சமீபத்தில் எங்களூரைச் சார்ந்த ஒருவர் தன் தாய்க்கு மருந்து வாங்க அதிராம்பட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டைக்கு(12கிமீ) சென்றுவிட்டு வரும் வழியில் மினிலாரி(மிகச்சரியாக தெரியவில்லை)மோதி தலையில் அடிப்பட்டு மூளை சிதறியதாக வந்த செய்தி கேட்டு நான் ரொம்பவே வருத்தமுற்றேன் இத்தனைக்கும் அவரின் மனைவிக்கு ஒன்பது மாதங்கள்...வார்த்தைகள் வரவில்லை... டிராபிக் ராமசாமி'ன்னு ஒருத்தர் அவர்தான் எல்லோரும் தலைக்கவசம்(ஹெல்மெட்) அணியவேண்டும் என பொதுநல வழக்கு தொடர்ந்து அந்த வழக்கிலும் வெற்றிப் பெற்று அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது அதன்படியே நடைமுறைப்படுத்தினார்கள் எவ்வளவு நாளைக்கு...? இதைப் படிப்பவர்கள் ஹெல்மெட் அணியுங்கள் என்பதே என் வேண்டுகோள்..
########################################
தமிழனின் வெற்றிக்கு உதவுவோம் அப்படின்னு சொல்லி சமீபத்தில் வலையூலகில் மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்பவரைப் பற்றிய செய்திகள் தமிழனின் கட் அவுட்,பாலாபிஷேகம் கலாச்சரத்துக்கு மத்தியில் நம் வயிற்றில் பால் வார்க்கின்றன. எத்தனைபேருக்கு வரும் இந்த சேவை மனப்பான்மை எனக்கு,உங்களுக்கு,வருமா ம்ஹீஹிம் வராது. எதுவுமே தன்னைப் பற்றி விளம்பரம் படுத்தாத மனிதருக்கு வந்த விளம்பரங்களை பார்த்தால் மூக்கின் மேல் விரல் வைக்கலாம் வைக்கனும்.எல்லோரும் அவருக்கு ஓட்டுப் போடுங்க போடுங்க சொன்னதற்கு அப்புறமே நம்ம மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள் முதல் தடவையாக டப்பு வாங்காமல்! ஓட்டுப் போடறதோடு நில்லாமல் கிருஷ்ணனுக்கு தேவையான உதவிகளை தொண்டு நிறுவனங்கள்,அரசாங்கம், ஏன் நாமே ஓவ்வொரு வலைப்பதிவுகளிலேயும் நிதி திரட்டி அவரிடம் அளிக்கலாமே..? அவருக்கு ஓட்டுப் போட இந்த லிங்கில் போய் ஓட்டளிக்கவும்.
#################################
இந்த அக்கப்போருக்கிடையில் எந்திரன் தன்னுடையதுதான் என்று ஷங்கர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார் எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன்.. இந்த செய்தி ரொம்ப முக்கியம் அதைத்தான் எல்லோரும் பேசுவார்கள் அதனால்தான் நானும் இங்கே சொல்கிறேன் ஏன்னா நான் தமிழேண்...(டா)
#################################
வலைச்சரம் சீனா அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்கள் அவருக்கு வாழ்த்துக்கள்..
#################################
ரெயில் டிக்கெட்டை கூடுதல் விலைக்கு விற்ற ரெ.ஊழியர்கள் 2 பேர் கைது(செய்தி)
டிக்கெட்டுன்னாலே கூடுதலாத்தான் விற்பாய்ங்களோ..
சமூகத்துக்கு ஆன்மிகவாதிகளால் நடக்கும் பணிகளுக்கு தி.மு.க.அரசு துணை நிற்கும் -ஸ்டாலின்
ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஆஆஆஆஆஆ....
இந்திரா மீது கல் எறிந்தவர்கள் பதில் கூறும் காலம்- இளங்கோவன்
உங்கள்ட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
#################################
39 வம்புகள்:
நல்ல தொகுப்பு!!! கமென்ட்டுக்கு நீங்க போட்டு இருக்கிற மாதிரியே - குட்டுக்கள் - ஷொட்டுக்கள் - னு தலைப்பு வச்சுர வேண்டியதுதானே!
தொகுப்பு நன்று.
மிக்ஸ் அல்லது அவியல் , பொரியல்ன்னு ஏதாவது ஒன்னை வைங்களேன்.
கிருஷ்ணனுக்கு ஓட்டு போட்டுவிட்டேன்..
சீனா ஐயாவுக்கு என் வாழ்த்தும்..
பட்டுக்கோட்டை விபத்து மனசை பிசையுது ..
nalla alasi irukeenga. but idhuku enna thalaipu vachi irukeenga. adha mattum solunga pls. vazhthukkal
சுட்டபின் பட்டது ன்னு வைங்க !
ஹெல்மெட்.....எல்லோருக்கும் புரிஞ்சா சரி
பட்டுக்கோட்டை விபத்து மனதை பதபதைக்க வைக்கிறது. எனது ஆழ்ந்த இரங்கலும், கண்ணீர் அஞ்சலிகள்.
=========
கிருஷணனுக்கு ஓட்டு போட்டுட்டேன்.
===========
சீனா அய்யாவுக்கு நல்வாழ்த்துகள்.
===========
பகிர்வுக்கு நன்றி.
தலைப்புக்கா பஞ்சம், ஏதாவது டீவி சீரியல் பேர வைங்க, நெறைய ஹிட்ஸ் வரும் வாய்ப்புண்டு!
very well said irshath..keep writing man...
உங்க ஊர்க்காரரின் மரண செய்தி மனதில் கனக்கிறது. பெங்களூர்வை போல இங்கேயும் கையிலும் டேபிளுக்கடியிலும் கை நீட்டாமல் அட் லீஸ்ட் இந்த விஷயத்திலாவது Police கடுமையுடன் நடந்து கொண்டால் பல உயிர்களை காப்பாற்றலாம். அந்த சகோதரிக்கு து'ஆ செய்கிறேன், இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் அவர்களின் மனதில் தெம்பையும் எதிர் நிக்கும் வாழ்வில் அன்பையும் அருளையும் பொழிவானாக. ஆமீன்.
//
இந்திரா மீது கல் எறிந்தவர்கள் பதில் கூறும் காலம்- இளங்கோவன்
உங்கள்ட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் //
செம காமெடி...இதையும் ஜீரணிச்சே வாழ்ந்தாதான் Incredible இந்தியா..!!
சீனா ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள்...
ஓட்டும் போட்டாச்சு..
ஹெல்மெட் விஷயம் பல இடங்களில் பேச்சளவில் தான் இருக்கிறதே தவிர கடைபிடிப்பதாக தெரியவில்லை..
@@@@
நல்ல தொகுப்பு நண்பரே வாழ்த்துக்கள்...
தலைப்பு:மெகா ஹெர்ட்ஸ், எப்பூடி :))
செய்திகளின் கலவை மனதை தொட்டது.
தலை கவசம் உயிர் கவசம் உணருங்கள் தோழர்களே
இர்ஷாத்
கமெண்ட்ஸ் நல்லாருக்கு
தொடருங்கள் இது போல்
good post. (Sorry for tamil fond) I will be back with tamil.
நல்ல தொகுப்பு!
சீனா ஐயாவுக்கு என் வாழ்த்துக்கள்.
தலைக்கவசத்தின் அருமை விளக்க இதை தவிர வேறு எதாவது விபத்து வேண்டுமோ... அவசியமானப் பதிவு.. வாழ்த்துக்கள்
அன்பின் இர்ஷாத் /r
பட்டுக்கோட்டை விபத்து - ஆன்மா சந்தி அடைவதாக - இறந்தவரின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல்கள் - என்ன செய்வது ..... மதுரக்காரருக்கு ஏற்கனவே ஓட்டு போட்டாச்சு - ஓய்வு பெற்றமைக்கு வாழ்த்திய நல்லுள்ளங்களுக்கு நன்றி - நல்வாழ்த்துகள் இர்ஷாத் - நட்புடன் சீனா
ஹெல்மெட் பத்தி எவ்வளவோ சொன்னாலும் யாரும் கண்டுக்கிறதில்லை.. இன்னா லில்லாஹி..
ஹெல்மட் - சட்டம் போட்டுத்தான் இதைப் போட வேண்டும் என்று இல்லை. அவர்களாகவே உணர்ந்து இதைச் செய்ய வேண்டும்.
பல வருடங்களுக்கு முன்னே நரம்பியல் நிபுணர் திரு. ராமமூர்த்தி அவர்கள் இதை வலியுறுத்தி சொல்லுவார். இரண்டு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அவசியம் தரமான தலைக்கவசம் அணிய வேண்டும் என்று.
ஹெல்மெட் விசயத்தில் அரசாங்கத்தை குறை சொல்வதை காட்டிலும் வாகன ஓட்டிகள் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்..
அரசாங்கம் சட்டம் போட்டால் என்ன நாம ஹெல்மெட்டை உடனே போட்டுருவமா என்ன
சட்டத்தை மீறுவதுதான் நம் அனைவருக்கும் கை வந்த கலையாச்சோ
உங்கள் ஊர் சம்பவம் வருந்ததக்கது இர்ஷாத் அந்த பெண்ணுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்:(
நல்ல செய்திகள் நன்றி இர்ஷாத்
விபத்துச் செய்தி மனதுக்கு வேதனையைத் தருகிறது.... எல்லோருக்கும் 'யாருக்கோ நடப்பதுதானே, நமக்கு நடக்காது' என்ற (அசட்டு)நம்பிக்கை.
மதுரைக் கிருஷ்ணனுக்கு முன்பே ஓட்டுப் போட்டாகி விட்டது.
சீனா சாருக்கு வாழ்த்துக்கள்.
கிருஷ்ணனுக்கு இதோ ஓட்டு போட்டுடறேன்! உங்க அவியல் அட்டகாசம் !
சீனா சாருக்கு வாழ்த்துக்கள் நண்பரே!
Chitra@ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(சமூகத்தின் மேல் உள்ள கோபத்துல சொன்னதுதான் த.யா.வைங்கன்னு)
அன்பரசன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கே.ஆர்.பி.செந்தில்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Dhosai@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அபுஇபுறாஹிம்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ரகு @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸ்டார்ஜன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ராம்சாமி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
karthy @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அன்னு@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வெறும்பய@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சைவகொத்துப்பரோட்டா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(சித்ராக்கு போட்ட கமெண்ட்தான் உங்களுக்கும்)
asiya omar@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
r.v.saravanan@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முரளிகண்ணன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சே.குமார்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சரவணன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
cheena (சீனா)@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஹுஸைனம்மா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இராகவன் நைஜிரியா@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(வாங்க ராகவண்ணே எங்கே உங்களையே காணோம்..பதிவும் எழுதிறதில்லை அங்கங்கே கும்மியடிக்கிறதோடு சரி..சீக்கிரம் பதிவெழுதுங்கண்ணே நாங்க வெயிட்டிங்..)
வழிப்போக்கன் - யோகேஷ் @வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Shahulhameed@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Kanmani@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சசிகுமார்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஸ்ரீராம்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மோகன்ஜி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Very nice... keep it Up
ஹெல்மெட் :(
நல்ல தகவல்கள்.
புதியவன்@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
மாதேவி@வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment