நேற்று அலுவலகம் முடிந்து வீட்டுக்கு போய்க் கொண்டிருந்தேன்.கம்பெனி வாகனம் வீட்டுக்கு கொஞ்ச தொலைவில் விட்டுவிட்டு போய் விடும் நான் அங்கிருந்து மூன்று நான்கு நிமிடங்களில் வீடு போய் சேர்ந்து விடுவேன்.அப்படி நேற்று நடக்கையில் ஒரு 'மிஷிரி(எகிப்தியர்) என் முன்னால் போய்க் கொண்டிருந்தார்.அவருக்கு எதிரில் ஒரு நேபாளி வந்துக் கொண்டிருந்தார்.வந்துக் கொண்டிருந்தவருக்கு தும்மல் வந்துவிட்டது அவர் தும்மியதும் அவர் மூக்கிலிருந்து புறப்பட்ட 'லஜ்ஜை' மின்னல் வேகத்தில் எகிப்தியரின் ஷீவில் போய் ஒட்டிக்கொண்டது.ஆஹா ஏதோ விபரீதம் நடக்கப்போவது அப்படின்னு நான் நினைத்தேன்.ஏனென்றால் எகிப்தியர்கள் அதிக கோபமுடையவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.தும்மியவரின் கிட்டே போன எகிப்தியர் அவர் பாஷையில் ஏதோ சொல்லிவிட்டு அந்த நேபாளியின் மூக்கை "கிள்ளி" விட்டு போய்விட்டார். எனக்கு இத நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை..
###############################################
நான் ஆபிஸில் இருக்கிறேனா இல்லை ஃபாரஸ்ட்டில் இருக்கிறேனா தெரியவில்லை.காரணம் என்னை சுத்தியுள்ள பிலிப்பைனிகள்.குய்யோ முய்யோ என்ற அவர்களின் பாஷையும் சகிக்கல.(நம் பாஷையும் அவர்களுக்கு அப்படித்தான் இருக்குமோ என்றால் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் ஏன்னா தமிழ் இனிமையான மொழி.க்குக்கும்..)இந்த அக்கப்போருக்கிடையில் என்னைத் தூக்கத்துல எழுப்பி கேட்டாக்கூட சொல்லுவேன் இந்த ரெண்டு வார்த்தையை
1. சிகே - ஓகே
2. குய்யா - சகோதரனே
என்னங்க பன்றது அப்படிப்போச்சி நம்ம பொழப்பு.
###############################################
ஏன் நம்ம பக்கத்து மாநில சேட்டன்மார்கள் உலகெங்கிலும் "பரவி" இருக்கிறார்கள்?
ஏன்னா அவர்களின் ஆரம்ப பேச்சே "பர பர" என்று இருப்பதால்...!
36 வம்புகள்:
லஜ்ஜை மேட்டர்... எனக்கும் உங்க நிலமை தான். என்ன சொல்றதுன்னு தெரியலை! ஹிஹி..
குய்யோ முறையோ இருக்குப்பாருங்க, இந்த விஷயத்தை பத்தி ஒரு பழைய பதிவுல் சொல்லி இருக்கேன்.. காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்தினாப்புல இருக்கும். அதுவும் சராசரி மனுஷங்க பேசுறதை விட பன்மடங்கு அதிகமா பேசுவாங்களோ இவங்கன்னு நினைக்க வைக்கும் அளவுக்கு இருக்கும்.’த’ அதிகமாக பயன்படும்.
நம்முட சேட்டன்மார்கள் இல்லாத இடமேது? எங்கும் அவர்களே.. இங்கே எத்திசலாத் ஃபோன் பண்ணினா ஃபார் மலையாளம் ப்ரெஸ் 4ன்னு மெயின் மெனுல வருதுன்னு நினைக்கறேன். ஹிஹி
அதெல்லாம் போகப்போக உங்களுக்கும் குய்யா சிகே. எல்லாம் வந்துடும்.
பேயடிக்கயேண்டாம் அனியன்..[தம்பி]
பிலைப்பைன் நாட்டினர் அதிகம் பேசுவது தகாலோ என்னும் மொழி. இதில் ஸ்பானிஷ் கலப்பு அதிகம்.
அவர்கள் பேசும் போது, சாதாரணமாக பேசுவது கூட, சண்டை போடுவது மாதிரி, ரொம்ப சத்தமாக பேசுவார்கள்.
சேட்டன்மார்களுக்கு அடுத்து, இவர்கள்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றனர்.
குய்யா...நானும் உங்களை சகோதரன்னு கூப்பிடுறேன்.
எதிர்பாராததெல்லாம் சிலசமயங்களில் மட்டுமே நடக்கும் இர்ஷாத்.சிகே !
அதாவது லாயம், தொழுவம், பட்டி என ஒவொரு விலங்குகள் அடைக்கப்பட்ட இடத்திற்கும் தனித்தனி பெயருண்டு ஆனால் மிருகங்களை கலந்து அடைக்கப்பட்ட இடத்திற்கு பவுண்டு என அழைப்பார்கள். வெளிநாட்டில் நான் வேலை பார்த்தபோது இதைத்தான் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்..
என்ன செய்ய கொஞ்ச காலம் காட்டு வாசியாக வாழ்ந்து பாருங்கள் ..
பிலிப்பைனிகள் பாஷையும் ஒரு சங்கீதமான பாஷை தான். இங்கே சவுதியில் பெரும்பாலான ஆஸ்பத்திரிகளில் பிலிப்பைனி சிஸ்டர்ஸ் தான் நர்ஸ் களாக பணிபுரிகிறார்கள். இர்ஷாத் நீங்கள் இன்னும் நாலு பிலிப்பைனி வார்த்தை கற்றுக்கொள்ளுங்கள். அப்ப அவர்களின் நட்பு எப்படி என்று உணர்ந்து கொள்வீர்கள்!
குமுஸ்தகா - how are you ?
மாபூத்தி - fine ..
சாகா புபுன்த்தா-where are you going?
மவூலன் - raining
என்று பேசிப்பாருங்கள் அவர்கள் சந்தோசத்தை அனுபவியுங்கள்.
இதெல்லாம் எப்படி என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. இந்த இனிய? மொழியை தான் தினமும் காதில் கேட்டு எங்கள் பாங்கில் காலத்தை ஒட்டிக்கி கொண்டிருக்கிறோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
:)))
இன்னும் கொஞ்ச நாட்களில் ‘பரே அனும்பலித்தா’ ரேஞ்சுக்கு பேச ஆரம்பிச்சுடுவீங்க..
பிலிப்பினிகள் சுத்தி இருப்பதில் சந்தோசம்.
அவர்கள் "சிகே" சொன்னதிலும் சந்தோசம் (எதுக்கு சொன்னாங்கன்னு தெரியல)
குய்யா-ன்னு உங்களை சொல்லி இருந்தா ரொம்ப வருத்தமா இருந்துச்சா நண்பா?? :-))
philippines ரொம்ப நல்லவங்க, புதுசா ஒருத்தனப் பார்த்தாலும் அவுங்க சொல்ற முதல் வார்த்தை "My Dear Friend", நாமளும் தான் இருக்கோமே? அய்யே இன்னா வேணும், தோடா வந்திட்டாரு பெரிய பருப்பு.....
life எப்படி enjoy பண்ணனும்ன்னு அவங்க கிட்ட கேளுங்க...சேர்த்து வைக்கிற பழக்கமே கிடையாது, சம்பாத்திச்ச காச அப்படியே செலவு பண்ணுவாங்க, ஒரு நாளைக்கு min மூன்று முறை make up! அவர்கள் உயரம், அவர்கள் முகம், அப்புறம் அந்தக் காட்டுக் கத்து, பல பேர் எதாவது பாட்டுப் பாடிக்கேட்டே தான் வேலை செய்வாங்க! அப்புறம் முக்கியமா அவங்க shoe ,எங்க தான் வாங்குவானுன்களோ?
நன்று....
ங்கொய்யாலன்னு ஏதாவது பிலிப்பைனோவுல வார்த்தை இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்களேன்
இர்ஷாத் முதலில் கொஞ்சம் திட்டும் வார்த்தைகள் கற்றுக்கொள்ளுங்கள் .எங்கேயும் உபயோகமாயிருக்கும் .:))
புன்னகைக்க வைக்கும் பதிவு .
വളര നന്നായി
இது என்ன தெரியுமா? வளர நன்னாயி :))
சிகே குய்யா!
ஓகே. சகோதரனே!
:-)))
இது எனக்கு புதுசு.
பழகிடும் நண்பா எல்லாம்
:)
குய்யா !
தாலாட்டுதே வானம்னு ஒரு பாட்டு கடல்மீன் கள் படத்தில்
அதுல குய்யா குய்யா ந்னு ஒரு ஹம்மிங் வரும் அது நினைவு வந்துச்சு
நீங்க என்ன சொன்னாலும் சரி பிலிப்பினத்து பெண்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்,அவங்க நீட்னெஸ் இன்னும் சொல்ல எத்தனையோ நல்ல விஷ்யங்கள் இருக்கு.நம்மை மாதிரி அவங்களும் பிழைக்க வந்தவங்க.
@Phantom Mohan
ரிப்பீட்ட்ட்ட்ட்..அப்புறம்..
பழகும் இனிய குணம் , சிரித்த முகமாக இருப்பது ..அந்த உற்சாகம் நமக்கும் வந்துடும்....
எனக்கும் இதே நிலைமைதான் இர்ஷா...என்னோடு முழு நேரமும் ஒரு "குய்யா சிகே."நண்பன்தான் இருப்பான் ஆனால் அவன் அதிகம் அவனின் மொழியில் பேசுவது கேர்ள் பிரண்ட் கூடத்தான் அதனால் அதிகம் சத்தம் வராது...பகிர்வுக்கு நன்றி...
குய்யா என்று பிலிப்பினிகள் உங்களை அழைத்திருந்தாலும் அழைக்காவிட்டாலும் நீங்கள் எங்களுக்கும் குய்யாதான். சிகேவா?
சிகே குய்யா :-))
ரெண்டாவது ஆட்டம் .**************************
என்னப்பா இதை சொல்வே இல்லை ,அதிரை மணம் பார்கபோய் இந்த அலைவரிசை தெரிந்தது
அஹா அஹமத் குய்யா சிகே சிகே>:))
:))
வாங்க அநன்யா உங்களுக்கும் லஜ்ஜை நிலைமைதானா. நீங்க சொல்றமாதிரி காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்தினாப்புல இருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
அப்படியா மலிக்கா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
ஆமா இராகவன் சார் அவங்க பேசுறதுகூட சத்தமாத்தான் பேசுறாங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
கண்டிப்பா கூப்பிடுங்க சகோதரி ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
கொஞ்ச காலம் காட்டுவாசியாத்தான் இருக்கனும்ங்க செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க அப்துல்காதர் உங்களிடம் பி.மொழி டியுசனே எடுக்கலாம் போலிருக்கே. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வாங்க அபுஅஃப்ஸர் உங்கள் வருகைக்கும் "ஸ்மைலிக்கும்" மிக்க நன்றி..
கண்டிப்பாங்க ஷஃபிக்ஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ஆஹா இது என்ன புது பிட்டா இருக்கு ரோஸ்விக் உங்களின் முதல் வருகையே அருமையா? இருக்கு.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கோவ்...
வாங்க மோகன் நாமெல்லாம் ஷீ கடையிலதான் வாங்குவோம் அவிய்ங்க எங்க வாங்கிறாங்கன்னு தெரியாதுமா.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வருகைக்கு நன்றி உலவு..
அவிங்க மொழியே ங்கொய்யாலன்னு நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்.. அதற்கு அர்த்தம் தேடுனா எப்படிங்க... இளா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க பத்மா இர்ஷாத்த மாவுக்கட்டோட பார்க்க அவ்வளவு ஆசையா ரொம்ப நல்லது.. வருகைக்கு கருத்துக்கும் நன்றி..
அதேதான் சித்ராக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..கலக்குங்க வலைச்சரத்துல...
அப்படியா மதுமிதா வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நேசமித்ரன் அவர்களே...
சரிங்க ஆசியா உமர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ஜெய்லானி...
வாங்க நண்பா சீமான்கனி உலகத்துல எல்லா மொழியிலேயும் கேர்ள் ஃபிரெண்டுக்கிட்ட ரகசியமாத்தான் பேசுவாங்க... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
மிக்க நன்றி சகோ.தாஜிதீன் வருகைக்கும் கருத்துக்கும்..
சரிங்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்..
வாங்க சாகுல் இப்ப தெரிஞ்சாச்சா அது போதும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...
வாங்க தேனக்கா நீங்க சொன்னா சிகே சிகே.. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...
வாங்க ஸ்ரீராம் வருகைக்கும் சிரிப்புக்கும் மிக்க நன்றி...
சிகே குய்யா!! ஹி...ஹி...
ஓகே மேனகா அவர்களே வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்கோவ்...
ஹலோ சகோத.இர்ஷாத்..அதிரைமணம்...பார்த்து...உங்கள் வலைப்பூவின் மணத்தையும்..நுகர்ந்து கொண்டேன்.அருமை...அடிபுலி
எகிப்தியர் அப்ரோச் வித்தியாசமா இருக்கே... கஷ்டம் கஷ்டம்
//ஏன்னா தமிழ் இனிமையான மொழி.க்குக்கும்//
சூப்பர் சூப்பர் சூப்பர்... (காக்கைக்கும் தான் குஞ்சு பொன் குஞ்சு....)
// குய்யா - சகோதரனே//
அப்போ முய்யோனா சகோதரியா... டென்ஷன் ஆகாதீங்க...சும்மா கேட்டேன்...
//ஏன்னா அவர்களின் ஆரம்ப பேச்சே "பர பர" என்று இருப்பதால்...!//
எப்படிங்க இப்படில்லாம்? பறந்துகிட்டே யோசிப்பீங்களோ....
Post a Comment