12' O CLOCK.....

 --

எக்ஸ்ப்ர‌ஸ் அவென்யூ..


' ஹேய் ஸ்வேத்.. '



திரும்பினால் அர‌விந்த்.



' ஆல்மோஸ்ட் நைன் எல்லாத்திலேயும் லேட் ப‌ன்ற‌து உன‌க்கு வியாதியா? '


 

' ஹேய் லிச‌ன் மானேஜ‌ர் புதுசு அவ‌ர்கிட்ட‌ ப‌ர்மிஷ‌ன் வாங்கிற‌து க‌ஷ்ட‌ம்டா '


வார்த்தையில் ச‌மாதான‌ம் ஆகாத‌வ‌ள் ஐநூறு செல‌வில் ச‌மாதான‌ம் ஆனாள். விளைவு கையில் க‌வ‌ரிங் பேங்க‌ல்ஸ்..



'இன்னிக்கு நீ ப‌ஸ்'ல‌ இல்ல‌ ஆட்டோவில் போய்க்கோ நான் நாளைக்கு வ‌ந்து பார்க்கிறேன்'



ரொமான்ஸில் ரெண்டு பேரின் க‌ண்க‌ளும் ஊறித்திளைத்த‌து..கொஞ்ச‌ம் ஓவ‌ராக‌வே திளைக்க‌ மொபைல் ரிங்கிய‌து..எடுத்தான்,



 '....................'


' இதோ வ‌ந்திடுறேன் '



ஓகே ஸ்வேத் டேக் கேர் வ‌ர்றேன்..பை..



ஆட்டோ பிடித்து வீடு வ‌ந்து சேர‌ ம‌ணி ப‌த்தை நெருங்கிவிட்டிருந்த‌து..



ஸ்வேதா ஐ.டி கேர்ள் த‌னியார் க‌ம்பெனியில் ந‌ல்ல‌ ச‌ம்ப‌ள‌த்துட‌ன் கூடிய வேலை த‌னி ஃப்ளாட் எடுத்து த‌ங்கியிருந்தாள்.. இன்ட‌ர்வியூவுக்கு போன‌ ச‌ம‌ய‌த்தில் அர‌விந்த‌ அறிமுக‌மாகி இன்று ப‌ர‌ஸ்ப‌ர‌ம் வாடா,போடி என்ற‌ நிலை வ‌ரை வ‌ந்தாச்சு, அடுத்த‌ நிலை வேறென்ன‌ பாழாய்போன‌ காத‌ல்தான்..



சாவியை எடுத்து க‌தவை திற‌ந்து உள்ளே போய் ஃபிரிட்ஜிலிலுள்ள‌ பிஸ்லெரியை ஓரே மூச்சில் கால்வாசி குடித்துவிட்டாள் சோபாவில் சாய்ந்தாள்.. அத்துமீறிய‌ க‌ளைப்பு..



ச‌ர‌லென்று யாரோ பின்னால் ஓடின‌து போன்ற‌ உண‌ர்வு...



உட‌னே திரும்பாம‌ல் மெதுவாக‌ த்..திரும்பி பார்த்தாள்..



பிர‌மை..ஆனால் ம‌ன‌சு ச‌மாதான‌மாக‌வில்லை..



ம‌றுப‌டியும் ஃப்ரிட்ஜில் போய் பிஸ்லெரியை எடுக்க‌ முற்ப‌டுகையில்...



ப‌ட்.......................... ப‌வ‌ர்க‌ட்..



வெளிச்ச‌த்திலிருந்த‌ கொஞ்ச‌ம் தைரிய‌மும் இருட்டில் ஓடிப் போயிருந்த‌து.மொபைலை எங்கே வைத்தோம் என்று தேடுகையில் ஜ‌ன்ன‌ல் க‌த‌வை மூடும் ச‌த்த‌ம் ந‌ல்லாவே கேட்க‌வே ஏதோ ந‌ட‌க்க‌ப்போவ‌து உறுதின்னு ம‌ன‌சுக்குள்ளே சொல்லிய‌ப‌டி மெழுகுவ‌ர்த்தியை ஏற்றி நிமிர்ந்து பார்க்கையில் ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌த்தில் ஒரு உருவ‌த்தின் நிழ‌ல் தெரிந்த‌து..



' யார‌து   யார‌து '


உருவ‌த்தின் நிழ‌லில் அசைவில்லை..



ஜ‌ன்ன‌ல் ப‌க்க‌ம் போக‌வும் ம‌ன‌ச‌ள‌வில் த‌யாரில்லை ப‌ய‌ம்  இருள்  ப‌ய‌ம்..


இத‌ய‌த்தை ல‌ப் ட‌ப் போட்டு தாக்கிக்கொண்டிருந்த‌து..மெழுகுவ‌ர்த்தியை கையிலேயே வைத்த‌ப‌டியே ஒரே இட‌த்தில் ஆணிய‌டித்த‌து போல் நின்றாள் க‌ண்க‌ள் அந்த‌ உருவ‌ம் இருந்த‌ திசை நோக்கியே நிலைத்திருந்த‌து..



இப்போது உருவ‌த்தின் நிழ‌லில் அசைவு..



த‌ன்னை நோக்கி வ‌ருவ‌தை உண‌ர்ந்த‌வ‌ள் வேக‌மாக‌ ந‌ட‌ந்து ரூமிற்க்குள் சென்று க‌த‌வை பூட்டிக் கொண்டாள்..


' த‌ட்  த‌ட்  த‌ட்  த‌ட் ' அவ‌ளின் அறைக்க‌த‌வு ஓங்கி வேக‌மாக‌ த‌ட்ட‌ப்ப‌ட்ட‌து.. 



ஒரு கையில் மெழுகுவ‌ர்த்தியை வைத்த‌ப‌டி,



'ஹெல்ப் மீ    ஹெல்ப் மீ '  என‌ ஹைடெசிப‌லில் க‌த்த‌ தொட‌ங்கி அழ‌ ஆர‌ம்பித்துவிட்டாள்.


ஒரு கையில் மெழுகுவ‌ர்த்தியை வைத்த‌ப்ப‌டி அவ‌ள் க‌த‌றிக் கொண்டிருக்க‌.....



திடீரென்று ஒரு கை அவ‌ள் தோளில் விழுந்து அவ‌ள் கையிலிருந்த‌ மெழுகுவ‌ர்த்தியை ஊதி அணைத்த‌து..




'......................................' 



'................................'



பேச்சே வ‌ராம‌ல் அப்ப‌டியே ம‌ய‌ங்கி விழுந்தாள்..



டிரிங் டிரிங் மொபைல் அல‌றிய‌து... ப‌டீர் வெளிச்ச‌ம்..க‌ர‌ண்ட் வ‌ந்த‌து இல்லையில்லை வ‌ர‌வ‌ழைக்க‌ப்ப‌ட்ட‌து..



11:59:59 நொடி.......  12 ம‌ணி..



' ஹேப்பி ப‌ர்த்டே டூ யூ '

' ஹேப்பி ப‌ர்த்டே டூ யூ '

' ஹேப்பி ப‌ர்த்டே டூ யூ '

' ஹேப்பி ப‌ர்த்டே டூ மைடிய‌ர் ஸ்வேதா '

' ஹேப்பி ப‌ர்த்டே டூ  யூ...'


கோர‌ஸாக‌ பாடினார்க‌ள் ப்ர‌ஷாவும்,ஜெனிப‌ரும் ஸ்வேதாவின் ப‌ள்ளி,க‌ல்லூரி தோழிக‌ள்..ஸ்வேதாவை அவ‌ர்க‌ள் வாழ்த்த‌ அதிர்ச்சியிலிருந்த‌வ‌ள் இய‌ல்பு நிலைக்கு உட‌னே வ‌ர‌ இய‌ல‌வில்லை..



உலுப்பினார்க‌ள்..ஹ் ஹீ ஹீம்.. உட‌ம்பு அசைந்த‌தே த‌விர‌ ஒரு வார்த்தைகூட‌ அவ‌ளால் பேச‌ இய‌ல‌வில்லை முய‌ற்ச்சித்தாள்... முடிய‌வில்லை..



ஈ.என்.ட்டி ஸ்பெஷ‌லிஸ்ட் மாணிக்க‌வாச‌க‌ம் அவ‌ளுக்கு இனி பேச்சு வ‌ர‌ வாய்ப்பில்லை என‌ உறுதிப்ப‌டுத்தினார்..



நேற்று ப்ரஷா,ஜெனிப‌ர் இருவ‌ரிட‌மும் சொன்னான் அர‌விந்த்,



'அவ‌ள் ப‌ர்த்டேயை வித்தியாச‌மா செலிப்ரேட் ப‌ண்ண‌னும்....' 



Post Comment

8 வம்புகள்:

Raghu said...

Good Attempt!

A.R.ராஜகோபாலன் said...

அத்துமீறிய
அதிர்ச்சியை
அழகாய்
காதலாய்
திகிலாய்
நட்பாய்
சோகமாய்
சொன்ன விதம்
அருமை நண்பரே

ஸாதிகா said...

வித்தியாசமான சிறுகதை.

அப்துல்மாலிக் said...

ஷாக் ட்ரீட்மெண்ட்னு சொல்றது இதைதானோ, கலக்கல்

ஷர்புதீன் said...

இப்ப நீங்க வேற பீதிய கிளப்ப கிளம்பிட்டீங்களா?

Thenammai Lakshmanan said...

அடப்பாவிகளா.பிறந்தநாள் அன்னிக்கு ஒரு பிள்ளைய ஊமையாக்கிட்டீங்களா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஆஹா... சில சமயம் சர்ப்ரைஸ் இப்படியும் முடியும் போல இருக்கே... கொடுமை தான்

ஸ்ரீராம். said...

"பகீர்"

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates