என்ன உலகம்'டா இது.. ச்சே... .


இதை அவசர பதிவாக இடுகிறேன்... நேற்று என் நண்பனிடம் இருந்து போன் வந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்தோம்.. அவனின் குரல் வழக்கத்துக்கு மாறாக இருந்தது. ஏனென்று கேட்டேன் ஒன்றுமில்லை என்று அவன் மழுப்பியதை அவன் குரலே காட்டிக்கொடுத்தது. ரொம்பவும் வற்புறுத்தவும் அவன் சொன்னதைக் கேட்டு எனக்கு வந்த கோபம் எனக்குத்தான் தெரியும்.. அவன் துபையில் ஒரு மார்க்கெட்டிங் கம்பெனியில் சேல்ஸ் எக்ஸ்கியூட்டீவாக வேலை பார்த்து வந்தான்.சுமாரான கம்பெனி இருந்தாலும் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வேலைப் பார்த்து வந்திருக்கிறான்.அந்த கம்பெனியில் அவனுடன் வேலைப் பார்த்த 'குய்யி'(ஐ மீன் லேடி) அவளுக்கு இவன் டெய்லி ரிப்போர்ட் கொடுக்கவேண்டும் இது விதி(தலைவிதி இல்ல, ரூல்'ஸ்)இப்படியாக வேலை போய்க்கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் ஆபிஸ் சம்பந்தமான ஃபைலை இவன் அவளிடம் 'நான் வெளியே போகிறேன் இதை மேனேஜர் வந்தவுடன் கொடுத்துவிடு' என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.அந்த ஃபைலில் இருந்த முக்கியமான மூன்று தாள்களின் ஒரிஜினலை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு ஒன்றும் தெரியாததுபோல் வைத்துவிட்டாள். அப்புறம் மேனேஜர் வந்தவுடன் அந்த ஃபைலை கொடுத்துவிட்டாள்..ஆனா அந்த ஃபைலில் இருந்த புராஜக்ட் இந்த கம்பெனிக்கு போட்டியாக உள்ள வேறொரு கம்பெனிக்கு போய்விட்டது..எப்படி என்றால் இந்த நாயி(பதிவர்கள் மன்னிக்க) அந்த முக்கியமான பேப்பர்களை அந்த கம்பெனிக்கு கொடுத்து காசு பார்த்துவிட்டாள்.அதோடு மட்டுமில்லாமல் இவன் தான் இந்த ஃபைலின் காப்பிகளை அந்த கம்பெனிக்கு கொடுத்துவிட்டான் என்றும் ஜோடித்துவிட்டிருக்கிறாள். இதை உண்மையென நம்பிய மேனேஜர் இவனை வேலையை விட்டு தூக்கினதோடு இல்லாமல் விசாவையும் கேன்சல் பண்ணிவிட்டார். எவ்வளவு பெரிய கொடுமை பாருங்கள்.. எதையும் ஆராயமல் ஒரு பொம்பள சொன்னா அப்படிங்கிறத்துக்காக இவனை கேன்சல் பன்ற அளவுக்கு போயிருக்கிற அந்த நாதாரி மேனேஜர் ஆம்பளையா.. இவனுக்கு நான் சொன்ன ஆறுதல் பத்தாது..கல்யாணமாகி இரண்டு குழந்தையும் , எட்டாவது படித்துக் கொண்டிருக்கிற தங்கையும் உண்டு.. அம்மா, அப்பா, இதர செலவுகள் நினைத்துப் பார்க்கவே முடியலைடான்னு சொல்லி போனில் அழுதான்..அவனுக்கு என்னால் முடிந்தது ஆறுதல் மட்டுமே.. வேறென்ன என்ன சொல்ல சொல்றீங்க.. இந்த கொடுமையில இன்னொன்று என்னான்னா அவன் கடைசியா பாஸ்போர்ட்டை வாங்க அந்த ஆப்புக்கு ஸாரி ஆபிஸீக்கு போனபோது அவன் வேலைப் பார்த்த இடத்தில் வேறொரு பிலிப்பைனி.. என்ன உலகம்'டா இது.. ச்சே... 
 நான் ஒரு நல்ல நிலைக்கு பிறகாலத்தில் வரும் பட்சத்தில் ஒன்றுக்கு ரெண்டா ஆப்ப? ரெடியா வைத்திருப்பேன்.. ஏதாச்சம் ஒரு பி. மாட்டமாள போய்டுவா....இதுவே நான் என் நண்பனுக்கு கொடுக்க போற 'பெரிய' ஆறுதலா இருக்கட்டும். இது ஜோக் இல்லை சீரீயஸா.. 

நண்பர் சீமான்கனி தொ.பதிவுக்கு அழைத்திருந்தார்.. இச்சூழலில் என்னால் யோசிக்க முடியவில்லை,பிறகொரு சமயத்தில் எழுதுகிறேன் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்...

Post Comment

36 வம்புகள்:

வடுவூர் குமார் said...

கொடுமை!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப வருத்தமாக இருக்கிறது இர்ஷாத். என்ன செய்ய.. எல்லாம் இறைவன் பார்த்துக்கிட்டுதானே இருக்கான்; அவன் பார்த்துப்பான். ரொம்ப கொடுமையாருக்கு. அவருக்கு இறைவன் நல்வழியை காண்பிப்பான்.

சசிகுமார் said...

ஆண்களின் வாழ்க்கையில் விளையாடும் சில பெண்களை என்ன செய்யும் இந்த உலகம்.

Yasir said...

உண்மையை சொல்லப்போனால்..பிலிப்பினிகளுக்கு (முக்கியமா அந்த நாட்டு பெண்களுக்கு) நல்ல எண்ணமே கிடையாது..இந்தியன் என்றால் வெளியே சிரித்து பேசினாலும்..உள்ளே வெட்டித்திங்கும் கர்வம் இருக்கும்..நம்முடைய வளர்ச்சி பிடிக்காத பன்னி திங்கும் ஜென்மங்கள்...என் ஆபிஸ்லேயும் இதை மாதிரி சம்பவங்கள் நடந்து இருக்கு..இங்கு என் கை ஓங்கி இருப்பதால்...நான் இதுவரை 2 பிலிப்பினிகளை வேலை நீக்கம் செய்து இருக்கிறேன்..நீங்கள் இந்த இனத்துடன் வேலை பார்ப்பவராக் இருந்தால்...கவனமாக இருங்கள்...நேரம் எதிர்பார்த்து காத்து இருப்பாளுக..காலைவார

சிநேகிதன் அக்பர் said...

நண்பருக்கு எனது ஆறுதல்கள்.

சில கெடுதல் நன்மையில் கொண்டு போய் விடும். நண்பரை மனம் தளர்ந்து விடாமல் இருக்கச் சொல்லுங்கள். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறில்லை. இறைவன் அவருக்கு கருணை காட்டுவான்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பருக்கு எனது ஆறுதல்கள்.

நண்பரை மனம் தளர்ந்து விடாமல் இருக்கச் சொல்லுங்கள். அனுபவத்தை விட சிறந்த ஆசான் வேறில்லை.

ஹேமா said...

மனசுக்குக் கஸ்டமாயிருக்கு இர்ஷாத்.யாரை நம்பலாம் நம்பக்கூடாதுன்னு தெரியவேயில்லை.இதில அகப்படுறவங்க நிலைமை !?

Menaga Sathia said...

ரொம்ப வருத்தமாயிடுச்சு...நண்பருக்கு என் ஆறுதல்...இதைவிட அவருக்கு நல்லவேளை கிடைக்கும் ,கடவுள் நிச்சயம் அருள் புரிவார்...

நாடோடி said...

இப்ப‌டியும் ந‌ட‌க்கிற‌தா!!!. ரெம்ப‌ கொடுமைதான்.. உங்க‌ள் ந‌ண்ப‌ருக்கு சீக்கிர‌ம் ந‌ல்ல‌ வேலை கிடைக்க‌ என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்..

ஜில்தண்ணி said...

இப்படியும் சில பெண்கள்
நல்ல உலகம் டா சாமி
நாமதான் உஷாரா இருக்கனும் போல

நண்பருக்கு என் சிறிய ஆறுதல்கள்

சௌந்தர் said...

ரொம்ப கஷ்டமா இருக்க பாஸ்

யூர்கன் க்ருகியர் said...

so sad !!

ஜெயந்தி said...

சில மனித ஜென்மங்கள் இப்படித்தான் சுயநலமாக வாழ்கிறார்கள். தான் வாழ்வதற்காக அடுத்தவரைக் கெடுக்கக்கூடாது.1music

நட்புடன் ஜமால் said...

இதனை விட நல்லதாய் அல்லாஹ் தருவான் - நம்பிக்கையுடன் இருக்க சொல்லுங்கள் நண்பரை.

Priya said...

ரொம்ப வருத்தமா இருக்கு இர்ஷாத்.கடவுளின் ஆசீர்வாதத்தோட நண்பருக்கு வேறு ஒரு நல்ல வேலை கிடைக்கும். நண்பரை தைரியமாக இருக்க சொல்லுங்கள்.

Madumitha said...

நல்ல மனிதர்கள் வீழ்வதில்லை
இர்ஷாத்.

ராஜவம்சம் said...

உண்மையாளர்களுக்கு சோதனை வருமே தவிர தோல்விகள் வராது.

ஸாதிகா said...

//நட்புடன் ஜமால் said... 14
இதனை விட நல்லதாய் அல்லாஹ் தருவான் - நம்பிக்கையுடன் இருக்க சொல்லுங்கள் நண்பரை.//வழிமொழிகின்றேன்.

vasu balaji said...

திருட்டுன்னா கம்ப்ளெயிண்ட் பண்ண முடியாதுங்களா? என்னமோ போங்க:( பாவம் உங்க நண்பர்.

சீமான்கனி said...

அப்படிபட்ட இடத்தில் இருந்து வெளியே வந்ததே நல்லதுன்னு நான் சொல்றேன்...எல்லாம் நன்மைக்கே அவருக்கு இதைவிட ஒரு நல்ல வாய்ப்பு தயாராய் இருக்கும்...இன்ஷால்லாஹ் ஏன் சார்பாவும் ஆறுதல் சொல்லவும்..

Shameed said...

இனிப்பது எல்லாம் பின்பு கசக்கும் கசப்பது எல்லாம் பின்பு இனிக்கும் எல்லாம் நன்மைகே

பனித்துளி சங்கர் said...

தாமதங்கள் கூட எதோ நல்ல வாய்ப்புக்காகதான் என்று எண்ணிக்கொள்ள சொல்லுங்கள் . பகிர்வுக்கு நன்றி

தூயவனின் அடிமை said...

உங்கள் நண்பருக்கு இறைவன் நிச்சயமாக இதைவிட ஒரு நல்ல வேலையை கொடுப்பன், படைத்தவனை நம்புங்கள். நல்வழி நிச்சயம். இந்த பிரச்சினை எல்லா நிருவனகளிலும் உள்ளது. ஒவ்வொருவரும் பதிலுக்கு பதில் என்று இறங்கினால் ,படைத்தவன் எதற்கு. பொறுமையாக இருங்கள். குறுக்கு வழியில் சென்றவர்கள் வாழ்க்கையில் நிலைத்து நின்றதாக சரித்திரம் கிடையாது. ஒரு நாள் தண்டனைக்கு உட்பட்டவர்களே.

Chitra said...

உங்கள் நண்பருக்கு சீக்கிரமே நல்ல வேலை கிடைக்க என் பிரார்த்தனைகள்!

Anonymous said...

படிக்கவே கஷ்டமா இருக்கு. யாரையுமே நம்பக்கூடாது போலிருக்கு. நண்பருக்கு சீக்கிரமே நல்ல வேலை கிடைக்கும். கவலைப்படாதீர்கள்.

Anonymous said...

எத்தனை சினிமால கதைகளில முக்கிய ஃபைல்களை யாரிடமும் கொடுக்க வேண்டாம்னு காட்டி இருப்பாங்க. உங்க நண்பன் மேல் இரக்கம் வரும் அதே நேரம் கோபமும் வருகிறது. இனியாவது கவனமாக இருக்கச் சொல்லுங்கள். ஆபிஸ்ல சிசிடிவி இல்லையா? இருந்தால் அதில் காட்டுமே.

Anonymous said...

விரைவில் வேலை கிடைக்கட்டும். அவர் குடும்பத்துக்காகவே இந்த வேண்டுதல்.

ஜேசுதாசன் said...
This comment has been removed by the author.
ஜேசுதாசன் said...

மிகவும் வருத்தமான விசயம் தான்...இந்த காலத்தில் யாரை நம்புவதுனே தெரியல...நம்பிக்கை இல்லாத இடத்தில் அவர் இருக்க வேண்டாம்.. மதிக்கத்தக்க அளவிற்க்கு பிராஜெக்ட் செய்யும் அவருக்கு அதைவிட நல்ல எதிர்காலம் அமையும் என நம்புகிறேன்.. பகிர்ந்தமைக்கு நன்றி... நண்பர்களே....அந்த நண்பருக்கு வாய்ப்புத்தந்து உதவுங்கள்.. நன்றி..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அண்ணே ,

என்னக்கு நேர்ந்த சம்பவம் தான் :( நண்பருக்கு ஆறுதல்கள்...., அவருக்கு நிச்சயம் வேறு வேலை கிடக்க வேண்டுகிறேன்

Ahamed irshad said...

This comment has been removed by the author.

Ahamed irshad said...

என்னே கொடுமைங்க இது..அந்த பொம்பலய செருப்பால அடிக்கனும்... நண்பரை ஆறுதல்ப்படுத்துங்கள்...

Thenammai Lakshmanan said...

உங்கள் கோபம் நியாயமானது அஹமத்..

cheena (சீனா) said...

அன்பின் அஹமது இர்ஷாத்

என்ன செய்வது - நாம் தான் அதி சாக்கிரதையாக, கவனத்துடன் இருக்க வேண்டும். நல்லதொரு வேலை நண்பருக்குக் க்கிடைக்க நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Ahamed irshad said...

என் நண்பனுக்கு ஆறுதல் கூறிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...

மகேஷ் : ரசிகன் said...

கேவலம்...

நண்பருக்கு இதை விட நல்ல வேலை சீக்கிரம் கிடைக்கும்.

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates