ப‌சியும் போஸ்ட‌ரும்..

ந‌ண்ப‌ன் ஒருவ‌ன்
அவ‌ன‌து ந‌ண்ப‌னின்
கோக‌க் க‌தையை
சொல்ல‌ஆற்றாமையில்
நான் உச் கொட்டினேன்
பூனை வ‌ந்து எட்டிப்
பார்க்கிற‌து ம‌னித‌னின்
சோக‌த்தை வெளிப்ப‌டுத்தும்
மொழி பூனைக்கு ப‌சியை
தூண்டும் அழைப்பாகிவிடுகிற‌து.
____________________
சொன்ன‌தை திரும்ப‌
திரும்ப‌ சொல்லும்
கூண்டுக்கிளி த‌ன்
சுத‌ந்திர‌த்தை ப‌ற்றி
சொல்லாம‌லேயே
இருந்துவிடுகிற‌து.
___________________
இட‌து கையில்
கொடுப்ப‌து
வ‌ல‌துகைக்கு
தெரிய‌கூடாதாம்
போஸ்ட்ரில் தெரிந்த‌ன‌
ரெண்டு கைக‌ளும்.
____________________
துன்ப‌ம் வ‌ரும்
வேளையில்
சிரிக்க‌னுமாம்
சிரிக்கின்ற‌
நேர‌த்திலேயே
துன்ப‌மும்
வ‌ந்துவிடுவ‌தால்
அதுமுடியாத‌
ஒன்றாகிவிடுகிற‌து.
____________________
image Feature : Flickr

Post Comment

16 வம்புகள்:

Unknown said...

//கொடுப்ப‌து
வ‌ல‌துகைக்கு
தெரிய‌கூடாதாம்
போஸ்ட்ரில் தெரிந்த‌ன‌
ரெண்டு கைக‌ளும்//

கவிதை நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்!

பாட்டு ரசிகன் said...

யதார்த்த நச் கவிதை வாழ்த்துக்கள்..

பாட்டு ரசிகன் said...

என் உயிரே பிரிந்துப் போனாலும் உள்ளத்தில் இருக்கும் அவளின் உருவம் மட்டும் அழியாது. ..

விவரங்களுக்கு..

http://tamilpaatu.blogspot.com/2011/03/blog-post_26.html

இமா க்றிஸ் said...

கவிதைகள் நல்லா இருக்கு இர்ஷாத். பாராட்டுக்கள்.

r.v.saravanan said...

நச் கவிதை இர்ஷாத்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல கவிதைகள்....!

ஸ்ரீராம். said...

கூண்டுக் கிளியிடம் சுதந்திரத்தைப் பற்றி யாரும் சொல்வதில்லை போலும்!

vasu balaji said...

எல்லாம் நல்லாருக்கு. முக்கியமா கூண்டுக் கிளி

ஜெய்லானி said...

சின்ன சின்ன அழகான கவிதைகள் :-)

மைதீன் said...

very nice

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வித்தியாசமான சிந்தனைகள்;
சுவையான கவிதைகள்.

Chitra said...

சொன்ன‌தை திரும்ப‌
திரும்ப‌ சொல்லும்
கூண்டுக்கிளி த‌ன்
சுத‌ந்திர‌த்தை ப‌ற்றி
சொல்லாம‌லேயே
இருந்துவிடுகிற‌து.


.... true.

'பரிவை' சே.குமார் said...

கவிதை நல்லா இருக்கு! வாழ்த்துக்கள்!

Sriakila said...

கவிதை நல்லா இருக்கே...

ஸாதிகா said...

"நச்"கவிதைகள்தான் இர்ஷாத் உங்களின் ஸ்பெஷாலிடியே?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எளிமையான வார்த்தைகள்... வலிமையான கருத்துக்கள்...:)

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates