் பெரும்பாலும் வருது? ஊருக்குப் போயிருந்தப்போ, பார்ட்-டைம் கண்டக்டர்/குருவி வேலை எதுவும் பாத்தீங்களா என்ன? :-))))))))
அருமை
இப்பிடியா ஏமாறுறது! ;)
///வண்டி கிளம்பிய கால் மணி நேரத்தில் பக்கத்திலிருந்தவர் தூங்கிவிட்டார்!!! எப்படித்தான் சில பேருக்கு உடனேயே தூக்கம் வருகிறது என்பதை யாராவது பி.ஹெச்.டி செய்தால் நலம்///
தம்பி இர்ஷாத்,
நல்ல வேலை டிரைவர் தூங்காம இருந்தரே..
வாழ்த்துக்கள்
எ[ப்படி எல்லாம் ஏமாற்றுவார் இந்த உலகிலே.எல்லோருக்கும் நல்ல பாடம்தான்.
இது ரொம்ப கவனக் குறைவான செயல் இல்லையா , நாம் தெளிவானவர்கள் என்ற எண்ணம் தான் நம் பகுத்தறிவை திரையிடுகிறது, என்னையும் சேர்த்து.
நல்ல விழிப்புணர்வான பதிவு.
பெரும்பாலும் தஞ்சாவூர் வழியாகத்தானே செல்வார்கள், ரோடும் நல்ல இருக்குமே .........
Post a Comment