ஆறு ம‌ன‌மே ஆறு..


Thanks For Photo : Vinoth
 
மார்க‌ழி மாத‌ ம‌த்தியில் உத‌டுக‌ள் வெடிப்ப‌ட்டிருக்கும் ஓர் அதிகாலை இன்னைக்கு ஒரு ப‌சுமையான‌ லொகேஷ‌னுக்கு போக‌னும் என்ற‌ தீர்மான‌ம் ம‌ன‌தில் இருந்த‌து எங்க‌ மாவ‌ட்ட‌மான‌ நெற்க‌ள‌ஞ்சிய‌த்தில் ப‌சுமைக்கு சொல்ல‌வா வேண்டும் அப்ப‌டி ஒரு அருமையான‌ இட‌மாக‌ எங்க‌ ஊரிலிருந்து கொஞ்ச‌ நேர‌ பைக் ப‌ய‌ண‌த்தில் அழ‌கான‌ இட‌ம் இருந்த‌து ஒரு ஆல‌ம‌ர‌த்தில் அடியில் பைக்கை பார்க் செய்திட்டு இற‌ங்கி ரெண்டு கையையும் விரிச்சி ஒரு ஆழ்ந்த‌ மூச்சை இழுத்த்த்த்து விட்டேன் இய‌ற்கை காற்று,சுற்றிலும் ப‌ச்சை ப‌ச‌லேன்ற‌ வ‌ய‌ல்வெளி,அமைதியான‌ வானிலை என்று சொல்ல‌ சொல்ல‌ இனிக்கின்ற‌ ஒவ்வொன்றும் அற்புத‌மாக‌ இருந்த‌து ம‌ண்ணின் ம‌ன‌மும்,ஈர‌க்காற்றின் வாச‌மும் ம‌ன‌தை குளிர்ச்சி செய்த‌து.அந்த‌ வ‌ய‌ல்வெளியிலிருந்து ஒரு பெரிய‌வ‌ர் இடுப்பில் க‌ட்டியிருந்த கைலியை முழ‌ங்காலுக்கு இற‌க்கிவிட்டு தோளில் போட்டிருந்த‌ துண்டில் முக‌த்தை துடைத்துவிட்டு வ‌ர‌வும் நானும் அவ‌ரிட‌ம் பேச‌லாம் என்ற‌ எண்ண‌த்தில்,
'ஏங்க‌'
'என்ன‌ த‌ம்பி'
'நீங்க‌ இங்க‌தான் வேலைபாக்குறீங்க‌ளா?'
'ஆமா த‌ம்பி ஒரு சின்னதா நிலம் இருக்கு அத‌வெச்சிக்கிட்டுத்தான் பொழுத‌ ஓட்றேன்' ஏதோ ஒரு க‌ளைப்பு பேச்சில் அவ‌ரிட‌ம்..
'ச‌ரி இப்போ எங்க‌ போறீங்க‌?'

'ஒரு டீ'ய‌ குடிச்சிட்டு வ‌ந்தாத்தான் ம‌றுவேலை ஓடும் அதுக்குத்தான் போறேன்' என்ற‌வ‌ரிட‌ம்,
'இங்க‌ எங்க‌ இருக்குது டீக்க‌ட‌?'
'ப‌த்து ப‌தினைஞ்சு நிமிஷ‌ம் ந‌ட‌ந்தா அதோ அந்த‌ முக்கு வ‌ளைவு'ல‌ ஒரு க‌ட‌ இருக்கு'
'ச‌ரி வாங்க‌ வ‌ண்டி'ல‌ போலாம்'
'இல்ல‌ த‌ம்பி'
'வாங்க‌ ஒன்னும் பிர‌ச்ச‌னையில்ல‌'
ந‌டைக்குத்தானே ப‌த்துநிமிஷ‌ம் பைக்குக்கு ரெண்டு மூணு நிமிஷ‌ம்தான்.காளிமார்க் சோடா,ப‌ழைய‌ பிலிப்ஸ் ரேடியோ,என்ன‌ க‌ல‌ர்ன்னே தெரியாத‌ பாய்ல‌ர், நாலு வ‌டை ம‌ட்டுமே இருந்த‌ கூடை, ஒரு பெஞ்ச் என‌ கிராம‌த்து டீக்க‌டைக்குன்டான‌ அத்த‌னை அம்ச‌ங்க‌ளும் பொருந்திருந்த‌து அந்த‌க்க‌டை.ஏதோ ஒரு பேரை சொல்லிவிட்டு ரெண்டு டீ ஆர்ட‌ர் ப‌ண்ண‌தும் சொற்ப‌ நேர‌த்திலேயே டீ கைக்கு வ‌ந்த‌து.

'ரெத்தின‌ம் யாரு இவ‌ரு?' டீக்க‌டை அந்த‌ப் பெரிய‌வ‌ரைக் கேட்க‌ அப்பொழுதுதான் அந்த‌ பெரிய‌வ‌ரின் பேரு ர‌த்தின‌ம் என்று தெரிந்த‌து இவ்ளோ நேர‌ம் பேசினோம் பெய‌ரைக் கேட்க‌லையே இதான் 'ந‌க‌ர‌த்து பாணி'
'ந‌ம‌க்கு தெரிஞ்ச‌ த‌ம்பி' கொஞ்ச‌ நேர‌ம்தான் இருக்கும் அதுக்குள்ளேயே 'தெரிஞ்ச‌ த‌ம்பியாகிருந்தேன்' ஓ இதான் 'கிராம‌த்து பாணியா..

டீயைக்கு குடிச்சிட்டு ம‌றுப‌டியும் திரும்ப‌ அதே இட‌த்துக்கு வ‌ந்த‌தும்,
'த‌ம்பி நீங்க‌ எந்த‌ ஊரு'ன்னு அவ‌ரு கேட்க‌,
'ப‌க்க‌த்து ஊருதான்'
'இங்க‌ எதுக்கு வ‌ந்தீங்க‌?
'என‌க்கு இந்த‌ மாதிரி இட‌ங்க‌ளை பார்க்கிற‌துக்கு பிடிக்கும் அமைதியான‌ இட‌ங்க‌
ளை ம‌ன‌சு வ‌லைப்போட்டு தேடுதுங்க‌' என்றதும்,
'உங்க‌ளுக்கு என்ன‌ த‌ம்பி எல்லாமே வ‌ச‌தியா இருக்குது வ‌ண்டி'ல‌ போறீங்க‌,ந‌க‌ர‌த்துல‌ வாழ்றீங்க‌ 'அப்ப‌டீன்னு அவ‌ர் சொல்ல‌வும்,
'எங்க‌ளைவிட‌ நீங்க‌தாங்க‌ வ‌ச‌தியா வாழ்றீங்க‌'
'நாங்க‌ளா?'
'ஆமா இய‌ற்கையான‌ காற்று,நீங்க‌ளே விதைச்சு நீங்க‌ளே சாப்பிடுறீங்க‌ எல்லா விஷ‌ய‌த்திலேயும் இய‌ற்கையோடு ஒன்றி வாழ்றீங்க‌ இதுக்கு மேல‌ என்ன‌ வேனும் உங்க‌ளுக்கு, நாங்க‌ வாழ்'ற‌ வாழ்க்கை ப‌டோப‌ட‌மாத்தான் தெரியும் அந்த‌ ப‌டோப‌ட‌த்துக்கு நாங்க‌ கொடுக்கிற‌ விலையை சொன்னா தாங்க‌மாட்டீங்க‌'
'என்ன‌ த‌ம்பி இவ்வ‌ள‌வு வேக‌மா ஆவேச‌ப‌டுறீங்க‌'

'ஆவேச‌ப‌ட‌லை உண்மையைச் சொன்னேன் நக‌ர‌த்துக்கு வாழ்க்கையில் எல்லாமே போலி தான் வாழ்ற‌துக்காக‌ என்ன‌ வேண்டுமானாலும் செய்ய‌க்கூடிய‌ நிலைதான் இப்ப‌ இருக்கு,உங்க‌ளைப் பாருங்க‌ காலையிலேயே எழுந்து தூக்கிச்ச‌ட்டியோடு வ‌ய‌லுக்கு வ‌ந்து ப‌தினோரு ம‌ணிக்கு டீக்குடிச்சிட்டு திரும்ப‌ வ‌ந்து வேலை பார்க்குறீங்க‌ ந‌க‌ர‌த்துல‌ நாங்க‌ ஏதோ ஒரு வ‌கையில் யாரையாவ‌து சார்ந்து வாழ‌வேண்டியிருக்கு ஆனால் உங்க‌ளுக்கு அப்ப‌டியில்லை யாரையும் சார்ந்து இருக்க‌த் தேவையில்லை இய‌ற்கையை த‌விர‌'
'அது என்ன‌மோ உண்மைதான் த‌ம்பி'
'ஆமா உங்க‌ வீடு 'ன்னு நான் இழுக்க‌வும்,
'அது வீடு'ன்னு சொல்ல‌முடியாது குச்சி வெச்ச‌ குடிசை' நான் கேட்காம‌லே 'வுட்டுக்காரி போயி நால‌ஞ்சு வ‌ருஷ‌மாச்சி பைய‌ன் இங்க‌ ம‌ன்னார்குடி'ல‌ சைக்கிள் க‌டை வெச்சிருக்கான் வார‌த்துக்கு ஒருவா வ‌ருவான் அவ‌ன் வ‌யித்த‌ க‌ழுவிக்கிறான் ஏதோ ஒடுது என்ற‌தும் ஏதோ நினைத்தவ‌ராக‌,

'நீங்க‌'?
'திரைக‌ட‌ல் ஓடி திர‌விய‌ம் தேடுறேங்க‌'
'ஓ வெளிநாட்டிலா?'
'ஆமாங்க‌'

'எத்த‌ன‌ வருஷ‌மா அங்க‌ன‌ இருக்கீங்க‌?'
'கொஞ்ச‌ம்தான் மூணு வ‌ருஷ‌மா'
'இப்ப‌ லீவு'ல‌ வ‌ந்திருக்கீங்க‌ளா?'
'ம் ம் '
'ச‌ரி த‌ம்பி என‌க்கு நேர‌மாச்சு நான் போக‌னும்'
'ச‌ரிங்க‌ உங்க‌ள்'ட்ட‌ பேசின‌து ச‌ந்தோஷ‌ம்'
'என‌க்கும் தான் த‌ம்பி'
இந்த‌மாதிரி வெள்ள‌ந்தியான‌ ம‌னித‌ர்க‌ளிட‌ம் பேசும்போதும் ச‌ரி, அவ‌ர்க‌ளின் வாழ்க்கை முறையை பார்க்கின்ற‌ போதும் ச‌ரி ம‌ன‌சு ரொம்ப‌ லேசான‌ மாதிரி ஒரு ஃபீல்.
**'போதும் என்ற‌ சொல்லே பொன் செய்யும் ம‌ருந்து.
**'வாழ்க்கை அழ‌கான‌து வாழும் முறையை பொருத்து.

Post Comment

17 வம்புகள்:

r.v.saravanan said...

first

r.v.saravanan said...

photo super irshad

Ahamed irshad said...

ந‌ன்றி ச‌ர‌வ‌ண‌ன் ஆர்வ‌முட‌ன் க‌மெண்ட் கொடுத்த‌த‌ற்கு :)

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான பகிர்வு நண்பரே,...


எனது வலைப்பூவில்: சேற்றை வாரியிறைக்கும் வடிவேலு! வீடியோ

Chitra said...

இந்த‌மாதிரி வெள்ள‌ந்தியான‌ ம‌னித‌ர்க‌ளிட‌ம் பேசும்போதும் ச‌ரி, அவ‌ர்க‌ளின் வாழ்க்கை முறையை பார்க்கின்ற‌ போதும் ச‌ரி ம‌ன‌சு ரொம்ப‌ லேசான‌ மாதிரி ஒரு ஃபீல்.
**'போதும் என்ற‌ சொல்லே பொன் செய்யும் ம‌ருந்து.
**'வாழ்க்கை அழ‌கான‌து வாழும் முறையை பொருத்து.


...very true... nice post. :-)

யுவா said...

உண்மையை எப்படி, எங்கிருந்து எழுதினாலும் இனிக்கும். இனிக்கிறது!

Sriakila said...

போட்டோ சூப்பர்!

vasu balaji said...

படத்துக்கும் அந்த பெரியவருக்கும் ஏதோ ஒரு ஒத்துமை இருக்கு:)

Anisha Yunus said...

ஹ்ம்ம்... தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும்போதெல்லாம் செழித்து வளர்ந்து இருபுறமும் நிற்கும் மரங்களும் நெல்வயல்களும் கண்ணையும் மனதையும் கவரும்....miss it a lot!!!!!!!!!!!

:(

Priya said...

நல்ல பகிர்வு.. படம் சூப்பரா இருக்கு.

ZAKIR HUSSAIN said...

என்னிடம் உள்ள இதுமாதிரியான விருப்பங்கள் உங்களிடமும் இருப்பது கண்டு சந்தோசம்.

இர்ஷாத் அப்படியே பொடி நடையா என் ஆர்டிக்கில் வாசித்து விடுங்கள்...

http://adirainirubar.blogspot.com/2011/04/blog-post.html

Yasir said...

ரம்மியமான எழுத்து நடை அதற்க்கு வலு சேர்க்கும் படம்....அப்படீயே கிராமத்து டீக்கடையை அங்கு வரும் மனிதர்களை கண் முன் நிறுத்தி விட்டீர்கள்...சூப்பரோ சூப்பர் சகோ

Kanmani said...

ப‌ட‌ம் அழகு இர்ஷாத் க‌ட்டுரை அதைவிட‌ சூப்ப‌ர்.

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

அருமையான இடுகை. ஒரு சிறிய நிகழ்வினை - ஒரு இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு கிராமத்துப் பெரியவரை சந்தித்தது பற்றிய இடுகை. இயல்பான நடை. நல்ல சிந்தனை. சடாரென முடிந்து விட்டது போன்ற உணர்வு. இயற்கையை இயல்பாக இரசித்த விதம் அருமை. டீக்கடை வர்ணனை - கிராம மற்றும் நகரத்துப் பாணிகள் - மிக மிக இரசித்துப் படித்தேன். வாழ்க்கை அழகானது - வ்வாழும் முறையைப் பொறுத்து..... உண்மை இர்ஷாத். ஆமாம் இடுப்பில் கட்டி இருந்த கைலியை முழங்காலுக்கு இறக்கி விட்டு ..... முழங்காலில் மடித்துக் கட்டி என இருக்க வேண்டுமோ....நல்வாழ்த்துகள் இர்ஷாத் - நட்புடன் சீனா

A.R.ராஜகோபாலன் said...

'எங்க‌ளைவிட‌ நீங்க‌தாங்க‌ வ‌ச‌தியா வாழ்றீங்க‌'
'நாங்க‌ளா?'
'ஆமா இய‌ற்கையான‌ காற்று,நீங்க‌ளே விதைச்சு நீங்க‌ளே சாப்பிடுறீங்க‌ எல்லா விஷ‌ய‌த்திலேயும் இய‌ற்கையோடு ஒன்றி வாழ்றீங்க‌ இதுக்கு மேல‌ என்ன‌ வேனும்

"சத்தியமான வார்த்தைகள் அஹமது இர்ஷாத் .........."

பைய‌ன் இங்க‌ ம‌ன்னார்குடி'ல‌ சைக்கிள் க‌டை வெச்சிருக்கான்

"இந்த வாக்கியத்திற்கு பின் இன்னும் நெருக்கமானிர்கள் நண்பரே "

யதார்த்த நடையில் தத்ருப சத்தியமான கருத்துக்கள்

Asiya Omar said...

ஏனோ என் மனதை அந்த இடமும் இந்த பகிர்வும் மிகவும் கவர்ந்து விட்டது.

ஸ்ரீராம். said...

அருமையான அனுபவம்.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates