சார் ப‌த்து நிமிஷ‌ம்தான் வ‌ண்டி நிக்கும்....

ந‌டு இர‌வில் விக்ர‌வாண்டியோ,மாம‌ண்டூரோ அல்ல‌து டிரைவ‌ருக்கு பிடித்த‌ ஏரியாவா அது'ன்னு க‌ண்டுபிடிக்க‌வே சிர‌ம‌மா இருக்கும் என்ன‌ க‌ல‌ர்னே தெரியாத‌ உள் ப‌னிய‌னோடு ஒரு சிறுவ‌ன் அல்ல‌து பையன் பேருந்தின் க‌ண்ணாடிக‌ளை துடைத்துக் கொண்டே 'சார் வ‌ண்டி ப‌த்து நிமிஷ‌ம் நிக்கும்' என்பான் வார்த்தையில் ப‌த்து நிமிஷ‌மானாலும் கூடுத‌லாக‌ பேருந்து நிற்ப‌து வாஸ்த‌வ‌ம்தான்.. இளையராஜாக்க‌ளும்,ஏஆர் ர‌ஹ்மான்க‌ளும் ஏண்டா இசைய‌மைச்சோம்'ன்னு நொந்து நூடுல்ஸாகிற‌ வ‌கையில் அந்த‌ மோட்ட‌ல் வாச‌லில் சிடிக்க‌ளை போட்டு ரேடியோ என்ற‌ பெய‌ரில் ஒரு டிர‌ம்மில் போட்டு பாடுற‌து ஜான‌கியா இல்ல‌ ப‌ர‌வை முனிய‌ம்மாவா என்று க‌ணிப்ப‌த‌ற்க்குள் பாட்டை மாத்திவிடுவார் அக்க‌டைக்கார‌ர்.இத‌ற்க்கிடையில் ந‌ம் ப‌க்க‌த்து சீட் வாசி ந‌ம் தோளில் அல்ல‌து கொஞ்ச‌ம் முன்னேறி ந‌ம் ம‌டியில்? கிட‌க்க‌வும் வாய்ப்பு இருக்கும் அந்த‌ள‌வுக்கெல்லாம் நான் விட‌ற‌தில்லை கொஞ்ச‌மும் இர‌க்க‌மில்லாம‌ல் ப‌ட்டென்று சொல்லிவிடும் சுபாவ‌ம் அதே போல் நானும் த‌வ‌றிகூட‌ அவ‌ர் ம‌டிக்கு முன்னேறுவ‌தெல்லாம் கிடையாது.இத‌னால்தான் ர‌யில்ப‌ய‌ண‌ங்க‌ளில் வ‌ரும் சிநேக‌ம் பேருந்தில் வ‌ருவ‌தில்லை பெரும்பாலும்.. ந‌ம்ப‌ர் ஒன்னுக்கு வ‌ந்தாலும் வ‌ராவிட்டாலும் அங்கே இற‌ங்குவ‌து ந‌ல்ல‌து ஏனென்றால் அப்போதெல்லாம் குஷ‌ன் கிடையாது எக்ஸ்ரே எடுக்க‌ எப்ப‌டி உட்காருவமோ அப்ப‌டித்தான் அந்த‌ திருவ‌ள்ளுவ‌ர் பேருந்தில் உட்கார‌ வேண்டும் முதுகெலும்பு ரெண்டும் ந‌ம்மை வெளியே கொஞ்ச‌ம் ஆசுவாச‌ப்ப‌டுத்த‌ சொல்லும்..இள‌நீர்க்க‌டையும் க‌ட்ட‌ண‌ க‌ழிப்ப‌றையும் கொஞ்ச‌ம் இடைவெளியில்தான் இருக்கும் ந‌ல்ல‌ ஒற்றுமை?. டிரைவ‌ருக்கும் க‌ண்ட‌க்ட‌ருக்கு சாப்பிடுவ‌தெல்லாம் ஃப்ரீ என்ப‌தால் இட்லி ச‌ட்னியில் ஆரம்பித்து வாச‌ல் க‌டை வாழைப்ப‌ழ‌ம் வ‌ரை ஃபுல்லா லோடை வ‌யிற்றுக்கு ஏத்திவிடுவார்க‌ள் அதனால் அவ‌ர்க‌ளை க‌டைவாசிக‌ள் முறைப்ப‌தோ ம‌ல்லுக‌ட்டுவ‌தோ அரிது..புருவ‌த்தை உய‌ர்த்தினால் இவ‌ர்க‌ள் நிறுத்தும் ஸ்டாப்பை மாத்திவிடும் அபாய‌த்தை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள்.. அப்புற‌ம் சாப்பாடு ப‌ற்றிச் சொன்னால் இட்லியை போராடித்தான் பிய்க்க‌ வேண்டியிருக்கும் இட்லிக்கே இந்த‌ க‌தியென்றால் ப‌ரோட்டாவுக்கு மாவுக்க‌ட்டு போடும் நிலைகூட‌ வ‌ர‌லாம். எந்த‌ நேர‌மும் திற‌ந்தே கிட‌க்கும் த‌ண்ணிர் தொட்டி அல்ல‌து டிர‌ம், குவ‌ளை ப‌ல‌ அடி வாங்கி பாவ‌ம் என்னை விட்டுடு என்று கெஞ்சும் நிலையில்தான் வைத்திருப்பார்க‌ள்..சுகாதார‌ம் ஏ ஒன்.. ஒருமுறை இடுப்பில் க‌ட்டிய‌ ட‌வ‌லுட‌ன் தோசைக்க‌ல்லிருந்து என்க்கு தோசை ப‌ரிமாறிய‌ அந்த‌ மாஸ்ட‌ர் முக‌த்தை ம‌ற‌க்க‌வேமுடியாது இம்மாதிரியான‌ விப‌ரீத‌ங்க‌ள் இருந்தாலும் ஜீர‌ணிக்கிர‌ ஒரே விஷ‌ய‌ம் ப‌க‌ல் நேர‌த்தில் அந்த‌ மோட்ட‌ல் இருக்கும் இட‌ம் காற்றோட்ட‌மான‌ இட‌த்தில் வைத்திருப்பார்க‌ள் அது ஒன்னுதான் என‌க்கு தெரிந்தது..எந்த‌ ஆட்சி வ‌ந்தாலும் இவ‌ர்க‌ள் வைக்கிற‌ விலைக்கு மாற்று கிடையாது ப‌ய‌ணிக‌ளும் வேற‌ வ‌ழி என்கிற‌ முறையிலே இதுவ‌ரை வாங்கி வ‌ந்திருக்கிறார்க‌ள் வாங்கிக் கொண்டிருப்பார்க‌ள் இன்ன‌மும்..அங்கே வாச‌லில் இருக்கிற‌ டீக்க‌டையில் பாலுக்கு மாடு,மாட்டோட‌ ம‌டி என் எல்லாத்துக்கும் சேர்த்தே விலை சொல்வார்க‌ள்..பெப்ஸியில் எக்ஸ்பைரி டேட் செக் ப‌ண்ணியிருக்கிறேன் ஒருமுறை க‌ரெக்டா இருந்த‌து ஆச்சரிய‌ம்..ப‌க்க‌த்திலிலுள்ள‌ டெலிபோன் பூத்தில் லோக்க‌லுக்கே எஸ்.டி.டி பில்லு வ‌ரும் (ப‌க‌ல் நேர‌த்தில்) விலையையோ த‌ர‌த்தையோ யாரும் எதிர்த்து கேட்க‌மாட்டார்க‌ள் அதுதான் ஏனென்று இன்னைவ‌ரைக்கும் புரிய‌வில்லை..அவ‌ர்க‌ள் கேட்ப‌து இருக்க‌ட்டும் இவ்ளோ பேசுற‌ நீ ஏன் கேட்க‌கூடாது என்று கேட்கும் அன்ப‌ர்க‌ளுக்கு,, 

ஆளை விடுங்க‌ள் என‌க்கு சாப்பிட‌, எழுத‌ கை வேண்டும்..
________________________________________________
ன் கையும் ரிமோட்டும் போட்ட‌ போட்டியில் வ‌ந்து நின்ற‌து இம‌ய‌ம் டிவியில் ஒரு நிக‌ழ்ச்சியில் நேய‌ர் விருப்ப‌மாம் பூங்காவில் உட்கார்ந்திருந்த‌ ஒருவ‌ரிட‌ம் டிவி விஜே,

'உங்க‌ பேரு..?'

'..........'

'என்ன‌ ப‌ன்றீங்க‌'?

'ஏதோ போய்கிட்ருக்கு' ??#$

'உங்க‌ளுக்கு லேட்ட‌ஸ்ட்டா வ‌ந்த‌ ப‌ட‌ங்க‌ளில் பிடித்த‌து?'

'க‌ள‌வாணி'

'த‌மிழ்லேயே ரொம்ப‌ பிடித்த‌ ப‌ட‌ம் எது?'

'திருட்டுப‌ய‌லே'..


இப்போ அவ‌ர் எதில் ஃபுரோப‌ஷ‌ன‌ல் என்ப‌து உங்க‌ள் க‌ணிப்பிற்க்கே விட்டுவிடுகிறேன்..


ம‌க்க‌ள் தொலைக்காட்சியில் 'யாருக்கு ஆயிர‌ம்' நிக‌ழ்ச்சி அருமை அதைவிட‌ அந்த‌ நிக‌ழ்ச்சியை தொகுத்த‌ளிப்ப‌வ‌ர் (பெய‌ர் தெரிய‌வில்லை) த‌மிழை இவ்வ‌ள‌வு அழ‌காக‌ உச்ச‌ரிப்ப‌தில் அந்த‌ த‌மிழ் மேலேயே ரொம்ப‌ ஆசை வ‌ந்திடுவ‌து அவ‌ரின் வெற்றி த‌மிழின் வெற்றி..வ‌ட‌நாட்டு சாய‌ல் அவ‌ர் முக‌த்திலிருக்கிற‌து..ரொம்ப‌ அற்புத‌ம்..வாழ்த்துக்க‌ள்..

தே ம‌க்க‌ள் தொலைக்காட்சியில் 'கொஞ்ச‌ம் சேட்டை கொஞ்ச‌ம் அர‌ட்டை' நிக‌ழ்ச்சியில் அதை தொகுத்த‌ளிப்ப‌வ‌ர் திருநெல்வேலி பாஷையில் பேசுவ‌து சூப்ப‌ர். உதார‌ண‌மாக‌ ஒருவ‌ரிட‌ம்,

'அண்ணே இந்த‌ 'ஹெட்மாஸ்ட‌ர்' அப்ப‌டின்னு சொல்லுதோம்'ல‌ அதுக்கு த‌மிழ்'ல‌ என்னேன்னே பேரு'?

'ஹெட்மாஸ்ட‌ர்னா..(யோசித்துவிட்டு)பிரின்ஸிபாலு'ன்னு அர்த்த‌ம்' :)

'அதாவ‌து ஹெட்மாஸ்ட‌ர்னாஆஆஆஆ த‌மிழ்'ல‌ பிரின்ஸிபால்'ன்னு அர்த்த‌ம்'யா'ன்னு அவ‌ர் கேம‌ராவை பார்த்து சொன்ன‌தும் ந‌மக்கு வ‌யிற்றை புண்ணாக்கிவிடுகிற‌து


__________________________________________________
Take a Look at our Local Buses :)









__________________________________________-

Finally  இதுக்கும் இய‌ந்திர‌ம் வ‌ந்தாச்சு..

______________________________

என‌க்கு தெரிந்து த‌மிழ்நாடு அர‌சு பேருந்துக்கென்றே ஒரு வ‌லைப்பூ..முடிந்த‌வ‌ரை எல்லா கோட்ட‌த்தையும் சேர்த்திருக்கிறார்க‌ள் அதுவும் புகைப்ப‌ட‌த்தோடு..


Post Comment

17 வம்புகள்:

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

தலைப்பைப்பார்த்து விட்டு எங்கோ அடிக்கடி கேட்ட வசனமாக இருக்கே என்று தொடர்ந்து படித்தால்...100சதவிகிதம் கரெக்ட் இர்ஷாத்.இன்னொரு சோகம் என்ன வென்றால் திருவள்ளுவர் பஸ்.அரசு விரைவு பேருந்துகள் தான் கேட்பதற்கு ஆள் இன்றி இப்படி மோட்டல்களில் நிறுத்துகின்றார்கள் என்றால் தனியார் ஆம்னி பஸ்கள் கூட அங்குதான் நிறுத்தப்படுகின்றது.சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் நடிகர் ராஜேஷின் ஹோட்டல் ஒன்று உண்டு.சுத்தமும்,சுகாதாரமும் மிளிரும் வண்ணம் இருக்கும்.ஆனால் அது போன்ற ஹோட்டல்களில் நிறுத்தாமல் பயணிகளை இப்படி அவதிக்குள்ளாக்குகின்ற்னர்.மிகவும் தெரிந்த ஒரு ஆம்னி பஸ் உரிமையாளரிடம் கூட இது பற்றி பேசிவிட்டேன்.ம்ஹும்..டிரைவர் வைத்ததுதான் சட்டம் போலும்:-(

ஸாதிகா said...

அட..வடை போடுவதற்கும் ஒரு இயந்திரமா..இதுவரை அந்த படக்காட்சியை மூன்று முறை பார்த்து விட்டேன்.

Ahamed irshad said...

ஆமாங்க‌ ஸாதிகா அக்கா..ரொம்ப‌ அநியாய‌மான‌ இட‌த்திலேதான் வ‌ண்டிய‌ நிறுத்துவாய்ங்க‌..

மதுரை சரவணன் said...

நல்ல மாசாலத் தனமாம சுவையான பதிவு... வாழ்த்துக்கள்

sriram said...

அந்த வீடியோவில் செய்யப் படுவது வடை போன்று தோன்றினாலும் அது Donut என நினைக்கிறேன்.
ஆனால் இதே சாதனத்தில் வடை மாவைப் போட்டால் தானியங்கி வடை இயந்திரம் தயார்...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

இமா க்றிஸ் said...

உங்க ஊர் பஸ் உள்ளயும் கூட்டிப் போய் காட்டிட்டீங்க இர்ஷாத். தாங்க்ஸ். ;)

டோநட் மேக்கர்... எங்க சுட்டீங்க? அது வேலை செய்யும் விதம் சுவாரஸியமா இருக்கு.

எல் கே said...

அரசு பேருந்துகள் மாமண்டூரில் நிறுத்த வேண்டும் என்பது ரூல் . அங்க மட்டும் நல்லா இருக்குமான்னு கேக்காதீங்க. விக்கிரவாண்டி அளவுக்கு மோசம் இல்லை.

சாதிகா அக்கா, எனக்கு தெரிந்து கே பி என் , இந்த மாதிரி மோட்டல்களில் நிறுத்தவது இல்லை

A.R.ராஜகோபாலன் said...

மிக உண்மையான பதிவு , பணத்துக்காக மட்டுமல்லாது அந்த சுகாதாரத்தை நினைத்தே பல முறை பசியோடு சென்னை வந்து சேர்ந்திருக்கிறேன் இர்ஷாத் .
நல்ல பதிவு எந்த ஆட்சி வந்தாலும் போர்டு மட்டும் தான் மாறும் நிலைமை அப்படியே இருக்கும் , நல்ல பதிவு இர்ஷாத்

அப்புறம் அந்த வடை ..............
என் குடும்பமே பார்த்து அதிசயித்து மகிழ்ந்த காணொளி
அதற்கும் நன்றி

r.v.saravanan said...

சுவையான பதிவு இர்ஷாத்

ZAKIR HUSSAIN said...

இந்தியாவில் எல்லாம் மாறிடுச்சி ..இன்னும் இது மட்டும் மாறலெ...
[ "சிவாஜி' திரைப்படத்தில் எழுத்தாளர் சுஜாதாவின் வசனம், இந்த ஆர்டிக்கிள் க்கு ரொம்ப பொருத்தம்]

Ahamed irshad said...

ஸ்ரீராம் அவ‌ர்க‌ளே,

நீங்க‌ சொன்ன‌துபோல் அது Donut சுடுவ‌துதான்..

இமா..உங்க‌ள் குழாய்(யூட்யூப்)ல் சுட்ட‌து :)

ப்ர‌த‌ர் ஜாஹிர், உங்க‌ க‌ருத்தோடு தாறுமாறாக‌ ஒத்துபோகிறேன்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல ரவுண்டு அப்.. வடை மெசின் சூப்பர்...:)

நாடோடி said...

ப‌த்து நிமிச‌த்துல‌ ர‌வுண்டு க‌ட்டி நீங்க‌ளும் ப‌டிக்க‌, சிந்திக்க‌‌ வைக்கிறீங்க‌ளே.. சூப்ப‌ர் இர்ஷாத்.

ஸாதிகா said...

உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

எல்லோருக்கும் இருக்கும் உணர்வு. அருமையாக எழுதியுள்ளீர்கள்.

புரோட்டா - 5 ரூபாய், அதற்கு முட்டை குருமா - 30 ரூபாய் என்று கொள்ளை அடிப்பார்கள். விழுப்புரம் டெப்போ ஒரு மோட்டல் நடத்துகிறார்கள், சுத்தம் சுகாதாரத்தோடு விலையும் ஓரளவு பரவாயில்லை.

அம்பாளடியாள் said...

வணக்கம் அன்பு உறவே இன்றுதான் முதன்முறையாக
உங்கள் வலைத்தளம் வந்துள்ளேன் அதனால் உங்கள்
ஆக்கங்கள் சிறப்புற வாழ்த்தி விடை பெறுகின்றேன்
மிக்க நன்றி தங்களின் அருமையான பகிர்வுகளுக்கு.....

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates