மாங்காயும் ம‌ழையும்...

Thanks For Photo : Ravages

அடுத்த‌ நாள் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு ம‌ட்ட‌ம் போட‌னும் அப்போ பாட்டி வீட்டிலிருந்தேன். காலையில் ப‌டுக்கையை விட்டு எழாம‌ல் அப்ப‌டியே வ‌யித்து வ‌லிபோல் ப‌ண்ண‌ ஆக்டிங் தோல்வியில் முடிய‌, ம் தோல்வியே வெற்றியின் முத‌ல்ப‌டி'ன்னு நினைத்துக்கொண்டிருந்த தீவிர‌ சிந்திப்பில் லீவுக்கு ஹெட்மாஸ்ட‌ரின் கையை ஒடிக்க‌வேண்டியிருந்த‌து 'ஆமாம்மா நான் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு போயிக்கிட்டு இருந்தேனா அப்ப‌ போற‌ வ‌ழியில் ஹெட்மாஸ்ட‌ர் மேல‌ லாரி?? உர‌சிருச்சு அத‌னால‌ அவ‌ரு கையில் அடிம்மா என்று அடிச்ச‌ உட்டால‌க்க‌டியில் பாட்டி ந‌ம்பிவிட்டாள் 'அந்த‌ லாரி திரும்பி அதே வ‌ழியில்தாம்மா வ‌ரும் நான் போட்டா' என்ற அடுத்த‌ சென்டிமென்ட் ரீவிட்டில் ம‌ன‌மிற‌ங்கி நாளைக்கு போய்க்கோ என்று சொன்ன‌துதான் தாம‌த‌ம் வெளியே கிள‌ம்பியாச்சு..அப்போ ப‌லிங்கி(கோலி) வெளையாட்டு கிரிக்கெட் அள‌விற்க்கு பிர‌ப‌ல‌ம், ஜ‌ன்ன‌ல் க‌ம்பிபோல் த‌ரையில் கோடுபோட்டு பேந்தா' என்னும் அதிஅற்புத‌மான‌ விளையாட்டு எங்க‌ ஏரியாவில் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டு எல்லோராலும் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ பேச‌ப்ப‌ட்ட‌து. என் தோஸ்துக‌ள் ரெண்டு பேர் மட்டும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த‌ன‌ர் ம‌த்த‌ ப‌ச‌ங்க‌ளெல்லாம் ப‌ள்ளிக்கூட‌த்துக்கு போயிருந்தார்க‌ள் பாவ‌ம் அவ‌ங்க‌ வீட்டில் ஏமாளிக‌ள் இல்லை போலும்.அப்ப‌வே மாட்ச் ஃபிக்ஸிங் எல்லாம் தேன்மிட்டாய்,எல‌ந்த‌ வ‌டையோடு அமோக‌மாக‌ இருந்த‌து. ஒரு க‌ட்ட‌த்தில் ப‌லிங்கி(அ)கோலி விளையாட்டு போர‌டிக்க‌, உச்சிவெயில் ம‌ண்டை'ய‌ பிள‌க்கும் ச‌ம‌ய‌த்திலும் எங்க‌ மூவ‌ர‌ணி மாங்காய் அடிக்க‌ கிள‌ம்பிய‌து..எங்க‌ வீட்டுக்கு நான்கைந்து வீடு த‌ள்ளி ஒரு வீட்டில் ச‌ப்போட்டா ம‌ர‌ம் வ‌ள‌ர்த்துவ‌ந்தார்க‌ள் அதில் வள‌ரும் ச‌ப்போட்டாக்க‌ள் எங்க‌ளுக்கு ரொம்ப‌ ச‌ப்போர்ட்டாக‌ இருக்க‌ நாளடைவில் அந்த‌ ம‌ர‌த்தையே பிடுங்கிவிட்டார்க‌ள் அவ‌ங்க‌ வீட்டுக்கு பின்னாடி வைத்திருப்ப‌தாக‌ எங்க‌ள் குழுவின் ஒற்ற‌ன் த‌க‌வ‌ல் அளித்தான்.ச‌ரி இப்போ டார்கெட் மாங்காய்,அதுக்கு ந‌டைப்ப‌ய‌ண‌ம் கொஞ்ச‌ தூர‌ம் போக‌வேண்டியிருந்த‌து..மாங்காய் அடிக்கும் வ‌ர‌லாற்றில் எங்க‌ள் குழு வ‌கை தொகையாய் மாங்காய் ம‌ர‌ ஓனரிட‌ம் மாட்ட‌ 'ம‌றுப‌டி இங்க‌ வ‌ந்தீங்க‌ன்னா முட்டியை பேத்துருவேன்'னு சொல்லி முதுகில் அடித்த‌ அச்சு ஞாப‌க‌ம் இருந்தாலும் அடிச்ச‌ மாங்காயின் ருசி எல்லாத்தையும் ம‌ற‌க்க‌டித்து அந்த‌ ம‌ர‌ ஓன‌ரையே 'அபால‌ஜி' ப‌ண்ண‌ சொன்ன‌து. நெருங்கிட்டோம் அப்போதெல்லாம் க‌ல்லைக் கொண்டுதான் எறிவோம் க‌வ‌ட்டை(அட்டைபில்)வாங்கும் அள‌வுக்கு எங்க‌ள் ஃபைனான்ஸிய‌ல் ரிப்போர்ட் அவ்வ‌ள‌வு சிற‌ப்பா இல்லை, ஆத‌லாம் கையே துணை க‌ல்லே வ‌ழி என்ற‌ அடிப்ப‌டையில் குறிவைத்து அடித்த‌தில் வெற்றி கிட்டி மாங்காய் கிடைத்து வெற்றிக‌ர‌மாக‌ வீட்டுக்கு திரும்புகையில் ம‌ர‌த்தின் ஓன‌ர் வ‌ர‌வில்லை ஆனால் அவ‌ரின் ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ர் கையே த‌டுப்பாக‌ கொண்டு எங்க‌ளை நிறுத்தி 'எத்த‌னை மாங்காடா அடிச்சீங்க‌ ' என்றார். எங்க‌ள‌து ப‌திலை எதிர்பாராம‌ல் 'ரெண்டு மாங்காய‌ கொடுத்திட்டால் நீங்க‌ள் ஓடிற‌லாம்'.. இருந்த‌தே மூணுதான்.எதிர்த்து ச‌ண்டை போடுற‌ அள‌வுக்கு அவ‌ர் ச‌ரிச‌ம‌மில்லை நாங்க‌ ஸ்கூல் ப‌ச‌ங்க‌ அவ‌ர் ரெண்டு பேரை பெத்து ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டுருந்தார்.. ரெண்டு மாங்காயை கொடுத்துவிட்டு ப‌ரிதாப‌மான‌ முறையில் ஒரு மாங்காயை ஆளுக்கு கொஞ்ச‌ம் என்ற‌ ஒப்ப‌ந்த‌ப்ப‌டி சாப்பிட்டு கொண்டோம் இந்த‌முறை மாங்காய் க‌ச‌ந்து எங்க‌ளின் முக‌ங்க‌ள் அஷ்ட‌கோண‌லில் போய் ஒருத்த‌ருக்கு ஒருத்த‌ரின் க‌ண்க‌ள் க‌ண்ண‌டித்துக் கொண்ட‌ன‌.
************************
சோக‌ த‌ருண‌த்தில் உதிர்த்த‌து..

ஊதிவிட்ட‌
சிக‌ரெட்
புகையின்
வ‌ட்ட‌த்திற்குள்
தெரியுது
வாழ்க்கை..
************************
எங்க‌ள் ஊரின் ம‌ழைச்ச‌ம‌ய‌த்தில் எடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ட‌ங்க‌ள்..

Thanks For Photo : Musthafa

Post Comment

9 வம்புகள்:

Jaleela Kamal said...

படங்கள் அருமை,
பதிவு சிறிது பத்தி பிரிச்சி எழுதி இருக்கலாமே.

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப சுவாரஸ்யமா எழுதியிருக்கிங்க இர்ஷாத்.

ஊர் படங்கள் அருமை.

ஹைக்கூ செம.

நாங்கள் நலம்.ஊரில் அனைவரும் நலமா?

Asiya Omar said...

ஆமா உங்க ஊர் மழை இவ்வளவு தானா? மாங்காய் அடித்து சாப்பிடும் பொழுது அதன் ருசியே தனிதான்.சின்ன வயது நினைவுகள் பகிர்வு நல்லாயிருக்கு.

இமா க்றிஸ் said...

இர்ஷாத், சுவாரஸ்யமா இருக்கு போஸ்டிங். படங்களும் சுப்பர். லீவுல இருந்தாலும் பாத்துட்டு பார்க்காத மாதிரி போக முடியல.

ஏங்கிப் போய்ட்டேன். அதெப்புடி ஒரே பந்தில மூணு மாங்கா அடிச்சு இருக்கீங்க!!!!

இமா க்றிஸ் said...
This comment has been removed by the author.
நாடோடி said...

ம‌ல‌ரும் நினைவுக‌ள் ரெம்ப‌ ந‌ல்லாயிருக்கு இர்ஷாத்..

A.R.ராஜகோபாலன் said...

பேந்தாவும் பளிங்கியும் என்னை
பின்னோக்கி குலுங்கி குலுக்கி அழைத்து சென்றது .
தேன் மிட்டாய் , இலந்த வடை இரண்டும்
இன்னும் நான் இழக்காத சுக சுவைகள்
பழுத்த பதிவுகள் உங்கள் புகைபடங்களும் சேர்த்துதான் இர்ஷாத்

Unknown said...

பளிங்கு விளையாட்டு அனுபவமும் மாங்காய் அடிக்கும் அனுபவமும் அருமை.உங்க ஊர் படங்களும் சூப்பர்ங்க.

மனோ சாமிநாதன் said...

மலரும் நினைவுகளும் புகைப்படங்களும் அருமை இர்ஷாத்!

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates