MOTOROLA L6...

 கும்பகோணம் பஸ்ஸ்டாண்ட்- நன்றி கூகிள்

சென்னை செல்வதற்காக பட்டுக்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவுப் பேருந்தில் ஏறினேன்.நல்ல குஷன் பேக் சிஸ்டெமெல்லாம் இருந்து டிவியில் கார்த்திக்கும் அவரது நண்பர்களும் ஏதோ பாடிக் கொண்டிருந்தார்கள். ஜன்னலோர சீட் வாய்த்ததால் கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.அரை மணி நேரத்தில் வண்டி கிளம்பியது. கிளைமேட் வேற நல்லா இருந்ததால் அந்தப் பேருந்தில் போவது ஏதோ ஒரு மகிழ்ச்சியை தந்தது. சில்லென்ற காற்று முகத்தில் அறைந்துக்கொண்டே இருந்தது வாங்கிய அறையெல்லாம் போதும் என்ற நிலையில் ஜன்னலை மூடிவிட்டேன்...வண்டி கிளம்பிய கால் மணி நேரத்தில் பக்கத்திலிருந்தவர் தூங்கிவிட்டார்!!! எப்படித்தான் சில பேருக்கு உடனேயே தூக்கம் வருகிறது என்பதை யாராவது பி.ஹெச்.டி செய்தால் நலம்.குறட்டை,தோள்'ல சாய்றது போன்ற தொந்தரவு பக்கத்திலிருந்தவரிடம் இல்லாதது என் பாக்கியம்.மதுக்கூர்,மன்னார்குடி,வலங்கைமான் வழியாக கும்பகோணம் பஸ்ஸ்டாண்ட் வந்து சேர்வதற்குள் மூணு மணி நேரம் அவுட்'டாகியிருந்தது.பத்து நிமிஷம் வண்டி நிற்கும் என கண்டக்டர் திருவாய் மலர்ந்ததால் நான் கீழே இறங்கி வாழைப்பழமும்,வாட்டர் பாட்டிலும் வாங்கிவிட்டு என் சீட்டிற்கு வந்துவிட்டேன்.நான் சீட்டில் உட்கார்ந்து இருக்கும்பொழுது ஜன்னலுக்கு வெளியே நின்றிருந்த ஒருவன் பதற்றத்துடன் 'சார் உங்க மொபைலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுக்கமுடியுமா அவசரம் சார் என் ஃப்ரெண்டுக்கு அடிப்பட்ருச்சு ப்ளீஸ் சார்'   நமக்குதான் இரக்க குணமாச்சே!' சரி நம்பரை குடுங்க என்றேன்.. இதோ தர்றேன் என்றவன் ' குடுங்க சார் நான் அடிக்கிறேன் என்றவனை நம்பி மொபைலைக் கொடுத்ததும், 'ஹலோ ஹலோ ஹலோ'ன்னு அவன் பேசியபடியே பஸ்ஸீக்கு பின்னாடி போனதும் எனக்கு பொறி தட்டியது, ஆஹா ஏதோ தில்லுமுல்லுன்னு நினைத்து பஸ்ஸை விட்டு இறங்கி தேடினேன் P.T. உஷாவுக்கு கும்பகோணத்துல ரசிகர் மன்றம்? வெச்சிருப்பான் போல, மின்னல் மாதிரி பறந்துட்டான்.. என்ன பண்றதுன்னே தெரியல,என் கவனக்குறைவுக்கு அது சாட்டையடி என நினைத்துக்கொண்டு பஸ்ஸ்டாண்டிலிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் வாங்கி கொண்டார்கள்.அங்கே என்னோடு இன்னொருத்தரும் நின்றிருந்தார் அவரது பெட்டியை எவனோ ஆட்டைய போட்டுட்டானாம்.. நல்லவேளை நான் பெட்டி கொண்டு வரவில்லை..அந்த சம்பவத்திலிருந்து அறிமுகமில்லாதவர் யாரும் ஏதும் கேட்டால் அந்த இடத்தில் நான் "பே பே பே' தான்..

Post Comment

28 வம்புகள்:

vasu balaji said...

call miss aagama phone miss aiducha:(

சசிகுமார் said...

பிஎச்டி பண்றது நல்ல டாபிக் கொடுத்து இருக்கீங்களே ட்ரை பண்ணுவோம் வாழ்த்துக்கள்.

அப்துல்மாலிக் said...

:) :)

SUFFIX said...

ஒ.கே. ரைட்..

சைவகொத்துப்பரோட்டா said...

ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!

க.பாலாசி said...

நல்லா சொன்னீங்க நண்பா... அந்த ஊருவழியாத்தான் எப்போதும் போயிட்டிருக்கேன். நானும் இனிமே விழிப்புணர்வோட இருப்பேன்..

Shameed said...

நம்ம ஊரிலே கோழிதான் சுடுவங்கோ
கும்பகோணதிலே போனையோ சுட்டுடங்களா !!!!

Unknown said...

எந்தவூரும் விதிவிலக்கல்ல... எந்த நாட்டிலும் புது பயணிநா கொஞ்சம் கஷ்டம் தான்... பயணத்தில் கவனமாக இருப்பது நமக்கு நலம்... கொஞ்சநாள்ல நம்மளையே சுட்டிட்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்ல...

r.v.saravanan said...

பயணத்தில் கவனமாக இருப்பது நலம் irshaad

Ananya Mahadevan said...

ஏமாத்தறதுக்கு புதுசு புதுசா டெக்னிக் கண்டு பிடிக்கிறாய்ங்கய்யா! :( இனிமேல் ஜாக்கிரதையா இருக்கணும். எல்லோருக்குமே இந்த பதிவு உபகாரமா இருக்கும். நன்றி இர்ஷாத்!

நாடோடி said...

ஆஹா... எப்ப‌டியெல்லாம் இருக்காங்க‌ பாருங்க‌..

ஸ்ரீராம். said...

எனக்கும் இது மாதிரி ஆனால் வேறு அனுபவங்கள் உண்டு... அனுபவங்கள் நல்ல ஆசான்..!

Thenammai Lakshmanan said...

அடக் கடவுளே என்னோட சேர்ந்த் ஆளாயிருப்பீங்க போல இருக்கே..:))

பத்மா said...

அடக் கடவுளே நிஜமா வா ?
அவ்ளோ அப்பாவியா நீங்க?

Madumitha said...

உதவி பண்றதுக்கு
இனிமேல் யோசிக்க
வச்சுட்டாங்களே.

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

ஏமாந்தாயிற்றா - ம்ம் - என்ன செய்வது - உலகம் இவ்வளவுதான்.

ஆமா அதென்ன தலைப்பு - புரியலியே

நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா

அன்பரசன் said...

//நமக்குதான் இரக்க குணமாச்சே!'//

:(

ஹேமா said...

இப்பிடியும் இருக்காங்களா!

சாந்தி மாரியப்பன் said...

மிஸ்டு கால் கேள்விப்பட்டிருக்கேன். இங்க போனே மிஸ் ஆயிடுச்சு :-)). இனிமேலாவது கவனமா இருங்கப்பா...

Anisha Yunus said...

ஆஹா...ஏனுங் ணா...இவ்வளவு நல்லவராவா இருப்பீங்? இனிமேல‌ ஜாக்கிரதையா இருங்ணா!!

இமா க்றிஸ் said...

;)

நல்லா விடுமுறை கொண்டாடி இருக்கிறீங்க. ;))

சீமான்கனி said...

என்னக் கொடுமை இர்ஷா இது...நானும் ரெண்டு மூனு பேர் கிட்ட இப்படி கொடுத்ததுண்டு...ஆனால் அவர்கள் எல்லாம் ரெம்ப நல்லவர்கள்....

ஹுஸைனம்மா said...

:-(((

venkat said...

ippadiyae pona indiyargalidam irukkum konja nanja eeramum maranju poyidum.

Anonymous said...

http://ramasamydemo.blogspot.com/

in the above blog i have written some important topics about blogger...read them...use them for ur blog...i will delete that blog soon...so hurry...

important posts in tat blog are

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

create an archive and site map for your blogger blog in two separate static pages

http://ramasamydemo.blogspot.com/2010/09/create-archive-and-site-map-for-your.html

five important blogs for bloggers

http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html

Anonymous said...

http://ramasamydemo.blogspot.com/

in the above blog i have written some important topics about blogger...read them...use them for ur blog...i will delete that blog soon...so hurry...

important posts in tat blog are

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog
http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

create an archive and site map for your blogger blog in two separate static pages

http://ramasamydemo.blogspot.com/2010/09/create-archive-and-site-map-for-your.html

five important blogs for bloggers

http://ramasamydemo.blogspot.com/2010/09/5-important-blogs-for-bloggers.html

Ahamed irshad said...

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனித்தனியே நன்றி கூற இயலாத நிலை அதனால் வந்த,வரப்போகிற அனைவருக்கும் நன்றி..

சீனா ஐயா அதுதான் திருட்டுபோன மொபைலின் மாடல்..

குடந்தை அன்புமணி said...

எனது ஊரில் இந்த சம்பவம் நடந்ததற்கு வருந்துகிறேன். ஆனால் இதுபோல் எல்லா ஊரிலும் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates