முதல் நாளே எந்திரன் வாய்ப்பு கிடைத்ததும் பார்க்க வேண்டாமென்று இருக்காமல் பார்த்தேன்..
விஞ்ஞானி ரஜினி பத்து வருடங்களாக முயற்சித்து ஒரு மனித வடிவ ரோபோவை தன் சாயலிலேயே உருவாக்குகிறார்..சகல விஷயங்களிலும் கில்லாடியாக இருக்கும் அந்த ரோபோவை ராணுவத்திற்கு அர்ப்பணிக்கும் முயற்சியில் அவரின் பேராசிரியர் தேர்வுக்குழுவில் ரோபோவிற்கு மனித உணர்ச்சி வேண்டும்,நல்லது கெட்டது எதுன்னு தெரியனும்னு,இல்லாவிடில் ஆபத்தை உண்டாக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லி ஒரு மாதம் டைம் கொடுக்கிறார்.அதே போல் ரோபோவிற்கு மனித உண்ர்வுகள் வரும்படி ரஜினி செய்யும் முயற்சிகள் கைகூடுகிறது, இவ்வேளையில் ரஜினியின் காதலியாக வரும் ஐஸின் மீது ரோபோவிற்கு காதல்? ஏற்படுகிறது என்பதை நம்பவும் முடியாமலும் அதே சமயம் நம்புகின்ற வகையிலும் காட்சிகளைக் கொண்டுபோவது இயக்குனர் ஷங்கரின் சமார்த்தியம் என்றே சொல்லலாம்.ஐஸை அடைய ரோபோ எடுக்கும் விபரீத காரியங்கள் வெற்றிபெற்றனவா,விஞ்ஞானி ரஜினி ஐஸ் காதல் வெற்றி பெற்றதா என்பதை வெள்ளித்திரையில் காண்க.. விஞ்ஞானி ரஜினி வசீகரன் என்ற பெயரில் வருவதாலோ என்னவோ நம்மையும் வசீகரிக்கிறார்.ஸ்டைலான நடிப்பு இதில் நல்லாயிருக்கு..இதையெல்லாம் தூக்கி சாப்பிடறது ரோபோவாக வரும் சிட்டி' ரஜினி மனிதர் அனாசயமாக பின்னுகிறார் நடிப்பில். உண்மையான ரோபோ போல் நடை, உடையில் உச்சரிப்பில் அசத்தல். 'என்னை யாரும் எதுவும் செஞ்சிவிட முடியாது' என்று இடுப்பில் கை வைத்தப்படி கொக்கரிக்கும் இடத்தில் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார்தான்.. "கணிப்பொறியையே கலங்க வைக்கும் கன்னிப் பொறி" ஐஸ்வர்யா ராய் அழகு என்பதற்கு மறுபெயராகிறார்.விஞ்ஞானி ரஜினியிடம் காதலில் உருகுவதும்,ரோபோவிடம் மாட்டிக்கொண்டு தவிப்பதிலும் டபுள் ஸ்கோர் அள்ளுகிறார்.இதையெல்லாத்தையும் விட சொல்ல வேண்டியது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை "அரிமா அரிமா" "காதல் அனுக்கள்" பாடல்களில் பேக்ரவுண்டலும் மனிதர் பிச்சு உதறுகிறார்..இயக்குனர் ஷங்கரின் உழைப்பு படத்தில் பலமாகவே தெறிகின்றது ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் அதற்கான பலன் கிடைக்குமா என்றால் பதில் மக்களிடத்தில்தான் உள்ளது. கிராஃபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருந்தாலும் கதையில் ஆங்காங்கே ஓட்டைகள். எந்திரன் காஸ்ட்லி பொம்மை..
9 வம்புகள்:
//எந்திரன் காஸ்ட்லி பொம்மை..//... ஆமா இர்ஷாத் டிவியில் ஒளிப்பரப்பிய சில காட்சிகளிலேயே அப்பப்பா எத்தனை பிரமாண்டம் என வியக்க வைக்கிறது. ம்ம்... பொறுத்திருந்து படம் பார்க்க வேண்டும்.
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
by
TS
டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
பகிர்வுக்கு நன்றிதான்...சிட்டியைதான் எல்லோரும் ரசிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்..
பார்க்கலாம்னு சொல்றீங்களா இல்லை பார்க்கவேண்டாமா இர்ஷாத்?
அதுக்குள்ள படம் பாத்தாச்சா... ஓகே ஓகே...
நானும் பாத்தேன் நல்லா தான் இருக்கு...
நானும் பார்த்தேன் இர்ஷாத்..சிட்டி ரோபோவா ரஜினி அசத்தியிருக்கிறார்..நல்ல விமர்சனம்..
படம் பார்த்துட்டேன் இர்ஷாத் சிட்டி ரஜினி அசத்தியிருக்கிறார்
அலைவரிசையிலும் எந்திரன் வந்தாச்சா?
//எந்திரன் காஸ்ட்லி பொம்மை..//...
விமர்சனம் நல்லா இருக்குங்க .
தங்களது பகிர்வை எனது ப்ளாகில் பகிர்ந்துள்ளேன்.நன்றி,
Post a Comment