குங்குமம் இதழில் என் கதையும் சலூன் கடை பெஞ்சும்...


நான் எழுதிய ஒரு பக்க கதை இந்த வார குங்குமத்தில் 45 ம் பக்கத்தில்  வெளியாகி உள்ளது மகிழ்ச்சி. என் பதிவுகளை படித்து தொடர்ந்து ஊக்கம் கொடுத்துவரும் அனைவருக்கும் என் கதையை பிரசுரித்த குங்குமம் இதழுக்கும் என் நன்றிகள்...

***********************************************************************

சூப்பர் சிங்கர் ஜீனியர் பட்டத்தை வென்ற அல்கா அஜித்தின் குரல் ஒரு தேர்ந்த பாடகியைப் போல் உள்ளது. Outstanding. நிறைய தடவை அல்காவிற்கு ஓட்டுப் போட்டிருக்கிறேன்.அதுக்காக அப்பெண் வாங்கிய பரிசினை பங்குகொள்ளமாட்டேன் என்பதை நினைவில் கொள்க(கேட்டாலும் கிடைக்காது)..அடுத்து எனக்கு ரொம்ப பிடித்தது நித்ய ஸ்ரீ(யப்பா ஸ்ரீ என்கிற வார்த்தையை எப்படி டைப் பண்றதுன்னே தெரியல இதுக்கே ரெண்டு பாட்டில் மிரண்டா குடிக்கவேண்டியதாப்போச்சி)இந்த சிறுமி ஆடிக் கொண்டேப் பாடுவதில் திறமை வாய்ந்தவள்.."துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை" என்ற பாடலை அவள் ஆடிக்கொண்டே பாடுவது தனி அழகு. அப்புறம் ரோஷன் இந்தப் பையனுக்கு வாய்ஸ் ரொம்ப நைஸ். "மழையே மழையே" என்ற பாடலை இவன் பாடியபோது மனதை ஒரு வழி பண்ணிவிட்டது. அதற்கடுத்து ஸ்ரீகாந்த்(மறுபடியும் ஸ்ரீ!!) இந்த வாண்டு அடேயப்பா அலும்பு தாங்கல கலக்கிவிட்டான்.. ரொம்ப ரசித்த நிகழ்ச்சி இது..  அல்கா அஜித்திற்கும் மற்ற ஜீனியர்களுக்கும் வாழ்த்துக்கள்..

டிஸ்கி: இதன் மூலம் அறியப்படும் நீதி "அஜித்" என்றாலே வெற்றிதான்...

***********************************************************************
திரும்பவும் லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார் ரஞ்சி.. நித்தியுடன் ஏற்பட்ட 'அறைரகசியம்'? எல்லோர் வீட்டிலும்?! சில்வர் ஜீப்ளியாய் ஓடிக்கொண்டிருக்க இந்தம்மா ஏதோ புத்தகம் எழுதப்போகுதாம்..அதையாவது கேமரா கண்ணுல படாம எழுதுங்க.. ஆஹா எதிர்க்கட்சிக்கு ஆள் கிடைச்சாச்சு.. விடு ஜீட்...

***********************************************************************


மறுபடியும் பெட்ரோல் விலையை ஏத்திவிட்டார்கள்.. ஐம்பதை தாண்டி அறுபதையும் தொட்டுவிட்ட்து ஒரு லிட்டரின் விலை.கூடிய விரைவில் நூறைத்தொட?! எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த துன்பத்திலும் இன்பம் என்னான்னா பெட்ரோல்,டீசல் விலை ஏறினாலும் பேருந்து கட்டணம் உயராது என்று கலைஞர் அறிவித்தது.
                                      **********************************************

எனக்கு பிடித்த பிரேசில் சிலியை அடித்து நொறுக்கி காலிறுதிக்கு முன்னேறிவிட்டது. இதில் நான் ரொம்பவும் எதிர்ப்பார்க்கிற நாடு கானா. ஆப்பிரிக்காவில் உள்ள சின்ன நாடு, பொருளாதாரத்தில் சொல்ற மாதிரி இல்லை,ஆனால் அந்நாட்டு வீரர்களின் விளையாட்டு சொல்ற மாதிரி இருக்கு..

                                     **********************************************


இந்த வார டிப்ஸ்

குளித்தவுடன் பட்ஸ் யூஸ் பண்றவரா நீங்கள், கூடிய விரைவில் ஒரு வாரம் காது வலி வரலாம்.. பட்டவன் சொல்கிறேன்.. குளித்தவுடன் பட்ஸ்' யூஸ் பண்ணவேகூடாதுன்னு எனக்கு பார்த்த டாக்டர் சொன்னார்.இன்னொன்று மார்கெட்டில் கிடைக்கும் மலிவு விலை பட்ஸை வாங்குகிறப்படசத்தில்,குளித்தவுடன் அந்த பட்ஸை யூஸ் பண்றபொழுது அதன் ஓரத்தில் இருக்கிற பஞ்சு உங்க பிஞ்சு? காதுக்குள்ள போகவும் வாய்ப்பிருக்காம்..அப்புறம் கடப்பாரையை விட்டு நோன்டினாலும் கிடைக்காது....

