'போவோமா ஊர்கோலம் - 1' (NATIVE UPDATES)


ஜீலை 23


பொட்டியெல்லாம் கட்டி ரெடியாயச்சு..குதூகலத்துல ஹேண்ட் லக்கேஜ் 10 கிலோவா கட்டினது ஏர்போர்ட்டிலுள்ள எ(ட்டப்ப)டை மிஷினில் தெரிஞ்சு 2 கிலோவை குறைக்கச் சொல்லி 'குரைத்த' நீக்ரோக்காரனை மனசுக்குள்ளேயே திட்டிவிட்டு கொண்டு வந்த'TISSUE BOX' ரெண்டு சட்டையையும்(பழைய) வழியனுப்ப வந்த சொந்த பந்தங்களிடம் கொடுத்துவிட்டு ஒரு வழியா போர்டிங் பாஸ் வாங்கியாச்சு. அடுத்த இரண்டு மணி நேரத்துல ப்ளைட் பறக்க ஆரம்பித்தது. கேக் மாதிரி எதுவோ ஒன்று கொடுத்தார்கள் சாப்பிட்டுவிட்டு திரும்பறதுக்குள்ள துபாய் வந்துவிட்டது இது என்ன இவ்ளோ சீக்கிரமான்னு இறங்கி ஏர்போர்ட் போனவுடன் சென்னை ப்ளைட் கேட் நம்பர் 214 என்றது 'CHARTING BOARD'  நான் நின்றிருந்தது கேட் நம்பர் 113'ல் எவ்வளவு தூரம் நடந்திருப்பேன்னு கணக்குக் போட்டு கொள்க.அன்றிரவு துபாய் நேரம் 2:30 மணிக்கு பறந்த ப்ளைட் அடுத்த நான்கரை மணி நேரத்தில் சென்னையை வந்தடைந்தது. வெளியே என்னை எதிர்பார்த்து நின்றிருந்த தம்பியை பார்த்து கையசைத்துவிட்டு கீழே இருந்த பேக்கை எடுக்கும்போது கையில் சுளீர்'ன்னு ஒரு வலி.. பார்த்தால் A-,A+,O-, ன்னு தாறுமாறாக ரத்தம் பார்த்த கொசு கடித்துக் கொண்டிருந்தது. 
ஆங் 
^
^
^
^
^
^
இந்தியா வந்திருச்சுடோய்.....

சென்னை ஏர்போர்ட்டை விரிவுபடுத்துகிறேன் பேர்வழி என்று ஒரு வழி 'படுத்தி' இருந்தார்கள் வெளில வந்தால் மேம்பாலத்தில் போய்க் கொண்டிருந்த வாகனங்களை பார்க்க அழகாக இருந்தது.டீ ஸ்டாலில் டீ குடித்துவிட்டு ஊருக்கு புறப்பட்டோம்.ஏழு மணி நேர பயணம் ஊர் வந்தடைந்தது(மெய்சிலிர்ப்பு). எல்லோரையும் நலம் விசாரித்துவிட்டு,நண்பர்கள் ஆளுக்கொரு மூலையில் வெளிநாடுகளில் இருந்ததால் ஒன்றிரண்டு பேரைத் தவிர யாரையும் சந்திக்க முடியவில்லை..அடுத்த நாள் ஊரை ரவுண்டு அடிக்கலாம் என்றால் வெயில் ரொம்பவே போட்டு தாக்கியது, அத திருப்பி தாக்கிவிட்டு? வெளியே போனேன்.. ரொம்பவே மாறிவிட்டிருந்தது. சைக்கிள் இருக்க வேண்டிய இடத்தில் பைக் இருந்தது,கொத்தனாரிடம் N70 இருக்கிறது.எல்லோரும் அந்நியமாகவே தெரிந்தார்கள். எல்லோருக்கும் அவரவர் வேலை என சுயதேவையை பூர்த்தி செய்யவே எல்லோருக்கும் நேரமிருந்தது. தான்,தன் குடும்பம் என்ற போக்கு நம் வாழ்க்கைமுறையில் வேரூன்றி விட்டதை வெளிப்படையாக சொல்லலாம்..
சரி விஷயத்துக்கு வருவோம்.. எனக்கு டவுன் பஸ்ஸில் போவது ரொம்ப பிடிக்கும் சிட்டி மாதிரியெல்லாம் கூட்டம் அதிகம் வராது எங்கள் ஊர் டவுன் பேருந்துகளில்.எனக்கு ஏற்பட்ட ஆச்சரியம் அரசாங்க டவுன் பேருந்தில் டிவி ஓடிக்கொண்டிருந்தது..

'தம்பி இது கலைஞர் டிவியா?'

 'இல்லங்க இது அது இல்ல'

'உங்களுக்கு டிவி கெடச்சுச்சா?'

'கெடச்சது தம்பி'

பேருந்திலிருந்த பெரியவருக்கும் எனக்கு நடந்த உரையாடல் தான் அது.. 'எடம் பார்த்து தட்டனும்'அப்படிங்கிற கலை கலைஞருக்கு நல்லாவே 'கை' கொடுக்குது..மின்சாரம் இல்லாத வீடுகளுக்கும் டிவி கிடைப்பதால் ஏதோ தேங்காய்,மாங்காய் மாதிரி எலக்ட்ரானிக்ஸ் கடைகளுக்கு வந்து விற்றுவிட்டு போகிறார்கள்..

25 ரூபாய் டிக்கெட்டை 80 ரூபாய்க்கு விற்கும் தியேட்டர் கவுண்டர்களும்.

டவுன் பஸ்ஸில் அதே கண்டக்டரும்.... மாறாத விஷயங்கள்.

                                                                                               -Stay Tuned...

Post Comment

38 வம்புகள்:

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

மி த ஃப்ர்ஸ்டா

சரி சரி

Unknown said...

இந்திய வந்த அதிலும் சென்னையில் வந்திறங்கிய உங்களை பார்க்காதது வருத்தமே ... சுவாரஸ்யமான எழுத்து ....

cheena (சீனா) said...

அன்பின் இர்ஷாத்

இதுதான் தாயகம் - அயலகத்தில் இருந்து வரும்போது கண்ணில் கண்ட நிகழ்வுகளை எல்லாம் ஒரு இடுகையாக இட்டது அருமை.

அதிக எடை - தானம் செய்தல் -கேக் மாதிரி - சாப்பிடுவதற்குள் துபாய் - இறங்கி மறு ஃபீளைட் பிடிக்க நடத்து செல்லல் - சென்னை வந்த வுடம் கொசு - தம்பி - மேம்பாலம் - டீ - பஸ் - ஏழு மணி நேரம் பயணம் - வெயில் கொடுமை - முன்னேறி விட்ட தாயகம் - சிட்டி பஸ் - இலவச டிவி - அங்கொன்றும் இங்கொன்றுமாக மாறாத விஷய்ங்கள்

நன்று நன்று - நினைவாற்றல் நன்று
நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா

ஸ்ரீராம். said...

நினைவுகள் சுகம். சொர்க்கமே என்றாலும்...

அன்பரசன் said...

வ‌ர‌வேற்கிறோம்

விஜய் said...

விடுமுறை இனிதே கழிய வாழ்த்துக்கள்

நல்ல எழுத்து நடை

வாழ்த்துக்கள் தம்பி

விஜய்

Shameed said...

பஸ்சு கிளீனா இருந்ததா அல்லது வாந்தி எடுத்து நாரிபோய் கிடந்தான்னு சொல்லலியோ இர்ஷாத்

அப்துல்மாலிக் said...

கடந்த வெக்கேசனின் அசைவுகளா//

நல்லது தொடருங்க

ஜெய்லானி said...

மெட்ராஸ் வந்தாலே தனி நினைவு சின்னம் இந்த மாட்டு கொசு தான் ..எப்படிதான் சமாளிக்கிறாய்ங்களே தெரியல .. பாவம் சென்னை வாசிங்க ..

Chitra said...

101 followers!!! Congratulations!!!

நாடோடி said...

ஊர் ப‌ய‌ண‌ அனுப‌வ‌ங்க‌ளா ந‌ல்லா இருக்கு இர்ஷாத்.. தொட‌ருங்க‌ள்..

சசிகுமார் said...

அருமை நண்பா வாழ்த்துக்கள்

ஜெயந்தி said...

இடுகை சூப்பரா இருக்கு. ஊருக்கு வந்திட்டீங்களா? வாங்க வாங்க.

Ahamed irshad said...

ஜெயந்தி said...
இடுகை சூப்பரா இருக்கு. ஊருக்கு வந்திட்டீங்களா? வாங்க வாங்க.//

இல்லை..நான் விடுமுறை முடிந்து கத்தாருக்கு வந்துவிட்டேன்..

Zakir Hussain said...

Nice to way of writing..makes me to visit again our native...hmmm

r.v.saravanan said...

ஊர் ப‌ய‌ண‌ அனுப‌வ‌ங்க‌ள் அருமை.
தொட‌ருங்க‌ள் இர்ஷாத்

Menaga Sathia said...

இனிமையான பயண அனுபவங்கள்...

Thenammai Lakshmanan said...

கொசு கடித்தது இனிமையா இருந்துச்சு போல தெரியுது இர்ஷாத்..:)

அன்புடன் மலிக்கா said...

ஆகா பயண அனுபவமா நோன்பு முடிந்ததும் நானும் எழுதனும். நிறைய இருக்கு..

சூப்பராக எழுதியிருக்கீங்க..
சமயம் கிடைக்கும்போது இதையும் பாருங்க.. http://fmalikka.blogspot.com/

Priya said...

//பேக்கை எடுக்கும்போது கையில் சுளீர்'ன்னு ஒரு வலி.. பார்த்தால் A-,A+,O-, ன்னு தாறுமாறாக ரத்தம் பார்த்த கொசு கடித்துக் கொண்டிருந்தது.
ஆங் ^^^^^^இந்தியா வந்திருச்சுடோய்.....//.........
கொசுக்கடி உணர்த்தியதா இந்தியா வந்துவிட்டதை... :)

உங்க ஊர் பயணத்தை அழகான நினைவுகளா தொகுத்து இருக்கிங்க, வாழ்த்துக்கள் இர்ஷாத்.

ம.தி.சுதா said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்...

Ahamed irshad said...

வாங்க சீனா ஐயா எப்பவுமே நீங்க தான் ஃபர்ஸ்ட்..

வாங்க செந்தில் உங்க பதிலுக்கு ரொம்ப சந்தோஷம்..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

சீனா ஐயா உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க அன்பரசன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க விஜய் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க சாகுல்ஹமீது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி(சுத்தமாதான் இருந்தது)

வாங்க அப்துல்மாலிக் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க சித்ரா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஸ்டீபன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க ஜெயந்தி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க ஜாஹிர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.(கண்டிப்பா எழுதுங்க)

வாங்க சரவணன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க மேனகா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க தேனக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..(ஊர் போனது'ல கொசுக்கடிக்கூட இனிமைதான்)..

வாங்க மலிக்கா (நான் ஊரிலிருந்த போது நீங்க அதிரை வந்ததாக எனக்கு தகவல் வந்தது, பார்க்கதான் முடியல)வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க ப்ரியா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க சுதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Unknown said...

பயணக் கட்டுரையை அழகாக தந்து இருக்கிறீர்கள் இர்ஷாத்.
அதிலும் சென்னை வந்து விட்டது என்பதை சென்னைக்கே உரிய அடையாளத்துடன் நகைச் சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.
விடுமுறையை ஆனந்தமாக கழிக்க நல்வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

your writing style is good.you are also stylish in photo

Ahamed irshad said...

வாங்க அபுல் பசர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..


வாங்க செந்தில்குமார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

ஸாதிகா said...

சுவார|ஸ்யமான பகிர்வு.

Ahamed irshad said...

ரொம்ப நன்றிங்க ஸாதிகா வருகைக்கும் கருத்துக்கும்..

சாந்தி மாரியப்பன் said...

ஒவ்வொரு முறையும் ஊருக்குப்போகும்போது ஒரு எதிர்பார்ப்பும், போய்ச்சேர்ந்தபிறகு சொல்லத்தெரியாத ஏமாற்றமும்.. அன்னியப்பட்ட உணர்வுமாக ஒரு கலவையான அனுபவம்.. ஆனாலும் ஊர் நினைவுகள் தரும் சுகமே தனி :-)))

மணிபாரதி said...

உங்களது பதிவுகளை எல்லாமேதமிழ்.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் EllameyTamil.Com

இப்படிக்கு
EllameyTamil.Com

viji said...

Helo Ershad, How come you entered into my crafts blog?
Any way thanks a lot. I too entered to your blog and found everything very happily. I am a woman like, love live with Tamil and i am siging my name in Tamil. But computer is new to me and dontknow write in Tamil here. I enjoyed your blog. Thanks for visiting. I am happy my son like boy is entering my blog.
viji

பனித்துளி சங்கர் said...

///////கடந்த மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை,/////

உடல் நலம் மிகவும் முக்கியம் நண்பரே . கவனித்துக்கொள்ளுங்கள்

Anonymous said...

HELLO FRIENDS,

Legit Google Adsense Home Based online jobs 2011

Google Adsense New Approval Tricks Package

New Google Adsense Approved Accounts in 24 Hour's

NOW A DAYS INDIAN WEBSITES/BLOGS OWNERS ARE SUFFERING FROM A MAJOR PROBLEM AND THAT IS THEY ARE NOT ABLE TO GET GOOGLE ADSENSE ACCOUNTS

COZ IT IS BEEN FOUND BY GOOGLE ADSENSE TEAM THAT THERE IS A LOTS OF SPAM OR FROUDLENT CLICKS ARE HAPPENED FROM INDIA AND CHINA

DO YOU NEED GOOGLE ADSENSE ACCOUNT???

IS YOUR GOOGLE ADSENSE ACCOUNT IS BANNED??

IS YOUR GOOGLE ADSENSE ACCOUNT IS DISABLED???

ARE YOU GOT FRUSTATED WITH YOUR GOOGLE ADSENSE ACCOUNT APPROVAL REJECTION BY GOOGLE TEAM???

THEN I HAVE SOLUTION FOR YOU.

HERE COMES AN OPPORTUNITY TO START YOU ONLINE GOOGLE ADSENSE BUSINESS AGAIN.

YES IT IS TRUE YOU HAVE ONE MORE CHANCE !!!

IF NEED AN ADSENSE ACCOUNT CONTACT ME DIRECTLY

MY E-MAIL ID IS: Bharathidasan88@gmail.com


PLACE: Chenaai , Gummidipoondi ,INDIA.


I CHARGE 1200/- RS FOR 1 GENUINE GOOGLE ADSENSE ACCOUNT

SO HURRY UP AND EMAIL ME YOUR DETAILS

PAYEE NAME:

POSTAL ADDRESS:

PHONE NO.:

All Country Google Adsense Approved Accounts Tricks 2011

Other Country Members:

Paypal ----> $40

Alertpay ---->$40

More info visit www.newgoogleadsense2011.blogspot.com

More info visit www.pakadai.com

Call Info : 9994251082

MY E-MAIL ID IS: Bharathidasan88@gmail.com


WE WILL GET BACK TO U VERY SOON WITH YOUR ADSENSE ACCOUNT

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates