சுந்தரம் படுக்கையில் இருந்தபடி கேட்டார்.
"மங்களம் எத்தினாம்தேதி டாக்டர் வரச்சொன்னாரு"
"பதினெட்டாம் தேதிங்க,பணத்துக்கு என்னங்க பண்ணப்போறிங்க?
"எங்க முதலாளிக்கிட்ட கேட்கலாம்னு யோசிச்சிக்கிட்டு இருக்கேன்" சொன்னபடியே கம்பெனிக்கு போனார்.
முதலாளி மீட்டிங்கில் இருந்ததாகக் கூறி அவரை காண அனுமதி மறுத்தான் பி.ஏ.
எவ்வளவோ கெஞ்சியும் அனுமதிக்கவில்லை. அடுத்த நாள் போய் பார்த்தார்.
"உனக்கு மாசா மாசம் சம்பளம், பண்டிகைன்னா போனஸ் எல்லாம் தந்தேனே,மறுபடி எதுக்கு பணம் கேட்கிறே? என்றான் முதலாளி சங்கர்.
"முதலாளி என் மனைவிக்கு இதயத்துல இருக்கிற ஒட்டையை அடைக்கனும்னு டாக்டர் சொல்லிட்டாரு, அதுக்கு மூணு லட்சம் செலவாகுன்னும் சொல்லிட்டாரு,
பணம் தந்தீங்கன்னா எப்படியாவது உழைத்து உங்க கடனை அடைத்துவிடுகிறேன்"
"இல்ல இப்ப கம்பெனி இருக்கிற நிலையில நீ கேட்கிற பணத்தையெல்லாம் தரமுடியாது" விரட்டாத குறையாக கூறினான் முதலாளி சங்கர்..
மாடாய் உழைத்தும் தனக்குதவாத கம்பெனியின் வாசற்படியை கண்ணீரோடு கடந்து வெளியேறினார் சுந்தரம்.
சங்கரின் தொலைபேசி அலறியது.
எடுத்தால் மறுமுனையில் கேஷியர்
" சார் நம்ம காண்ட்ராக்டர்களுக்கு ஷெராட்டான்'ல வெச்ச பஃபே பார்ட்டிக்கு பில்லு வந்திருக்கு சார்"
"எவ்வளவு?"
"மூணு லட்சம்"
"செட்டில் பண்ணிடு.......
30 வம்புகள்:
இப்படிப்பட்ட சில மனசாட்சியில்லா நன்றி கேட்ட முதலாலிகளை நாளுக்கு நாள் சந்திக்க முடிகிறது. நாம் என்னதான் மாட உழைத்தாலும் சில முதலாளிகளுக்கு தன் குடும்பம் மற்றும் தான் மனித இனம் என்ற எண்ணம் தலைமுறை தலைவிதியாகிவிட்டது.
நல்ல கருத்து தம்பி இர்ஸாத் வாழ்த்துக்கள்.
நல்ல கதை இர்ஷாத், நல்ல ஆக்கம்...
புரியுது?
நாலு வரிலே நாலாயிரம் விளக்கங்கள்
முதலாளிகள் வேலை வாங்கிக்கொள்ள மட்டும்தான் இர்ஷாத் !
சிறுகதையாக இருந்தாலும் காரம் ரெம்ப பெருசா இருக்கு.. நல்லா இருக்கு இர்ஷாத்.
நல்ல புனைவு
வாழ்த்துக்கள் இர்ஷாத்
கொடுமதாங்க, என்ன செய்ய? நேர்மையானவங்கள கூட தப்பான வழிக்கி தள்றது இந்த மாதிரி மொதலாளிக தான்
இந்த கெரகம் புடுச்ச மொதலாளிங்க இப்படி தாங்க. கேட்டுகோங்க இதன் மூலம் சொல்லப்படும் கருத்து யாதெனில் "நாளைக்கு நாமலே மொதலாளி யானாலும் இப்படிப்பட்ட வண் மனசு ஆகாது".
வாழ்வின் யதார்த்ததை மிகச் சில வரிகளிலேயே அழகாக சொல்லி விட்டீர்கள்!
வாழ்த்துக்கள்!!
என்ன கொடுமை சரவணன்....
மனிதம் குறைந்த வாழ்க்கையியலின் யதார்த்தம்...
அப்பட்டமான உண்மை நிலை இர்ஷாத்... பணியாட்களுக்கு செய்வதற்கு எந்த முதலாளிகளுக்கு மனம் வந்திருக்கிறது....
கொடுமை....
நல்ல இடுகை...இர்ஷாத்....
குமுதத்துக்கு அனுப்புங்க ... கண்டிப்பா பிரசுரம் ஆகும் ...
மனசு கனத்துப்போச்சுங்க.... நல்ல பதிவு.. முதலாளிவர்க்கமே அப்படித்தான்..
இதுதான் உலகம்.
தாஜீதீன்,
ராஜ்,
அபுஅஃப்ஸர்,
உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
ஹேமா said...
முதலாளிகள் வேலை வாங்கிக்கொள்ள மட்டும்தான் இர்ஷாத்!//
கண்டிப்பாக ஹேமா அதானே உண்மை. உங்களின் வருகைக்கு மிக்க நன்றி...
நாடோடி said...
சிறுகதையாக இருந்தாலும் காரம் ரெம்ப பெருசா இருக்கு.. நல்லா இருக்கு இர்ஷாத்///
ரொம்ப நன்றி நாடோடி கருத்துக்கும் வருகைக்கும்,
//padma said...
நல்ல புனைவு
வாழ்த்துக்கள் இர்ஷாத்.///
உங்கள் வருகைக்கு மிக்க நன்றி பத்மா..
அப்பாவி தங்கமணி said...
கொடுமதாங்க, என்ன செய்ய? நேர்மையானவங்கள கூட தப்பான வழிக்கி தள்றது இந்த மாதிரி மொதலாளிக தான்////
உண்மைங்க உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி அவர்களே...
//எம் அப்துல் காதர் said...
இந்த கெரகம் புடுச்ச மொதலாளிங்க இப்படி தாங்க. கேட்டுகோங்க இதன் மூலம் சொல்லப்படும் கருத்து யாதெனில் "நாளைக்கு நாமலே மொதலாளி யானாலும் இப்படிப்பட்ட வண் மனசு ஆகாது///
அப்படி எல்லாம் வண் மனசு வரவேகூடாதுங்க.. உங்களின் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அப்துல் காதர் அவர்களே...
// மனோ சாமிநாதன் said...
வாழ்வின் யதார்த்ததை மிகச் சில வரிகளிலேயே அழகாக சொல்லி விட்டீர்கள்!
வாழ்த்துக்கள்!///
ரொம்ப நன்றி மனோ அக்கா வருகைக்கும்,கருத்துக்கும்..
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
// க.பாலாசி said...
அப்பட்டமான உண்மை நிலை இர்ஷாத்... பணியாட்களுக்கு செய்வதற்கு எந்த முதலாளிகளுக்கு மனம் வந்திருக்கிறது....///
நிதர்சனம் பாலாசி.. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
//கே.ஆர்.பி.செந்தில் said...
குமுதத்துக்கு அனுப்புங்க ... கண்டிப்பா பிரசுரம் ஆகும் ...///
உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பரே.. குமுதத்தின் இ - மெயில் இருந்தால் அறியத்தாருங்கள்.. கண்டிப்பாக அனுப்புகிறேன்.. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கே.ஆர்.பி.செந்தில்...
Dr.P.Kandaswamy said...
இதுதான் உலகம்.//
ஆமாங்கய்யா... உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...
கார்ப்பரேட் உலகில் இதான் நடக்குது இர்ஷாத்!! உண்மை.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷஃபிக்ஸ் அவர்களே...
:-((
என்ன சொல்ல.
ஹுஸைனம்மா said...
:-((
என்ன சொல்ல.///
ஏதாவது.....சொல்லுங்க ஹீசைனம்மா...
www.MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது..
சீட்டு போட்டாச்சு மின்மினி...
யதார்த்தம்!!!!!!!!
மிக்க நன்றி ஸாதிகா அக்கா வருகைக்கும்,கருத்துக்கும்...
யதார்த்தமான புனைவு..
வாழ்த்துக்கள் நண்பரே..
பார்டியில் கலந்து கொண்டவர்களில் நீங்களும் ஒருவரமே!!!!
Post a Comment