வர்ட்டா .....
.

Post Comment

61 வம்புகள்:

நேசமித்ரன் said...

:)

வாழ்த்துகள் இர்ஷாத்

ஜில்தண்ணி said...

இன்று குங்குமத்தில்
முதலில் கதையை படித்துவிட்டு
எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே என்று
பார்த்தால் அஹமது இர்ஷாத்

கலக்குங்க
அடிக்கடி இதை போல் பார்க்க வேண்டும்

ILA (a) இளா said...

http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_1485.html

இதைப் படிங்க. நீங்க சொன்ன bud விசயம் எப்படி உண்மையாவுதுன்னு தெரியும்

Chitra said...

குங்கமம் - சூப்பர் நியூஸ்! வாழ்த்துக்கள்!
Keep Rocking!

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை அருமையாக இருக்கிறது.. வாழ்த்துகள் இர்ஷாத்.. கலக்குங்க‌

Unknown said...

வாழ்த்துகள் இர்ஷாத்...

மனோ சாமிநாதன் said...

உங்களின் சிறுகதை குங்குமத்தில் பிரசுரம் ஆனதற்கு என் இதயங்கனிந்த பாராட்டுக்கள் இர்ஷாத்! மேலும் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்... இர்ஷாத்..வாழ்த்துக்கள்

நசரேயன் said...

வாழ்த்துகள்

சீமான்கனி said...

கதை நல்லா இருக்கு குங்குமத்தில் வெளியானதுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...தொடர்ந்து கலக்குங்கள் இர்ஷா...

ஹேமா said...

உண்மையிலேயே நல்ல கதைதான்.வாழ்த்துகள் இர்ஷாத்.

cheena (சீனா) said...

அன்பின் அஹமது இர்ஷாத்

குங்குமம் இதழில் வெளியான ஒரு பக்கக் கதை அருமை - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஸ்ரீராம். said...

கலக்கறீங்க இர்ஷாத்....கூடிய விரைவில் இன்னும் நிறையப் பத்தரிகைகளில் உங்கள் படைப்புகள் வெளி வர வாழ்த்துக்கள். ஃபுட் பாலில் இத்தாலி, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், வெளியேறியது சோகம். ஸ்ரீ தேவைப்படும் இடத்தில் வராவிட்டால் முன்போ பின்போ ஸ்பேஸ் விட்டு தனியாக அடித்து இணைக்கவும்.!! வந்து விடும்!.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வாழ்த்துக்கள் இர்ஷாத். எழுதிக்கிட்டே இருங்க. அப்போதான் பிரபல பதிவர் ஆக முடியும்.

சாந்தி மாரியப்பன் said...

வாழ்த்துக்கள் அஹமது. இதுபோல் எல்லாப்பத்திரிக்கைகளிலும் உங்க கதை வரணும்ன்னு வாழ்த்திக்கறேன்.

பட்ஸ்... பட்டாத்தான் தெரியும் :-))).

நாடோடி said...

குங்கும‌ம் இத‌ழில் வெளிவ‌ந்த‌ உங்க‌ள் க‌தைக்கு வாழ்த்துக்க‌ள்.... தொட‌ர்ந்து க‌ல‌க்குங்க‌.. டீக்க‌டை பெஞ்சு செய்திக‌ள் அருமை..

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துகள் இர்ஷாத்...
கலக்குங்க‌...

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள் இர்ஷாத்.

பருப்பு (a) Phantom Mohan said...

வாழ்த்துக்கள் பாஸ்! ரொம்ப சந்தோசம் ஒரு VIP கூட நட்பு வச்சிருக்கிறது மனசுக்கு சந்தோசமா இருக்கு!

அப்புறம் அஜித் மேட்டர், நாமளும் பல வருடங்களா இப்பிடியே தான் பேசிக்கிட்டு இருக்கும், தல கண்டுக்க மாட்டேங்குதே? தல ஒரு மெகா ஹிட் குடு தல!

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துகள் நண்பா.

மென்மேலும் உயர்வீர்கள்.

SUFFIX said...

கதம்ப மாலை சூப்பர். குங்கும வாழ்த்துக்கள்.

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் இர்ஷாத்...

சசிகுமார் said...

ஒரே பதிவுல இவ்ளோ மேட்டரா கலக்குறீங்க நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

குங்குமத்தில் வெளி வந்ததற்கு வாழ்த்துகள். உண்மை நிலையும் அதுதான் ஓனர்களுக்கு தொழில் வளர்ச்சி மட்டுமே குறிக்கோள்.

//டிஸ்கி: இதன் மூலம் அறியப்படும் நீதி "அஜித்" என்றாலே வெற்றிதான்..//

அறியப்படும் உண்மை : நீங்க அஜீத் ரசிகரா பாஸ் :)

அனைத்தும் அருமை.

ஸாதிகா said...

வாழ்த்துக்கள்!இன்னும் நிறைய எழுதுங்கள் இர்ஷாத்.

Yasir said...

சூப்பர் இர்ஷாத்..மகிழ்ச்சியா இருக்குது..உங்கள் கதை குங்குமதில் வந்ததற்க்கு... ///நித்ய ஸ்ரீ(யப்பா ஸ்ரீ என்கிற வார்த்தையை எப்படி டைப் பண்றதுன்னே// எனக்கு இன்னைவறைக்கும்...இந்த எழுத்தை எப்படி டைப் பண்றதுண்டு தெரியல..NHM editor நான் யூஸ் பன்றேன் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கேளன்...என்னுடைய சிறிய வேண்டுங்கோள்..உங்கள் பெயருக்கு முன்னால் “அதிரை” என்ற வார்தை சேருங்களேன்...ஏற்கனவே யுனிகோட் உமர்தம்பியால் பிரபலமாகியிருக்கும் நமது ஊர்க்கு...உங்களாலும் பெருமை வரட்டும்

Raghu said...

வாழ்த்துக‌ள் இர்ஷாத் :)

பேருந்து க‌ட்ட‌ண‌ம் உய‌ராதுதான். ஆனா புதுப்புது டீல‌க்ஸ் பேருந்துக‌ள் வ‌ந்துடும். இந்த‌ விஷ‌ய‌த்துல‌ க‌லைஞ‌ர் கில்லாடி

டீம்ல‌ யார் யார் இருக்காங்க‌ன்னே தெரியாது, ஆனா என‌க்கும் புடிச்ச‌தென்ன‌வோ பிரேசில்தான் :)

எல் கே said...

vaalthukkal.. expecting argentina to win the cup this time

Asiya Omar said...

மிக்க மகிழ்ச்சி.பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள் தல..

பா.ராஜாராம் said...

சிறுகதை நல்லாருக்கு இர்ஷாத்.

வாழ்த்துகள்!

தாஜுதீன் (THAJUDEEN ) said...

ரொம்ப சந்தோசம், வாழ்த்துகள் தம்பி இர்ஷாத்

ஹுஸைனம்மா said...

வாழ்த்துகள்!! ரொம்ப ஃபாஸ்டா, பதிவர்லருந்து எழுத்தாளரா பிரமோஷன்!! அப்பிடியே மெயிண்டெயின் பண்ணுங்க!

கண்ணா.. said...

குங்கும கதையாசிரியருக்கு வாழ்த்துக்கள்.....

அலைவரிசை அப்படியெ பெரிய அலையாய் அடிக்க வாழ்த்துக்கள்..

Menaga Sathia said...

வாழ்த்துகள் அஹ்மது!!

vasu balaji said...

வாழ்த்துகள் இர்ஷாத்

வால்பையன் said...

கதை முதலாளித்துவத்தின் உண்மை முகத்தை காட்டுகிறது, மேலும் பல படைப்புகள் வெளியாக வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

கதை அருமை. வாழ்த்துக்கள் இர்ஷாத்:)!

G Gowtham said...

வாழ்த்துகள் நண்பரே..
வலைப்பூ உட்பட வேறெதிலும் வெளிவராத சிறுகதை அனுப்பிவையுங்கள்..
சூரிய கதிர் பத்திரிகையின் சிறுகதை பரிசீலணைக்கு ஸ்பெஷல் டிக்கெட் வாங்கித்தருகிறேன்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்துக்கள்- நல்ல யதார்த்தமான
சம்பவத்துடன் கதை- குங்குமம்.
ச.க.பெ. பகுதியில் பல எண்ணங்கள்
தொகுப்பு -நன்று!

விஜய் said...

கும்கும் வாழ்த்துக்கள்

கடைசி டிப்ஸ் ரொம்ப உபயோகமானது

விஜய்

Shameed said...

இர்ஷாத் ரொம்ப பெரிய ஆளா போய்டிய புக்லே எல்லாம் உங்க கதவருது ,
ஆமா அந்த 3 லட்சம் ரூபா பார்டிலே சாப்பாட்டை வெளுதுகட்டிய மொத ஆளு நீங்கல !!!

எம் அப்துல் காதர் said...

அருமை சார்..அசத்துங்க வாழ்த்துக்கள்.. நான் இங்கிருந்தே உங்கள் கைப் பிடித்துக் குலுக்கி வாழ்த்தியதாக எடுத்துக் கொள்ளுங்க!

Mc karthy said...

குங்குமம் வாழ்த்துக்கள் இர்ஷாத்.. மென்மேலும் உயர வாழ்த்துக்கள்...

வலை ரசிகன். said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே
ஒரு முக்கியவேண்டுகோள்.

நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்
என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திர்க்கு எதிராக
ராஜன்+வால்பையன்
இருவரும் நம் உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸால்)
அவர்களை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்ளால்
விமர்ச்சனம் செய்துள்ளார்கள்.

இவர்கள் நாகரிகமான முறையில் பதிவிட்டிருந்தால்
நிச்சயமாக நாம் பதில் சொல்லகடமைப்பட்டிருக்கிரோம்.

ஆர் எஸ் எஸ், பாஜக, விஸ்வஹிந்த் இவர்களைப்போன்று மகா மட்டமான
வார்த்தைகளை உபயோகித்து இருக்கிரார்கள்.

நீங்கள் உண்மையாணவர்களாக இருந்தால் இன்றுடன்
ராஜன்+வால்பையன்மற்றும் அங்கு கூடி இருந்து கும்மி அடிக்கும் அனைவர்களது வலைப்பூவையும் நிராகரியுங்கள்.

நான் கூறுவது சரியா தவரா?
பதில் கூறவும்.
வஸ்ஸலாம்.
http://allinall2010.blogspot.com/2010/07/blog-post.html

மகேஷ் : ரசிகன் said...

கதை நல்லாயிருக்கு.... :)

சீமான்கனி said...

நண்பா உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் இங்கே பார்க்கவும்
http://ganifriends.blogspot.com/2010/07/blog-post.html

Ahamed irshad said...

நேசமித்ரன்,

ஜில்தண்ணி - யோகேஷ்,

ILA(@)இளா,

Chitra,

Starjan ( ஸ்டார்ஜன் ),

கே.ஆர்.பி.செந்தில்,

மனோ சாமிநாதன்,

ஜெய்லானி,

நசரேயன்...

உங்களின் அனைவர் வருகைக்கும்,வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

seemangani,

இராமசாமி கண்ணண் ,

ஹேமா,

cheena (சீனா),

ஸ்ரீராம்.

நாய்க்குட்டி மனசு,

அமைதிச்சாரல்,

நாடோடி ,

வெறும்பய ,

Cable Sankar,

Phantom Mohan,

உங்களின் அனைவர் வருகைக்கும்,வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

Ahamed irshad said...

செ.சரவணக்குமார்,

SUFFIX ,

க.பாலாசி ,

சசிகுமார்,

அக்பர்(அஜித் பிடிக்கும் அவ்ளோதான்)

ஸாதிகா,

Yasir ,

ர‌கு,

LK,

asiya omar,

பா.ராஜாராம்...

உங்களின் அனைவர் வருகைக்கும்,வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

தாஜூதீன்,

ஹுஸைனம்மா,

கண்ணா..,

Mrs.Menagasathia,

வானம்பாடிகள்,

வால்பையன்,

ராமலக்ஷ்மி,

ஜி கௌதம்,

NIZAMUDEEN,

விஜய்...

shahulhameed,

எம் அப்துல் காதர்,

RAJ,

ஜெய்லானி(விருதுக்கு நன்றி)

மகேஷ் : ரசிகன்,

உங்களின் அனைவர் வருகைக்கும்,வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி..

இமா க்றிஸ் said...

உங்கள் கதை குங்குமத்தில் பிரசுரமானதையிட்டு எனது வாழ்த்துக்கள் இர்ஷாத்.

Ahamed irshad said...

வாங்க இமா உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் இர்ஷாத்
இதயங்கனிந்த பாராட்டுக்கள்

Kousalya Raj said...

congrats.

சி.பி.செந்தில்குமார் said...

uஉங்க கதை நல்ல knot.good

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

வாழ்த்துக்கள் அஹமத்...
சூப்பர் சிங்கர் எப்பவும் சூப்பர் தான்

Ahamed irshad said...

வாங்க மலிக்கா வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...

வாங்க கவுசல்யா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Ahamed irshad said...

வாங்க செந்தில்குமார் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

வாங்க அ.தங்கமணி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கோவ்...

புல்லாங்குழல் said...

எனக்கு பிரியமான சுஜாதாவின் தூண்டில் கதை போல இருந்தது உங்கள் கதை. அதிகமதிகம் எழுதுங்கள்.

RVS said...

மூன்று லட்சம்... நூறு லட்சம் பெறுமானமுள்ள கதை. அருமை..

அன்புடன் ஆர்.வி.எஸ்.

Ahamed irshad said...

வாங்க நூருல் அமீன் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

வாங்க RVS வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி..

All Rights Reserved

MyFreeCopyright.com Registered & Protected
Related Posts Plugin for WordPress, Blogger...
 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates