'ராகுல் இன்னைக்கு என்ன நாள் தெரியுமா?'
'என்ன நாள்' நெற்றிப்பொட்டை சுருக்கினான்.
'நீ எனக்கு ப்ரப்போஸ் பண்ண நாள்'
'ம் மூணு மாசம் போனதே தெரியல'
'எனக்கு வீட்ல சொல்ல பயமாயிருக்கு ராகுல்'
'டோண்ட் ஃபீல் சுஜா எங்க வீட்'ல க்ரீன் Signal விழுந்துருச்சு அடுத்த வாரத்தில் ஒருநாள் உன்னை பெண் பார்க்க வருவாங்க'
'ஓ ரியலி'
'ஆமா'
'எங்கப்பா ஒத்துக்கனுமே'
'அதெல்லாம் அக்ஸப்ட் பண்ணுவாங்க' நம்பிக்கையில் பி.ஹெச்.டி பட்டமே வாங்கியிருந்தான் ராகுல்.
அவன் சொன்னமாதிரியே எந்தவொரு இடையூறு இல்லாமல் இரண்டு குடும்பங்களும் இவர்களை ஏற்றுக்கொண்டு ராகுல் வெட்ஸ் சுஜாதா என்ற டிசைன் போர்டு மேரேஜ் ஹாலில் தொங்கும் வரை வந்தாச்சு..
ஹாலில் கணிசமான கூட்டம்.மேரேஜ் ஹாலின் முகப்பில் கூட்டத்தினர் வந்துக்கொண்டிருக்கும்போதே போலீஸ் ஜீப் வரவும் எல்லோருடைய பார்வையும் அங்கே திரும்ப ஜீப்பிலிருந்து இறங்கிய லேடி எஸ்.ஐ மணவறை நோக்கி நடக்க கூட தொடுப்பாக இரண்டு கான்ஸ்டபிள்கள் வந்தனர்.
ராகுலில் அப்பா சாரங்கன் எஸ்.ஐயிடம்,
'என்னங்கம்மா'
'இந்த பொண்ணு மேல ஒரு பையன் புகார் கொடுத்திருக்கிறான்'
'என்னன்னு?'
இந்தப் பெண்ணும் அந்த பையனும் காதலிச்சுருக்காங்க இந்தப் பெண்ணுக்கு கல்யாணம் என்றதும் அவன் 'சூஸைட் அட்டம்ப்ட் பண்ணி சீரியஸ் கண்டிஷன்'ல ஜி.ஹெச்'ல இருக்கிறான். அவன் கொடுத்த வாக்குமூலம்,லவ்லெட்டர்,மொபைல் மெஸேஜ் அடிப்படையில் இந்த பெண்ணை அரஸ்ட் பண்றோம்'
'நோ நோ முடியாது ' கத்தினான் ராகுல்
'ஏண்டா இப்படி கத்துறே 'அம்மா வசுந்தரா அவன் போர்வையை விலக்கி அவனை உலுப்ப..
சேவல் கூவாததுதான் ஒன்றுதான் நிச்சயமாய் அது அதிகாலையேதான்.
வேற எவனாவது காதலை சொல்றதுக்குள்ள இன்னைக்கு எப்படியாவது சுஜாவைப் பார்த்து காதலை கண்டிப்பாக சொல்லிறனும்.. உறுதிமொழியோடு விடிந்தது அன்று..
16 வம்புகள்:
me first
Nalla irukku.
haa..haa..sema thrill...
காதலியிடம் உடனே
காதலைச் சொல்லாவிட்டால்,
கன்னாபின்னாவென்று இப்படி
கனவுகள் தோன்றுமோ?
கண்டுபிடித்துச் சொன்னதற்கு
வாழ்த்துக்கள்!
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது- வைரமுத்து.
good irshaad
அட இப்படிப் போகுதா கத - ஆமா - இந்த மாதிரி தற்கொலைக்கெல்லாம் கைதா ? நாட்ல பெருகிப்போச்சு - பள்ளிக்கூடத்துல டீச்சர் திட்டினா தற்கொலை - டீச்சர் கைது .... என்னதிது ? எங்கேயோ போகுது நாடு ....
நல்ல திருப்பம்
அஸ்ஸலாமு அழைக்கும்
நல்லா இருக்கு.
கடைசி ட்விஸ்ட் எதிர்பாராதது...அருமை வாழ்த்துகள்..இர்ஷா...
'ஷொட்டு'
;))
பந்திக்குதான் முந்தணும்...காதலுக்குமா...!
ட்விஸ்ட் அருமை இர்ஷாத்.
ஓஓஓ....அருமையான கிளைமாக்ஸ்
ஹெ ஹெ... நல்ல ட்விஸ்ட்டு பாய். கலக்கல் கதை, :)
super!!
Post a Comment