மனவலியும் உடல்வலியும் நிச்சயம் என்பது தெரிந்தும் இரண்டு வலிகளையும் அல்லது புண்ணியவதி மாமியார் கிடைத்த பெண்கள் இரண்டாவது இன்ப வலியை மட்டும் சுமந்து இதுவரை மகப்பேறு சாதனை படைத்து வந்துள்ளனர். வலிக்குப் பயந்துகொண்டு கருவுறுவதைத் தள்ளிப்போடும் சொற்பளவிலான தாய்மார்களும் உளர்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நவீன மருத்துவம் வலியில்லா பிரசவ முறைக்கு முன்னேறி விட்டதைப் பல தாய்மார்கள் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை. மருத்துவத்துறையில் OBESTERIC EPIDURAL ANALGESIA இது தொடர்பான விக்கிபீடியா சுட்டி என்றும் PAINLESS LABOUR என்றும் அறியப்படும் இம்முறையில், வலியை உணராமல் பிரசவிக்க முடியும்.
பிரசவ வலியைத் தாங்கும் சக்திபெற்றிராத பலவீன உடலமைப்புக்கொண்ட தாய்மார்களுக்கு இது வரப்பிரசாதம். வலியில்லா பிரசவத்தில், முந்தைய முறையிலான வலிமறப்பு ஊசிகள்மூலம் உடலை முற்றிலும் மறக்கச் செய்வதோ மயக்கமடையச் செய்வதோ கிடையாது என்பது இதன் தனிச்சிறப்பாகும். இம்முறையில் பிரசவிக்கும் தாயானவள், மருத்துவருக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்க முடியும் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
துபாயிலுள்ள ஆஸ்டர் ஆஸ்பத்திரியின் தலைமை இயக்குனர் டாக்டர் U.K. வர்மா அவர்கள், வலியில்லா பிரசவ முறையில் எவ்விதப் பக்கவிளைவும் இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார்.
வலியில்லா பிரசவ சிகிச்சைக்கு முன்பாக பெண்ணின் மயக்கநிலை நன்கு பரிசீலிக்கப்படுகிறது.முதுகுத்தண்டு பகுதியில் சிறுஅளவில் மயக்க மருந்தைச் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு, வலிதாங்கும் உணர்வு குறைவாக இருந்தால் மருந்தின் அளவு அதிகரிக்கப்படும்.முதுக்குப்பகுதியில் நுண்ணிய துளை வழியாக மருந்து செலுத்தப்பட்டு பிரசவம் முடியும் வரையில் அல்லது பிரசவத்திற்கு பின்னரும்கூட தேவையான காலகட்டம்வரை வலியுணராமல் செய்யலாம்.
சில வருடங்களுக்கு முன்பே இம்முறை நடைமுறைக்கு வந்தும் பரவலாக பயன்படுத்தப் படாமலிருந்தது. காரணம் புதுவகை சிகிச்சையை எவரும் எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. தாய்மை அடைந்தவர்களுக்கு, குறிப்பாக கருவுற்றிருக்கும் பலவீனமான பெண்களுக்கு இப்புதுவகை சிகிச்சை தற்போது பல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.இது மாற்று வழியே தவிர அனைவருக்குமான பரிந்துரை அல்ல.சுகப்பிரசவம் வாய்ப்பில்லாத பெண்களுக்கே இம்முறை பெரிதும் பரிந்துரைக்கப்படுவதாக ஆஸ்டர் மருத்துவ மனையின் தலைமை மேலாண் இயக்குனர் Dr.மாலிக் தெரிவிக்கிறார்.
ஆக்கம்: அபூ அஸீலா
நன்றி: GULF TODAY
நன்றி: GULF TODAY
13 வம்புகள்:
me first
nallaa pakirvu
நல்ல பகிர்வு..
நல்ல பகிர்வு...
எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ
//வலிக்குப் பயந்துகொண்டு கருவுறுவதைத் தள்ளிப்போடும் சொற்பளவிலான தாய்மார்களும் உளர்.
// இப்படியும் உளரா?நல்ல பதிவு.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நவீன மருத்துவம் வலியில்லா பிரசவ முறைக்கு முன்னேறி விட்டதைப் பல தாய்மார்கள் அறிந்திருக்கும் வாய்ப்பில்லை. மருத்துவத்துறையில் OBESTERIC EPIDURAL ANALGESIA இது தொடர்பான விக்கிபீடியா சுட்டி என்றும் PAINLESS LABOUR என்றும் அறியப்படும் இம்முறையில், வலியை உணராமல் பிரசவிக்க முடியும்.
.... It is very common in USA for quite some time. It has its own risks though.
நல்ல பகிர்வு... irshaad
இர்ஷாத்...மகளிர் தினத்தோடு நல்லதொரு பதிவு.பிரசவ வலியைத் தவிர்க்க சிலர் சத்திரசிகிற்சை செய்து குழந்தையை எடுக்கிறார்களே.ஆனால் அது காலம் முழுதுமே பிரச்சனை எனபதைப் புரிந்துகொள்ளாமல் !
அஸ்ஸலாமு அழைக்கும்
நல்ல பகிர்வு சகோ.இதனால் பின்னாடி பிரச்சனைகள் வரும்.
இர்ஷாத்ண்ணா,
எபிடியூரலில் நல்லது கெட்டது ரெண்டுமே கிட்டத்தட்ட சர் சமமா இருக்கும். உதாரணத்துக்கு, வலி தெரியாம போறப்ப பிள்ளையோட இதயதுடிப்பும் தாறுமாறாகும், வலி முடிச்ஞ் எப குழ்ந்தை கீழெ எறங்கர பிரஷர் உருவாகும்னு தெரியாது, ஏதேனும் நரம்பு மண்டலம் (தாய்க்கு) பாதிக்க கூட சான்ஸ் இருக்கு. அதுவுமில்லாமல் இது பரிபூரண நிவாரணி இல்லை, இறுதி கட்டத்தில் குழந்தை கீழே இறக்க ஆரம்பிக்கும்போது எந்த எபிடூரலும் வேலைக்காவாது... :(
வலியில்லாமல் மகப்பேறு பகிர்வுக்கு நன்றி.
நல்ல பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! நாங்களும் விஷயங்களை தெரிந்துகொண்டோம்.
முதுகுத் தண்டில் ஊசி போடும் முறையில் பின்னாளில் சில பின் விளைவுகள் ஏற்படலாம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
Post a Comment