குளமும் திரவியமும்...


அந்த குளத்தில் ஒருவன் குளிக்கப்போனான்.போன உடனேயே வந்து பக்கத்தில் இருந்த போர்ட்டில் ஏதோ எழுதி வைத்துவிட்டு போனான்..அடுத்து இன்னொருவன் வந்தான் குளிக்க போவதற்கு முன் துண்டை அந்த போர்டின் மேலே போட்டுவிட்டு போனவன் தான் திரும்பி வரவேயில்லை..  

முதலாமானவன் படித்தவன்

இரண்டாமானவன் படிக்காதவன்..

போர்டில் " இக் குளத்தில் புதை குழி உள்ளது யாரும் குளிக்க வேண்டாம் என எழுதியிருந்தது"...  

திரவியம் தேடு..


திரைகடல் ஓடி
திரவியம் தேடு
சொன்னவர்கள் நிச்சயமாய்
அரசியல்வாதிகளாத்தான் 
இருப்பார்கள் 
அப்போதானே
அவர்கள் இங்கே திரவியம்
எடுக்க முடியும்..
YOUTUBE வீடியோக்களை ஆடியோ(MP3) வடிவில் அதே தரத்துடன் கேட்க இந்த தளம் உதவுகிறது. இதில் போய் நீங்கள் விரும்பும் வீடியோவின் உரலை கட் பண்ணி இதில் பேஸ்ட் செய்தால் அடுத்த இரண்டு நிமிடங்களில் அதே தரத்துடன் MP3 பார்மேட்டில் கிடைக்கிறது.. இது முற்றிலும் இலவசமே..

வீடியோ டூ Mp3 

Post Comment

16 வம்புகள்:

soundr said...

என்ன கட ஒரே சீரியஸா இருக்கே....

http://vaarththai.wordpress.com

நாடோடி said...

என்ன‌ ஆணி கொஞ்ச‌ம் அதிக‌மா இர்ஷாத்?... ப‌திவு சின்ன‌தா இருக்கு... க‌விதை ந‌ல்லா இருக்கு.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//இக் குளத்தில் புதை குழி உள்ளது யாரும் குளிக்க வேண்டாம் என எழுதியிருந்தது//

குளத்தில் எந்த ஊர் குளத்தில் புதை குழி இருக்கு? :(

செய்யும் செயல் தவறு என்று அறிந்த படித்தவனும் புதைக்குழியில் விழும் காலத்தில், படிக்காதவன் விழுந்ததில் ஆச்சரியமில்லை.

அரசியல் கவிதை சூப்பர் தம்பி இர்ஷாத் வாழ்த்துக்கள்

Visit http://adirainirubar.blogspot.com/

Starjan (ஸ்டார்ஜன்) said...

கருத்துகள் அருமை இர்ஷாத்.. தொடருங்கள்

pinkyrose said...

இர்சாத்! நேங்களாச்சும் சொல்லுங்க ஆணி னா என்ன?

vasu balaji said...

சுட்டிக்கு நன்றி:)

ஜெயந்தி said...

//YOUTUBE வீடியோக்களை ஆடியோ(MP3) வடிவில் அதே தரத்துடன் கேட்க இந்த தளம் உதவுகிறது.//
தகவலுக்கு நன்றி.

ஜெயந்தி said...

pinkyrose said...
இர்சாத்! நேங்களாச்சும் சொல்லுங்க ஆணி னா என்ன?//

ஆணி தெரியாமலா இருக்கீங்க. நான் சொல்லித்தர்றேன். ஆணின்னா ஆபீசுல செய்யற வேலை.

ஹேமா said...

அரசியல் கவிதை யாராச்சும் அரசியல்வாதி பாத்தார்ன்னா நல்லது இர்ஷாத்!

படித்தவர் படிக்காதவர் நிலை ....சொல்லிய விதம் நல்லாருக்கு.

ஸ்ரீராம். said...

பயனுள்ள சுட்டி.

சீமான்கனி said...

திரவியம் மட்டுமா தேடுகிறார்கள்.....
பயனுள்ள தளத்தின் சுட்டிக்கு நன்றி...இர்ஷா...

Katz said...

இரண்டாவது அருமை.

Unknown said...

நல்ல சிந்தனை... இப்ப அரசியல்வாதிகள்தான் வெளிநாட்டு வியாபாரத்தில் நிறைய முதலீடு செய்கிறார்கள்

ஜெய்லானி said...

@@@ நாடோடி--//என்ன‌ ஆணி கொஞ்ச‌ம் அதிக‌மா இர்ஷாத்?... ப‌திவு சின்ன‌தா இருக்கு... க‌விதை ந‌ல்லா இருக்கு//

ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

சசிகுமார் said...

சூப்பர் நண்பா கலக்கல் பதிவு அருமை

cheena (சீனா) said...

அன்பின் அஹமது இர்ஷாத்

ம்ம்ம்ம் படித்தவன படிக்காதவன் - இதெல்லாம் சகஜம். அனுபவத்தில் புதைகுழியில் இருந்து தப்பிக்க வழியுண்டு

யூடூப் கன்வர்ஷன் - தகவலுக்கு நன்றி

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates