கேட்ககூடாத கேள்வியும்,சொல்லக்கூடாத பதிலும்..


கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை, இப்பொழுது ஓரளவு பரவாயில்லை..மருத்துவம்,தொலைதொடர்பு இதெற்க்கெல்லாம் வளைகுடாவை காட்டிலும் இந்தியாவில் வசதிகள் அதிகம்.அரசு மருத்துவர் டியூட்டி டைமில் சொந்த கிளினிக்கில் இருப்பது போன்ற சில விஷயங்களை பட்டியலிட்டாலும் எளிதாக அவர்களை அனுகமுடியும்.ஆனால் இங்கே அப்படியில்லை சாதாரண தலைவலிக்கு கூட குறைந்தது நூறு ரியாலுக்கு மொய் எழுதனும் அதுமட்டுமில்லாமல் ஐடி கார்டு வேற கேட்பார்கள் ஐடி இல்லாவிட்டால் அதோகதிதான்..அதே போல் தொலைதொடர்பு நம் நாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு STD பூத்,சிறு நகரத்தில்கூட பத்துக்கும் மேற்பட்ட நெட்வொர்க்குகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.ஆனால் இங்கே பத்து ரியாலுக்கு குறைந்த விலையில் ரிசார்ஜ் கார்டே கிடையாது..மொத்தத்தில் சொல்லனும்னா வளைகுடாக்கு வந்தா கவலை இன்கம்மிங், சந்தோஷம் அவுட்கோயிங்.. 
############################################################################

சமீபத்தில் சின்ன அம்மணி என்ற பதிவரின் கூகிள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.இணையத்தில் என்னென்னமோ சாதனை படைக்கும் கூகிள் இந்த விஷயத்தில் மெத்தனமாக இருக்கிறது.கூகிள பத்தி யாராவது புனைவு ஒன்ன இங்கிலிபிச்சில் எழுதி அனுப்புங்கப்பா.
############################################################################
ஆணாதிக்கவாதிகளும்,பெண்ணாதிக்கவாதிகளும் ஒரு இடம் பாக்கி இல்லாமல் தங்கள் தரப்பு வாதங்களை திரி போட்டு வளர்த்து வருகின்றனர்.கூகிள் பஸ்ஸில் கொஞ்சம் ஓவராகவே போய்க்கிட்டுருக்கு.இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை.கூகிள் பஸ்ஸீக்கு போட்டியாக யாஹீவை ஒரு 'ட்ரெயின்'விட சொன்னா பரவாயில்லை.. 
############################################################################
அரசு பதில்கள் குமுதம்:

1.'தமிழ்குடிதாங்கி ராமதாஸின் வாரிசுவின் வாரிசு டெல்லியில் தமிழே அறியாத இந்திப் பள்ளியில் படிப்பது பற்றி?'

'
இந்திக்குடிதாங்கியாக வாழ்த்துக்கள்'

2.'குஜராத்தில் மின்வெட்டே கிடையாதாமே'?

'
அங்கே ஆள்வெட்டு மட்டும்தான்.'

3.'கேட்ககூடாத கேள்வி எது? சொல்லக்கூடாத பதில் எது?'(இந்தக் கேள்வி ஆனந்த விகட
ன்
 ஹாய் மதனில் நான் கேட்டது)

 '
கேட்கக்கூடாதது கேள்வியாகாது, சொல்லக்கூடாதது பதிலாகாது..'
############################################################################

Post Comment

33 வம்புகள்:

அரபுத்தமிழன் said...

//கவலை இன்கம்மிங், சந்தோஷம் அவுட்கோயிங்..

கூகிள பத்தி யாராவது புனைவு ஒன்ன இங்கிலிபிச்சில் எழுதி அனுப்புங்கப்பா

கூகிள் பஸ்ஸீக்கு போட்டியாக யாஹீவை ஒரு 'ட்ரெயின்'விட சொன்னா பரவாயில்லை.. //

இந்தக் குறும்புகள் அனைத்தும் நகைச்சுவை விருந்து

சசிகுமார் said...

அருமையான பகிர்வு வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நகைச்சுவையுடன் கூடிய நல்ல பகிர்வு...

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

// வளைகுடாக்கு வந்தா கவலை இன்கம்மிங், சந்தோஷம் அவுட்கோயிங். // அட என்ன தம்பி டேட்டா பேக்கேஜை மறந்துட்டியே - ஆ ஊன்னா சம்பளம் கட்டு(ன்னு) இருக்கே அங்கே எப்படி ?

பவள சங்கரி said...

நல்ல நகைச்சுவையாக இருக்கிறது......வாழ்த்துக்கள்.

நாடோடி said...

ந‌ல்லா இருந்த‌து இர்ஷாத்..

Anonymous said...

நைஸ் :)

Unknown said...

ராமன் அடிமை ( ராமதாஸ்) இந்திக்கு எதிரி அல்ல தமிழனுக்குதான் ...

r.v.saravanan said...

கவலை இன்கம்மிங், சந்தோஷம் அவுட்கோயிங்..


வரிகள் நல்லாருக்கு இர்ஷாத்

இந்திக்குடிதாங்கியாக வாழ்த்துக்கள்'

ஹா ஹா ஊருக்கு தான் உபதேசம்

ஸ்ரீராம். said...

கூகிள் அக்கவுன்ட் ஹேக் செய்யப் படுவது ஒரு புறம்... இப்போது தமிழ் திரட்டி ஒன்றினால் மால்வேர் எச்சரிக்கை வந்து பல தளங்களை திறக்க முடியாதது மறுபுறம்.

அன்பரசன் said...

//'
கேட்கக்கூடாதது கேள்வியாகாது, சொல்லக்கூடாதது பதிலாகாது..'/

நச்

vasu balaji said...

:))

எம் அப்துல் காதர் said...

// "கேட்ககூடாத கேள்வி எது? சொல்லக்கூடாத பதில் எது?"//

இப்படி எல்லாம் கூட கேள்வி கேட்பீங்களா பாஸ்??

((ஒடம்ப பாத்துங்க/ குளிக்கும் போதாச்சும்))

Umapathy said...

Nice

Shameed said...

நட்சினு போடுரியலே

ஹேமா said...

இர்ஷாத்....சுகம்தானே இப்போ !

தெய்வசுகந்தி said...

//கூகிள் பஸ்ஸீக்கு போட்டியாக யாஹீவை ஒரு 'ட்ரெயின்'விட சொன்னா பரவாயில்லை..//
super!

Kanmani said...

சூப்பர் பதிவுங்க இர்ஷாத்..உடல்நிலையை கவனித்துக்கொள்ளுங்கள்..

ஸ்ரீ.... said...

நேர்த்தியான கலவையில் ஒரு இடுகை இர்ஷாத்.

ஸ்ரீ....

ஹுஸைனம்மா said...
This comment has been removed by a blog administrator.
ஹுஸைனம்மா said...

//கூகிள பத்தி யாராவது புனைவு ஒன்ன இங்கிலிபிச்சில் எழுதி //

தமிழ்ல நீங்க எழுதி எனக்கு அனுப்புனா, நான் ட்ரான்ஸ்லேட் பண்ணி என் பேரப் போட்டு பதிவு போட்டுக்கிறேன், எப்படி வசதி?

//கூகிள் பஸ்ஸில் கொஞ்சம் ஓவராகவே போய்க்கிட்டுருக்கு//

நல்லவேளை நான் அங்க இல்லை!!

//கூகிள் பஸ்ஸீக்கு போட்டியாக யாஹீவை ஒரு 'ட்ரெயின்'விட சொன்னா//

அங்கயும் வந்து நாறடிக்கவா?

Anisha Yunus said...

இர்ஷாத் பாய்,

இப்ப எப்படி இருக்கு உடம்புக்கு? நல்ல படியாய் கவனிக்கவும். அமெரிக்காவிலும் அதே பிரச்சினைதான். அதுவும் சனி ஞாயிறுல உயிரே போனாலும் கண்டுக்க மாட்டாங்க. எமெர்ஜென்சிக்கு போங்கன்னு
சொல்லிருவாங்க. என்ன இருந்தாலும் இந்தியா போல வராது பாய்.!!

Take care :)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ச்சே... ஏன் இப்படி அக்கௌன்ட் hack பண்றாங்க... பாவம்...

Ahamed irshad said...

வாங்க அரபுத்தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க அபுஇபுறாஹிம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(இங்கேயும் அப்படித்தான்)

வாங்க நித்திலம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க கே.ஆர்.பி.செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க saravanan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க அப்துல் காதர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க உமாபதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க Shahulhameed வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(சுகம்தான் ஹேமா)

Ahamed irshad said...

வாங்க தெய்வசுகந்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க Kanmani வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க ஸ்ரீ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Ahamed irshad said...

வாங்க ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க அன்னு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.


வாங்க அப்பாவி தங்கமணி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Jaleela Kamal said...

ssசின்ன சின்ன கை வைத்தியம் தெரிந்து வைத்து கொண்டா நல்லது

Raghu said...

ஒரு டார்க் காமெடி போல‌ எழுதியிருக்கீங்க‌..ந‌ல்லாருக்கு இர்ஷாத் :)

சாந்தி மாரியப்பன் said...

உடம்பை பார்த்துக்கோங்கப்பா.. பதிவுலகிற்கு இது சோதனைக்காலம் போலிருக்கு. ஹேக், மால்வேர் அட்டாக்ன்னு என்னன்னவோ நடக்குது..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates