'இதோ பார் வைஷீ நீ கட்டின புடவையோடு வந்தா போதும் நகை எதுவும் எடுக்க வேண்டாம் புரிஞ்சுதா'
'அய்யோ எத்தனை தடவை இதையே சொல்வீங்க'
'சரி சரி நான் க்ராஸ்கட் ரோட்ல இருக்கிற பஸ் ஸ்டாப்புல நிக்கிறேன் சீக்கிரம் வந்துடு'
'ம் இன்னும் அரைமணி நேரத்தில் அங்கே இருப்பேன்'
'சொன்னா போதாது செய்யனும்'
கோவையின் அதிகாலை குளிரிலும் தினேஷீக்கு வியர்த்துக் கொட்டியது.
நூற்றுக்கும் மேற்பட்ட எடையை சதையாய் கொண்ட மனிதர்கள் மெனக்கெட்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்... ஜாக்கிங்காம்..
பி.எஸ்.ஜியில் இரண்டாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்துக்கொண்டிருந்த தினேஷீக்கு படிப்பில் ஏறாத கெமிஸ்ட்ரி வைஷ்ணவியை பார்த்தவுடன் உடம்பில் தாறுமாறாய் ஏறியது.
அதற்குமேல் வழக்கமான காதல்,காதல்,இ- மெயில்,எக்ஸ்ட்ரா,எக்ஸ்ட்ரா..
ஹலோ சொல்லி சினேகமானது இன்னைக்கு இந்தளவுக்கு வந்து நிற்பது சத்தியமாய் காதல் என்ற கண்றாவியால்தான்..
"வைஷீ நாம நிஜமாகவே ஓடிப்போகப்போறதில்லை, உங்க வீட்டிற்கும் எங்க வீட்டிற்கும் நம்ம காதலை புரிய வைக்க இது ஒரு டிராமா அவ்ளோதான்.நம்மை அவர்கள் தேடனும், சாகப்போறேன்னு எழுதி வைச்சுட்டு வந்துடு'
இரண்டு நாளைக்கு முன்பு அவளிடம் இவன் சொன்னது.
வைஷ்ணவி வைஷ்ணவி' அம்மா சகுந்தலா தொடர்ந்து குரல் கொடுக்க மவுனம் மட்டுமே திரும்பி வந்தது. மாடியின் மேலே சென்று பார்த்தாள் அங்கே அவள் எழுதி வைச்சிருந்த லெட்டரைப் படித்துவுடன் மனதில் பயங்கொள்ள கணவர் சபாபதிக்கு போனை போட்ட அதே நேரம்...
சபாபதி டிரைவிங் லைசென்ஸ் எடுக்க காரில் டெஸ்ட் எடுத்துக்கொண்டிருந்தார்.கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே மொபைல் ரிங் அடிக்க கட் பண்ணிணார்..மறுபடியும் விடாமல் ரிங் அடிக்கவே லவுட் ஸ்பீக்கரில் "என்னங்க வைஷீ ஓடிப்போய்ட்டாங்க" சொன்ன மறு நிமிடம் எதிர் திசையில் வந்தவரின் மீது மோதிய வேகத்தில் அவர் தூக்கியெறியப்பட்டு அந்த இடத்திலேயே உயிர் பிரிந்தது..
'யோவ் ஏட்டு அந்த செத்தவரு பாக்கெட்'ல ஏதும் அட்ரஸ் இருக்கான்னு பாரு'
'
இருபது ரூபாய் தாள் இரண்டோடு இடுப்பில் இருந்த ரேஷன் கார்டில் மூணாவது மகன் பெயர் தினேஷ் என்றிருந்தது.....
39 வம்புகள்:
போட்டு தள்ளியாச்சா:). நல்லாருக்கு
நல்ல சிறுகதை.குமுதத்துக்கு அனுப்புங்க ,வரும்,ரூ 200 பரிசு கிடைக்கும்.அட்ரஸ்
குமுதம்
த பெ எண் 2592
சென்னை 31
அடக்கடவுளே, இதென்ன கொடுமை? பாவம் பெற்றோர்கள்!!
கத்தார்'லிருந்து அனுப்ப எத்தனை ரூபாய் ஸ்டாம்பு? ஓட்டனும் செந்தில்குமார்..
த்சோ...இருந்தாலும் தினெஷின் அப்பாவுக்கு இப்படி ஒரு முடிவு கொடுத்து இருக்க வேண்டாம்.நறுக் என்ர கதையாக இருந்தாலும் நச் என்று எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.
விளையாட்டு வினையான மாதிரி இப்பிடியும் சிலசமயங்களில் !
நறுக்கென்று ஒரு சிறு கதை நல்லாருக்கு இர்ஷாத்
கெமிஸ்ட்ரி படித்துக்கொண்டிருந்த தினேஷீக்கு படிப்பில் ஏறாத கெமிஸ்ட்ரி வைஷ்ணவியை பார்த்தவுடன் உடம்பில் தாறுமாறாய் ஏறியது.
வரிகள் இன்னும் நல்லாருக்கு
நல்ல முடிவு தலைவரே ...
அட இப்படி கூடவா?மனசை என்னவோ செய்யுது.
very nice!!
தல ஜுரமா இருந்த போது ரோஷிச்ச்ச கதையா? நல்லா இருக்கு!!
கதை சொன்ன விதம் சுவாரசியமாக இருக்கிறது இர்ஷாத். ;) பாராட்டுக்கள்.
//பி.எஸ்.ஜியில் இரண்டாம் ஆண்டு கெமிஸ்ட்ரி படித்துக்கொண்டிருந்த தினேஷீக்கு படிப்பில் ஏறாத கெமிஸ்ட்ரி வைஷ்ணவியை பார்த்தவுடன் உடம்பில் தாறுமாறாய் ஏறியது.// என்கிறீங்க. பெயர்கள் + 'பார்த்தவுடன்' இடிக்குதே!! ;)
'ஷீ' & 'ஷு' - ல எனக்கு டவுட்!! நீங்க சரியா எழுதினதை நான் தப்பா படிச்சேனா! இல்லை நான்தான் தப்பா!!
கதை அருமையா இருக்குங்க.
அடடா.. இப்படி போட்டுத்தள்ளிட்டீங்களே....
மகன் செய்த தவறுக்கு தந்தைக்கு தண்டனை கொடுத்திட்டீங்களே
கதை தூள் ,
ம்ம் நல்ல முயற்சி
கதை நல்லா இருந்தது இர்ஷாத்..
அப்படியே ஓ வென கத்தவேண்டும் போலிருக்கிறது இர்ஷாத் அலைவரிசையின் ரசிகையாகவே மாறிவிட்டேன் இந்தக் கதையிலிருந்து, கதையை கொண்டுபோகும் விதம் சூப்பர்ப்.
கெமிஸ்ட்ரி வர்ணனை ரசித்தேன். ஆனா ஏங்க இப்படி ஒரு பாவமும் அறியாத ஒருத்தரை போட்டுத் தள்ளிட்டீங்க...!
Nice end irshath..
கதை நன்று. முடிவு வேறு விதமாக இருந்திருக்கலாமோ? பாவமாய் இருக்கே.
டச்சிங்!
கதை நல்லாயிருக்கு.. முடிவு ஏத்துக்க முடியலங்க..
:((
கடைசில பெத்தவங்க என்ன தப்பு செஞ்சாங்கன்னு அவங்களை போட்டு தள்ளிட்டிங்க?
பெத்தவங்க என்ன பாவம் பண்ணுனாங்க???எதிபாராத திருப்பம் வாழ்த்துகள் இர்ஷா...
நல்ல பகிர்வு.
வாங்க பாலா சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(நான் ரொம்ப நல்லவங்க)
வாங்க செந்தில்குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க ஸாதிகா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(ஆமா ஹேமா)
வாங்க saravanan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க கே.ஆர்.பி.செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க asiya omar வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க Menagasathia வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க அப்துல் காதர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க இமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(பார்த்தவுடனே என்றால் பேரழகியாக? இருந்திருக்கக்கூடும்.பெயர்கள் இயல்பாக இருக்கட்டுமேன்னு தான் அப்படி)
வாங்க அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க Nickyjohn வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க நேசமித்ரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க Kanmani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(அப்டியா)
வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(என்னங்க பண்றது)
வாங்க karthy வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க ராமலக்ஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(நீங்களுமா)
வாங்க சைவகொத்துப்பரோட்டா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க பாபு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க அன்னு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(என்னா சொல்றது அன்னு..)
வாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
summaa narukkunnu irukku kathai..
வாங்க தேனம்மை லெக்ஷ்மணன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்ல கதை....... ஆனா பாவமா இருக்கு.
//ஹலோ சொல்லி சினேகமானது இன்னைக்கு இந்தளவுக்கு வந்து நிற்பது சத்தியமாய் காதல் என்ற கண்றாவியால்தான்..// நல்லா சிரிக்கவும் செய்தேன் :)
அன்பின் அஹமது இர்ஷாத்
கதை சூப்பர் - முடிவு எதிர்பாரா ஒன்று - பாபம் சபாபதியின் கார் மோதியதில் இறந்தவர்.
வர்ணனைகள் நன்று
ஒரு பக்கக் கதை - வாழ்க திறமை
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Post a Comment