டிஸ்கி: இது மீள் பதிவு...
skip to main |
skip to sidebar
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா" எங்கயோ கேட்ட பாடலே இந்த கட்டுரையின் வேர்.நம்ம ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம். காதிர் முகைதீன் கல்லூரி நம்ம ஊருக்கு முக்கியஅடையாளம் நாகப்பட்டினம் முதல் பேராவூரணி அறந்தாங்கி வரை மாணவர்கள் படித்த கல்லூரி பழமைவாய்ந்தது.அந்த வேப்ப மர சூழலும்,இயற்கையின் பசுமையும் அக் கல்லூரியின் வாயிலை அலங்கரிக்கும்.நான் அங்கே படிக்கவில்லையென்றாலும்(ஏன் படிக்கவில்லை என்றால் அதற்கு ஒரு (அ)நியாயமா ஒரு பதிவு போடனும் ஏன் வம்பு) கடல்காற்றின் சுகமும்,பாசாங்கான எங்கள் ஊரின் பேச்சு வழக்கும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. கடலை பார்த்த ரயில் நிலையம்.அந்த ரயில் நிலையத்தில் ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட கவலையும் தணியும்.அப்பேர்ப்பட்ட ரம்மியமான இயற்கை வலையில் அமைந்தது.இதை நான் பெருமையாகவே சொல்வேன்.காலை 8 மணிக்கு ஒரு ரயிலும்,மாலை 4 மணிக்கு ஒரு ரயிலுமாக காரைக்குடி-மயிலாடுதுறை ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்கள் எங்கள் ஊரையும் தொட்டுச் செல்லும். முன்பு காரைக்குடி- சென்னை இடையே ஒடிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயிலும் எங்கள் ஊரின் வழியே சென்று கொண்டிருந்தது.அதுக்கு மூடுவிழா நடத்தி சில வருடங்கள் ஆகி விட்டது. சரி விஷயத்துக்கு வருவோம்.இந்த ரயில்நிலையம் வந்து படிக்காத மாணவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.அந்தளவுக்கு எங்கள் ஊர் மாணவர்களின் படிப்புக்கும்,இந்த ரயில் நிலையத்துக்கும் பிணைப்பு அபரிதமானது. பல சமயங்களில் வாத்தியார்கள் முன்னிலையில் வகுப்பறையாக உருவெடுத்த பெருமை இந்த ரயில் நிலையத்தையேச் சாரும். வயதான முதியோர்களும்,இளைஞர்களும் வயது வித்தியாசமின்றி வந்து போகும் இடமாக இருந்தது எனக்கு தெரிந்தவரையில் ரயில்நிலையம்தான். வருடா வருடம் மே அல்லது ஜீன் மாதங்களில் ரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட,மாநில அளவிளான கால்பந்து போட்டி நடக்கும்.அந்த ஒரு மாதம் முழுவதும் மாலை நேரங்களில் எங்களின் ஊரின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என சொல்லலாம்.நினைத்தாலே இனிக்கும் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இந்த கால்பந்து தொடர் போட்டியை குறிப்பிடலாம்.அந்த தொடர் போட்டி ஆரம்பமாகும் நாளில் இருக்கும் சந்தோஷம்,அதன் நிறைவு நாளிலிருக்கும் கவலை கல்யாணம் முடிஞ்சு பத்தே நாள்'ல வெளிநாட்டுக்குப் போகிற மணமகனின் கவலைக்கு ஈடானுது.அவ்வளவு தூரம் எங்கள் மக்களோடு ஒன்றிப் போன விளையாட்டு கால்பந்து. அவிச்ச அல்லது அவிக்காத கடலையை சாப்பிட்டுக்கிட்டு இந்த டீம் கோல் போடுமா,அந்த டீம் ஜெயிக்குமா பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டு ஆர்வத்துள்ளலில் எவ்வித கவலையும் இன்றி இருக்கும் அந்த நிமிடம் வாழ்நாள் முழுதும் வராதா(வராது!)என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு.
டிஸ்கி: இது மீள் பதிவு...
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா..
டிஸ்கி: இது மீள் பதிவு...
30 வம்புகள்:
நினைவுகளை கிளரிவுட்டுடியலே,, அந்த ரம்மியமான உப்புக்கலந்த காத்தோடு படித்த படிக்க முயற்சித்த நாட்கள் எத்தனையோ கணக்கிலடங்காது..
ரயில்வே கேட்டு தாண்டி ஒரு பாழடைந்த வேர்ஹவுஸ் இருக்குமே அதையும் குறிப்பிட்டிருந்தா நல்லாயிருந்திருக்கும்
-அப்துல்மாலிக்
எல்லாம் சரி.. ஆனா எப்போ ஊருக்கு போறீங்கன்னு மாட்டும் சொல்லாதிங்க..
வெறும்பய said...
எல்லாம் சரி.. ஆனா எப்போ ஊருக்கு போறீங்கன்னு மாட்டும் சொல்லாதிங்க.///
அதுக்கு ஒரு போஸ்ட் ரெடியாகிகிட்டு இருக்கு.. வெயிட்..
பழைய நினைவுகளை நினைத்து பார்ப்பதே ஒரு சுகம் உங்கள் இடுகை படித்தவுடன் எனக்கு என் ஊரின் (கும்பகோணம் )
நினைவுகள் எனக்கு ஞாபகம் வருகின்றன
நேரமிருக்கும் போது என் தளத்திற்கும் வருகை தாருங்கள் இர்ஷாத்
//இந்த ரயில்நிலையம் வந்து படிக்காத மாணவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.அந்தளவுக்கு எங்கள் ஊர் மாணவர்களின் படிப்புக்கும்,இந்த ரயில் நிலையத்துக்கும் பிணைப்பு அபரிதமானது. பல சமயங்களில் வாத்தியார்கள் முன்னிலையில் வகுப்பறையாக உருவெடுத்த பெருமை இந்த ரயில் நிலையத்தையேச் சாரும்//
ரொம்ப சரியாக சொன்னீங்க தம்பி இர்ஷாத்
மீள்சா இருந்தாலும் நம்மூரை பற்றி எத்தனை தடவை வேண்டுமானாலும் சிலாகிக்கலாம்..
இர்ஷாத் இப்படிப்பட்ட நினைவலைகள்தான் எங்கள் அயல் நாடுகளில் ஓரளவு நின்மதியோடு தூங்க வைக்கிறது.நல்ல பதிவு.
எல்லா ரயில் நிலையங்களுக்கும்
ஒரு வசீகரமுண்டு.
நீங்கள் சொன்னவிதம் கேட்டு
உடன் அதிராம்பட்டினத்திற்கு
ஒரு டிக்கெட் போடவேண்டும்
எனும் ஆசை மேலெழும்புவது
உங்கள் எழுத்திற்குக் கிடைத்த
வெற்றி.
ஏங்க எல்லா ஊர் ரயில்வே ஸ்டேசனும் ஒரே மாதிரி தான் இருக்குமா??. ரயிலும் ஒரே மாதிரி தான் போகுமா?? ஊருக்கு ஊர் மாறாதா? இப்படி நான் கேட்க மாட்டேன்னு நீங்க நெனச்சா அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்னு நான் சொல்ல மாட்டேன்னு... ஹி..ஹி
ரமியமான பகிர்வு இர்ஷா...நம்மூரு நம்மூருதான்...
மலரும் நினைவுகள் அருமை இர்ஷாத்...
தலைப்பே சொல்லிடுச்சே..நா வெறென்ன சொல்ல..
தலைப்பை வழி மொழிகிறேன்:)!
superb namma ooruna summa vaa, innum neiriya irukku adhai yeldhavum please.
நானும் உங்க ஊருக்கு வந்து இருக்கனே:)
நல்ல பதிவு நண்பா
அள்ளித தந்த பூமி அன்னை அல்லவா...
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா...
வாங்க அபுஅஃப்ஸர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க வெறும்பய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சரவணன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கண்டிப்பாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்
வாங்க தாஜீதீன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க கேஆர்பி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க மதுமிதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க அப்துல்காதர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ஸ்டீபன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க ராமலஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க aurs வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க பிங்கி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.. நீங்கள் எப்ப வந்தீங்கன்னு சொல்லவே இல்லயே..
வாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
நல்லா இருக்கு மீள்பதிவும் மலரும் நினைவ்ம் இர்ஷாத்..
நினைவுகள் என்றுமே சுகமானவை...
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா"
நல்ல கட்டுரை ,
சொர்க்கமே என்றாலும் என்று எழுதுவது நல்லது அல்ல .ஊரைப் புகழ்வது உயர்வதுதான் .ஆனால் சொர்க்கமே என்றாலும் சரி அல்ல .
இப்படித்தான் சில பேர் சும்மா இருக்காம ஊர் நினைப்பை கிளப்பி விடுறாங்க :)
வாங்க தேனக்கா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க சகா மகேஷ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க நீடூரார் அவர்களே எனக்கு வந்த நினைவுகளை எழுத்தில் கொண்டு வந்திருக்கிறேன்.அது சரியா தவறா என்ற விவாததிற்கு நான் வரவில்லை.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க சகா அக்பர் என்னப்பா ஒரு வித சினுங்கலோடு சொல்லியிருக்கீங்க.. இது சந்தோஷமா வருத்தமான்னு தெரியலயே.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
ஆகா ஆகா கொசுவத்தியா இர்ஷாத்
என்ன செய்வது = நினைச்சுப் பாத்து மகிழ வேண்டியது தான்
நல்வாழ்த்துகள் இர்ஷாத்
நட்புடன் சீனா
Post a Comment